பாலஸ்தீனத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்ற இஸ்ரேல் மீது கடந்த வாரம் பாலஸ்தீன போராளிகள் நடத்திய ஏவுகனைத் தாக்குதலில் இஸ்ரேலிய வீரர்கள் இருவர் கொல்லப் பட்டதையடுத்து பழிவாங்கும் எதிர் நடவடிக்கையாக கடந்த 14ம் தேதி முதல் பாலஸ்தீன் மீது பயங்கர தாக்குதல்களை நடத்தி வருகிறது இஸ்ரேல்.

இதுவரை இஸ்ரேல் நடத்தி யுள்ள தாக்குதலில் 40க்கும் மேற் பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப் பட்டுள்ளனர். சுமார் 400 பேர் வரை படுகாயம் அடைந்துள்ள னர். தொடர்ந்து பாலஸ்தீனம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல்.

கடந்த புதன்கிழமை 14ம் தேதி முதல் 17ம் தேதிவரை 600 விமா னத் தாக்குதல்களை பாலஸ்தீன் மீது நடத்தியுள்ளது இஸ்ரேல். இந்தத் தாக்குதலை அது தொடர் ந்து கொண்டுதானிருக்கிறது.

இந்த நிலையில், “அவசியம் ஏற்பட்டால் பாலஸ்தீன காஸா மீதான தாக்குதலை இஸ்ரேலின் பாதுகாப்பு படைகள் விரிவுபடுத் தும். ஹமாஸ் மற்றும் ஏனைய போராளி அமைப்புகளின் தாக்கு தல்களுக்கு நாங்கள் பெரும் விலை கொடுத்துள்ளோம். இஸ் ரேலிய பாதுகாப்பு படைகள் அதன் குறிப்பிடத்தக்க தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்த தேவையான தயாரிப்புகளுடன் உள்ளது...” என தனது வாராந்திர கேபினட் சந்திப்பின்போது கூறியுள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாஹு.

அதோடு, இதுவரை காஸா பகுதியின் மீதும், போராளிகள் மற்றும் அவர்களின் நீண்ட தூர இலக்கை தாக்கும் ஏவுகணைகள், ஆயுதக் கிடங்குகள், ஏவுகணைத் தளங்கள் என சுமார் 1000 இலக் குகளை இஸ்ரேலிய பாதுகாப்பு படை தாக்கியுள்ளது என்றும் நெதன் யாஹு கூறியுள்ளார்.

கடந்த 17ம் தேதி இஸ்ரேலியப் படைகள், ஹமாஸ் இயக்கத்தின் தலைமையகத்தில் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. ஹமாஸ் போராளிகளும் எதிர் தாக்குதலில் இறங்க காஸாவின் வான் பரப்பில் எதிரெதிர் திசை யில் பறந்த ஏவுகணைகளால் அப் பிரதேசமே புகை மண்டலமாக காட்சியளித்தது. இங்கிருந்த 5 மாடிக் கட்டிடத்தின் மீது 5 அல் லது 6 முறை ஏவுகணைத் தாக்கு தல் நடத்தியது இஸ்ரேல்.

பாலஸ்தீன் மீதான இஸ்ரே லிய தாக்குதல் குறித்து விவாதிக்க கடந்த வெள்ளிக்கிழமை (16-11-2012) அன்று ஹமாஸ் பிரதமர் இஸ்மாயில் ஹனிபாவின் அலுவ லகத்திற்கு எகிப்திய பிரதமர் ஹிஷாம் கந்தில் வந்திருந்த சம யத்தில்தான் இந்த அடுக்குமாடிக் கட்டிடத்தை தாக்கியிருந்தது இஸ்ரேல். இக்கட்டிடத்தில்தான் எகிப்து மற்றும் ஹமாஸ் பிரதம ரின் சந்திப்பு நிகழ்ந்தது என்கி றது ஆர்.ஐ. ஏ. நோவஸ்டி செய்தி நிறுவனம்.

ஹமாஸின் கேபினட் தலை மையகத்தின் மீது 4 முறை இஸ் ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத் தியது. ஆயினும், இந்த கட்டிடம் உறுதியாக உள்ளதாக ஹமாஸ் அரசு தெரிவித்துள்ளது.

இந்த அரசுக் கட்டிடம் 2008-2009ல் காஸா மீதான இஸ்ரே லிய தாக்குதலுக்குப் பின்னர் கட் டப்பட்டது.

கடந்த சனிக்கிழமை வரை, ஹமாஸின் 120 ராக்கெட் லாஞ்சர் ஏவும் தளங்கள், 20 ஆயுத கிடங் குகள் உள்ளிட்ட 200 இலக்கு களை தாக்கியதாக இஸ்ரேலிய படை கூறியுள்ளது.

காஸா நகரத்திலுள்ள போலீஸ் தலைமையக கட்டிடத்தையும் இஸ்ரேலிய படைகள் குறி வைத்து தாக்கியுள்ளன. அப் போது போலீஸ் தலைமையகத் தில் ஒருவரும் இல்லை என்று செய்தி வெளியிட்டுள்ளது அல் ஜஸீரா தொலைக்காட்சி.

கடந்த 18ம் தேதி தொடர்ந்து காஸா மீதான இஸ்ரேலிய தாக் குதலின்போது உலகச் செய்தி நிறுவனங்களின் அலுவலகங்கள் இதில் ஆறு பத்திரிகையாளர்கள் கடுமையாக காயமடைந்துள்ள னர். இதேபோல் காஸாவின் வடக்குப் பகுதியில் நடந்த தாக் குதலில் பாலஸ்தீனியர் இருவர் கொல்லப்பட்டனர்.

ஷோவா பகுதியிலிருந்த அல் குத்ஸ் தொலைக்காட்சி அலுவல கம் இஸ்ரேலிய விமானத் தாக்கு தலில் சேதமடைந்தது.

இஸ்ரேலின் இந்த வக்கிரத் தாக்குதல் பாலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தைகளைக் கெடுத்து விடும் என அரபு லீக்கும், உலக நாட்டுத் தலைவர்களும் சந்திப்பு களை நிகழ்த்திய வண்ணம் உள்ளனர்.

இஸ்ரேலின் அநியாய ஆக்கிர மிப்பையும், அராஜகத் தாக்குதல் களையும் பார்த்துக் கொண்டு சர்வதேச சமுதாயம் அலட்சியம் காட்டி வருகிறது என்று இரான் அதிபர் அஹ்மதி நிஜாத் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள் ளார்.

இரான் தலைநகர் தெஹ்ரா னில் நடைபெற்ற இரான் - சிரியா தேசிய உரையாடலின் போது, “பாலஸ்தீன் மீதான சமீபத்திய இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைக்கு காரணம் சர்வ தேச சமுதாயத்தின் உரிய அழுத்த மும், எதிர் வினையும் இல்லாதது தான். குறிப்பாக மனித உரிமை அமைப் புகளின் எதிர்வினை இல் லாமல் போனதன் விளைவுதான்” என்று கூறியுள்ளார் அஹ்மதி நிஜாத்.

இந்தக் கூட்டத்தில் பேசிய இரான் நாட்டு வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் சலாஹி, “பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் போர் குற்றத்தில் ஈடு பட்டு வருகிறது...” என்று குற்றஞ் சாட்டும் அதே வேளை, அரபு லீக் மற்றும் அரபு நாட்டுத் தலை வர்கள் இப்பிரச்சினையில் போதிய கவனம் செலுத்த வேண் டும். அப்பாவி காஸா மக்களுக்கு உதவுகிற வகையில் நடைமுறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்...” எனக் குறிப்பிட்டிருக்கி றார்.

“ரஷ்யாவும், சர்வதேச நாடுக ளும் தங்கள் செல்வாக்கை பயன் படுத்தி பாலஸ்தீன பகுதியில் அமைதியை ஏற்படுத்த உதவி செய்வார்கள் என்றும் தற்போதைய காஸா மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துவார்கள் என்று பாலஸ்தீன மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்...” என்று ரஷ்யாவுக்கான பாலஸ்தீன அத்தாரிட்டியின் தூதரான ஃபயத் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

“ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்துடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம். ரஷ்யாவின் செல் வாக்கு வெற்றி மகுடத்தை சூட் டும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது...” என்றும் கூறியுள் ளார் முஸ்தாஃபா.

இதற்கிடையில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன், “ஆபத் தான இந்த போர் நகர்வுகளை உடனடியாக நிறுத்தி அமை தியை நிலைநாட்ட வேண்டும்...” என இரு தரப்பையும் கடந்த வெள்ளிக்கிழமை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆயினும் அராஜக இஸ்ரேல் பான்கி மூனின் வேண்டுகோளை நிராகரித்து விட்டு தாக்குதலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பான்கி மூன் பார்த்துக் கொண் டிருக்கிறார்.

- அபு

Pin It