ஏகாந்தத்தின் பெருவெளியில்
விளைந்து நிற்கிறது ஆப்பிள்

பறிப்பதற்கு நீளும் விரல்களை
ஒருபோதும் சீண்டியதில்லை மரம்

காக்கா கடிகடித்து
சுவைக்க சுவைக்க
அதிகரித்தபடி அதன் சுவை

வஞ்சத்தின் வெக்கையில்
உருகி வழிகிறது உறைபனி

சூழ்ச்சிகளின் வெடிப்புகளில் நிரம்புகிறது
மரணித்த மனிதத்தின் குருதி

- விஜயபாரதி

Pin It