1. இகக (மாலெ) ரெட் ஸ்டார் கட்சியால் மார்ச் 10, 2023 அன்று நாக்பூரில் கூட்டப்பட்ட அனைந்திந்திய பாசிச எதிர்ப்பு மக்கள் மாநாடு, பிரதிநிதிகளால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இந்திய மக்கள் எழுச்சி பெற்று, 18வது நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை உறுதியாக எதிர்த்து தோற்கடிப்பதன் மூலம் ஆர்எஸ்எஸ் -கார்ப்பரேட் பாசிசத்தின் பிடியிலிருந்து நாட்டை காப்பாற்ற முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். உலகின் மிகப் பெரிய, நீண்ட காலமாக இயங்கி வரும், தீவிர வலதுசாரி, பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ், அதன் அரசியல் கருவியான பாரதீய ஜனதா கட்சியின் மூலம் இப்பொழுது இந்திய அரசின் ஆட்சியை மிக ஊழல் நிறைந்த கார்ப்பரேட் -சூறையாடும் பெருமுதலாளிகளின் ஆதரவுடன் பிடித்துக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக, சிவில், இராணுவம், நிர்வாகம் உட்பட அனைத்து இந்திய அரசு அதிகார நிறுவனங்களும், நீதித்துறையும், நாட்டின் ஒட்டுமொத்த அரசியல், பொருளாதார, கலாச்சாரத் துறைகளும், கல்வி - அறிவியல் ஆராய்ச்சிகளும் புதிய கல்விக் கொள்கையின் NEP மூலம் காவி மயமாக்கப்பட்டு வருகின்றன, அவை இப்போது ஆர்.எஸ்.எஸ்யின் உறுதியான பிடியில் உள்ளன. RSS இன் வெறித்தனமான வேகத்தில் இப்பொழுது ஒரு பெரும்பான்மை இந்து ராஷ்டிரத்தை பன்மொழிகள், பன்முக பண்பாடுகள், பல இனங்கள், பல மதங்கள் கொண்ட இந்தியாவின் மீது திணிக்கிறது.

2. இந்தியா முழுவதிலும் இருந்து பெறப்பட்ட அறிக்கைகள் வெளிப்படுத்துவது மோடி ஆட்சியின் கீழ், பொதுவாக சிறுபான்மையினர் பாதுகாப்பற்றவர்களாகவும், கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகக் கூடியவர்களாகவும் உள்ளனர், அதே சமயம் மணிப்பூர் மற்றும் பிற இடங்களிலும், முஸ்லிம்கள் மிகவும் குறிவைக்கப்பட்டு, மிக மோசமாக பொது சமூகத்தில் இருந்த அந்நியப்படுதலுக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார்கள். காலனித்துவ காலத்திலேயே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை இந்தியாவின் முதன்மையான எதிரி என்று குறிவைப்பதற்குப் பதிலாக, ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர், இந்தியாவின் முதல் எதிரியாக முஸ்லிம்களை அடையாளப்படுத்தினார். இன்று மறுபுறம், இஸ்லாம் எதிர்ப்பு அல்லது இஸ்லாமோஃபோபியா என்பது உலக அளவில் அமெரிக்கா, பிற ஏகாதிபத்திய சக்திகளால் முட்டு கொடுக்கப்பட்ட புதிய பாசிசத்தின் கருத்தியல் அடிப்படையாக மாறியுள்ளது. இந்த ஒட்டுமொத்த சூழ்நிலைமையையும் திறம்பட பயன்படுத்தி, ஆர்எஸ்எஸ் விதிகளின்படி, பாஜக ஆட்சி முஸ்லிம்களை களங்கப்படுத்தி, அவர்கள் மீது தீவிர வெறுப்பை எல்லா வழிகளிலும் வளர்த்து வருகின்றது. அரசு அதிகாரத்தின் அனைத்து நிறுவனங்களும் இந்த நோக்கத்திற்காக திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப் படுகின்றன. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பும், மதச்சார்பற்ற தன்மையும் கூட பெரும்பான்மை துருவ முனைப்பின் ஒரு பகுதியாக இஸ்லாமிய வெறுப்பு (ISLAMOPHOBIA) மாற்றப்பட்டுள்ளன.

defeat fascist bjp3. 1955 ஆம் ஆண்டில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்து, குடியுரிமைக்கான அளவுகோலாக மதத்தை இணைத்து, 2019 ஆம் ஆண்டு மோடி ஆட்சி நாடாளுமன்றத்தால் குடியுரிமை (திருத்தம்) சட்டம் (CAA) நிறைவேற்றப்பட்டது. பொதுத் தேர்தலுக்கு முன்னதாக விரைவாக செயல்படுத்த படுவதற்கான CAA விதிகளின் சமீபத்திய அறிவிப்பும் நிகழ்வுகளாகும். மூன்று அண்டை நாடுகளை சேர்ந்த ஆறு முஸ்லீம் அல்லாத சமூகங்களுக்கு குடியுரிமை வழங்குகிறது. இவ்வாறாக முஸ்லீம்களை முற்றிலுமாக ஒதுக்கி வைக்கும் CAA சட்டம் என்பது முஸ்லீம்களுக்கு பாரபட்சமானது என்று ஐநா-வால் வகைப்படுத்தப் பட்டுள்ளது. அவ்வாறு செய்யும்போது, ஐநா-வால் மிகவும் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர் என்று வர்ணிக்கப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு கூட அகதி அந்தஸ்தை மோடி அரசாங்கம் மறுத்துள்ளது. அதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு அகதிகள் முகாம்களில் பல ஆண்டுகளாகத் தவிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் கூட CAA இன் படி குடியுரிமை வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். இந்திய பாசிசத்தின் இன்னும் குறிப்பிட்ட தக்கது என்னவென்றால், முஸ்லிம் சிறுபான்மை குடியேற்றங்கள் புல்டோசர்களால் அழிக்கப்பட்டு, நாடு முழுவதும் ஏற்கனவே காவிமயமாக்கப்பட்ட அதிகாரத்துவம், காவல்துறையின் ஆதரவுடன் கும்பல்கள் அவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படுகின்றன. காவி-பாசிசக் குண்டர்களால் முஸ்லிம்களின் வாழ்வுரியும், வாழ்வாதாரமும் மறுக்கப்படுவதுடன் தலித்துகளை பொதுவெளியில் சித்ரவதை செய்து கொல்வதும் இந்தியாவில் 'புதிய வகை மாதிரி இயல்பானதாக' மாறிவிட்டது.

4. மோடி ஆட்சியின் சட்டம்- நீதி வழங்குதல், நிர்வாக நடைமுறை முன்முயற்சிகளிலும், தொடர்ச்சியாக இதே முஸ்லீம் விரோத நோக்குநிலை காணப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் உத்தரவின் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தை பறித்தது. 370 வது பிரிவு சரத்து ரத்து செய்யப்பட்டது. இதற்கும் டிசம்பர் 2023 இல் உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் தந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவிலை கட்டி, 2024 ஜனவரியில் பிரதமரே அதை கும்பாபிஷேகம் செய்து, இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற கட்டமைப்பை சீர்குலைப்பிற்கு உட்படுத்தினார். ஒரே மாதிரி சிவில் சட்டத்தை பிரகடனப்படுத்தி, அதை பாஜக ஆளும் மாநிலங்களில் மோடி ஆட்சி அமல்படுத்தியது. இந்த சட்டம் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக குறிவைக்கப்படுகின்றன. இப்படியான இன்னபிற பிற நகர்வுகள் மூலம், RSS/BJP ஏற்கனவே ஒரு பெரும்பான்மையும், இறை அச்சமும், சர்வாதிகாரமுமான இந்துராஷ்டிராவை நிறுவுவதற்கான அவர்களின் இறுதி நோக்கத்திற்கான அடித்தளத்தை அமைத்து விட்டனர். அதை முறையாக அறிவிப்பதற்காகவே, ஏற்கனவே உருவாக்கப்பட்ட முஸ்லீம் எதிர்ப்பு பெரும்பான்மை எதிர் துருவமுனைப்பு திறம்பட பயன்படுத்தி, தேர்தல் ஆணையத்தின் மீதான தனது கட்டுப்பாட்டினை பயன்படுத்தி பா.ஜ.க., இப்போது தனது 'இலக்கு 400' என்று அறிவித்துள்ளது, அதாவது 2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் 400 இடங்களை வெல்வது என்பதாகும்.

5. மனுஸ்மிருதியை இந்திய அரசியலமைப்புச் சட்டமாக உயர்த்த ஆர்எஸ்எஸ் மேற்கொண்ட முந்தைய முயற்சிகள், செயல்கள் நிறைவேறாதது ஏற்கனவே தெரிந்ததே. எனவே, 1949 நவம்பரில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான வரைவுக் குழு இறுதி செய்த பிறகு, ஆர்எஸ்எஸ் அதன் ஊதுகுழலான அமைப்பாளர் மூலம், தலித்துகள், பெண்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினரை மனிதர்களுக்கும் கீழானவர்கள் (Subhuman) கருதும் மனுஸ்மிருதியை கொண்டு மாற்ற வேண்டும் என்று கோரியது. இப்போது, பொருளாதார இடஒதுக்கீட்டை (EWS) புகுத்தி, 103 வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், மோடி அரசாங்கம் ஏற்கனவே அரசியலமைப்பின் தன்மையை மாற்றியுள்ளது, அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட காலத்தில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது அடிப்படை சட்ட அம்சங்களில் ஒன்றாக இருந்தது. இந்தியாவின் பெரும் செல்வச் செழிப்பு, சிவில், இராணுவ நிர்வாகங்களில், நீதித்துறை போன்றவற்றில் உள்ள உயர் பதவிகள் ஏற்கனவே மிகச்சிறு சிறுபான்மை பார்ப்பன உயர் சாதியினரால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள நிலையில், பொருளாதார இடஒதுக்கீடு (EWS) மேல்தட்டு உயர் சாதியினருக்கு கூடுதலாக 10 சதவீதம் பதவிகளை சேர்த்து வழங்குகிறது. மனுஸ்மிருதியின் கோட்பாடுகளுடன் யதார்த்தத்தில் இது ஒத்துப்போகிறது. இதற்கிடையில், ஆ.எஸ்.எஸ்/பாஜக RSS/BJP ஒடுக்கப்பட்ட சாதிகள், ஜனநாயக சக்திகளின் சார்பில் வைக்கப்பட்ட அனைத்திந்திய சாதிவாரிக் கணக்கெடுப்பு கோரிக்கையை கடுமையாகத் தடுக்கிறது, ஏனெனில் இது நாட்டின் அரசியல், பொருளாதாரம், நிர்வாக அதிகாரத்தின் மீதான உயர்சாதி, பார்ப்பனர்களின் பிடியை அம்பலப்படுத்துகின்றது. இந்தச் சூழலில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்/-பாஜக மிகப்பெரும் வெற்றி பெற்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மனுஸ்மிருதியாக மாற்றலாம் என்ற பரவலான கவலை முற்போக்கு, சனநாயக சக்திகள், அனைத்து நல்லெண்ணம் கொண்ட மக்கள் மத்தியில் நிலவுவதை தீவிரமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

6. இந்த பாசிச காவி கும்பலின் செயல்திட்டத்தின் ஒருங்கிணைந்த, மோடி அரசாங்கத்தின் தீவிர வலதுசாரி, கார்ப்பரேட் சார்பு நோக்கு நிலைக்கு இணங்க, நிலம், உட்கட்டமைப்பு வசதிகள், போக்குவரத்து, பொதுசேவைகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட நாட்டின் செல்வம், வளங்கள் அதானி -அம்பானி போன்ற சூறையாடும் பெரு முதலாளிகள் பெருமளவில் சூறையாடப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியின் போது இயற்றப்பட்ட கார்ப்பரேட் சார்பு, புதிய தாராளவாத சட்டங்கள், தொழிலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வரி தாராளமயமாக்கல் ஆகியவற்றின் கட்டுப்பாடுகளை நீக்குதல் மற்றும் முறைசாரா படுத்துவது ஆகியவை மிகவும் ஊழல் நிறைந்த கார்ப்பரேட் கோடீஸ்வரர்களால் கொடூரமான அளவிலான சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு வழி வகுத்தன. தற்போதுள்ள 44 தொழிலாளர் சட்டங்களை நீக்கி, அவற்றை 4 தொழிலாளர் சட்டங்களாக மாற்றும் நடவடிக்கையானது, இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் கடந்த காலங்களில் கடின உழைப்பால் சம்பாதித்த ஜனநாயக உரிமைகள் அனைத்தும் பறித்துள்ளது. இதனால் பெரும் பான்மையான தொழிலாளர்கள் கொத்தடிமை உழைப்பாளர் நிலைக்கு தள்ளப்பட்டு, கொடூரமான சுரண்டலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சுற்றுச்சூழல் சட்டத் திருத்தம், தடையற்ற வகைகளில் அமைப்புசாரா/முறைசாரா துறைகளில். கார்ப்பரேட் -இயற்கையை கொள்ளையடிப்பதற்கு சுரண்டுவதற்கு வசதியாக உள்ளது. இந்தியாவில் கார்ப்பரேட் வரி விகிதங்கள் உலகிலேயே மிகக் குறைவாக இருந்தாலும், புதிய தாராளவாத மற்றும் பிற்போக்குத் தனமான ஜிஎஸ்டியின் சூப்பர்-திணிப்பு மூலம், வரிச்சுமை பெருகிய முறையில் பெரும்பான்மையான உழைக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் தோள்களுக்கு மாற்றப்பட்டது. இவை, ஒரே அடியில் மூன்றில் இரண்டு பங்கு வரியை மாநில அரசுகளின் அதிகாரங்களில் இருந்து பறித்தது. இதன் மூலம் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை சீர்குலைத்து கீழான நிலைக்கு தள்ளி விட்டது. உலக வர்த்க மையம் WTO ஆணைகளின்படி மோடி அரசாங்கத்தால் இயற்றப்பட்ட மூன்று கொடூரமான விவசாய சட்டங்கள், இப்போது விவசாயிகளின் எதிர்ப்பின் காரணமாக உறைபனியில் வைக்கப்பட்டிருந்தாலும், இந்திய விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கல், உலகளாவிய விவசாய வணிக நலன்களுக்கு முழுமையாக உட்படுத்தும் நோக்கம் கொண்டது.

7. 2014 ஆம் ஆண்டில், மோடி அரசாங்கம் ஊழலுக்கு எதிரான வெறி கூச்சல்கள் மூலம் ஆட்சிக்கு வந்தது. மேலும் 2016 நவம்பரில் பேரழிவுகரமான பணமதிப்பிழப்பு நடவடிக்கை யானது கருப்புப் பணம், ஊழலுக்கு எதிரான "சர்ஜிக்கல் ஸ்டிரைக்" என்று வர்ணிக்கப்பட்டது. மேலும் இது பயங்கர வாதத்திற்கு போகும் நிதியை ஒழித்து பணமில்லா பரிவர்த் தனையை நோக்கி நகர்த்தியது. உண்மையில், கார்ப்பரேட்-பாசிசத் தாக்குதலானது, உழைக்கும் மக்களின், குறிப்பாக அமைப்புசாரா துறைகளில் இருக்கும் சுரண்டப்படும் மக்களின் நாடி நரம்பு இரத்த தமனிகளில் எஞ்சியிருப்பதையும் உறிஞ்சி எடுத்தது. மறுபுறம் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு 'கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கு' வழி வகுத்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களின் பொருளாதாரம், வாழ்வாதாரத்திற்கு ஈடு செய்ய முடியாத கடும்சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், ஒரே அடியில் கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளை அழித்தது. ஆனால், இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டில் புழங்கும் கறுப்புப் பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட மீட்க முடியவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஓராண்டுக்குள், செல்லாததாக மாற்றப்பட்ட முழுப் பணமும் மீண்டும் புழக்கத்தில் வந்துவிட்டது. இதற்கிடையில், இந்தியா மிகவும் ஊழல் நிறைந்த நாடுகளில் ஒன்றாக தொடர்ந்து தொடர்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஆளும் ஆட்சிக்கும் இடையிலான புனிதமற்ற உறவான “சூறையாடும் முதலாளியம்” ஒரு செழிப்பான உதாரணமாகும். கார்ப்பரேட் நிர்வாக மூடிய அறைகளில் கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன, அதே நேரத்தில் பாராளுமன்றம் வெற்று கட்டிடமாகவும் வெறும் பார்வையாளர் களாகவும் கொள்கை முடிவுகளை எடுப்பதில் உள்ளது. மக்களை ஏமாற்றுதல். ஊழல் மிகுந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் வரம்பற்ற பங்களிப்புகளைச் செய்ய அனுமதித்த அரசியல் சட்டத்திற்கு விரோதமானதும் வெளிப்படைத்தன்மை இல்லாததும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தடை செய்த மிகவும் மோசடியான 'தேர்தல் பத்திரங்கள்' திட்டம்! இதில் சரி பங்கு பாஜகவின் கஜானாவுக்கு சென்று இருக்கிறது.

8. இன்று மோடி ஆட்சியின் கீழ், இந்தியா உலகின் மிகவும் சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. இது போலி இலவசங்கள், பிரதமரின் உத்தரவாதங்கள்' என்ற வார்த்தை ஜாலங்களால் மறைக்க முடியாத உண்மை. பணக்காரர் களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி இதுவரை அறியப்படாத அளவிற்கு விரிவடைந்துள்ள நிலையில், மிகப்பெரிய பணக்கார இந்தியர்களின் வருமான பங்கில் முதல் 1 சதவீதம் பேர் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்ததை விட இப்போது அதிகமாக உள்ளனர். மேலும் மோடினாமிக்ஸ் கீழ் இன்று 50 சதவீத இந்திய மக்களின் வருமானம் 1951 ஆம் ஆண்டில் இருந்ததை விட குறைவான வருமானமாக மாறி விட்டது. நாட்டின் செல்வம் குவிந்துள்ள கார்ப்பரேட் சூறையாடும் பில்லியனர் முதலாளிகள் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் உண்மையான உற்பத்தியில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், பண மோசடி மற்றும் பிற பணம் குவியும் ஊக வணிகங்களில் ஈடுபட்டுள்ளனர். இதன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த மோடியின் ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் முன்னெப் போதும் இல்லாததாக உயர்ந்து விட்டது. விலைவாசிகள் குறிப்பாக உணவு, எரிபொருள், பிற அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணைத் தொடும் அதே வேளையில், உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட பரந்த வெகு ஜனங்களின் உண்மையான வருவாயும், வாங்கும் திறனும் கீழ் நோக்கி செங்குத்தாக குறைந்து வருகிறது.

9. சமீபத்தில், 65 ஆண்டுகள் பழமையான திட்டக் கமிஷனுக்கு பதிலாக வந்த NITI நிதி ஆயோக், பெருநிறுவன மயமாக்கலை அதாவது கார்ப்பரேட் கம்பெனிகள் பயன் பெறுவதற்கு எளிதாக்கும் கொள்கை சிந்தனைக் குழுவாக செயல்படுகிறது. இது 5 சதவீதத்திற்கும் குறைவான இந்தியர்கள் மட்டுமே இப்போது வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர் என்று முன்வைக்கின்றது. ஆனால், மோடி ஆட்சியின் இந்தக் கூற்றை, 74 சதவீத இந்திய மக்களால் தெற்காசிய மக்களுக்கு உணவு- வேளாண்மை அமைப்பு (FAO) பரிந்துரைத்துள்ள குறைந்தபட்ச ஊட்டச்சத்துள்ள உணவை வாங்க முடியாது என்ற சமீபத்திய ஐநா அறிக்கையின் பின்னணியில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். எனவே, ஆட்சியாளர்கள் விருப்பப்படி வறுமையை மதிப்பிடுவதற்கு மோடி அரசாங்கம் தனது வசம் வளைந்து கொடுக்கும் புள்ளியியல் வல்லுனர்களை நியமித்து பயன்படுத்தும் முறை குறைபாடுடையதும், சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிமுறைகளுடன் ஒத்துப் போகவில்லை. 2023 உலகளாவிய வறுமை குறியீட்டின்படி மொத்தம் உள்ள 125 நாடுகளில், இந்தியா 111 வது இடத்தில் உள்ளது. மேலும் உலகின் "அதிக ஏழைகளில்" 53 சதவிகிதம் உள்ள இந்தியா "உலகளாவிய வறுமையின் கோட்டை" என்று ஐநா அறிக்கையின்படி வகைப்படுத்தப்படுகிறது. சரியாகச் சொல்வ தென்றால், வளர்ந்து வரும் சமத்துவமின்மை, முன் எப்போதும் இல்லாத வேலையின்மை, வாழ்வாதாரம் இழப்பு, வாழ் விடங்களில் இருந்து இடம்பெயர்தல், பரவலாக்கப்பட்ட பசி ஆகியவற்றில் வெளிப்படுகிறது. தொழிலாள வர்க்கம், விவசாயிகள், தலித் மக்கள், ஆதிவாசிகள், பெண்கள், மத சிறுபான்மையினர் உட்பட அனைத்து ஒடுக்கப்பட்டவர்களும் உள்ளடக்கிய பெரும்பான்மையான இந்திய மக்கள் அதிகமாக வறுமை கோட்டிற்கு கீழே மேலும் முழுமையான வறுமைக்கு தள்ளிவிடப் பட்டுள்ளனர். அரசாங்க நிறுவனங்களால் தந்திரமாக இவை மூடி மறைக்கப்படுகிறது.

10. இந்தப் பின்னணியில், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, கார்ப்பரேட்-காவி பின்புலத்தில், ஊதுகுழல் ஊடகங்களின் ஆதரவுடன், முந்தைய மாதங்களில், மோடி அரசாங்கம் தடையற்ற தீவிர வலதுசாரி, கார்ப்பரேட் சார்பு, பெரும்பான்மை கூச்சல், கூட்டாட்சி எதிர்ப்பு தாக்குதலை கட்டவிழ்த்து வருகிறது. உயிரியல் பன்முகத்தன்மை, வனப் பாதுகாப்பு, சுரங்கங்கள், கனிமங்கள், கடலோரப் பகுதிகள் கனிம மேம்பாடு மற்றும் கடலோர மீன்வளர்ப்பு தொடர்பாக முன்மொழியப்பட்ட தொடர் சட்ட திருத்தங்களின் மூலம் நிலம், காடுகள், நீர், உயிரியல், இயற்கை, கனிமங்களை முன்னோடி இல்லாத வகையில் பெருநிறுவன கார்ப்பரேட் கொள்ளையை உறுதி செய்வதற்காக எஞ்சியுள்ள தடைகளை அகற்றும் நோக்கம் கொண்டது. நாட்டின் கடலோர வளங்கள் பயங்கரமான அளவிலான பெருநிறுவன செல்வம்-ஒதுக்கீடு, சூழலியலுக்கு ஈடுசெய்ய முடியாத சேதம், உயிரியல் பன்முகத்தன்மை இழப்பு, காடழிப்பு, நாட்டின் மலைப்பகுதிகளில் பெரிய அளவிலான நிலச்சரிவுகள், பெருவெள்ளம், பழங்குடியினர்- பழங்குடியின மக்களின் பெருமளவில் கூட்டம் கூட்டமாக இடப்பெயர்வு அவர்களின் வாழ்விடத்திலிருந்து மற்றும் பலவற்றிற்கு இந்த சட்டங்கள் காரணமாக இருக்கின்றது..

11. அதனுடன், அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் மாநிலப் பட்டியலின் விதிகளை மீறி இந்திய காவல் துறையை திணிப்பதற்கு முயற்சிகள், ஒவ்வொரு மாநிலங்களிலும் தேசிய ஆய்வு முகமை NIA அலுவலகத்தைத் திறக்கும் திட்டம் உட்பட கடுமையான NIA, UAPAஐ மேலும் வலுப்படுத்துதல், 2024, ஆம் ஆண்டு குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள், ஒட்டுமொத்த குற்றவியல் சட்டக் கட்டமைப்பையும் புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்க செய்யும் நோக்கத்துடன், டிஜிட்டல் மீடியா மீதான பாசிசக் கட்டுப்பாட்டை உறுதி செய்யும் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் மக்களின் தனியுரிமை, கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையைப் பறிப்பது போன்றவை முழு வீச்சில் நடைபெற்று கொண்டு உள்ளன. பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது என்ற பெயரில், "ஒரு தரவு, ஒரு நுழைவு" (One Data One Entry), "ஒரு நாடு, ஒரு போலீஸ் சீருடை (One Nation One Police Uniform)" போன்ற பல யோசனைகளும் முன்வைக்கப்பட்டன. நாடாளுமன்ற ஜனநாயக தேர்தலை பின்பற்றும் ஏறக்குறைய அனைத்து நாடுகளும் இன்னும் வாக்குச்சீட்டு முறையை பின்பற்றி வருகின்றன அவைகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (EVM) பயன்படுத்துவதை நிராகரித்துவிட்டனர், அதில் மால் வைரஸ் (Malware) நம்பத்தகுந்த செருகல் காரணமாகவும், குறிப்பாக AI செயற்கை நுண்ணறிவின் வருகையுடன் தொடர்புடைய ஆபத்துகளின் பின்னணியில், மோடி அரசாங்கம் பிடிவாதமாக EVM இயந்திரங்கள் தொடர்கிறது. மேலும், மூன்று பேர் கொண்ட குழுவை தேர்ந்தெடுக்கும் குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கி, அதன் மூலம் தேர்தல் ஆணையத்தை தேர்ந்தெடுக்கும் முடிவை பிரதமரிடம் ஒப்படைப்பதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் பெயரளவு சுயாட்சியை கூட பறிக்கப்படுகிறது.

12. ஆட்சியின் பெரும்பான்மைவாதம், பார்ப்பனீயம், கார்ப்பரேட்-பாசிச நிகழ்ச்சி நிரலை அம்பல படுத்துபவர்களை அல்லது கேள்வி கேட்பவர்களை தேசவிரோதிகள், தேச துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். UAPA, காலனித்துவ காலத்தில் துரோக சட்டங்கள் போன்ற கொடூரமான ஆள்தூக்கி கொடூர சட்டங்களுக்கு இவர்கள் உட்படுத்தப் படுகிறார்கள். மோடி ஆட்சியின் கொள்கைகள், அதற்கு நெருக்கமான சூறையாடும் முதலாளிகளின் கொள்கைகள் குறித்து தங்கள் விமர்சனங் களையும், கருத்து வேறுபாடுகளையும், வேறுபாட்டையும் வெளிப்படுத்தும் எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் கூட குறிவைக்கப் பட்டு சிறையில் பண்பாட்டு ஆர்வலர்கள், அறிஞர்களைக் கொல்லக் கூட இந்துத்துவா பாசிசக் குண்டர்களுக்கு தயக்கம் இல்லை. ED, CBI போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இருப்பினும், ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர் கொள்பவர்கள் பாஜகவில் சேர்ந்தவுடன் அல்லது பாசிசக் கூட்டாளிகளாக மாறியவுடன் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். பாசிச ஆட்சி அம்பலமாகி வருவதால், எதிர்க்கட்சி முதல்வர்கள் மீது கூட வழக்குகள் போடப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ், பிஜேபியின் கீழ் உள்ள இந்தியா ஒரு வகைமாதிரியான புதிய பாசிச ஆட்சியாக மாறியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இங்கு சுதந்திரமாக கருத்து தெரிவிப்பதற்கான அடிப்படை ஜனநாயக உரிமையும், கருத்து மாறுபடும் உரிமையும் கூட இல்லை.

13. இந்த பாசிச சூழ்நிலையில், உழைக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம், வாழ்வாதாரம் பற்றிய அடிப்படை கேள்விகளை எடுத்துக் கொள்வதற்கு அவசியமான அரசியல் பிரச்சினைகளையோ அல்லது அமைப்புரீதியான சுதந்திரத் தையோ எழுப்புவதற்கு குறைந்தபட்ச இடம் கூட இருக்காது. எனவே பாசிஸ்டுகளை அதிகாரத்தில் இருந்து விரைவில் அகற்றுவதே மக்களின் உடனடியான, மிக அவசரமான பணியாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிலாளர் வர்க்கம், ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல் கோரிக்கைகளின் அடிப்படையில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு கூட, பாசிசத்தை தோற்கடிப்பது மிகவும் இன்றியமையாதது. இந்தியாவின் முழுமையாக பெருநிறுவன, நுண் நிறுவனங்களின் தளங்களில் தனது வலைகூடாரங்களைக் பின்னிக்கொண்டு இருக்கும் ஆர்எஸ்எஸ் பாசிசத்தின் குறிப்பான விஷயம், அது அரசு அதிகாரம், பகுதி-தெரு அதிகாரம் என்று இரண்டின் மீதும் தனது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது, இந்த பணி கடினமானது மற்றும் சிக்கலானது, குறிப்பாக பிஜேபியுடன் இணைந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்ற அரசியல் கட்சிகளை தனது நிகழ்ச்சி நிரலுக்கு பயன்படுத்து கின்றனர் திறன் கொண்டதால் ஆட்சியிலிருந்து பாசிசத்தை அகற்றுவது சிக்கலானதாகவும், மிக கடுமையானதாகவும் இருக்கின்றது. எனவே, இந்த இக்கட்டான தருணத்தில், குறிப்பாக புரட்சிகர இடதுசாரிகளுக்கு ஆர்எஸ்எஸ், பாசிஸ்டுகளை தோற்கடிக்க அமைப்பு பலம் இல்லாத நிலையில், 2024 பொதுத் தேர்தலில் அனைத்து பாசிச எதிர்ப்பு, ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பாஜகவை தனிமைப் படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதும். அதன் கூட்டாளிகளையும் சேர்த்து தோற்கடித்து, ஆர்எஸ்எஸ் பாசிசத்தை அதிகாரத்தில் இருந்து விரைவில் அகற்ற வேண்டும்.

14. அதன்படி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் முக்கியமான பணி, பாசிச எதிர்ப்பு வாக்குகள் பிரிவதைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை கவனமாக எடுத்து ஆர்எஸ்எஸ், பாஜக எதிர்ப்பு வாக்குகளை அதிகபட்சமாக ஒருங்கிணைப்பதற்கான அனைத்து முயற்சி களையும் தகுந்த நடவடிக்கைகளையும் எடுப்பதாகும். பாசிஸ்டுகளைத் தனிமைப்படுத்தவும் தோற்கடிக்கவும் மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு மக்களைக் கேட்டுக் கொள்ளும் அகில இந்திய அளவிலான பெருநிறுவனத்தில் இருந்து நாடாளுமன்ற தொகுதிகளின் நுண் மட்டம் வரையிலான உறுதியான பாசிச எதிர்ப்பு பிரச்சாரம் அனைத்து முற்போக்கு-ஜனநாயகம், ஒத்த கருத்து கொண்ட சக்திகளால் தொடங்கப்பட வேண்டும். கார்ப்பரேட் மூலதனத்தில் வேரூன்றிய இந்தியக் கூட்டணியை சேர்ந்த பாசிச அல்லாத கட்சிகள் அடிப்படையில் நவதாராளவாதம் கொள்கைகளாக இருந்தால் ஆட்சியில் இருக்கும் இடங்களிலெல்லாம் நவ தாராளமயக் கொள்கைகளை அமுல்படுத்தி, கொண்டிருக்கின்றன. இத்தகைய கூட்டணியில் நேரடையாக அங்கம் வகிக்காமல், இடது ஜனநாயக சக்திகள் தொடர்ந்து தங்கள் கருத்தியல்-அரசியல் சுதந்திரத்தை தக்க வைத்துக் கொண்டு, தொழிலாளர்கள், அனைத்து ஒடுக்கப் பட்டவர்களின் அரசியல்நிலைபாட்டை நிலைநிறுத்துவதற்கு செயல் யுத்தியாக தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தி பாசிச வேட் பாளர்களை தோற்கடிக்க வேண்டும்.

15. எனினும், இந்தியக் கூட்டணியின் அங்கமான கட்சிகள் பாஜகவை தோற்கடிக்க முடிந்தாலும், அவைகளின் கருத்தியல்-அரசியல் பலவீனம் காரணமாக, மிக ஊழல் நிறைந்த கார்ப்பரேட் மூலதனம், பார்ப்பனீய உயர் சாதிகள், பிற்போக்குத்தனமான அதிகாரவர்க்கத்தின் ஆதரவுடன் பாசிசம் மீண்டும் அதிகாரத்துவத்திற்கு வருவதற்கான அச்சுறுத்தலை நிராகரிக்க முடியாது. எனவே, பாஜகவை தோற்கடிக்க கூடிய வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் பாசிசத்தை தோற்கடிக்கும் செயல்தந்திரம் நடவடிக்கையை மேற்கொள்ளும் அதே வேளையில், இடது ஜனநாயக சக்திகள் சுதந்திரமாக தொழிலாளி வர்க்கத்தை ஒருங்கிணைத்து, ஒடுக்கப்பட்ட அனைவரின் இயக்கங்களையும் நீண்ட காலக் கண்ணோட்டத்துடன் கட்டியெழுப்பி மக்களுக்கான மாற்று கண்ணோட்டத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும். இந்திய பாசிசத்தின் அடிப்படையாக உள்ள நவதாராளவாத கார்ப்பரேட் மயமாக்கல், மனுஸ்மிருதி சாதி அமைப்பின் பொருண்மை, கருத்தியல் அடிப்படைக்கு எதிரானதாக இந்த மக்களுக்கான மாற்று கண்ணோட்டம் இருக்க வேண்டும்.

16. சுருக்கமாக, (RSS/BJP) ஆர்எஸ்எஸ்/பாஜக பாசிசத்தை தூக்கியெறிவதற்கான உடனடி பணி தொடர்பாக, இகக மாலெ (ரெட்ஸ்டார்) கட்சி மக்களின் வாழும் உரிமைக்காக முன் நிற்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உட்பொதித்துள்ள. சனநாயகம், மதச்சார்பின்மை, சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை உயர்த்தி பிடித்து நிலைநிறுத்தும். அனைத்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளுடனும் ஒற்றுமையுடன் எழுந்து, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள குறிப்பான தனித்துவமான சூழ்நிலைக்கு ஏற்ப பாசிச எதிர்ப்பு வாக்குகளை பிரிக்காமல் அனைத்து முயற்சிகளையும் எடுத்து, பொதுத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்/-பாஜகவை தோற்கடிக்க உறுதியுடன் முன்னோக்கி பாடுபட வேண்டும் என்று. இகக மாலெ (ரெட் ஸ்டார்) கட்சி அறைகூவுகிறது.

 பாசிச ஆர்எஸ்எஸ்/பாஜக RSS/BJPயை தோற்கடிப்போம்!

 அரசியலமைப்பு, சனநாயகம்,  மதச்சார்பின்மை, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டைக் காப்பாற்றுங்கள்!

 புதிய தாராளமய கார்ப்பரேட் மயமாக்கலுக்கு எதிராக ஒரு மக்கள் மாற்றீட்டை உருவாக்குங்கள்!

 சாதி ஒழிப்புக்கு பாடுபடுங்கள்!

 இஸ்லாமோஃபோபியா வுக்கு (இஸ்லாம்வெறுப்பு பிரச்சாரம்) எதிராக போராடுங்கள்!

(10 மார்ச் 2024 அன்று நாக்பூரில் நடந்த பாசிச எதிர்ப்பு மக்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 18வது இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பற்றிய இகக (மாலெ) ரெட் ஸ்டார் கட்சியின் அணுகுமுறை)

Pin It