உச்சந்தலையில் ஒரு சொட்டு

பட்டுத் தெறித்தது பல திசையில்

பல துளிகள் சரம் சரமாய்...

கரமேந்திய கண்ணாடிக் கிண்ணம்

வட்டமாய் வானம் பார்க்க

மதுவோடு கலந்தது மழை

புது உப நீரோடு

அருந்த மிகுந்தது போதை

பறக்க எத்தனிக்கையில்

இறங்கி இறுக்கின நீர்த்தாரைகள்

பொழிவு ஓய்ந்த போது

கரைந்தோடியது போதை காலடியில்

 

சொல் புதிது

யாரும் கவனியாத தருணத்தில்

சொல்லொன்று உதிர்ந்தது

காற்றில் மிதந்தபடி

காதுகளைத் தேடியது

உள்வாங்குவோருக்கு மிக

உபயோகமென்பதால்

பாம்பின் நெளிதலோடு

புக முயன்றது.

நுழைவு வாய்க்காததால்

அந்தரத்தில் சுழன்றது

விரையும் மனிதர்களுள்

எவரேனும் ஏற்றிருக்கலாம்

விரயமாய் வீழ்ந்தது

மிதிபடலாம்

ஈரம் இணைந்தால் முளைவிடலாம்

இன்னும் காத்திருக்கிறது

 

Pin It