2018 ஆகஸ்ட் 26 அன்று பெரம்பலூரில் நிகழ்ந்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் தமிழர் கல்வி உரிமை மீட்புப் பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்த தீர்மானங்கள்:
கலைருக்கு வீர வணக்கம்
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், சூத்திரர் இழிவு ஒழிப்பு இலட்சியத்தை நிறை வேற்றிட அனைத்து ஜாதியினரை யும் அர்ச்சகராக்க - இரண்டு முறை - தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் மற்றும் சட்டம் நிறைவேற்றியவரும், திராவிட இயக்கத்தின் அடிப்படையான சமூக நீதிக் கொள்கைகளைக் கட்டிக் காப்பாற்றி விரிவு செய்து - மேலும் செழுமையாக்கி இட ஒதுக்கீட்டுத் தத்துவத்தை ஜனநாயகப்படுத்தியவரும், சூத்திரர் களுக்கான ஆட்சியை நடத்து கிறேன் என்று சட்டப் பேரவையில் முதல்வராகப் பிரகடனம் செய்தவரும், தை முதல் நாளே தமிழர்களுக்கான புத்தாண்டு என்று பார்ப்பனியத்திற்கு எதிரான பண்பாட்டுப் புரட்சியை சட்டப் படி நடைமுறைக்குக் கொண்டு வந்தவரும், ‘சிலை வைக்க வேண்டிய தலைவர்’ என்று பெரியாரால் போற்றப்பட்ட வருமான திராவிட அரசியலின் மூத்த தலைவர் கலைஞர் மறைவுக்கு இம்மாநாடு வீர வணக்கம் செலுத்கிறது.
தமிழ்நாட்டில் திராவிட அரசியலுக்கான ஒரே வலிமையான இயக்கமாகத் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தை பலவீனப்படுத்தி திராவிட இயக்க அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்துவிட முடியும் என்று பார்ப்பனர்கள் முனைப்போடு நடத்தும் திரை மறைவு சூழ்ச்சிகளை தமிழர்கள் புரிந்து கொண்டு அதை முறியடிக்க முன் வரவேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
மீண்டும் சட்டசபை தீர்மானம்
தமிழ்நாட்டின் கிராமப்புற ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சியில் பேரிடியாக தாக்கிக் கொண்டிருக்கும் ‘நீட்’ தேர்வை நடுவண் ஆட்சி தமிழக மக்கள் மீது தொடர்ந்து திணித்து வருவதை இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழ்நாட்டுக்கு விதிவிலக்குக் கோரி தமிழக சட்டமன்றம் ஒருமித்து நிறைவேற்றிய தீர்மானத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குக்கூட நடுவணரசு அனுப்பி வைத்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்குக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றி நடுவண் அரசுக்கு அழுததம் தரவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
வடவர் திணிப்பு
தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவலகங்களிலும், தொடர் வண்டித் துறைகளிலும் தமிழ் தெரியாத வடநாட்டுக்காரர்கள் அதிகாரிகளாக, அரசு ஊழியர் களாக பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து நடுவண் அரசுத் துறைகளிலும் தமிழ் தெரிந்த தமிழ்நாட்டுக்காரர் களையே நியமிக்க வேண்டும்.
மத்திய தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை கடந்த சில ஆண்டுகளாக இந்திய அளவில் இந்தியிலும், ஆங்கி லத்திலும் மட்டும் நடத்துவதைக் கைவிட்டு, மாநில அளவில், மாநில மொழி களில் நடத்த வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. கூட்டாட்சிக் கொள்கைக்கு எதிரான இந்த வடவர் திணிப்பு நடவடிக்கை களை தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடுவணரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என இம்மாநாடு எச்சரிக்கிறது.
புதிய வேலை வாய்ப்புகள்
தமிழ்நாட்டில் பல இலட்சம் இளைஞர்கள் படித்து வேலை வாய்ப்பு இன்றி தவித்துக் கொண் டிருக்கிறார்கள். எதிர்கால வாழ்க்கைக்கு எந்த உறுதியும் இல்லாத நிலையில் சமூகத்தில் படித்த இளைஞர்கள் பலர் ‘கிரிமினல்’ குற்றங்களில் ஈடுபட வைக்கும் நிலைக்கு சமூக நெருக்கடிகள் உருவாகி வருவதைக் கவனத்தில் கெண்டு புதிய வேலை வாய்ப்புக்கான திட்டங்களை உருவாக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் அரசு வேலைவாய்ப்புக்கான தேர்வுகளை தமிழ் தெரியாதவர்களும், பிற மாநிலத்தவர்களும் நேபாளம், பூடான் போன்ற வெளிநாட்டுக் காரர்களும் எழுதலாம் என்று அறிவித்து அதனடிப்படையில் தேர்வுகள் நடத்துவதை இம் மாநாடு வன்மையாகக் கண்டிக் கிறது. அரசின் இந்த விபரீத அரசாணையைத் திரும்பப் பெற வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
இந்து இராஷ்டிரம் அமைக்கும் சதி
1956ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைப்பது; இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு மாற்றாக மருத்துவ ஆணையத்தை உருவாக்கு வது போன்ற நடுவண் ஆட்சியின் திட்டங்கள் மாநிலங் களின் கல்வி உரிமைகளை முற்றாக ஒழிப்பதாகும். ஒரே தேசம், ஒரே வரி, ஒரே பண்பாடு, ஒரே கல்வி என்ற நோக்கில் நடுவண் ஆட்சி அதிரடியான திட்டங்களையும் சட்டங் களையும் கொண்டு வருவது இந்தியாவை இந்து இராஷ்டிரமாக்கி விடும் மறைமுக செயல் திட்டமே யாகும்.
வர்ணாஸ்ரமத்தை உறுதிப் படுத்தும் இந்து இராஷ்டிர முயற்சிகளை முறியடித்து தமிழர்களின் ஜாதியற்ற, பால் இன பாகுபாடுகளை மறுக்கும் சமத்துவ சமூக நீதிப் பண்பாட்டை முன்னெடுக்க தமிழர்கள் தயாராக வேண்டும்; அதற்கான மக்கள் கருத்துக்களை சமூக வலை தளங்கள் வழியாக முன்னெடுக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று இம்மாநாடு இளைய தலைமுறைக்கு அறைகூவல் விடுக்கிறது.