dg vanzara

இன்னும் யாராவது சிறையில் இருக்கின்றார்களா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் அவர்களும் கூடியவிரைவில் மோடி அரசால் விடுதலை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்றதில் இருந்து இரண்டு செயல்கள் எந்தவித தொய்வும் இல்லாமல் மிக சிறப்பான முறையில் நன்கு திட்டமிட்டு நடந்துவருகின்றன. ஒன்று தனது உலுத்துப்போன ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை நாடு முழுவதும் தனது காவி படைகளைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாக திணிப்பது, ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அடித்து உதைத்து கொலை செய்வது, மற்றொன்று நாட்டை பன்னாட்டுப் பெருமுதலாளிகளுக்கும், இந்திய தரகு முதலாளிகளுக்கும் வெட்கமின்றி கூட்டிக்கொடுப்பது. இவை இரண்டும் தான் மோடி ஆட்சி செய்துகொண்டிருக்கும் ராம ராஜ்ஜியத்தின் உச்சபட்ச இலக்குகள். இந்த இலக்குகள் முழுவதுமாக நிறைவேற்றப்படும் போது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய உடமைகள் அனைத்தையும் இழந்து தனது குடும்பத்தையே மானியமாக மோடிக்குக் கொடுத்துவிட்டு காவி கோவணத்துடன் அயோத்தி வீதிகளிலும், வாரணாசி வீதிகளிலும் பரதேசிகளாக ,வந்தே மாதரம் பாடலை பாடிக்கொண்டு அலைந்துகொண்டிருப்பார்கள் என்பது உறுதி. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை இந்திய மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இப்போது உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

 மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்பு நாட்டு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்திருக்கின்றாரா என்று யாரை கேட்டாலும் மோடிக்கு வாய் நிறைய மனது நிறைய சாபம் கொடுக்கின்றார்கள். அந்த லட்சணத்தில் தான் மோடியின் ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. சாமானிய மக்களுக்குத் தொடர்ச்சியாக ஆப்பு மேல் ஆப்பாக அடித்துக்கொண்டிருக்கும் மோடி தனது முன்னாள் கொலை கூட்டாளிகளை ஒவ்வொருவராக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவித்துக்கொண்டிருக்கின்றார். குஜராத் கலவர வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டதுடன் தனக்கு உடந்தையாக இருந்தவர்களையும் காப்பாற்றிய மோடி தற்போது நாடே காறித்துப்பிய சோராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் இருந்து வன்சாராவையும் விடுவித்துள்ளார். நாம் மோடி விடுவித்துள்ளார் என்று சொன்னால்தான் பொருந்தமாக இருக்கும். இன்றைய தேதியில் சி.பி.ஐ, என்.ஐ.ஏ, வருமான வரித்துறை என அனைத்துமே மோடியின் கூலிப்படையாக மாற்றப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.

    நரோடா பாட்டியா வழக்கில் இருந்து மாயபெண் கோத்னானி விடுதலை செய்யப்பட்டதில் இருந்து வரிசையாக பல காவிபயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு, ஆஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கு, மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கு. சம்ஜெளதா விரைவு வண்டி குண்டுவெடிப்பு என மொத்தம் ஐந்து குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய அசீமானந்தா, பெண்சாமியர் பிரக்யா சிங் தாக்கூர் போன்றோர் என்.ஐ.ஏ நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டனர். இப்போது சொரபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் இருந்து வன்சாராவையும் மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது.

 குஜராத் படுகொலைக்கும் சோராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்குக்கும் நேரடியான தொடர்புள்ளது. குஜராத் கலவரத்தில் மோடிக்கு உள்ள தொடர்பு பற்றிய உண்மைகளை மோடி அரசில் வருவாய் துறை இணை அமைச்சராக இருந்த ஹரேன் பண்டியா  மக்கள் நீதி மன்றம் என்ற அமைப்பு நடத்திய விசாரணையில் ஒப்புக்கொண்டதால்தான் அவர் சோராபுதீன் என்ற ரவுடி மூலம் படுகொலை செய்யப்பட்டான். இந்த உண்மை வெளியே கசியவே மோடி சோராபுதீனை போட்டுத்தள்ள வன்சாரவை நியமித்தார். வன்சாரா சோராபுதீனையும் அவனது அடியாளாக இருந்த துளசி ராம் பிரஜாபதியையும் போலி மோதலில் போட்டுத்தள்ளியது மட்டும் அல்லாமல் சோராபுதீனின் மனைவி கவுசர் பீ யையும் விச ஊசி போட்டு கொன்றார். இவ்வளவு கொலைகளும் நரேந்திர மோடி என்ற ஒற்றை நபரை குஜராத் கலவர வழக்கில் இருந்து காப்பாற்றுவதற்காக செய்யப்பட்டவை. வன்சாரா சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் மட்டும் அல்லாமல் இஷ்ரத் ஜகான், ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளை, அம்ஜத் அலி, ஜிஷன் ஜோஹர் அப்துல் கனி   ஆகிய நான்கு பேர்களை லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சார்ந்தவர்கள் என்றும் அவர்கள் மோடியை கொல்வதற்காக குஜராத்துக்கு வந்ததாகவும் பொய்யான குற்றம் சாட்டி போலி என்கவுன்டர் செய்த வழக்கிலும் முக்கிய குற்றவாளியாவார்.

  எப்படி அசீமானந்த சிறையில் இருந்த போது தனக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும், குண்டுவெடிப்புகளின் தொடர்புள்ளது என வெளிப்படையாக கரவான் இதழில் கொடுத்த பேட்டிகளை நீதிமன்றம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் விடுதலை செய்ததோ அதே போலத்தான் வன்சாரா குஜராத் அரசுக்கு அனுப்பியதாக சொல்லப்படும் 10 பக்க ராஜினாமா கடிதத்தையும் ஒரு முக்கிய சாட்சியமாக எடுத்துக்கொள்ளவில்லை என தெரிகின்றது. அப்படி எடுத்துக்கொண்டிருந்தால் நிச்சயமாக வன்சாராவை விடுவித்து இருக்காது. அந்த கடிதத்தில் வன்சாரா தான் நடத்திய அனைத்து போலி என்கவுன்ட்டர் கொலைகளும் மோடிக்காக நடத்தப்பட்டது என்பதையும் மோடி எப்படி காவல்துறையைத் தன்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொண்டார் என்பதையும் வெளிப்படுத்தி இருக்கின்றார்.அது மட்டும் அல்லாமல் குஜராத் தலைநகர் காந்திநகரில் செயல்பட்டுவரும் மோடியின் அரசை சபர்மதி மத்திய சிறைக்கு மாற்றவேண்டும் என்றும் வன்சாரா வெளிப்படையாக கோரிக்கை வைத்தார். ஆனால் மோடியின் கூலிப்படையான சிபிஐ திட்டமிட்டு வன்சாராவையும் தற்போது விடுவித்துள்ளது. இதன் மூலம் என்.ஐ.ஏ மற்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்றங்கள் ஆர்.எஸ்.எஸ் நீதி மன்றங்களாக மாற்றப்பட்டுவிட்டதை தெளிவாக மக்கள் உணரும்படி ஆகியிருக்கின்றது.

  இன்னும் யாராவது காவி பயங்கரவாதிகள் சிறையில் உள்ளார்களா என்று தேடிப்பார்க்கும் நிலையை மோடி  இன்று ஏற்படுத்தி இருக்கின்றார். இது அவரின் வாழ்நாள் சாதனையாக வரலாற்றில் பார்க்கப்படும். ராம ராஜ்ஜியத்தில் ராமரின் விசுவாசிகள்  அனைவரும் காப்பாற்றப்பட்டுவிட்டனர். இன்னும் சில உதிரிகள் சிறையில் இருந்தாலும் அவர்களும் கூடிய விரைவில் நிச்சயம் விடுதலையாவார்கள் என நாம் உறுதியாக சொல்லலாம். இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் குண்டுவைக்கலாம், நாட்டை கூட்டிக்கொடுக்கலாம், பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் அப்பாவி தலித்துகளையும் முஸ்லீம்களையும் தாக்கலாம்,கொல்லலாம், கள்ள நோட்டு அடிக்கலாம், காதலர்களை அம்மணமாக அடித்து உதைத்து ஊர்வலம் வரவைக்கலாம், அதிகார வர்க்கத்துக்கு மாமா வேலை பார்த்து அமித்ஷா போன்று  300 மடங்கு சொத்துச்சேர்க்கலாம், ஏன் அண்டாவோடு பிரியாணியைக்கூட திருடி தின்னலாம். அனைத்து அயோக்கியத்தனங்களையும் செய்ய அவர்கள் இந்தியாவில், பாரத தேசத்தில் முழு அத்தாரிட்டியைப் பெற்றுள்ளார்கள்.

 மோடி ஆட்சிக்கு வந்தப் பின்னால்தான் அவர்கள் ஆட்டமாக ஆடுகின்றார்கள் என்பது  இல்லை. அவர்கள் எப்போதுமே தங்கள் விருப்பம் போலத்தான் செயல்பட்டு வருகின்றார்கள். அனைத்துக் கட்சிகளிலும், அனைத்து அரசு அமைப்புகளிலும் தனது ஆட்களை அவர்கள் எப்போதுமே வைத்திருக்கின்றார்கள்.  என்ன மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின் உக்கிரம் சற்று அதிகமாக இருக்கின்றது அவ்வளவுதான். ஒரு ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லை என்றால் பாசிசத்தை எதிர்க்க முடியாது என்பதைத்தான் நடக்கும் நிகழ்வுகள் வெளிப்படையாக காட்டுகின்றன.இந்திய ஜனநாயகத்தில் நீதி மன்றங்கள் தங்களின் கேடுகெட்ட இழி தன்மையைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு எதிரான போராட்டம் என்பது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெரிய அளவில் இல்லை என்பது வேதனையானது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் முற்போக்கு அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்ட்களைவிட வலிமையாக இருப்பதால்தான் இங்கே அதனால் தன்னுடைய அயோக்கியத்தனங்களை பெரிய அளவில் அரங்கேற்ற முடியவில்லை. இல்லை என்றால் ஆர்.எஸ்.எஸ் கும்பல் இந்நேரம் தமிழ்நாட்டையும் ஒரு குஜராத்தாக மாற்றியிருக்கும்.

Pin It