கீற்றில் தேட...

அண்ணலும் தந்தையும் அரும்பணி யாற்றி
எண்ண முடியா உயர்பணி களிலே
ஒடுக்கப் பட்ட மக்கள் தானும்
மிடுக்குடன் நுழைய வழிவகுத் தனரே
பெற்ற வாய்ப்பை மற்றவர் அடைய
உற்ற நண்பராய் செயல்படு வீரே

(அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் அரும் பணி ஆற்றி, (முன்பெல்லாம்) ஒடுக்கப்பட்ட மக்கள் நுழைய முடியாத (அதிகாரம் கொண்ட) உயர்ந்த பதவிகளில் (உரிமைகளை நிலை நாட்டும் விதமாக) மிடுக்குடன் நுழைவதற்கு வழி வகுத்தார்கள். (அப்படி வாய்ப்பு பெற்றவர்கள் தாங்கள்) பெற்ற வாய்ப்பை (ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த) மற்றவகளும் அடைய உற்ற நண்பர்களாகச் செயல்பட வேண்டும்)

- இராமியா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.