விடிந்தால்
என்ன செய்தி யாருக்கோ
மோதுகின்ற துக்கங்களில்
பார்த்து களைத்த வெற்று வீதிகள்

நாளைகள் மறைந்த
நிசப்தங்களில் தான்
அத்தனை ஓலங்களும்

உறவுகள் இன்றி
இங்கே வேறன்ன இருக்கிறது
ஏங்கி தவித்தல் தவிர

சொற்களற்று இருக்க கற்கலாம்தான்
பேரழுகைக்கு முன்னும் பின்னும்
என்ன தான் செய்ய

மனமற்று இருக்க கற்றவை எல்லாம்
மடி தேடி அலைகிறது
மாற்றி யோசிக்க மறுதலிக்கும்
ஆதி உடல்தான் யாவருக்கும்

போதும் போதும் என்றாகி விட்டது
கண்ணீர் அஞ்சலி RIP இல்லாத
நாள் ஒன்று வேண்டும்

செய்தி இது தான்
இனி இரங்கல் எம்மிடம்
இல்லவே இல்லை.......!

- கவிஜி

Pin It