புனல் மிதக்கும் நாவாய்கள்
கரையெங்கும் மலர்ந்து நிற்கும்
பஃறுளி ஆற்றின் முகத்துவாரத்தில்
பாய்விரித்து கடல் ஏகிய
தலைவனின் இறுதி நிமிடங்களில்
விரிகிறது கடல்கொள்ளும் கபாடபுரம்
புன்னைக்கு பால் ஊற்றும் தலைவி
தோழிக்கு சொல்லும் கூற்றில்
அலைகள் உறங்கும் கடலிலிருந்து
பசலையும் பெருவிளிப்புகளும்
கலந்த குரலில் யாழ் ஒன்று
தனிமொழியில் பேசுகிறது
யுகம் யுகமாய்
உப்பின் கரிப்புடைய இசையை.
குளிர்சாதனப்பெட்டியில் இருந்து
சமைக்க எடுத்த மீனில்
ஒட்டி இருந்த நரம்பை மீட்டினேன்
வீட்டினுள் அலையடிக்க
விரிந்து பரந்தது கடல்.
- ஆர்.வி.சந்திரசேகர்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- அக்னிபாத் - இராணுவத்தை காவி மயமாக்கும் ஆர்.எஸ்.எஸ்சின் சதித் திட்டம்
- சாம்ராஜ்ஜியங்களின் சரிவும் கடைசி மன்னர்களும் - கட்டியக்காரன்
- ஒன்றிய மோடி அரசே, 'அக்னிபத்’ திட்டத்தைக் கைவிடு!
- "இன்னொரு நான்" நூல் அறிமுகம் ஒரு பார்வை
- வெற்றி பெற வேண்டும் யஸ்வந்த் சின்கா!
- கற்றுக் கொள்ள வேண்டும் கர்நாடகம்
- “இந்து” மதமல்ல, அது கூட்டுத் திரட்சி!
- அவர்களும் நாமும்
- போலீஸ்காரார் பட்ஜெட்!
- கருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 25, 2022 இதழ் மின்னூல் வடிவில்...
அகநாழிகை - அக்டோபர் 2009
- விவரங்கள்
- ஆர்.வி.சந்திரசேகர்
- பிரிவு: அகநாழிகை - அக்டோபர் 2009