மெழுகாய் கரையும்
பொழுதுகள் எப்போதும்
போலே பாய்கிறது..
நீரிலாடும் மீனாய்
நீந்துகிறேன் இவ்வாழ்வில்..
பெருவானில் சிறகுகள்
விரித்து உயரப் பறக்கப்
பெற்ற சுதந்திரத்தால்
மனம் விழையும்
மாற்றங்கள் எதிர்வர
பொம்மைக்கரடி
தழுவிக் கொள்ளும்
குழந்தையாய் மாறி
குறுநகை அணிகிறேன்...
எதைக் கொண்டும்
நிரப்பிட முடியாதோர்
வெற்றிடத்தை
எவருக்கும் காட்டிடாமல்..
என் நாட்குறிப்பிலிருந்து
கிழிக்கப்பட்ட பக்கங்கள்
அடையாளங்களை இழந்த
துண்டுக்காகிதங்களாய்
காற்றில் பறந்திட
மீண்டும் அவற்றை
பிணைத்து வைக்கும்
பிரயத்தனத்தில் நான்....

- அருணா சுப்ரமணியன்

Pin It