திருச்சி காந்தி மார்க்கெட் கீரைக்கொல்லை பஜார் பகுதியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் புகுந்த இந்து முன்னணியைச் சேர்ந்த பொறுக்கிகள் சிலர், ஆசிரியர் கி.வீரமணி மற்றும் அவரது கட்சிக்காரர்கள் ‘இந்துக்களையும், இந்துக் கடவுள்களையும் அவமானப்படுத்தி பேசியதாகக்’ கூறி மேடையை நோக்கி செருப்பு மற்றும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தி இருக்கின்றார்கள். பதிலுக்கு தி.க நிர்வாகிகளும் நாற்காலிகளை வீசி எதிர்த் தாக்குதல் நடத்தி இருக்கின்றார்கள். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தி.க கட்சிக்காரர்கள் இருவரின் மண்டை உடைந்திருக்கின்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக இந்து முன்னணியைச் சேர்ந்த மாநகர நிர்வாகி மணிகண்டன், (அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படித்த 16 வயது நந்தினி என்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து, ஆறுமாத கர்ப்பத்தை பெண்ணின் பிறப்புறுப்பை பிளேடால் கிழித்து சிசுவை வெளியே எடுத்து, அதை அந்தப் பெண்ணின் சுடிதாரில் வைத்து கொளுத்தி, அந்தப் பெண்னின் உடலை நிர்வாணமாக கீழமாளிகை கிணற்றில் வீசி எறிந்த இந்து முன்னணியின் ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் இவரில்லை) போத்தராஜ் உள்ளிட்ட 12 பேரை போலீஸார் கைது செய்திருக்கின்றார்கள்.

krishna leelaதமிழ்நாட்டில் எந்த ஒரு மக்கள் பிரச்சினைக்காகவும் இந்தக் கழிசடைக் கும்பல்கள் ஒருபோதும் குரல் கொடுத்தது கிடையாது என்பதுதான் இவர்களின் கடந்த கால, நிகழ்கால வரலாறு. பாஜகவைச் சேர்ந்த நிர்மலா தேவி, தமிழ்நாட்டுப் பெண்களை கிழட்டுப் பொறுக்கிகளுக்காகவும், அரசியல்வாதிகளுக்காகவும் விபச்சாரத்துக்கு அழைத்தபோது ‘இந்துப் பெண்களை எப்படி விபசாரத்துக்கு அழைக்கலாம்’ என்று இந்தக் கும்பல் போராடவில்லை. அரியலூர் நந்தினியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கருவறுத்துக் கொன்றபோது ‘ஒரு இந்துவாய் இருந்துகொண்டு, அதுவும் இந்துக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு அமைப்பில் இருந்து கொண்டு இப்படி நம்முடைய சொந்த இந்து சகோதரியையே கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கருவறுத்துக் கொன்றுவிட்ட அயோக்கியனைத் தண்டிக்க வேண்டும் என வெகுண்டெழவில்லை. ‘பெண்கள் படுத்துதான் பதவி உயர்வு பெறுகின்றார்கள்’ என்று சொன்ன பார்ப்பனப் பொறுக்கி எஸ்.வி.சேகருக்கு எதிராக ‘எப்படிடா என்னுடைய அம்மாவும், அக்காவும், தங்கையும், படுத்துதான் பதவி உயர்வு பெறுகின்றார்கள் என்று சொல்கின்றாய், பாப்பார நாயே’ என்று எஸ்.வி.சேகரின் சட்டையைப் பிடித்து உலுக்கவில்லை.

பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் அதிமுக காலிகளின் துணையுடன் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதற்கு எதிராக ‘இந்துக்களே ஒன்று சேருங்கள் - பாலியல் குற்றவாளிகளைத் தண்டிக்க’ என்று பந்த் அறிவிக்கவில்லை. ஆனால் இந்த மானங்கெட்ட கும்பல் இன்று கொஞ்சம் கூட வெட்க மானமே இல்லாமல் கோழைத்தனமாக தாக்குதல் நடத்தியதோடு ‘திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று திருச்சி கோட்டைக் காவல் நிலையத்தில் முறையிட்டும் இருக்கின்றார்கள். இதுதான் இவர்களின் யோக்கியதை.

பெரியாரைப் பற்றி தொடர்ந்து அவதூறுகளை மட்டுமே வைத்து மிகக் கீழ்த்தரமாக விமர்சனம் செய்துவரும் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி, இந்து முன்னணி, பொறுக்கிகள்தான் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பகவான் கிருஷ்ணனைப் பற்றி தரக்குறைவாக பேசிவிட்டார் என்று கூப்பாடு போடுகின்றார்கள். ஆனால் பகவான் கிருஷ்ணன் ஒரு பொம்பளப் பொறுக்கி என்பதற்கான ஆதாரத்தை பெரியாரும், வீரமணி அவர்களுமா ரூம் போட்டுத் தயாரித்தார்கள்? யார் கிருஷ்ணனை கடவுள் என்று சொல்கின்றார்களோ, அவர்கள் எழுதி வைத்ததில் இருந்துதானே கி.வீரமணி உட்பட பெரியார் இயக்கத் தோழர்கள் ஆதாரங்களைக் காட்டுகின்றார்கள். கிருஷ்ணனுக்கு 60000 பொண்டாட்டிகள் இருந்தார்கள் என்றும், அதுபோதாமல் சத்யபாமா, ஐம்பாவதி, ருக்மணி, பத்ரா, மித்ரவிந்தா, சத்யா நீலா, காளிந்தி, பட்சணா போன்ற எட்டு அங்கீகரிக்கப்பட்ட பொண்டாட்டிகளும் இருந்ததாக பாகவத புராணத்தில் எழுதி வைத்தது யார்? பெரியாரா? வீரமணியா?

கி.விரமணி கிருஷ்ணனைப் பற்றி அவதூறாகப் பேசிவிட்டார் என்று காட்டுக் கூச்சல் போடும் கும்பல்கள் இன்று அவர்கள் சொந்தம் கொண்டாடும் அம்பேத்கரும் அதையே தானே ஆதாரத்தோடு சொன்னார். அவரை என்ன செய்யப் போகின்றார்கள்.? தன்னுடைய இந்துமதத்தின் புதிர்கள் என்ற நூலில் 'இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர்' என்ற பகுதியில் கிருஷ்ணனின் யோக்கியதையைக் கிழித்து தொங்கப் போடுகின்றார் அம்பேத்கர்

“….கோபிகள் ஒரு நாள் யமுனையில் நீந்திக் குளிக்கப் போனார்கள். நதியில் இறங்குமுன் தம் ஆடைகளைத் களைந்து கரையில் வைத்தார்கள். நிர்வாணமாய்க் குளிக்கும் பழக்கம் நாட்டில் சில பகுதிகளில் இன்னும் நிலவிடுவதாய்ச் சொல்லப்படுகிறது. நதிக்கரையில் கோபியர்கள் அவிழ்த்து வைத்த ஆடைகளைக் கிருஷ்ணன் எடுத்துக் கொண்டு ஓடிப்போய் நதியோரத்தில் இருந்த ஒரு மரத்தின் மீது ஏறிக் கொண்டான். ஆடைகளைத் திருப்பித் தா என்று அப்பெண்கள் கேட்டபோது ஒவ்வொருத்தியும் அம்மரத்தருகே வந்து தனக்கு ஆடை வேண்டுமென்று ‘கையேந்தி’க் கேட்டாலொழிய அத்துணிகளைக் கொடுக்க முடியாதென்று கிருஷ்ணன் சொன்னானாம். இது நடக்க வேண்டுமானால் குளித்துக் கொண்டிருந்த அப்பெண்கள் நிர்வாணமாக வெளியேறி மரத்தடிக்கு வந்து கிருஷ்ணன் முன் நிர்வாணமாய் நின்று கையேந்த வேண்டும். அப்பெண்கள் அப்படிச் செய்த பின்னர்தான் கிருஷ்ணன் 'மனமிரங்கி' அப்பெண்களுக்கு அவரவர் துணிகளைக் கொடுத்தானாம். இக்கதை பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது”

“….கிருஷ்ணனின் இளைய பிராயம் முழுவதும் பிருந்தாவனத்து இளம்பெண்களுடன் தகாத உறவு கொண்டு கழித்ததாகவே தெரிகிறது. கிருஷ்ணன் செய்த இத்தகைய லீலைகளை ’இராசலீலை’ என்கின்றனர்." இந்நிகழ்ச்சிகளை விஷ்ணுபுராணம் ஆங்காங்கே சற்று நாகரிமாய்ச் சொல்ல முயன்றாலும் ஹரிவம்ச புராணம் முற்றிலும் ஆபாசமாகவே சொல்லுகின்றது. பாகவத புராணமோ முழுக்க முழுக்க அருவருப்பாகப் புலப்படுத்துகிறது. கிருஷ்ணனுடைய அநாகரிகமான அநேக காரியங்களுள் மிகக் கேவலமானது என்னவெனில் அவன் இராதா என்ற கோபியுடன் கொண்ட முறைகெட்ட வாழ்க்கையாகும். கிருஷ்ணன் இராதாவுடன் கொண்டிருந்த தொடர்பினைப் பற்றிப் பிரம்ம வர்த்த புராணத்தில் வருணிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

“…மன்னன் ருக்மாங்கதனின் மகள் ருக்மணியைக் கிருஷ்ணன் திருமணம் செய்து கொள்கின்றான். இராதாவோ ஏற்கெனவே மணமானவள். முறைப்படி மணந்த மனைவி ருக்மணியைக் கைவிட்டுவிட்டு வேறொருத்தன் மனைவியான இராதாவுடன் கிருஷ்ணன் வாழ்க்கை நடத்துகிறான். அப்படிப்பட்ட பாவத்தை செய்து வாழ்க்கை நடத்தும் கிருஷ்ணனுக்குத் தான் செய்த குற்றத்தைப் பற்றி மனஸ்தாபமோ பச்சாதாபமோ கொஞ்சம் கூட இல்லை.” “…. ருக்மணியைத் தொடர்ந்து பெரும் மந்தையே கிருஷ்ணனின் மனைவிக் கூட்டமானது. கிருஷ்ணனுடைய மனைவிப் பட்டாளத்தின் எண்ணிக்கை பதினாறாயிரத்து ஒரு நூற்றெட்டு பேர்கள். அவனுடைய குழந்தைகளின் எண்ணிகையோ ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேர்கள்.”

இதைவிட கிருஷ்ணனின் யோக்கியதையை நிரூபிப்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்? ஒரு மருந்துக்குக் கூட யோக்கியதையை தங்களுடைய கடவுள்களுக்குக் கற்பிக்க முடியாத அளவுக்கு அயோக்கியத்தனமாக தரங்கெட்டு வாழ்ந்த கும்பலின் வாரிசுகள் தான் இன்று கற்பைப் பற்றியும் பண்பாட்டைப் பற்றியும் அனைவருக்கும் வகுப்பெடுத்துக் கொண்டு இருக்கின்றது. கி.வீரமணி அவதூறாகப் பேசிவிட்டார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லும் இந்துமதக் காவலர்கள் முடிந்தால், திராணி இருந்தால் அம்பேத்கரின் நூல்களைத் தடை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடுக்கட்டும்.

“தீராத விளையாட்டுப் பிள்ளை- கண்ணன் தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை” என்றும், “மான்ஒத்த பெண்ணடி என்பான்சற்று மனம்மகிழும் நேரத்திலேகிள்ளி விடுவான்” என்றும், “பின்னலைப் பின்நின் றிழுப்பான்; - தலை பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;” என்றும் தெருவிலே வரும்போகும் பெண்களை எல்லாம் சடைபிடித்து இழுத்தும், கிள்ளிவைத்தும் பொறுக்கித்தனமாக நடந்து கொண்டான் என்று பார்ப்பன பாரதிகூட குறிப்பிடுகின்றாரே! ,பாரதி மட்டுமல்ல தற்காலத்தில் பார்ப்பனியத்தைப் பரப்புரை செய்வதற்கென்றே பகவான் கிருஷ்ணனால் பணிக்கப்பட்ட ‘தினமலம்’ பத்திரிகை கூட இப்படித்தானே எழுதி இருக்கின்றது “கிருஷ்ணன் பலரை மணந்தவன்: கண்ணன் ருக்மணி, சத்யபாமா, சாம்பவதி, காளிந்தி, மித்திரவித்தை, சத்தியவதி, பத்திரை, லட்சுமனை, நாகாசுரன் பட்டினத்தில் இருந்து வந்த 17000 பெண்கள், சததி என்னும் நப்பின்னை முராசுரன் நரகாசுரனின் 10 பெண்கள், பகதத்தன் என்னும் மன்னனுக்கு அபயம் தந்து, அங்கு சிறையில் இருந்த 11600 ராச கன்னிகள் ஆகியோரைத் திருமணம் செய்து கொண்டான் எனப்படுகிறது” (20 ஆகஸ்ட் 2013) என்று.

raas lilaஇன்னும் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றது. ஆனால் நாமே ஆன்மீகம் என்ற பெயரில் விற்கப்படும் சரோஜாதேவி புத்தகங்களை படிக்கச் சொல்லிக் கொடுத்த மாதிரி ஆகிவிடும் என்பதால் அதை விட்டு விடுகின்றோம். ஆர்வமும், அவசியமும், ஆன்மீக ஆராய்ச்சி நாட்டமும் உள்ளவர்கள் நேரடியாகவே மூல நூல்களைப் படித்து பயன்பெற்றுக் கொள்ளலாம். படித்த பின்னால் தன்மானமும், சுயமரியாதையும் கொஞ்சமாவது உள்ளவர்கள் நிச்சயம் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கெல்லாம் கிருஷ்ணன் முன்னோடியா இல்லையா என்பதை உணர்ந்து கொள்வர்கள்.

மேலும் மானமுள்ள பெற்றோர்கள் தங்கள் வீட்டுப் பெண்களிடம் இப்படி யாராவது நடந்துகொண்டால் அதை ‘லீலை’ என்று பெருமைப்பட்டு அப்படி நடந்து கொண்டவனிடம் சாஸ்டாங்கமாக விழுந்து கும்பிடு என்று சொல்லிக் கொடுப்பார்களா? இல்லை செருப்பை கழற்றி அந்த நாயை அடி என்று சொல்லிக் கொடுப்பார்களா என்று பார்த்தால் அது நிச்சயம் பகவான் கிருஷ்ணனாகவே இருந்தாலும் இரண்டாவது சொன்னதுதான் நடக்கும். இவர்கள் மட்டுமல்ல கிருஷ்ண லீலையைக் கொண்டாடும் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களும் அப்படித்தான் செய்வார்கள் என்று நம்புகின்றோம்!.

இப்போது பிரச்சினை என்னவென்றால் இதுபோன்று இந்துமத வெறியர்கள் பெரியாரின் மீதும், பெரியாரிய இயக்கத் தோழர்கள் மீதும் அவதூறுகளையும், தாக்குதல்களையும் மேற்கொண்டிருக்கும் போது அதற்கு எதிராக தீவிரமான எதிர்வினைகளை ஆற்றாமல் ‘தேர்தல் முடியட்டும் வைத்துக் கொள்கின்றேன்’ என்ற தொனியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். திமுக-காங்கிரசு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சில பெரியாரிய இயக்கத் தோழர்கள் தேர்தல் முடியும் வரை தன்மானத்திற்கும், சுயமரியாதைக்கும் விடுமுறை விட்டுவிட்டார்கள் போல் தெரிகின்றது.

எள்ளுதான் காய்கின்றது என்றால் எலி புளுக்கைகள் ஏன் காய்கின்றது என்று தெரியவில்லை. திமுக-காங்கிரசு கூட்டணி ஆட்சி அமைக்கும் வரை எதிரி நம்மை இழிவுபடுத்தினாலும் கண்ணியமும், கட்டுப்பாடும் கொண்டு திமுக-காங்கிரசு கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருக்கின்றார்கள். திமுக-காங்கிரசு வெற்றிக்காக திமுக தொண்டார்கள் உழைக்கின்றார்களோ இல்லையோ பெரியாரிய இயக்கத் தொண்டர்களில் பலர் இரவு பகலாக கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. அந்த அக்கறையில் சிறிதாவது பெரியாரை இழிவுபடுத்தும் கும்பல்களுக்கு பாடம் கற்பிக்கவும் காட்டலாம் என்பதுதான் நம்முடைய விருப்பம்.

- செ.கார்கி