2009ல் வெளியான உலக வங்கி அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு தகவல் பேரதிர்ச்சி அளிக்கிறது.

 பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளால் ஆண்டுதோறும் 68,000 பெண்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள்.

 பின்தங்கிய நாடுகளிலேயே இந்த அவலம் அதிகளவு நிகழ்கிறது. உலகெங்கும் சுமார் 5 கோடிப் பெண்கள் சரியான கருத்தடைச் சாதனங்கள் உபயோகிக்காததால் கருத்தரிக்கின்றனர் என்றும் கூடவே 2.5 கோடிப் பெண்கள் கருத்தடைச்சாதனங்களின் தோல்வியால் கருத்தரிக்கின்றனர் என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

 கருக்கலைப்பு என்பது ஒரு குழந்தையைக் கொலை செய்வது என்பதுடன் தாயின் உடல் நலத்தையும் பெருமளவில் பாதிக்கிறது. பெண்உரிமைகள் குறித்த விழிப்பும், சிறந்த கல்வியும், வலுவான சமூக, பொருளாதார அடித்தளங்களும் அமையும் வரை இந்த அவலங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்பதே வேதனையான உண்மை.

Pin It