Vinayaga rally

கோவையில் மூன்று தினங்களுக்கு முன் நடந்த கலவரத்தில், ரொம்ப ஜாலியாக கலவரத்தில் ஈடுபட்டவர்கள், பேருந்துகளைக் கொளுத்தியவர்கள், வாகனங்களுக்கு தீ வைத்தவர்கள், பொது மக்களைத் தாக்கியவர்கள் - என இவை அனைத்தையும் செய்தவர்கள் 16, 17 வயதில் இருந்து 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களே !!

தங்கள் மகன் ஏதோ கடவுள் பக்தியில் இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ், பாஜக போன்ற கூட்டத்தோடு சுத்திக் கொண்டிருக்கிறான் என நம்பி இருந்த பெற்றோர்கள், தங்கள் மகன் ஒரு பச்சை பொறுக்கிக்கான அத்தனை குணாதிசியங்கள் உடைய நபராக மாறி வருகிறான் என்பதை உணர வேண்டும்.

படித்து நல்ல வேலைக்கு சென்று, கெளரவமான வாழ்க்கை வாழ வேண்டும் என பெற்றோர்கள் நினைத்தால்… இந்த தீய சக்திகளிடம் இருந்து உங்கள் பிள்ளைகளை காப்பாற்றிக் கொள்ளுங்கள்...

கையில் செந்தூரக் கயிறு கட்டிக் கொண்டு, செந்தூரப் போட்டு வைத்துக் கொண்டு, தங்கள் மகனோடு சுற்றும் இந்தக் கூட்டம் பெரிய இந்துத்துவ சித்தாந்தமோ, கொள்கை அறிவு உடைய கூட்டமோ அல்ல...விநாயகர் சதுர்த்தி போன்ற நிகழ்வுகளுக்கு குத்தாட்டம் போட்டுக் கொண்டு வரும் கூட்டம்...

இவை அனைத்தும், பள்ளியை பாதியிலேயே கைவிட்ட, வாழ்வில் பெரிய பிடிப்பில்லாமல், ஏதோ ஒரு தொழிலை செய்து... பெரும்பாலும் சொந்த ஊரில் இல்லாமல் வேறு மாவட்டத்தில் இருந்து பிழைக்க வந்த அப்பாவி இளைஞர் கூட்டம் தான்...

தமிழகத்தில், அரசியல் லாபத்திற்காக, கிறிஸ்துவர்களுக்கு எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், இந்த காலிக் கூட்டம் கலவரங்கள் நிகழ்ந்திய கன்னியாகுமரி, கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் எப்படி இந்த ஆட்களைப் பிடிக்கின்றனர் என்ற பார்முலாவை தெளிவாகக் காணலாம்...

மேலும் குறிப்பாக ,கோவை, திருப்பூர் போன்ற பகுதிகள் தொழில்நகராக மாறிப் போன பின்னர், இதை இவர்களின் வேட்டைக் காடாக மாற்ற வசதியாய்ப் போய்விட்டது என்றே சொல்லலாம்.

தொழில் நகராக மாறிப் போனது இந்த கூட்டங்களுக்கு இரண்டு வகையில் வசதியாய்ப் போனது...

ஒன்று இந்த மண்ணில் பூர்வகுடிகளாக இருக்கும் இஸ்லாமியர்கள் தான் தொழிலில் முன்னோடியாய் திகழ்ந்து வந்தனர்...

90களுக்குப் பிறகு இவர்களுக்குப் போட்டியாய் குஜராத் மார்வாடிகள் களத்தில் இறங்கியது இந்துத்துவக் கும்பலுக்கு வசதியாய்ப் போனது...தொழிலி்ல் தங்களுக்கு போட்டியாய் உள்ள இஸ்லாமியர்களை ஒடுக்க இந்து முன்னணியை வளர்த்து விட ஆரம்பித்தது இந்த கால கட்டத்தில் தான்...

இன்னொன்று,,இது தொழில்நகரமாய் மாறிப் போன காரணத்தினால், தென், வட மாவட்டங்களில் இருந்து வேலை செய்ய வரும் இளைஞர்களின் வரத்தும் அதிகமானது...குடும்பத்தை விட்டு தனியே இந்த இளைஞர்கள் இருப்பதால், கண்டிக்கவோ, கண்காணிக்கவோ ஆள் இல்லாத காரணத்தில்... சில ஜிகுனா வேலைகள் காண்பித்து, இந்த பொறுக்கி கும்பல்களிடம் மாட்டி, இந்த இளைஞர்கள் சீரழிந்து விடுகின்றனர்.

மார்வாடிகளின் வரத்திற்குப் பிறகு, இவர்களின் காலித்தனம் அதிகமாக அடிகோலியது 'விநாயகர் சதுர்த்தி' என்ற தமிழர்களுக்கு சம்மந்தமில்லாத வட நாட்டு இறக்குமதியான கலியாட்டமாகும்.

இந்தக் கூத்தில்... அடாவடித்தனத்திற்காகவே மசூதிகள் இருக்கும் பகுதிக்கு ஊர்வலம் அனுப்பப்பட்டு, தலையில் ரிப்பன் கட்டி...அங்கே இஸ்லாமிய மக்களை வம்பிற்கு இழுத்து...அடிதடியில் அடியாள் வேலை செய்யும்...தலையில் ரிப்பன் கட்டி களியாட்டம் போடும் எந்த சுயபுத்தியுமற்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு, ஊரில் நடக்கும் இந்துக் கடவுள் ஊர்வலங்கள் ஏன் எங்கள் சேரிக்குள் வருவதில்லை என்று கேட்கவும் அறிவில்லை... ஊர்வலத்தில் ஏன் ஒரு பார்ப்பானும் நம்மோடு ஆட்டம் போட்டு வருவதில்லை என யோசிக்கவும் அறிவில்லை.

முதலில் இந்தக் கூட்டங்களின் ஆள் சேர்க்கும் யுக்தியைக் காண்போம்:

நாம் மேலே கூறியவாறு, கோவை வட்டாரம் தொழில்நகரமாகவும்,வேற்று மாவட்ட இளைஞர்களின் வரத்து அதிகமுள்ள பகுதியாகவும் மாறிப் போனது...

சிறைச்சாலை தான் இவர்களின் ஆள் பிடிக்கும் கூடாரம்.ஏதோ ஒரு சிறு வழக்கில் சிறை செல்லும் வேற்று மாவட்ட இளைஞர்...ஜாமீன் எடுக்க வழியின்றி உள்ள தவிக்கும் சூழலில்... அவர்கள் மீது சிறையினுள்ளேயே பல ஆண்டுகளாக உள்ள ஒரு காவித் தீவிரவாதியின் கரிசனப் பார்வை விழும்...

பிறகு இப்படி சிறையில் பொறுக்கிகளை, பொறுக்கி எடுப்பதற்காகவே உள்ள வழக்கறிஞர் அணியின் மூலம் அந்த இளைஞர் வெளியே எடுக்கப்படுவார்... அத்தோடு வெளிலே தனக்கு பெரிய ஆதரவு தளம் உள்ளது போன்ற நம்பிக்கையை ஊட்டி... அந்த பலி ஆடு...உள்ளூர் காவிக் கசாப்புக்காரனிடம் அனுப்பப்படும்...

சிறையில் இருந்து தன்னை வெளியேயும் எடுத்து... தனக்கு சோறெல்லாம் வாங்கிக் கொடுக்கும் ஒரு கூட்டமும் உள்ளதே என அந்த இளைஞன், ஒரு நொடி மெய்சிலிர்த்து நி்ன்றால், அத்தோடு முடிந்தது கதை... அந்த இளைஞனின் வாழ்க்கை குப்பைக்கு போவது அந்த நொடி உறுதி செய்யப்படுகிறது...

இது ஒரு பக்கம் என்றால்... படிப்பை பாதியிலேயே கைவிட்ட உள்ளூர் இளைஞர்களின் வாழ்க்கை அதை விடப் பரிதாபம்...

இதை கோவை சத்தி ரோட்டில் கணபதி துவங்கி அன்னூர் வரை... மேட்டுபாளையம் ரோட்டில் கவுண்டம்பாளையம் துவங்கி மேட்டுப்பாளையம் வரை கண்கூடாக பார்க்கலாம்...

படிப்பை பாதியில் கைவிட்டு, ஆட்டோ, டாக்சி ஓட்டும் அல்லது தனியார் பேருந்தில் டிரைவர், கண்டக்டராக வேலை செய்யும் பெரும்பான்மை கூட்டங்கள், கையில் காவிக் கயிற்றை முழங்கை முழுவதும் நிரப்பி... தங்கள் வாழ்வின் முன்னேற்றத்தை முழுவதும் மூடிச் சுற்றுவதை கண்கூடாகப் பார்க்கலாம்...

படிப்பை பள்ளியோடு நிறுத்தி இப்படி ஏதோ ஒரு வேலைக்குப் போகிறவர்கள் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற கும்பலின் பிடியில் சிக்கியுள்ளதை உளவியல் ரீதியாக ஆராய்ந்தால், இவர்கள் ஏன் இப்படி இவர்கள் பின்னால் செல்கின்றனர் என்ற விடையை அறியலாம்.

பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் தாம் தனித்தன்மையோடும்... ஒருவித கதாநாயகத் தொனியில் இருக்க வேண்டும் என்ற தேடல் தன்னிச்சையாகவே இருக்கும்...

அப்படி இருக்கையில்... படிப்பை பாதியிலேயே நிறுத்திய இளைஞர்கள் அவர்களுக்கான தனித்துவத்தை, பெருமையை, தங்களுக்கு வாய்த்த வேலையாலோ... வாழ்வியலாலோ நிவர்த்தி செய்ய முடியவில்லை என்ற சூழல் ஏற்படும் போது... ஏதாவது செய்து தங்களுக்கான கதாநாயகப் பிம்பத்தை கட்டியமைக்க வேண்டும் என்ற தேவையும், ஆர்வமும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கவே வாய்ப்புள்ளது...

அந்தச் சூழலில்...செந்தூரப் பொட்டு வைத்து...கையில் காவிக் கயிற்றை அணிந்து...பான்பராக்கை வாயில் போட்டு லாவகமாக மென்று... அடிதடி போன்ற பொறுக்கித்தனம் செய்து திரியும் ஒரு காவிப் பொறுக்கியை தங்கள் பகுதியில் காண நேரிட்டால்...

தாங்களும் இது போல ஆக வேண்டும் என்ற தவறான உந்துதல்... அந்த இளைஞனை இந்த அதல பாதாளத்தில் தள்ளிவிடும் என்பது உறுதி...

ஏற்கனவே படிப்பை இழந்து... வாழ்வில் ஏதாவது தொழிலை செய்தாவது முன்னேறிவிடலாம் என்ற அந்த இளைஞனின் கடைசி முன்னேற்றக் கதவும்...காவிக் கூட்டத்துடன் சேர்ந்த பின்னர் முற்றுமுழுவதுமாக அடைபடும்...

ஆக, காவி வேட்டியும், செந்தூரப் பொட்டும் வைத்துக் கொண்டு... தங்கள் பகுதியில் சுத்தும் நபர்கள், ஏதோ பக்தி மான்கள் என்றோ, ஒழுக்க சீலர்கள் என்றோ நினைத்து ஏமாறாமல்... அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அனைத்து தீய பழக்கங்களும் போதித்து... அந்த இளைஞனின் வாழ்க்கையை முழுவதுமாக அழிக்க வந்த கிரிமினல் கூட்டம் என்பதை பெற்றோர்கள்தான் உணர்ந்து...தங்கள் பிள்ளைகளின் வாழ்வை நல்வழிப்படுத்த வேண்டும்.

மாறாக, தங்கள் மகன் 'விநாயகர் சதுரத்திக்கு' சிலை வைக்கிறான் என்பதை ஆகச் சிறந்த செயல் போல நினைத்து...அவனின் இந்த தீய சவகாசத்தை தடுத்து நிறுத்தாவிடில்...அது தங்களின் மகன்களுக்கு அவர்களே தோண்டும் சவக் குழியாகவே மாறும்...

-       மனோஜ் குமார்

Pin It