எல்லாரும் CAA- வைப் பற்றி கேள்விப்பட்டிருக்கோம். ஆனா COA வைப் பத்தி கேள்விப்பட்டு இருக்கோமா? அதுதான் China occupied Arunachala Pradesh.

சீனா அருணாச்சலப் பிரதேசத்திற்கு குடி வந்து, பால் காய்ச்சி விட்டார்கள். கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சீனப் பெயரை சூட்டி விட்டார்கள். Zangnan என்பதுதான் அருணாச்சலத்திற்கு சீனா வைத்த பெயர்.

அருணாச்சலப் பிரதேசத்தின் திபெத்திய பகுதியில் உள்ள 11 குடியிருப்புப் பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு ஏரி என 30 இடங்களுக்கு சீன எழுத்துகளிலும், திபெத்திய மொழிகளிலும் பெயர் சூட்டப்பட்டுள்ளன.modi and jaishankar 700இந்த விஷயத்தில் இந்தியா இன்னும் மௌனம் காப்பது, மோடி அரசாங்கத்தின் பலவீனத்தைக் காட்டுகிறது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “சீனாவின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் நகைப்புக்குரியது. அருணாச்சலப் பிரதேச மாநிலம் இந்தியாவின் பகுதி” என்று வெறும் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். எந்த நடவடிக்கையும் இல்லை, உச்சகட்டமாக 52 சீன மொபைல் ஆப்களை தடை செய்திருக்கிறார்கள்.

ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்து இருந்தால் 56 இன்ச் மார்பு துடித்திருக்கும், பாரத் மாதா கி ஜே என்று தேசபக்தி பீறியிருக்கும். வீரமாய் பேசியிருப்பார்கள். ஆனால் மோடிஜி சீனா பற்றி ஒரு வார்த்தை பேச மாட்டேன்கிறார். ஏன்?

யார் ஆக்கிரமிப்பு செய்தார்கள் என்பதிலேயே ஒரு மத அரசியல் இருக்கிறது. இவர்கள் வாய்ச்சவடாலில் மட்டுமே வீரர்களாக காட்டிக் கொள்கின்றார்கள்.

வடநாட்டில் பெரும்பான்மை இந்துக்களை படிப்பறிவில்லாமல் வைத்துக்கொண்டு வளர்ச்சியைக் கொடுக்காமல், மிகவும் பின் தங்கிய மாநிலங்களாக பீகார், உத்தரப்பிரதேசம், சட்டீஸ்கர், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் இருக்கின்றன.

தாங்கள் ஆளும் மாநிலத்தை வறுமையில் வைத்திருப்பதுதான் அவர்களின் சாதனை. மத வெறுப்பிலும், போலி தேசபக்தியிலும் கட்சியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவர்களுக்கும் ஒருநாள் பசிக்குமல்லவா? அவர்களின் பசிக்கு வடை பத்தாது

- ரசிகவ் ஞானியார்