மீன் விற்பவனை
இரண்டு ஆண்டுகளாக
மீனு... மீனு...
மீனு... மீனு...
என்ற வார்த்தைகளைக்
கொண்டே அறிந்திருந்தேன்.
நீண்ட நாள்களாக
பழகிவிட்ட
சிநேகத்தை
அவனது
வார்த்தைகளைக் கேட்டே
உணர்ந்துகொண்டிருந்தேன்.
மத்தி மீன்களை
வாங்கும்
இன்றைய பொழுதில்
நகர வீதிகளில் கூவி
மீன் விற்பவனை
நேரில் கண்டு விட்டேன்.
ஓரிரு வார்த்தைகளைக்கூட
பேசியும் விட்டேன்.
அழகநேரி கிராமத்தில்
மீன் விற்கும்
மந்திரத்தேவர் மாமாவிற்கும்
இவனுக்கும்
பெயர் மட்டுமே மாறி இருக்கிறது.
வேறு என்ன வித்தியாசத்தைக்
கண்டுவிடப் போகிறேன்.

- ப.சுடலைமணி