farmers protest at delhi 361நாடு முழுவதும் விவசாயிகள் ஓராண்டு நடத்திய போராட்டத்திற்கு பிறகு விவசாயிக ளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு ‘குறைந்த பட்ச ஆதார விலை’ தொடர்பாக பரப்பும் பொய்களை களைவது அவசியமாகிறது.

ஆதார விலை கணக்கிடும் முறை

ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஆதார விலை (MSP) பரிந்துரைக்கு CACP A2+FL என்ற முறையை (Commission for Agricultural Cost and prices A2+ Family labour) கணக்கில் எடுத்து கொள்கிறது. இது C2 (மூலதனத்தின் மீதான வட்டி மற்றும் நிலத்தின் வாடகையை உள்ளடக்கியது) செலவுகளை விட மிகக் குறைவு. விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான கமிஷனுக்கும் C2 மதிப்பீட்டுக்கும் பல்வேறு மாநிலங்க ளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் நெல்லுக்கு மாநிலத்தின் C2 செலவு திட்டத்தையும் CACPயும் ஒப்பிட்டு பார்த்தால் C2 முறையில் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2114 மற்றும் CACP முறையில் ஒரு குவிண்டாலுக்கு 1559 கிடைக்கிறது. அதாவது ஒரு குவிண்டாலுக்கு 555 குறைவாக CACP முறையில் கிடைக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் C2 முறையில் ஒரு குவிண்டால் நெல் ரூ.1995; CACP முறையில் ஒரு குவிண்டால் நெல் ரூ.1272 மட்டுமே. அதாவது ரூ.723 குறைவாக கிடைக்கிறது. கேரளாவில் C2 முறையில் ஒரு குவிண்டால் நெல் ரூ.2852; CACP முறையில் ஒரு குவிண்டால் நெல் ரூ.2044. அதாவது ரூ.808 குறைவாக கிடைக்கிறது. கர்நாடகாவில் C2 முறையில் ரூ.2733; CACP முறையில் ரூ.1635. அதாவது ரூ.1098 குறைவாக கிடைக்கிறது. கர்நாடகாவில் துவரை ஒரு குவிண்டால் C2 முறையில் ரூ.6399, CACP முறையில் ரூ.4961; அதாவது ரூ.1438 குறைவாகும். அதே போல் C2 முறையில் பாசிபயிறு விலை ரூ.9456; CACP முறையில் ரூ.6173. வித்தி யாசம் ரூ.3283 குறைவாகும் என்பது தெளிவாக உள்ளது. செலவு கணக்கீடுகளில் பெரும் முரண்பாடு உள்ளது. CACP முறையில் செலவுகள் கணக்கிடப் படும் தன்னிச்சையான முறை ஆகியவையும் அம்பல மானது. இந்தக் கணக்கீட்டுத் தவறின் விளைவாக ஒன்றிய அரசு அறிவித்த சொற்பமான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகளுக்கு போதிய வருவாய் வழங்க தவறிவிட்டது. இப்பொழுது சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரை யாக C2+50 சதவீதம் பரிந்துரையின் படியான குறைந்த பட்ச ஆதாரவிலையையும் ஒன்றிய அரசின் ஆதார விலையையும் ஒப்பிடுவது ஏன் என்பது தெளி வாகிறது.

கொள்முதல்

அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின் படி, பெரும்பாலான பயிர்களுக்கு மாநில நிறுவனங்களின் கொள்முதல் 10 சதத்திற்கும் அதிகமாக இல்லை. 2018-19 ல் நெல் பயிரிட்ட விவசாயிகளில் 8.6 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்துள்ளனர். கோதுமை விற்பனை 4.9 சதம் மட்டுமே. இதன் பொருள் பெரும்பாலான விவசாயிகள் வெளிச் சந்தையில் விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதே. அங்கு விலை குறைவாக இருக்கிறது. நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச ஆதாரவிலை (MSP) விகிதத்தை விட மிகவும் குறைவாக உள்ளது.

விவசாயிகள் தங்கள் நெல் விளை பொருட்க ளை வெளிச்சந்தையில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.800 முதல் ரூ.1100 வரை விற்பனை செய்கின்றனர். எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரைப் படி C2+50% அடிப்படையிலான குறைந்த ஆதாரவிலை உறுதி செய்யப்பட்டிருந்தால் விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தபட்சம் ரூ.2590 கிடைத்திருக்கும். இந்தாண்டு அரசால் அறிவிக்கப்பட்ட நெல்லின் குறைந்தபட்ச ஆதாரவிலை ரூ.1960 மட்டுமே (ஏ கிரேடு நெல்லுக்கு). உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் குறைந்தபட்ச விலை உறுதியாக கிடைக்காததால் நெல்லை தனியாரிடம் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1100 முதல் 1390 வரைக்கு விற்பனை செய்கிறார்கள். C2+50% கணக்குபடி பார்த்தால் விவசாயி ஒரு குவிண்டாலுக்கு ரூ.1290 இழந்திருக்கிறார். ஒரு ஏக்கர் என்றால் 20 குவிண்டால் உற்பத்தியாகும். ஒரு விவசாயி ஒரு ஏக்கருக்கு C2+50% படி ரூ.51800 பெற வேண்டும். ஆனால் ரூ.22000 மட்டுமே தற்போது விவசாயி பெற்றுள்ளார். மாநில அரசு அறிவித்த எம்.எஸ்.பி விலையுடன் கணக்கிட்டால் ஒரு குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.860ம், ஏக்கருக்கு ரூ.17200 ஒரு பருவத்திற்கும் ஒரு ஆண்டிற்கு ஏக்கருக்கு ரூ.34000 நஷ்டம் ஏற்படுகிறது. நெல் தவிர கரும்பு, உருளைகிழங்கு, அல்லது பிற காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற வற்றை பயிரிடும் விவசாயிகளும் நெல் விவசாயிகளை விட அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

msp 1பிற மாநிலங்களும் - கேரளாவும்

விவசாயிகளைக் காப்பதில் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட உத்தரப்பிரதேசம் முன்னணி யில் இருப்பதாகவும் விவசாயிகள் இங்கு மிகப்பெரிய பயனாளி என்கிறது பாஜகவின் யோகி அரசு. ஆனால் யதார்த்தம் அதற்கு நேர்மாறானது. நம் நினைவுகளை புதுப்பிக்க சில ஒப்பீடுகளைச் செய்வோம். கீழே உள்ள அட்டவணையை பார்க்கவும்:

msp 2

உத்தரப்பிரதேச விவசாயிகள் மற்ற மாநில விவசாயிகளின் பயிர்களுடன் ஒப்பிடும் போது ஒவ்வொரு பயிருக்கும் விலை குறைவாக கிடைப்பதை நாம் காண்கிறோம். உதாரணமாக நெல் விலையை ஒப்பிடுகையில் கேரளாவில் ஒரு விவசாயிக்கு ரூ.2800 கிடைக்கும். உத்தரப்பிரதேசத்தில் அரசு அறிவித்த குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1960 கூட கிடையாது. கேரளாவின் சராசரி விவசாயியை விட ஏக்கருக்கு குறைந்தபட்சம் 34000 ரூபாய் குறைவாக உத்தரப்பிர தேச விவசாயிகள் பெறுகிறார்கள். அதற்கான கார ணங்களை நாம் பார்க்க வேண்டும். பல மாநிலங்களை விட உத்தரப்பிரதேசத்தில் அரசு கொள்முதல் குறைவாக உள்ளது. எனவே விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை வெளியில் விற்பனை செய்ய வேண்டியுள்ளது.

கரும்பு விவசாயிகளின் கதி

உத்தரப்பிரதேசத்தில் கரும்பு விவசாயிகளின் நிலையும் மோசமாக உள்ளது. ஹரியானாவில் கரும்பு கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.362 ஆகவும், பஞ்சாப்பில் ரூ.360 ஆகவும் உள்ளது. பெரும் போராட்டத்திற்கு பிறகு யோகி வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு ரூ.350 ஆக உயர்த்தி உள்ளார். உத்தரப்பிரதேச அரசு கரும்பு விவ சாயிகளின் கொள்முதல் விலையை உயர்த்துவதால் மட்டும் முன்னேற்றம் ஏற்படப் போவதில்லை. ஏனென்றால் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு ரூ.19,536 கோடி பாக்கி வைத்துள்ளன. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு பெரிய நிலுவைத் தொகை கிடையாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2018-19ல் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.9953 கோடி பாக்கி இருந்தது. தற்போது நிலுவை தொகை இரட்டிப்பாகியுள்ளது. கரும்பு ஆலை முதலாளிகள், விவசாயிகளின் பணத்தில் ஆலைகளை நடத்துகி றார்கள். அதே நேரத்தில் கரும்பு விவசாயிகள், பாக்கித் தொகையை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே குறைந்தபட்ச ஆதார விலையை கணக்கீடு செய்வதில் தலைகீழ் மாற்றம் வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கமும், சம்யுக்த கிசான் மோர்ச்சாவும் உறுதிபட வலியுறுத்துகின்றன. அதைச் செய்யாமல் ஒன்றிய பாஜக அரசும் சரி, உத்தரப்பிரதேச யோகி ஆதித்யநாத் அரசும் சரி விவசாயிகளை ஏமாற்ற முயல்கின்றன. அதை ஒரு போதும் இந்திய விவசாயிகள் வர்க்கம் அனுமதிக்காது.

- கே.பி.பெருமாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப்பொருளாளர்

Pin It