கீற்றில் தேட...

man devilஇப்போதைக்கில்லை
என்று மறுப்பதற்கு
காலம் உதவுகிறது
காலம் இல்லையெனில்
எப்போதும் மறுக்கமாட்டாய்
எதையும்

மீட்சி

முதன்முதலாக
பிணத்தைப் புதைத்தவர்கள்
மீண்டும் முளைப்பானென
நம்பியிருக்கலாம்

புதைக்கப்பட்டு
மீண்டுவரும்
உற்சாகத்தோடு
ஒவ்வொரு முறையும்
வெளியேறுகிறேன்
சுரங்கப்பாதையிலிருந்து

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.