மனிதம் கடந்த
சக்தி ஏதுமில்லாத சிவா
தன் இளநீர் வண்டியை
சாக்கைப் போட்டு மூடி
காவலரைப் பற்றியும் பயமின்றி.
சாலையோர மரத்தடியில் விட்டுச் செல்கிறான்
பக்கத்தில் ஓர் அறையில்
தங்க நகை சூடி அமர்ந்திருந்த
சக்தியை உள்ளே வைத்து,
வெளிப்பக்கம் பூட்டிச் சொல்கிறான் பூசாரி.
- சேயோன் யாழ்வேந்தன்