தமிழக மக்கள் தங்கள் உரிமைக்காக நடத்தும் போராட்டத்தின் வீச்சு அதன் இறுதி எல்லையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. துவக்கப் பள்ளியில் இருந்து மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வரை அனைவருமே இன்று சாலைக்கு வந்து மத்திய பாசிச பிஜேபி அரசுக்கு எதிராக போர்முரசு கொட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். மருத்துவ மாணவர்கள் பிரச்சினைதானே நாம் ஏன் போராட வேண்டும் என்று நினைக்காமல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் என அனைவருமே தமிழகத்தைப் போராட்டக் களமாக மாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கும் பிஜேபியின் பினாமி அரசுக்கு எதிராக அதன் ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாமல் போராட்டம் வீச்சாக நடப்பதை பார்த்து பிஜேபி காலிகள் கிலி பிடித்துச் சுற்றுகிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல், தமிழகத்தில் கட்சியை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்று புரியாமல் புத்தி பேதலித்து வாய்க்கு வந்ததை எல்லாம் வாந்தி எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
நீட் தேர்வுக்கு எதிராக திமுக திருச்சியில் நடத்திய கண்டன பொதுக்கூட்டத்திற்கு அடுத்துநாள் அதே இடத்தில் பிஜேபி நடத்திய கூட்டம் ஆளரவமற்ற சுடுகாட்டில் நரிகள் இடும் ஊளைபோல ஆகி, இன்று ஒட்டுமொத்த தமிழ்நாடே அந்தக் கேலிக்கூத்தைப் பார்த்து, சிரிப்பாய் சிரிக்கும் நிலைக்கு ஆளாயிருக்கின்றது. போடப்பட்ட பெஞ்சுகள் அனைத்திலும் ஈக்களும், கொசுக்களும் மட்டுமே உட்கார்ந்து இருக்க, தமிழிசையும், எச்சிகலை ராஜாவும் தனது தொண்டை கிழிய கத்தியிருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் பிஜேபிக்கு இருக்கும் அதீத செல்வாக்கை காலி இருக்கைகள் காட்சிப்படுத்தியிருக்கின்றன. சமூக வலைதளங்களில் பிஜேபி கும்பலை காறி காறி மக்கள் உமிழ்கின்றார்கள். ஆனால் இவை எதைப் பற்றியும் இந்த மானங்கெட்ட கும்பல் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. ஒரு ஐநூறு பேரைக் கூட கூட்ட துப்பில்லாத இந்த ஜென்மங்கள் தங்களை சுயபரிசீலினை செய்துகொள்ளாமல் கம்யூனிஸ்ட்களைப் பற்றியும், திராவிட இயக்கங்களைப் பற்றியும் அவதூறு பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கின்றார்கள்.
எப்போதாவது தமிழ்நாட்டில் எதாவது ஒரு மக்கள் பிரச்சினைக்கு பிஜேபி குரல்கொடுத்ததாக வரலாறு உண்டா? சாலைவசதி வேணடும், குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும், மின்விளக்கு அமைத்துத் தரவேண்டும், பள்ளிக்கூடம் கட்டித்தர வேண்டும் என்று ஏதாவது ஒரு பிரச்சினைக்குப் போராட்டம் நடத்தி இருப்பார்களா? பெருமுதலாளிகளின் கைக்கூலிகளாகவும், பொறுக்கிகளுக்கும், ரவுடிகளுக்கும், பாலியல் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் கொடுத்து அதுபோன்றவர்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பும் கொடுக்கும் ஈனப்பிறவிகளாகவும் தானே இருந்து வந்திருக்கின்றார்கள். ஆனால் இன்று ஒட்டு மொத்த தமிழகத்தின் நலன்களையும் தாங்கள் தான் காப்பாற்றப் போவதாக புளுகித் திரிகின்றார்கள். போதாத குறைக்குத் ஆட்சிக்கு வந்தால் தமிழை ஆட்சி மொழி ஆக்கப் போவதாக வேறு சாமி ஆடுகின்றர்கள். தமிழை நீச பாஷை என்றும், கடவுளுக்குப் பிடிக்காத, புரியாத மொழி என்றும், சமஸ்கிருதம் மட்டுமே தேவ பாஷை என்றும், அதில் சொன்னால்தான் பார்ப்பன கடவுள்களுக்குக் கேட்கும் என்றும் சொல்லி தமிழ் மக்களை கொச்சைப்படுத்திய போக்கிரிக் கும்பல் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தமிழில் தேவாராம் பாடியதற்காக ஆறுமுக சாமியை அடித்துக் கொல்ல முயற்சித்த கும்பல், இன்று தமிழை ஆட்சி மொழியாகக் கொண்டு வருவேன் என்று கூசாமல் பொய் சொல்கின்றது. உண்மையிலேயே சூத்திரச்சி தமிழிசைக்கும், பார்ப்பன எச்சிகலை ராஜாவுக்கும் தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்று தனது எதிர்காலத்தை இழந்து நிற்கும் மாணவர்களுக்கு வேலை தரவேண்டும் என்று போராடட்டும். அதை விட்டு விட்டு தனக்குத் துளியும் சம்மந்தம் இல்லாத, தான் சார்ந்து இருக்கும் பார்ப்பன கூட்டத்திற்கு எள்ளவும் பொருத்தமில்லாவற்றைப் பேசுவது என்பது ஓட்டுக்காக பீ தின்னும் செயலாகும்.
பாஜக வாண்டுகள் தமிழகத்தில் தாம் எவ்வளவு இழிந்த கீழ்த்தரமான நிலைமையில் இருக்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அமித்ஷா, மோடி இன்னும் எந்த கொம்பனை அழைத்துவந்து மாநாடு நடத்தினாலும், அதைப் பார்ப்பதற்கோ, இல்லை கேட்பதற்கோ தமிழ்நாட்டில் ஒரு நாய் கூட தயாராக இல்லை என்பதைக் காவிக்கூட்டம் உணர வேண்டும். இது பெரியாரின் சுயமரியாதை மண். இங்கு மக்கள் கோவிலுக்குப் போனாலும், பார்ப்பானின் காலைக் கழுவி குடித்தாலும் அவனுக்குக் கூட்டிக்கூட கொடுத்தாலும் எக்காரணம் கொண்டும் ஓட்டு மட்டும் போட மாட்டார்கள். ஓட்டு போட்டால் அவர்களது மகனோ, இல்லை மகளோ மருத்துவர் ஆக முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். பல லட்சங்கள் செலவு செய்து நீட் பயிற்சி வகுப்புகள் செல்லும் அளவிற்கு அவர்களின் பொருளாதார நிலை இன்னும் முன்னேறவில்லை. எனவே பிஜேபியோ, இல்லை அதன் பினாமி பழனிச்சாமியோ என்ன தான் நீட்டை தமிழகத்தில் நுழைக்க முயன்றாலும் தமிழக மக்கள் அதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
உச்சநீதி மன்றம் கூட சொல்லிவிட்டது அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவிப்பது தவறல்ல என்று. ஆனால் தேவை ஏற்பட்டால் தமிழ்நாட்டு மக்கள் அதை மீறவும் செய்வார்கள் என்பதை குமாரசாமியின் குருகுல வாரிசுகளான நீதிபதிகளுக்கு தெரியப்படுத்திக் கொள்கின்றோம். நாங்கள் எப்படி போராடுவது என்று நாங்களே தீர்மானித்துக் கொள்கின்றோம். இது தமிழ் தேசிய இனத்தின் மீது ஆரிய வந்தேறி கும்பல் தொடுக்கும் போர். இந்தப் பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்பதை எங்கள் மக்கள் பார்த்துக்கொள்வார்கள். எங்கோ டெல்லியில் உட்கார்ந்துகொண்டு எங்களுக்கு எப்படி போராடுவது என்று கட்டளையிட நீ யார் என்று எங்கள் மக்கள் கேட்கின்றார்கள். சில லட்சங்களில் இருந்து சில கோடிகள் வரை பணம் வாங்கிக் கொண்டு தீர்ப்பை விற்கும் நீதி வியாபாரிகளுக்கு, ஒருவேளை சோற்றுக்கு வழியற்று உயிரைக் கொடுத்துப் படிக்கும் எங்கள் ஏழைக் குழந்தைகளின் வலி எப்படித் தெரியும் என்று எங்கள் மக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள். உயர்திரு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவர்கள் எந்த நீட் தேர்வை எழுதிவிட்டுப் பதவியில் வந்து சோக்காக உட்கார்ந்து கல்லா கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள் என்று எங்கள் மாணவிகளும், மாணவர்களும் கேட்கின்றார்கள்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவில்லை என்றால் நிரந்தரமாக தமிழ்நாடு இந்திய அடிமைத்தனத்தில் இருந்து பிரிந்து போக என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயம் செய்வோம் என்று தமிழக மக்கள் ஒரே முடிவாக இருக்கின்றார்கள். சமூக வலைதளங்கள் எங்கும் இந்தக் குரல்கள்தான் ஓங்கி ஒலிக்கின்றன. இந்திய, பார்ப்பன அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்று தமிழ் தேசிய இனம் முன்னேறுவதற்காகவும், பெரியார் போராடி பெற்றுக் கொடுத்த உரிமைகளை எந்தக் கேடுகெட்ட பார்ப்பன அடிமைகளின் சதிக்கும் அஞ்சாமல் முறியடிக்கவும் இன்று ஓட்டுமொத்த தமிழகமே நடுத்தெருவில் போர்க்கோலம் பூண்டு நிற்கின்றது. ஆனால் பார்ப்பன கோமாளிகளும் அவர்களை நக்கிப் பிழைக்கும் தன்மானமற்ற இன துரோகிகளும் உண்மை நிலை என்ன என்று புரிந்துகொள்ள முடியாமல் ஊளையிட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.
இப்போது தமிழக மக்கள்முன் உள்ள தலையாய கடமை என்பது நீட் தேர்வை மட்டும் தமிழகத்தில் இருந்து விரட்டி அடிப்பதல்ல. அதற்கு ஆதரவான கருத்தியலை இங்கு அயோக்கியத்தனமான வழிமுறைகளைப் பயன்படுத்தி திணிக்கப் பார்க்கும் பார்ப்பன கும்பலுக்கும், மானங்கெட்ட சூத்திர கும்பலுக்கும் சரியான புத்தி புகட்டுவதுதான். இது பெரியார் பிறந்த பூமி. இந்த மண்ணுக்கு என்று சில தனித்த கூறுகள் இந்த மண்ணோடும் மக்களோடும் இரண்டற கலந்திருக்கின்றன. அதை எந்த கேடுகெட்ட கும்பலும் அழித்துவிட முடியாது, அழிக்கவும் நாங்கள் விடமாட்டோம். எங்கோ டெல்லியில் உட்கார்ந்துகொண்டு எம் மக்களுக்கு எதிராக செயல்படும் உங்கள் சிந்தனையில் எம் மக்கள் காறி உமிழ்கின்றார்கள்.
அதனால் பிஜேபிக்கு நாம் சொல்லிக் கொள்வதெல்லாம் இது எங்கள் பூமி, இங்கே நாங்கள் வைத்ததுதான் சட்டம், உன்னுடைய நீதியை கொண்டுபோய் குப்பை தொட்டியில் போடு. காவிரியில் எங்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு நூற்றுக்கணக்கனான விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டு மாண்ட போது நீ எதைத் தின்றுகொண்டு இருந்தாய். உன் சட்டம் தன்மானமில்லாத முதுகெலும்பு இல்லாத கோழைகளுக்கு வேண்டுமென்றால் பொருந்தும். நாங்கள் உன் சட்டத்தை மீறுவோம், அதிகார மட்டங்களை அசைத்துப் பார்ப்போம், எங்கள் கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால் தமிழ்நாட்டிற்குள் இந்தியாவின் எந்த அடையாளமும் இருக்காது. குறிப்பாக தமிழ்மக்களை அழித்துப் போட நினைக்கும் பார்ப்பன கும்பலின் அதன் பிரதிநிதியான பிஜேபியின் சுவடுகூட இல்லாமல் எம் மக்கள் ஒழித்து விடுவார்கள். இது ஒடுக்கப்பட்ட, மக்களின் உரிமைக்குரல். பிஜேபி துரோக கூட்டமே உன் முடிவு காலம் மிக அருகில் நெருங்கிவிட்டதை கூடிய சீக்கிரம் எம் மக்கள் உனக்கு உணர்த்தப் போகின்றார்கள். நீ அதைப் பார்க்கத்தான் போகின்றாய்.
- செ.கார்கி