சண்டக்கோழி படத்தில் குட்டி ரேவதியை இழிவுபடுத்தி காட்சி அமைத்ததற்காக இயக்குநர் லிங்குசாமி, வசனகர்த்தா எஸ். ராமகிருஷ்ணனைக் கண்டித்து 16.01.2006 திங்கள் மாலை 6.00 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கு கட்டடத்தில் ஒரு கருத்தரங்கம் நடைபெறுகிறது.

கருத்தரங்கத்திற்கு பேராசிரியை சரஸ்வதி தலைமையேற்கிறார். திலகவதி IPS முன்னிலை வகிக்கிறார்.

கருத்தரங்கில் அம்பை, இன்குலாப், பிரபஞ்சன், அ. மார்க்ஸ், புனித பாண்டியன், க்ருஷாங்கினி, அமரந்தா, வ. கீதா, பரீக்ஷா ஞாநி, ரமேஷ்-பிரேம், பா. செயப்பிரகாசம், ஓவியர் சந்ரூ, அழகிய பெரியவன், விழி. பா. இதயவேந்தன், வெளி ரங்கராஜன், அன்பாதவன், வீ. அரசு, கோணங்கி, இரா.தெ. முத்து, அமுதா, அ. மங்கை, வெண்ணிலா, ஜெயந்தன், இராசேந்திரசோழன், பிரகாஷ், யாழன் ஆதி, ஸ்டாலின், நிக்கோலஸ், மூர்த்தி, சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர், யவனிகா ஸ்ரீராம், மாலதிமைத்ரி, சுகிர்தராணி, ப்ரேமாரேவதி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி, மாற்றுக்குரல்கள், NOW, அணங்கு, கிரணம் கலை இலக்கிய அமைப்பு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், காஞ்சனை திரைப்பட இயக்கம், கண்ணாடி பெண்கள் திரைப்பட இயக்கம், தலித் முரசு, உழைப்பவர் ஆயுதம் - திருவண்ணாமலை, இமைகள் திரைப்பட இயக்கம், அம்பேத்கர் படிப்புவட்டம் - மதுரை, தலித் மண்ணுரிமைக் கூட்டமைப்பு, பீமசேனா, சமூக சேவை இயக்கம் - புதுவை, கடவு – மதுரை ஆகிய அமைப்புகள் இக்கருத்தரங்கை ஒருங்கிணைத்து நடத்துகின்றன.

படிக்கவும்: ஆம்பிளைகள் தேவை - அடியாட்களாக,
அணுகவேண்டிய முகவரி: துப்பட்டா கண்காணிப்பாளர் எஸ். ராமகிருஷ்ணன்

Pin It