கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும், தகுதி திறமையைப் பற்றியும் வாய் கிழிய வகுப்பெடுக்கும் பிஜேபி- ஆர்.எஸ்.எஸ் கும்பல், அந்தத் தகுதியும், திறமையும் குறிப்பிட்ட சாதிக்கு இயற்கையிலேயே உள்ளதாக, தான் மதிக்கும் சாஸ்திரங்களின் வழியே உறுதியாக நம்புகின்றது. யார் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தில் ஊறித் திளைக்கின்றார்களோ, அவர்கள் எல்லாம் எந்தவித கேள்வியும் இன்றி பார்ப்பன மேலாண்மையையும், தலித் விரோதத்தையும் ஏற்றுக் கொள்கின்றார்கள். வேலைவாய்ப்பில் தலித்துகளுக்கும், மற்ற பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட சாதி மக்களுக்கும் வயதிலும், மதிப்பெண்களிலும் கொடுக்கப்படும் சிறு சலுகையை கேவலமாகப் பேசும் பார்ப்பனக் கும்பல் தான் எந்தவிதத் தகுதியும், திறனும் இன்றி எந்தவித தார்மீக நெறிமுறைகளையும் கடைபிடிக்காமல் அரசு பதவிகளை ஆக்கிரமித்துக் கொள்ளும் போது, அதற்காக எந்தவித குற்ற உணர்வும் கொள்வதில்லை. பார்ப்பானுக்கு ஒரு நீதி, மற்ற சாதிக்கெல்லாம் அநீதி - இதுதான் மனுநீதி.

gurumurthy 393

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நிர்மலா சீதாராமன் என்ற பாப்பாத்தியை என்ன தகுதி, திறமையின் அடிப்படையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் கும்பலால் நியமிக்கப்பட்டாரோ, அதே தகுதியின் திறமையின் அடிப்படையில் இப்போது பார்ப்பன பயங்கரவாதி ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் பொருளாதாரத்தையே கட்டுப்படுத்தும் அமைப்பான ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் இடம்பிடிப்பது ஒன்றும் அவ்வளவு சாதாரணமான காரியமில்லை. ஆனால் குருமூர்த்தி போன்ற பார்ப்பான்கள் மிக எளிதாக எந்தவித எதிர்ப்பும் இன்றி நியமிக்கப்படுகின்றார்கள் என்றால், நாட்டின் அதிகாரமிக்க பதவிகள் அனைத்தும் மோடியின் பார்ப்பன அடிவருடி ஆட்சியில் பார்ப்பான்களுக்கும், பாப்பாத்திகளுக்கும் திட்டமிட்டு தாரை வார்க்கப்படுகின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

குருமூர்த்தியை துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு கிளை அமைப்பான 'சுதேசி ஜாக்ரன் மஞ்சு' என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் நமக்குத் தெரியும். ஆனால் குருமூர்த்தி டெல்லியில் இருந்து செயல்பட்டு வரும் வாய்ஸ் ஆஃப் இண்டியா (இந்தியாவின் குரல்) என்ற தீவிர வலதுசாரி வெளியீட்டகத்துடன் தொடர்புகொண்டவர் என்பது நம்மில் பல பேருக்குத் தெரியாது. இந்த வெளியீட்டகத்துடன் தொடர்புகொண்டவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பை விட தீவிரமாக இந்து பயங்கரவாதத்தையும், முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு எதிரான வன்மத்தையும் கக்கும் எழுத்துக்களை உருவாக்கி, அதை உலகம் முழுவதும் பரப்பி வருகின்றனர்.

வாய்ஸ் ஆஃப் இண்டியாவை உருவாக்கியவரான சீதாராம் கோயல் சொல்கின்றார் “முஸ்லிம்களை இஸ்லாம் என்ற நோயில் இருந்து காக்க வேண்டும், அவர்களுடைய முஹம்மதின் கொள்கை எவ்வளவு தவறானது, பேய்த்தனமானது; அது எப்படி அவர்களைச் சிறைப்படுத்தி வைத்துள்ளது, அது அவர்களிடம் கோருவது விசுவாசத்தை அல்ல, அவர்களின் வெறுப்பை தான் என்பதைப் புரிந்து கொள்ள உதவ வேண்டும்” என்று. ஆர்.எஸ்.எஸ் ஒரு மிக தீவிரமான இந்து பயங்கரவாத அமைப்பு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஆர்.எஸ்.எஸ் முஸ்லிம்களிடமும், கிறித்துவர்களிடமும் மென்மையாக நடந்து கொள்கின்றது என்று வாய்ஸ் ஆஃப் இந்தியா குற்றம் சாட்டுகின்றது என்றால், இவர்கள் எவ்வளவு பயங்கரமானவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வாய்ஸ் ஆஃப் இண்டியாவின் முதன்மையான இரண்டு நோக்கங்கள் என்னவென்றால், ஆரியர்களின் உண்மையான தாயகம் இந்தியா என்று நிறுவுவதும் மற்றும் வேதங்கள் குறியீட்டு மொழியில் நவீன பிரபஞ்சவியல் சிந்தனைகளைக் கொண்டுள்ளன என்று நிறுவுவதும் ஆகும். தங்களைத் தாங்களே பிறப்பின் அடிப்படையில் அறிவுஜீவிகள் என்று பிதற்றித் திரியும் இந்தக் கும்பலின் ஒட்டுமொத்த வேலையும் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான வெறுப்பை வளர்ப்பதுதான். குருமூர்த்தி சொல்கின்றார் 'இந்து சமூகம்தான் ஒரு வேளை இஸ்லாமிய இறையாட்சி நாகரிகத்தை எதிர்த்து நின்று உலகிலேயே வெற்றி பெற்ற ஒரே சமூகம்' என்று.

இது போன்ற கொலைவெறி பிடித்த சிந்தனை கொண்ட நபர்கள்தான் தொடர்ந்து இந்து பயங்கரவாதிகளால் முன்னிலைப்படுத்தப்படுகின்றார்கள். மோடி, அமித்ஷா போன்றவர்கள் இன்று இந்தியாவில் உள்ள அரசுத் துறைகள் முழுவதையும் இந்து பயங்கரவாதிகளைக் கொண்டு நிரப்பும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். அனைத்து துறைகளிலும் இந்து பயங்கரவாதிகளை நியமிப்பதன் மூலம் ஒட்டுமொத்தமாக நாட்டை பார்ப்பன பயங்கரவாதத்தின் பிடியில் வீழ்த்த அவர்கள் முயன்றுகொண்டு இருக்கின்றார்கள்.

குருமூர்த்தி போன்றவர்கள் எந்தவித அரசுப் பதவிகளிலும் இல்லை என்றாலும், அவர்களால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசை மிரட்டி பணிய வைக்க முடிகின்றது என்றால், அதற்குக் காரணம் தனக்கு பிறப்பின் அடிப்படையில் இந்த நாட்டில் அனைவரையும் மிரட்டிப் பணிய வைக்கும் அதிகாரம் இருப்பதாக நினைப்பதால்தான். இந்துக்களின் நலனை முன்னிறுத்துவதாய் சொல்லிக் கொண்டு தலித்துகளையும், பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட சாதி மக்களையும் அணிதிரட்டும் எல்லா அமைப்புகளுமே அடிப்படையில் பார்ப்பன மேலாண்மையை ஏற்படுத்தவே உழைத்துக் கொண்டு இருக்கின்றன. இந்தப் பார்ப்பன அடிமைகளால்தான் எந்தவித கேள்வியும் இன்றி நிர்மலா சீதாராமன் போன்றவர்களும், குருமூர்த்தி போன்றவர்களும் பதவிகளை ஆக்கிரமிக்க முடிகின்றது.

“இந்தியாவில் சாதி அமைப்பை அழிக்க பலபேர் வந்தனர், புதிய சிந்தனைகளை வளர்த்தனர். சட்டங்கள் மூலம் சாதியை உடைக்கப் பார்த்தனர். இன்று இந்தியா உயர்ந்து நிற்பதற்கு சாதிகள் தான் காரணம். ஆகையால் சாதி இருக்க வேண்டும்” என்று வெளிப்படையாக பேசும் ஒரு நபர் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஓர் அமைப்பின் இயக்குநர் குழுவில், பார்ப்பான் என்ற ஒரே காரணத்திற்காக சேர்க்கப்பட்டிருக்கின்றார் என்றால், நாம் புரிந்துகொள்ள வேண்டும், நாடு பேராபாயத்தில் சிக்கியிருக்கின்றது என்று. நாளை குருமூர்த்தி வகையறாக்கள் ஆர்பிஐ-இன் கவர்னராக கூட வரலாம். சிந்தனை முழுவதும் இந்துமத வெறியும், சிறுபான்மையினர் மற்றும் தலித்துக்கள் மீதான வெறுப்பும் கொண்டவர்கள் மட்டுமே நாட்டின் பிரதமராகவும், முதலமைச்சர்களாகவும் நியமிக்கப்படும் போது ஒரு சராசரி இந்தியக் குடிமகனின் மனதில் ‘இந்த நாட்டில் என்னதான் கற்றறிந்த அறிஞனாக இருந்தாலும், அவன் சூத்திரனாகவோ, தலித்தாகவோ இல்லை சிறுபான்மையினனாகவோ இருந்தால் நிச்சயம் அவனால் நாட்டின் உயர் பதவிகளைப் பெற முடியாது, பிறப்பின் அடிப்படையில் பார்ப்பானாக இருந்தால் மட்டுமே அவற்றை எந்தவிதத் தகுதியும் திறனும் இன்றியும் கூட மிக எளிதாகப் பெற முடியும்' என்றுதான் தோன்றும்.

இந்துக்களின் நன்மைக்காக, அவர்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக பாடுபடுவதாய் சொல்லிக் கொள்ளும் அமைப்புகளிடம் சென்று இதைப் பற்றி முறையிட்டுப் பாருங்கள். எந்த தகுதியின் அடிப்படையில் பார்ப்பனர்களுக்கும், பாப்பாத்திகளுக்கும் பதவிகள் வாரி வாரி வழங்கப்படுகின்றன என்று. அவர்கள் சொல்வார்கள் ‘அவர்கள் மற்ற சாதிகளை ஆள கடவுளால் பூமிக்கு அனுப்பட்ட பூதேவர்கள். சூத்திரர்களாகவும், தலித்துக்களாகவும் வாழும் நாம் அவர்களின் பாதாரவிந்தங்களைத் தொழுது வாழ்ந்தால் அடுத்த பிறவியில் பார்ப்பனனாகவும், பாப்பத்தியாகவும் பிறந்து நமக்கும் ஆர்பிஐ இயக்குநர் குழுவிலோ, இல்லை பாதுகாப்புத் துறையிலோ இடம் கிடைக்க கடவுள் சனாதன தர்மத்தின் படி அருள் புரிவார்’ என்று. தன்னை சுத்தமான இந்து என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பன அடிமை இதை அப்படியே வேத வாக்காக உள்வாங்கிக் கொண்டு பார்ப்பானின் காலை கழுவி குடிக்க முந்திக்கொண்டு போய் முதலாளாய் நிற்பான். ஆனால், மானமும், அறிவும் உடையவர்கள் காறி உமிழ்வார்கள்.

- செ.கார்கி