பார்ப்பனீய கொடுங்கோல் ஆட்சியின் இன்னொரு முகமான ‘நீட்’ (NEET) தேர்வு, அனிதா என்ற நம் இளம் தலீத் சகோதரியின் உயிரை காவு வாங்கிவிட்டது. அந்த பிஞ்சு உடலை எரித்த மண்ணின் சூடு கூடத் தணியாத சூழலில், பார்ப்பன முதலைகள் தங்களது கேளிக்கைக் கொண்டாட்டத்தைக் கட்டவிழ்த்து விட இருக்கின்றனர்.
இந்திய-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 17ஆம் தேதி, சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் என்பதுதான் அந்தச் செய்தி. ஆம், கடந்த 8-ம் தேதி முடிவுகள் எடுக்கப்பட்டு நேற்று (10-ம் தேதி) முதல் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற நான்காம் ஈழப்போரில், அப்பாவித் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். இங்கே தமிழகத்தில் நாமெல்லாம் கையறுநிலைத் துயரத்தில் தவித்துக்கொண்டிருந்தோம். அப்போது நடந்த இலங்கை-இந்திய கிரிக்கெட் போட்டிகள் தகன்றுகொண்டிருந்த தமிழகத்தின் ஈழ எதிர்ப்பை பிசுபிசுக்க வைத்ததை நாம் எளிதில் மறந்துபோகக்கூடாது.
இன்றோ, சிறுமி அனிதாவின் நிர்வாகக் கொலைக்குப் பரிகாரம் தேடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழர்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தும் வகையில், அதே இந்திய கிரிக்கெட் வாரியம் நம் மண்ணிலேயே (சென்னையில்) கிரிக்கெட் போட்டியை அறிவித்திருக்கிறது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்குச் சமம் மட்டுமல்ல, நமது போராட்டத்தின் ஆழத்தினை அளந்து பார்க்கும் ஒரு செயலாகவும் இதனை நாம் பார்க்கவேண்டும்.
அனிதாவின் மறைவுக்குப் பிந்தைய சமூக எழுச்சியிலிருந்து தமிழ் மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் கருவியாக இந்தக் கிரிக்கெட் போட்டி அமைந்துவிடக்கூடாது என்பதில் நாம் வெகு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதே வெகுவான மக்களின் எண்ணம்.
இந்தச் சூழலில், தமிழர்களுக்கு எந்தத் தெரிவையும் இல்லாமல் இல்லை. அவர்கள் பின்வருவனவுற்றுள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தெரிவுகளை செய்யலாம்:
- எதுவமே நடக்காதது போல, சூடு சொரணையே இல்லாததவர்கள் போல, எப்போதும் போல சென்னையில் நடக்கும் இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியை கண்டு களிக்கலாம்.
- அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், நீட் தேர்வை எதிர்த்தும் பெயர்ப் பலகைகள், பேனர்கள் போன்றவற்றை மைதானத்துக்குள் எடுத்துச் செல்லலாம்; இப்படிச் செய்வதன் மூலம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கலாம். இது, இந்தியக் கல்வித்துறையின் கேடுகெட்ட தன்மையை உலகிற்கு எடுத்துக் காட்டும்.
- மைதானத்துக்கு வெளியில் நின்று நீட் தேர்வுக்கு எதிராக கோஷம் எழுப்பலாம். போட்டிக்குச் செல்லும் பார்வையாளர்களுக்கு துண்டுசீட்டுகள் வழங்கலாம்.
- இந்த கிரிக்கெட் போட்டியை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கலாம் (பகிஷ்காரம் செய்யலாம்!). போட்டியினை வீட்டிலும் பார்க்காமல் இருப்பதோடு, எந்த TV ஷோ-ரூம் களிலும் போட்டியை ஒளிபரப்பவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கலாம்.
மேலே சொன்ன நான்கு தெரிவைகளில் பலம் வாய்ந்தது, நான்காவது தெரிவையே ஆகும். சென்னையில் நடைபெறும் இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியின்போது, நீட் தேர்வுக்கு எதிரான நமது எதிர்ப்பைத் தெரிவிப்பதன் மூலம் மாநிலம் தழுவிய இந்தப் போராட்டத்தை நாடறியவும், உலகறியவும் செய்யலாம். அது, மத்திய-மாநில அரசுகளின் அராஜகத்துக்கு, நாம் தரும் அறப்போர் வழியிலான பதிலாகவும் இருக்கும்.
மத்திய-மாநில அரசுகளின் அலட்சியத்துக்கும், அகங்காரத்துக்கும் பலியான இளம் மேதை அனிதாவுக்கு அஞ்சலி செய்யும் பொருட்டும், தமிழக மக்களின் மீது, தனது ஏகாதிபத்தியத்தைத் தொடர்ந்து கட்டவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கும் பார்பணீயப் பேராதிக்கத்துக்கு ஒரு வலுவான எதிர்ப்பைத் தெரிவிக்கும் பொருட்டும், தமிழர்கள் சென்னைக் கிரிக்கெட் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும்.
குறளி வித்தை காட்டி, அப்பாவி ஏழை மக்களின் கவனத்தை திசை திருப்பி, அவர்களின் கைக்காசைத் திருடும் மந்திரவாதியைப் போலத்தான் இந்த மோடி மஸ்தானின் பார்ப்பன அரசும் கிரிக்கெட்டை காட்டி தமிழ் மக்களின் எழுச்சியை எளிதில் திசை திருப்பி விடமுடியும் என்று நம்புகிறது.
இந்தியத் துணைக்கண்டத்தின் சுதந்திரத்துக்கு முன்னரும் சரி, அதற்குப் பின்னரும் சரி, கிரிக்கெட் என்பது பார்ப்பனீயத்தின் அடையாளமாகவே இருந்து வருகிறது. அடையாளம் என்பது மட்டுமல்ல, தமிழக கிரிக்கெட்டில், முழுக்க முழுக்க “அவாள்” கூட்டம்தானே வாழையடி வாழையாய் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
கிருஷ்ணமாச்சாரிகளும், சடகோபான்களும், வெங்கட்ராமன்களும், சிவராமகிருஷ்ணன்களும், அஷ்வின்களும் தானே தமிழகத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்கள்.
என்றைக்காவது ஒருமுறையெனும் தூத்துக்குடி செந்தூர்பாண்டியோ, தருமபுரி சரவணனோ, ஈரோடு பழனிச்சாமியோ தமிழக அணியிலோ, இந்திய அணியிலோ விளையாடியதாகக் கேள்விப்பட்டதுண்டா? அப்படியானால், அங்கெல்லாம் நம் மாணவர்கள் கிரிக்கெட் விளையாடுவதில்லை; அல்லது பிராமணர் அல்லாத ஜாதிகளில் கெட்டிக்கார வீரர்களே இல்லை என்று பொருளா?
நமக்கே தெரியுமே – நம் ஊரில், நம் தெருவில், நம் வீட்டில் எத்தனை மாணவர்கள் கிரிக்கெட் விளையாட்டின் மீது மீளமுடியாத மோகம் கொண்டு, அதனைப் பார்த்தும் – விளையாடிம் தங்கள் தேர்வுகளில் கோட்டை விட்டிருக்கிறார்கள் என்று; எத்தனை இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள் என்று!
தமிழக கிரிக்கெட் அணியில் இடம்பெற வேண்டுமானால் ஒருவன் நன்கு மட்டை வீசும் வீரனாகவோ அல்லது பந்து எரியும் திறனாளியாகவோ இருந்தால் மட்டும் போதாது - அவன் கட்டாயமாகப் பூணுல் போட்டிருக்க வேண்டும்; பத்ம சேஷாத்திரி பள்ளியில் படித்திருக்க வேண்டும்; மாம்பலத்தில் வசிக்க வேண்டும் என்பதெல்லாம் எழுதப்படாத விதிகள். ஆக, இது “அவாளின்” கிரிக்கெட் அணியோ அல்லது மேற்கு மாம்பழம் கிரிக்கெட் அணியோ அன்றி, தமிழர்களின் அணியோ, தமிழகத்தின் அணியோ அல்ல.
கிரிக்கெட் என்பது இந்திய நாட்டை பிரதிநிதித்துவம் செய்கிறதா அல்லது BCCI என்ற போர்டை பிரதிநிதித்துவம் செய்கிறதா என்பது மற்றொரு சர்ச்சைக்குரிய விவாதப் பொருள். இந்திய கிரிக்கெட் அணி என்பது BCCI என்ற வாரியத்தின் உருவமையாக உள்ளதே தவிர அது இந்திய நாட்டின் பிரதிநிதி அல்ல. இந்த உண்மையை, BCCI வாரியமே உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தில், 2004ஆம் ஆண்டு நடந்த வழக்கு ஒன்றில், BCCI வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் பின்வருமாறு தெரிவித்ததாக, ஹிந்து நாளேடு குறிப்பிடுகிறது:
சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியினர், BCCI என்ற இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் சார்பாக விளையாடுகிறார்களே தவிர, இந்திய அரசின் வீரர்களாக அல்ல. BCCI-க்கு என்று தனியே சின்னம் இருக்கிறது; கொடி இருக்கிறது. அவைகளைத்தான் முன்வைத்து இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் விளையாடுகிறார்களே தவிர இந்தியக் கொடியையோ அல்லது சின்னத்தையோ முன்னிறுத்தி அல்ல!
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தியக் கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் வாரியமும் பெருமையோடு பிரதிபலிக்கும் சின்னம் என்பது ஆங்கிலேயர் காலத்தில், ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்டது என்பதுதான். அதை மாற்றும் திராணி கூட இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கு இல்லை என்பது எள்ளி நகையாடப்பட வேண்டிய விசயம்.
கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டல்ல. வெள்ளையர் காலத்தில் வெள்ளையர்களுக்கு, அவர்களின் காலனியாதிக்கத்தின் அடையாளமாக, அது இருந்தது. இன்றோ வடக்கிந்திய-பிராமண ஆதிக்க சக்திகளின் நவீன-காலனியாதிக்கத்தின் இன்னொரு அவதாரமாக கிரிக்கெட் இருந்து வருகிறது.
சுமாரான கோடீஸ்வரர்களுக்கு குதிரைப் பந்தயம் ஒரு பொழுதுபோக்கு சூதாட்டமாக இருப்பதைப் போல, அம்பானி போன்ற கோடீஸ்வர முதலைகள் கொக்கரிக்கும் சூதாட்டமாக, கிரிக்கெட் தற்போது உருமாற்றம் பெற்றுள்ளது! இதுதான் இந்திய கிரிக்கெட்டின் இன்றைய சூழல். நம்மைப் போன்றவர்கள் வேலையைக்கெடுத்து, படிப்பைக்கெடுத்து கிரிக்கெட் பார்ப்பதை, மூலதனமாக வைத்து, கோடீஸ்வரர்கள் மேலும் கோடான கோடீஸ்வரர்கள் ஆகின்றனர்.
நம்மூர் இளசுகள் தோனி, கோலி என்று அந்தக் கேளிக்கைக் கோமான்களின் பக்தர்களாக இருப்பதோடு, அவர்களைத் தங்களின் கனவு நாயகனாகவும், லட்சிய புருஷர்களாகவும் அவதானித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வீரர்களுக்கு தமிழகத்தில் இருக்கும் மரியாதை குறித்து சொல்லி மாளாது. அப்படி இருக்கையில் கோலி போன்ற வீரர்கள் ஜல்லிக்கட்டு எழுச்சியின்போது, தமிழர்களுக்கு எதிராகவே குரல்கொடுத்தனர் என்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது.
இந்தியாவைப் பொறுத்த மட்டிலும் மூன்று C-க்கள் தான் வடக்கு முதல் தெற்கு வரைக்கும் பரவி இருப்பதாகக் கூறலாம். அவையாவன: Cricket, Corruption, Caste. இந்த மூன்றையம் விலக்கி விட்டால், இந்த கேடுகெட்ட நாட்டை இணைத்துவைக்க எந்த போதைவஸ்துவும் நம்மை ஆளும் நாதாரி ஆட்சியாளர்களுக்கு இல்லை.
உலகில் உள்ள 190-க்கும் மேற்பட்ட நாடுகள் இருந்தாலும், கிரிக்கெட் விளையாடுவது வெறும் 10-12 நாடுகளே; அதிலும் ஒழுங்காக கிரிக்கெட் விளையாடும் நாடுகள் என்று பார்த்தால் 3-4க்கு மேல் தேறாது. இருந்தாலும், கிரிக்கெட் போட்டியில் BCCI வீரர்கள் வெற்றி பெற்றால், அவர்களை இந்திய அரசியல்வாதிகள் புகழ்வதும், விருது வழங்குவதும், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக்குவதும் என சப்பை மேட்டரை சகட்டு மேனிக்கு ஊதிப் பெரிதாக்குகின்றனர்.
மேலும், கிரிக்கெட் என்பது கார்ப்பரேட் கொள்ளையின் கேளிக்கை முகம். கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து செய்திகளில் இருக்கும் பொருட்டு கார்ப்பரேட் முதலைகள் பார்த்துக் கொள்கின்றனர். கிரிக்கெட் வீரர்கள் விளம்பரப் படங்களில் நடிப்பது, அவர்களுக்கு நடிகைகளுடன் காதல்-‘கசா முசா’ போன்ற கிசு-கிசு செய்திகள் அவ்வப்போது பவனி வருவதும் இதற்கு உதாரணங்கள்.
கிரிக்கெட்டில் எத்தனை கோடி மோசடிகள் நிகழ்ந்தாலும், இந்திய ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கக் காரணம், கிரிக்கெட் போட்டிகளின் மூலம் மக்களின் கவனத்தை, பிரதான பிரச்சனைகளில் இருந்து எளிதில் திசைதிருப்பி விடலாம் என்பதற்காகத்தான்.
இந்தச் சென்னைக் கிரிக்கெட் போட்டியைப் புறக்கணித்து மத்திய-மாநில அரசுகளுக்கும், பார்ப்பனீய மேலாதிக்கத்துக்கும், சர்வதேச கார்ப்பரேட்டுகளுக்கும் தமிழர்கள் ஒரு வலுவான செய்தியை பறை சாற்ற வேண்டும்.
இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை பார்க்க, அரங்கத்தில் கூட்டமே இல்லாமல் போனால் அது சர்வதேசத் செய்தியாகும்; தமிழகத்தின் தெருக்களில் உள்ள TV ஷோ-ரூம்களில் கிரிக்கெட் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டால், வீடுகளில் அந்தப் போட்டியை பார்க்காமல் புறக்கணித்தால் சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கோடான கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். அமைதியான முறையில், ஆனால் ஆணித்தரமாக தமிழர்களின் ஒற்றுமையுணர்வை வெளிப்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
பார்பணர்களுக்காக, பார்ப்பனர்களால் நடத்தப்பட்டு, பார்ப்பனர்களால் விளையாடப்படும் விளையாட்டை, பார்ப்பனர்களே கண்டு களித்துக் கொள்ளட்டும். ஒரேயொரு ஒருநாள் கிரிக்கெட் போட்டியையாவது பார்ப்பனப் பார்வையாளர்களை மட்டுமே வைத்து நடத்திதான் பார்க்கட்டுமே!
அதோடு, கிரிக்கெட் போட்டியைப் புறக்கணிக்க நாம் நீதி மன்றத்திடமோ, போலீசாரிடமோ முன் அனுமதி வாங்க வேண்டியதில்லை. ஆகவே, நமது கிரிக்கெட் புறக்கணிப்பு நம் இளம் சகோதரி அனிதாவுக்கு, நாம் செலுத்தும் ஒரு சிறு அஞ்சலியாக அமையட்டும்.
- மோயாற்றுப்பிள்ளை