அவளுக்கான வானம் பச்சை நிறத்திலிருந்தது
கொட்டும் மழைத்துளி நீலநிறத்தில்
வடிகிறது
காகம் சிவப்பாகக் காட்சியளித்தது
மஞ்சள் நிறத்தில் மரங்கள்
பூத்து நிற்கின்றன
நிலவுக்கு கருப்பு நிறம்
வழங்கப்பட்டுள்ளது
அவளுக்கான உலகத்தில்
எல்லாமே அவளுக்காக படைக்கப்பட்டது
காகம் மட்டும் மேலும் மேலும் சிவப்பாக
மாறிக்கொண்டிருந்தது
இதற்கான காரணத்தைக் கேட்க
பதில் புறப்பட்டது
" காக்கா பாவம் கறுப்புனு யாருக்குமே
புடிக்கல. அதனாலதான்னு"
சொன்னவளின் கறுத்த தேகத்திலிருந்து
சிவப்பு விழிகளில் வெள்ளைக் கண்ணீர்
உருண்டு திரண்டு வடிந்தது...

- உடுமலை கி.ராம்கணேஷ்

Pin It