இயற்கையின் வரலாற்றிற்கும், மனித குல வரலாற்றிற்கும் இடையிலான ஆழ்ந்த உறகூகள் புறவய, அகவய ரீதியாக பன்முகத் தன்மையைக் கொண்டதாகும். இத்தகு உறகூகள் விலங்குலகிலிருந்து மனிதனை வேறுபட வைத்தது. உழைப்பில் ஈடுபட்டு, உற்பத்தி கருவிகளை உருவாக்கி உயிரினங்களிலிருந்து வேறுபட்ட மனித இனம், இயற்கையைத் தன்வயப்படுத்தியும் மாற்றியும், திருதிதியும் புற உலகிற்கேற்ப தம்மை மாற்றிக் கொண்டும் வந்திருப்பதை சமூக வரலாறு நிரூபனம் செய்திருக்கின்றது.

tamil 600இத்தகு மனித சமூகத்தின் நிகழ்வில் ஏற்பட்ட திருப்பங்கள், இடைநிலைச் செயல்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி பலங்காலந்தொட்டு இன்று வரையும் பல்வேறு ஆய்வுகள் நிகழ்ந்து கொண்டே இருப்பதை நம்மால் காண முடிகிறது. இவ்வடிப்படை ஆராய்வில் மொழியின் ஆராய்வும் குறிப்பிடத்தக்கதாகும்.

மனித குரங்கு மனிதனாக மாறிய காலந்தொட்டு இன்றைய அறிவியல் வளர்ச்சிப் பெற்ற யுகத்திற்கு மனிதகுலம் தம்மைத் திருத்திக் கொண்டும், தாம் வாழ்வதற்குரிய புறவய சூழலை நன்கு ஆராய்ந்து அதற்கேற்ப தம்மை மாற்றியமைத்தும், புறவய இயற்கைப் பொருட்களை பயன்படுத்தி தாம் வாழ்வதற்குரிய சூழலைத் தேர்ந்தெடுத்தும், ஒவ்வொரு நொடியும் போராட்ட வாழ்வாய் தப்பிப் பிழைத்தும் இன்று பிற உயிரினங்களை விடவும் மாபெரும் வளர்ச்சியை எய்துவதற்குரிய, கூட்டு வாழ்வை உருவாக்கி, சமூகம் தோற்றம் பெறுவதற்குரிய நிலைக்களனை தோற்றுவித்தது மொழியே  aa  (Language)  ஆகும்.   

இதனை ஆராய்ந்தே ஏங்கெல்சு அவர்கள், “முன்னங்கால்கள் கைகளாகவும், குரல்வளை பேசும் உறுப்பாகவும் மாறியது தான் மனித படிமலர்ச்சியில் ஏற்பட்ட முதல் புரட்சி” (இ.லி. அந்திரெயெவ், மனித குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்.) என்றார்.

புற உலகு சார்ந்த மானுடனின் சிந்தனைகள், சிந்தைக்கு ஏற்ப புறச்சூழலில் தம்மைத் திருத்திக் கொண்டு வாழப் பழகிய விதம், பார்வின் குறிப்பிடும் கூர்தலறக்கோட்பாட்டின்படி ‘தம்மை திருத்திக் கொண்டு வாழ தகுதியற்ற உயிரினங்கள் மடிந்து போகும்’ எனும் விதிக்கேற்ப, இயற்கையை மிகமிக நுண்ணாய்ந்து ஓர் மனிதன் பிற மனிதனிடம் இயற்கையை பற்றி ஆராய்ந்து ஆராய்ந்து அதனை பிறரிடமும் வெளிப்படுத்தினான். குறிப்பாக கூட்டு உழைப்பும், உழைப்பில் மனிதர்களுக்குரிய தொடர்பின் தேவைகள், அதற்கு உரித்ன ஒலிக்குறிப்புச் சொற்கள் நாளடைவில் மொழியாய் பேருறு பெற்று சமூக கூட்டுறவு வாழ்வை நிலைக்கொள்ளச் செய்தது மொழியே எனலாம்.

உதாரணமாக, பாம்பினாலோ இன்ன பிற புற நிகழ்வினாலோ பாதிப்பு அடையும் மனிதன், அப்பாதிப்பினை தவிர்க்கும் பொருட்டு அவ்வுயிரினம் பற்றி மற்றவனுக்கு உணர்த்த ஒரு வகையான ஒலியை எழுப்புகின்றான். அதுவே பழக்கவழக்கமாகி ‘சொல் வடிவு’ பெற்றுவிடுகிறது. இத்தகு, வளர்நிலையிலிருந்தே பேச்சு வழக்காகி, பின்னர் குறியீடுகள், வரிவடிவங்கள், எழுத்துருவங்களாய் ‘மொழி’ முழுமையாடைந்தது எனலாம்.

“மனிதன், நிமிர்ந்து நேராக நடப்பதற்கு மாறியது தான் உயிரியல் ரீதியாக முதன்மையான அம்சமாகும். இவை நேராக நிமிர்ந்து நடக்கத் துவங்குகின்றன. தமைச் சுற்றியுள்ள பொருட்களின் மீது (உணவாகப் பயன்படாத பொருட்கள் உட்பட) மேன்மேலும் அதிக கவனத்தைச் செலுத்துகின்றன... இவையெல்லாம் மூளை மற்றும் இதன் விளைபொருளாகிய பேச்சுத் தீவிரமாக வளர வழிகோலின” (பக். 18, 19, மனிதகுரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்.)

என்பர். நான்கு கால்களையுடைய விலங்கு நிலையிலிருந்து இரண்டு கால்களையுடைய மனிதனாய் மாற்றம் பெற்று, இயற்கையை மேலும் உற்றுநோக்கிய போதே பல்வேறு சிந்தைகள் மனிதனிடத்தில் எழுந்ததென்பர். மேலும், மனிதன் இயற்கை மீது எதிர்விளைவை செலுத்தி உற்பத்தியில் ஈடுபட முதன்மை துணையாய் அமைநிதருந்தது மொழி, குறிப்பாக மனிதன் எப்போதுமே தனித்து நின்றோ, தானாய் முன் நின்றோ எச்செயலையும் செய்திருக்க முடியாது. ஒருவர் மற்றவரோடு கொண்ட தொடர்புக்கு காரணமான பேச்சே கூட்டாய் உற்பத்தி செய்து வாழ்வதற்கும், புறவய சூழலின் மதிப்பீட்டிற்கும், ஆராய்விற்கும் துணை நின்றது. மேலும், சமூக உற்பத்திக்கும், கூட்டு வாழ்விற்கும்மொழியே பிரதான பங்பளிப்பை செலுத்தியது என J.V.ஸ்டாலின் அவர்கள்,

            “சிந்தனை பரிமாற்றம் இல்லாமல் சமூகத்தில் உற்பத்தி செய்வதற்குரிய உற்பத்தி செயல்பாடுகளில் வெற்றி ஈட்ட முடியாது; ஆகவே சமூக உற்பத்தியின் இருப்பே இல்லாமல் போய்விடும். அதனால் சமூகத்தால் புரிந்து கொள்ளக் கூடிய சமூக உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு மொழி இல்லாமல் சமூக உற்பத்தி நின்றே போகும்; அந்தச் சமூகம் சிதறி உருகுலைந்து போகும்; இப்பொருளில் மொழியானது சமூகம் ஒன்று கலப்பதற்கான ஊடகமாகவும் அதே சமயம் சமூகத்தின் போராட்டத்திற்கும், வளர்ச்சிக்குமான கருவியாகவும் இருக்கிறது” என்றார். (J.V.Stalin, Maxism and Problems of Figuistics Foreign Language Press, Pekins, P.21) என்று மொழியின் ஆளுமைத்திறனை எடுத்துரைக்கின்றார்.

            இத்தகு மொழியே இன்றளவும் பண்டைய கால மக்களின் வரலாற்றை, அவ்களின் நாகரீக வாழ்க்கை முறையை, மக்களின் பண்டைய அறிவியல், சமூக சிந்தனையை நமக்கு தந்து கொண்டிருக்கின்றது.

            ஓர் குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த மக்கள் இனக்குழு போராட்டத்தின் விளைவாகவும், தப்பிப் பிழைக்கவும், உணவுக்கான தேடலிலும் வேறுவேறு இடம்நோக்கி நகரலாயினர். குறிப்பாக, மலைப்பகுதியில் வாழ்ந்த குழுவினர் சமவெளி நோக்கி நகர ஆரம்பித்தனர். சமவெளியில் நீர்நிறைந்த பகுதியிலும், கால்நடை வளர்ப்பிற்கு தகுதி வாய்ந்த இடங்களிலும் சென்று தங்கினர். அங்கும் மக்களுக்கு மொழியாலேயே தொடர்பு தொடர்ந்து நிலைத்திருந்தது.

            இயற்கைச் சூழலுக்கேற்ப உடல் மாறுபாடுகளால் பேசும் உறுப்பான குரல்வளையும் மாற்றம் பெறத் தொடங்கின. அக்குரல்வளை பேச்சின் மாறுபாடுதான் இன்று நாம் காணும் நிலப்பகுதிகளுக்கேற்ப உருவான வழக்குச் சொற்களாக அமைந்திருக்கின்றது.

            குறிப்பாக, மித வெப்ப மண்டலத்தில் வாழும் மனிதனின் சப்தத்திற்கம், பேச்சிற்கும், குளிர்ப் பகுதியில் வாழும் மனிதனின் சப்தத்திற்கும், பேச்சிற்கும் மாறுபாடுகளைக் காண முடிகிறது. தமிழ்மொழி பேசுவோர் மிகு நீண்டு உரையாற்றுவதையும், சொற்களின் ஆளுமை திறனையும், ஒவ்வொரு சொற்களுக்கு ஏற்ப சந்தங்களப் போல அழுத்தம் திருத்தமாகப் பேச்சு, மெல்லிய ஒலி, வன்மையான ஒலிச் சொற்கள் (உ.ம். கசடதபற, ஞ, ங, ண, ந, ம, ன) என பல்வேறு வகையில் பேசுவதை காண்கிறோம். இதுவே குளிர்ப் பிரதேசத்திலுள்ள மக்களின் பேச்சுக்கள் வெப்ப மண்டலத்தில் வாழும் மக்களின் பேச்சிற்கும் நேர் எதிரான ஒலியசைவுகளைக் காண முடியும். அவர்கள் குறுகிய ஒலிச் சொற்களையே பெரும்பாலும், பயன்படுத்துவதை காண முடியும். இவை யாவுமே புறச் சூழலுக்கேற்பவே மனிதன் ஒலிகளை எழுப்ப முடிந்தது, சொற்களைப் பேச முடிந்தது.

            மொழியின் பரிணாம வளர்ச்சியானது மக்கள் குழு குழுவாக பிரிய ஓர் மொழியிலிருந்து பல கிளைமொழிகளாய் தோற்றம் பெற்றது. உதாரணத்திற்கு, தமிழ் மொழியிலிருந்து கிளை மொழிகளாய் உருவாகிய மலையாளம், தெலுங்கு, கன்னடம் இவற்றைக் குறிப்பிடலாம்.

கலப்பினமான மொழி

            மக்கள் தாம் ஏற்ற இடத்தினை தேர்வு செய்தது, அடிப்படையில் அவர்கள் உயிர் வாழ்வதற்கான சுற்றுப்புறச் சூழலும், உயிர்கள் வாழும் தகுதிபடைத்த நிலப்பகுதியும், அதற்கேற்ற பருவகாலச் சூழலுமே ஆகும். மனிதன் வாழ்வதற்கான முதற்பொருட்களாக தொல்காப்பியர் நிலமும், பருவ காலத்தையுமே குறிப்பிடுகின்றார். மொழியைப் பற்றி நன்கு ஆராய்ந்த முன்னோன் முதன்மைப்பொருளாய் நிலத்தையும், பருவ காலத்தையும் முதற்பொருளாக வைத்ததற்கு இதுவே காரணமாகும்.

            ஓர் நிலைத்த மொழியுடைய மக்கள் வாழும் பகுதிகளில் நாகரீக வாழ்வை அடைந்த சுற்றுப்புற சூழலுக்கும் உற்பத்தி உறவுக்கும் தகுதி வாய்ந்த நிலப்பகுதிக்கும் பிற மொழி பேசும் குழுக்கள் நாடோடிகளாய் வந்து தங்கினர். ஏற்கனவே வாழும் மக்களுக்கும், அவர்களுக்கும் உள்ளான சில பொதுவான அடிப்படை உறவுகளும், தேவைகளும் புதியவை மீதான கவர்ச்சியும், அவர்களின் செயல்முறைகளும் கூட்டாக வாழ்வதற்குரிய சூழலை தோற்றுவித்தது.

            அது மட்டுமன்று, அதிகாரம் படைத்தவர்கள், ஆட்சி பீடத்தில் இருந்தவர்கள் பேசும் மொழிகள் பலரும் பேசும் மொழிகளாக மாறியது அல்லது திணிக்கப்பட்டது. தமிழகத்தில் தொல்காப்பியர் காலம், சங்க காலம் அதாவது கி.மு.விலிருந்து கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்மொழி மீது பிற மொழிகளின் ஆதிக்கமில்லை. அதன் பின்னர் களப்பிரர்கள், பல்லவர்களின் ஆட்சி அமைய சமூகத்தில் பல்வேறு மாறுதல்கள் நிகழத் தொடங்கின. அங்கு மொழியில், பிற மொழி கலப்புகள் தோன்ற ஆரம்பித்தன. அதன் பின்னர் ஆரியர்களின் அதிகாரம் மேலோங்க இந்தியாவில் வழங்கப்பட்ட பல்வேறு மொழிகளுள் வடமொழியான சமஸ்கிருதத்தின் கலப்பு ஏற்பட்டன. மத கருத்துரைகள் பரப்பும் நோக்கில் பல்வேறு கருத்தியல்களும் பரப்பப்பட்டன. சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய மதங்களுக்குள்ளாக தமது கருத்தை விதைக்க சிலர் கலப்பு மொழியாக உருமாற்றினர்.

            இது ஒருபுறமிருக்க 1492 –ல் வாஸ்கோடகாமாவின் வருகைக்குப் பின்னர் இந்தியாவின் நீர்வழி கண்டுபிடிப்பானது போர்த்துக்கீசியர்-டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் இந்தியாவெங்கும் வணிகத்தை தொடங்கி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். இவையும் மொழிகட்குள் புதிய கலப்பு சொற்களை தோற்றுவித்தது. அவர்களின் ஆதிக்கம், ஆங்கிலேயர்கள் தங்கள் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஆங்கில மொழி பேசுவோருக்கு தனித்தகுதி கொடுக்க பலரும் ஆங்கிலத்தை கற்க முனைந்தனர், கற்றனர். இது உலகளவில் நிகழ்ந்த நிகழ்ச்சிப் போக்காகும். அவர்கள் காலடி வைத்த அனைத்து நாடுகளிலும் மொழிகலப்பு ஏற்பட்டது. சர் தேசியத்தில் ஆங்கிலம் வணிக மொழி என்றாலும், தனித்ததொரு சிம்மாசனத்தில் அமர்ந்து பிற மொழிகளின் மீது ஆதிக்கம் செலுத்தியது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஆங்கிலேயர்களின் ஆதிக்கமே, அவர்கள் பேசிய மொழி அதிகாரத்துவ மொழியாய் மாறி நின்றது.

            15 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் 16, 17 ஆம் நூற்றாண்டினுள் குறைவாகவும், 18, 19 ஆம் நூற்றாண்டில் பிற மொழிகளின் கலப்பு (குறிப்பாக ஆங்கில மொழி) மிக அதிகமாக பெரும்பாலான நாடுகளில் உருவாகியது. காலனி ஆதிக்கத்திற்கு சிக்குண்டதும், தொழிற் புரட்சியின் விளைவும், புதிய புதிய கண்டுபிடிப்புகளும் சர்வதேசிய அளவில் பொது உறவையும், சிந்தனைப் பரிமாற்றத்தையும் ஏற்படுத்தின.

            மேலை நாட்டினில் ஆராய்ச்சி துறைகள் தனித்தனி துறைகளாக உருவாகஇ மொழியின் ஆளுமையும் வளர்ந்தது. கணிப்பொறி வளர்ச்சியே உலகளவில் எல்லையில்லாத ஓர் பொது உறவாய் மனித உறவை உருவாக்கத் தொடங்கின. இக்கண்டுபிடிப்பும் வானில் ஏவப்பட்ட வானூர்திகள், ஆகியவற்றின் கண்டுபிடிப்புகளுமே சர்வதேசிய பொதுத் தன்மையில் மனித கூட்டத்தை இன்று இணைத்து நிற்கிறது. பல்வேறு மொழி கூட்டத்தை இன்று இணைத்து நிற்கிறது. பல்வேறு மொழி பேசினால் ஓர் பொது அடையாளத்தில் இணைக்கும் பாலமாய் கணிப்பொறி நம்முன் நிற்கிறது. ஆங்கில மொழி கணிப்பொறி மொழியாயினும் அது பலரும் பாமர மக்களும் புழக்கத்தில் பேசும் சொல்லாக இருக்க, சாதாரண புத்திசீவிகளும் அறிய ஏதுவாய் இன்று அமைந்திருக்கிறது கணிப்பொறி, மேலும் புதியப் புதிய பொருட்களின் கண்டுபிடிப்புகள் வளர்ந்த நாடுகள் மட்டுமல்லாது வளரும் நாடுகளிலும் அதைப் பற்றிய புரிதலை மொழிபெயர்ப்பின் வாயிலாக அவரவர் மொழிகளில் அம்பலப்படுத்த ஏதுவாய் பல நவீன கருவிகள் உருவாக்கப்பட்டன. புதிய கருவிகளும் உருவாக்கப்படுகின்றன எனலாம்.

            தொடக்கக் காலத்தில் பிற நாட்டினரை விடவும் வணிகத்தில் தழைத்தோங்கிய ஆங்கிலேயர்கள் பல்வேறு நாட்டினரை அடிமைப்படுத்தினர். தமது அதிகாரம் பருமளவில் மொழிக் கலப்பை உருவாக்கியது. குடியேற்ற நாடுகள் (அமெரிக்கா போன்ற நாடுகள்) தோற்றம் பெற்றது. அங்கும் ஆங்கில மொழியே தனித்ததொரு ஆதிக்கத்தை செலுத்தியதேயன்றி அங்கு வாழ்ந்த செவ்விந்திய பழங்குடி இன மக்களின் மொழியானது ஆளுமை செலுத்தவில்லை. உலகளவில் ஆதிக்கம் விரிவடையவும் மொழியின் ஆதிக்கமும் விரிவடைந்தது.

            இச்சூழல் ஒருபுறமிருக்க, வணிக மொழியான ஆங்கில மொழி மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்ததும், சீன மொழி, மக்களிடத்து தனித்த ஆளுமையை மக்களிடத்து செலுத்தி நிற்பது போல தமிழ்மொழி போல ஒருசில மொழிகள் மட்டும் தனித்த ஆளுமையை மக்களிடத்து செலுத்தி நிற்பது போல தமிழ்மொழி போல ஒருசில மொழிகள் மட்டும் தனித்த ஆளுமையோடு வலம் வந்து கொண்டிருக்கிறது. இதற்குரிய அடிப்படைக் காரணங்களுள் ஒன்று, அம்மொழியின் இலக்கிய, இலக்கண வளமையும், பெருமக்கள் பேசும் மொழியாக உருப்பெற்றதுமே ஆகும்.

            இதற்கெதிரான சூழலில் மலைப்பகுதியில் உள்ள பல இனக்குழுவினர்கள் பேசும் மொழிகள் எழுத்துரு பெறாமலும், சில எழுத்துரு பெற்றிருந்தும் தனித்தொரு ஆளுமையை செலுத்த முடியவில்லை. குறிப்பாக இந்தியாவின் தென்னகத்தின் பேச்சு மொழிகளான தோடர், கோத்தர்மெரி, குயி, குவி, லம்பாடி போன்ற மொழிகளும், சில பேச்சு மற்றும் எழுதிதுரு கொண்ட மொழிகளும், (உதாரணமாக சமஸ்கிருதம் போன்ற மொழிகள்) குழு மொழியாகவும், அழிந்து வருவதை காண முடிகிறது. எனினும் சமஸ்கிருத மொழிகளிலும் கலைச்சொற்களாய் முனைப்புடன் தோன்றியும் நிற்பதை காண முடிகிறது. இதற்குரிய அடிப்படைக் காரணம், அவர்களுக்கே யுரிய அரசியல் அதிகாரமும், ஆதிக்கமுமே ஆகும்.

            ஆயினும் நிலைத்த மொழிகளால் இன்றும் வலம் வருபவை ஒரு சில மொழிகளே, அம்மொழிகள உலகளவில் ‘செம்மொழி’கள் என்ற தகுதியை அடைந்தன. குறிப்பாக கி.மு.விற்கு தொடக்கத்திலும், கி.மு.விற்கு முற்பட்டும் இலக்கியம், இலக்கணம் கண்டிருந்த சில மொழிகளே செம்மொழிகளாக சர்வதேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டன அவற்றுள் சில,

            சுமேரியன், எகிப்தியன், அக்கேடியன், பொனிசியன், ஆரமெயக், கிரேக்கம், லத்தீன், தமிழ், சீனம், சமஸ்கிருதம், ஹீப்ரு, அரேபியம் போன்ற மொழிகளே மிகப் பழமையான மொழிகளாகும். ஆனாலும், இம்மொழிகளில் பல மொழிகள் இன்று வாழும் மொழிகளாகவே இல்லை. சில மொழிகளே நிலைபெற்ற சில மொழிகள், இன்று பெருமக்கள் வழங்கும் மொழியாக நிலைத்து நிற்கின்றன.

            சில பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் நிலைத்த இலக்கணம் வரையறைக்கு உட்பட்ட மொழியாய் எம்மொழியும் இருக்கும் என்பது நிலையியல் சிந்தனைவாதிகளின் கருத்தாகும். ஆயின் ஒருபோதும் நிலைத்த தன்மையில் எம்மொழியும் இருக்க முடியாது. இயங்கியலாளரின் கூற்றுப்படி ‘எல்லாம் மாறும்’ என்பதே பொது விதியாகும்.

            நேற்று வழக்கிலிருந்த பல மொழிகள் அழிந்திருக்கின்றன. இன்று வழக்கிலிருக்கும் பல மொழிகள் ஒரு சிலரோ, அல்லது சில குழுக்கள் மட்டுமே பேசக் கூடிய மொழியாய் மாறியிருக்கின்றன. அதே போல எதிர்காலத்தில் பல மொழிகள் அழிந்து போகவும் வாய்ப்பிற்குக்கிறது. அதே போல, கலைச் சொற்களின் தோற்றத்தினாலும், சர்வதேசிய  பிணைப்பினாலும் பல புதிய சொற்கள் தோன்றி தோன்றி கண்னி நடையில் புதிய மொழிச் சொற்கள் கூட உருவாக வாய்ப்பிருக்கிறது. அவை பல மொழி கலப்பு கொண்ட பெரும்பான்மை மக்கள் வழங்குகின்ற சொற்களை உடைய மொழியாகவும் உருவாக வாய்ப்பிருக்கிறது.

நாளைய மனித குலத்திற்கான, தெளிவான புரிதலையுடைய ஒரு பொது மொழியும் கூட உருவாகலாம். அம்மொழி சர்வதேசிய மனித உறவுகளை உருவாக்கும் பொருட்டு தோற்றுவிக்கப்படலாம். மனித உறவுகளுக்குள்ளும், சமூக பிணைப்பின் அடித்தளத்திற்குள்ளும் உலாவும், பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியே உலகளாவும் அங்கீகரிக்கப்படலாம். அப்போது மொழி சார்ந்த பிரச்சினைகளுக்கும், முரண்பாடுகளுக்கும் தீர்வு ஏற்படலாம். இவை யாவும் சமூக மாற்றத்திலேயே ஏற்படும் என கருதலாம்.

- பா.பிரபு, முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

Pin It