night 533

அறைக்கதவை ஊமையாகத் திறந்தடைத்தேன்
பரந்து விரிந்து கிடக்கிறது இருள்.

இரவு இரம்மியத்தில் லயித்து
உற்றுப் பார்க்கையில்தான் மெல்ல
என்னோடு பேசத் தொடங்கியது
கடல்.

கொழுத்த உரையாடல் குமட்டுகையில் மெல்ல நழுவுகின்றன
இருளும் அவனும்.

கேலிகளில் இருந்து தப்ப- எந்த
நாயும் துரத்தாது
இப்படி
நான் ஓடுவதை யாரும்
பார்க்காமல் இருக்கட்டும்.

பூட்டிய கதவைத் திறக்கிறேன்
விழித்திருக்கிறது வீடு-மறுகணமே
வீட்டை உள்ளேயும் என்னை வெளியேயும் வைத்து
அறைந்துகொள்கிறது கதவு.

- வீ.ரமேஷ் குமார்

Pin It