நாட்டின் அனைத்துத் துறைகளிலும் குஜராத்துதான் உச்ச வளர்ச்சியை அடைந்துள்ளது என்றும், அதற்குக் காரணமான மோடி இந்தியாவுக்கே பிரதமராக வந்தால் 'குஜராத் மாதிரி' வளர்ச்சி மொத்த இந்தியாவுக்கும் கிடைக்கும் என்று புழுகிவந்தனர். ஒரு பொய்யைத் தொடர்ந்து சொல்லி வந்தால் அது உண்மையாகிவிடும் என்ற தத்துவத்தின் படி, குஜராத்தில் இல்லாத வளர்ச்சி இருப்பதாக பரப்பப்பட்டு வந்துள்ளது. இந்த உண்மையை The Weak வார இதழ் (எப்ரல் 6, 2014) வெளிப்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் குஜராத் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பதை புள்ளிவிபரங்கள் தெளிவாக்குகின்றன.
நேரடி வெளிநாட்டு முதலீடு: (FDI)
ஏப்ரல் 2000 முதல் ஜுன் 2012 வரை
மாநிலம் | உண்மையான நேரடி வெளிநாட்டு முதலீடு |
மகாராஷ்ட்ரா | 2,54,624 கோடி |
தில்லி | 1,55,222 கோடி |
கர்நாடகா | 45,071 கோடி |
தமிழ்நாடு | 40,297 கோடி |
குஜராத் | 36,913 கோடி |
(Source : RBI)
துடிப்புள்ள குஜராத் உலக முதலீட்டு மாநாடு
வருடம் | அறிவிக்கப்பட்ட முதலீடு | உண்மையான முதலீடு |
2003 | 66,068 கோடி | 37,746 கோடி |
2005 | 1,06,160 கோடி | 37,939 கோடி |
2007 | 4,65,309 கோடி | 1,07,897 கோடி |
2009 | 12,39,562 கோடி | 1,04,590 கோடி |
2011 | 20,83,047 கோடி | 2,91,813 கோடி |
தகவல் : மத்திய கணக்கு தணிக்கை துறை
இந்தியாவிலுள்ள மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் செய்துள்ள மென்பொருள் ஏற்றுமதி (2010-----2011 மதிப்பு படி)
மாநிலங்கள் - ஏற்றுமதி
கர்நாடகா - 70,240.93 கோடி
மகாராஷ்ட்ரா - 49,873.78 கோடி
ஆந்திரா - 28,674.57 கோடி
தமிழ்நாடு - 28,289.75 கோடி
ஹரியானா - 13,650.75 கோடி
உத்திரப் பிரதேசம் - 10,944.75 கோடி
மேற்கு வங்கம் - 05,665.00 கோடி
கேரளா - 02,071.67 கோடி
தில்லி - 01,541.20 கோடி
ஒடிசா - 01,253.29 கோடி
குஜராத் - 01,250.99 கோடி
தகவல்: STPI வருட அறிக்கை 2010 -11
வறுமை குறைப்பு :- 2004 - 2011 வரை
மாநிலங்கள் - வறுமை குறைப்பு விகிதம்
ஒடிசா - 20.2%
உத்தரகாண்ட் - 14.7%
இமாச்சல் பிரதேசம் - 13.4%
தமிழ்நாடு - 12.3%
மகாராஷ்ட்ரம் - 11.9%
மத்திய பிரதேசம் - 10.9%
ராஜஸ்தான் - 9.6%
குஜராத் - 8.6%
சுகாதாரம்:
நபர் ஒருவருக்கான மருத்துவ செலவில் மிகவும் தாழ்வான இடத்தில் குஜராத் இருக்கிறது.
ஒரு லட்சம் மக்களுக்கு 143 என குறைந்த படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் உடைய மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று.
தாய்-சேய் மரண விகிதத்திலும் குஜராத்துதான் முதலிடம்
ஐந்து வயதுக்குட்பட்ட இரண்டில் ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்து இல்லை.
நான்கில் மூன்று குழந்தைகளுக்கு இரத்த சோகை உள்ளது.
ஆதாரம் : National health accounts of India and SRS 2012
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மீதான மதிப்பு கூட்டு வரி (value added tax) குஜராத்தில் தான் அதிகம். CNG மீது அதிக மதிப்பு கூட்டு வரியும் (15%) குஜராத்தில் தான் அதிகம்.
வேலை நிறத்தம், ஆலைகளுக்கு பூட்டு என்று அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் போராட்டமும் குஜராத்தில்தான் நடந்துள்ளது.
பொது வினியோக திட்டமும் மிக மோசம். உணவு தானியங்களை மக்களுக்கு வழங்காமல் திருப்பிவிடப்படுவதும் குஜராத்தில் தான் அதிக விகிதத்தில் நடக்கிறது.
இந்தியாவில், சுற்றுச்சூழல் மிகவும் நஞ்சாக்கப்பட்ட பகுதிகள் குறித்த பட்டியலில் குஜராத்தின் அங்லேஷ்வர் மற்றும் வப்பி (Ankleshwar and vapi) ஆகியன முதல் இரண்டு இடங்களில் உள்ளது.
கடந்த காலங்களில் குஜராத் அரசு மின் உற்பத்தியை வெகுவாக குறைத்து கொண்டுள்ளது. தற்போது மின்சாரத்தின் தேவை அதிகரித்திருப்பதால், தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து குஜராத் அரசு மின்சாரம் வாங்குவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
- ஜி.அத்தேஷ்