முதலியம் வகுத்த சந்தை விதிகளில்
உதயம் ஆன பொருட்களை உள்ளோர்
இல்லோர் வாழ்ந்திட ஏற்பது ஒன்றே
வல்வழி என்பதால் சந்தை ஈர்க்கும்
சூழ்நிலைக் கேடும் புவிவெப்ப உயர்வும்
வாழ்விடம் தன்னை அழிக்கும் முன்னே
உய்யும் வழியோ சமதர்மம் என்ற
மெய்மை யார்க்கும் சொல்லிட முனைவீர்

(முதலாளித்துவம் வகுத்த சந்தை விதிகளின் வலிமையான வழிகாட்டுதலின்படி உற்பத்தி ஆகும் பொருட்களைச் செல்வர்களும், ஏழைகளும் தாங்கள் வாழ்வதற்காக வாங்கித் தான் ஆக வேண்டும் என்பதால் (புவி வெப்பத்தை உயர்த்தும் பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்ய வற்புறுத்தும்) சந்தை ஈர்க்கும் சூழ்நிலைக் கேடும், புவி வெப்ப உயர்வும் நாம் வழும் இப்புவியை அழிக்கும் முன்பேயே (மக்களின் தேவையைக் கணக்கில் கொண்டு புவி வெப்ப உயர்வைத் தடுக்கவும், குறைக்கவுமான பொருட்களை உற்பத்தி செய்ய வழி வகுக்கும்) சோஷலிச அமைப்பு தான், இவ்வுலகம் உய்வதற்கான வழி என்ற உண்மையை எல்லோருக்கு சொல்லிட முனையுங்கள்)

- இராமியா

Pin It