உருவமற்று இருப்பதெல்லாம்
உண்மைக்கு புறம்பானது இல்லை
உவமையற்று இருப்பது பற்றியும்
எனக்கு கருத்து இருக்கிறது
மேல் எழும்பி கீழ் வந்து
காற்றில் ஊடறுத்த
இருள் தேசத்தின்
இசைவு நான்
உற்று நோக்கின் உயிர் சூடு காணலாம்
உண்மைக்கு அருகே அசைதல் தேவை
யாருமற்ற வீட்டில் நானுமற்று திரிவது
இருள் பற்றும் மெழுகு வர்த்தி இம்சை
மூச்சு தேடும் நன்னாளில்
நானொரு புகைமூட்டமாய்
உங்கள் பின் நகர்கிறேன்
நல் ஒளி வீசிப் படரும் நாற்சந்து ஒன்றில்
எப்படியாவது பிடித்தடையுங்கள்
இருளில் அலைந்து களைத்த மனம்
ஒளியின் வெளியில் அடைபட விரும்புகிறது

- கவிஜி
      

Pin It