224 இடங்களை வென்று தனிப்பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியமைக்கும் வாய்ப்பை சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவிற்கு வழங்கியிருக்கின்றனர் உத்திரப் பிரதேச முஸ்லிம்கள்.

காங்கிரஸின் வஞ்சகம், மாயாவதியின் புறக்கணிப்பு, பாஜக ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்கிற எச்சரிக்கையுணர்வு, மாயாவதியின் ஆட்சிக்கு முலாயம் சிங்தான் மாற்றுத் தீர்வு என்கிற உ.பி. முஸ்லிம்களின் மனநிலை சமாஜ்வாதி கட்சியின் அபரிதமான வெற்றியின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

பொதுவாக முஸ்லிம்கள் விஷயத்தில் அக்கறைகாட்டும் கட்சியாக சமாஜ்வாதி கட்சி தன்னை அடையாளப்படுத்தி வந்திருக்கிறது. இதனால் உ.பி. முஸ்லிம் அரசியல்வாதிகள் ‘மௌலானா' முலாயம் சிங் என்றே அவரை செல்லமாக அழைப்பதுண்டு.

முலாயம் சிங் யாதவ் உ.பி. யின் முதல்வராக இருந்தபோது உருது ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை பிறப்பித்ததும், பாபரி மஸ்ஜித் வளாகத்தில் கரசேவகர்கள் ‘சீலாதான்' நிகழ்ச்சி நடத்த தடை விதித்ததும் முஸ்லிம்களுக்கு ஆதரவு சக்தியாக முலாயம் சிங்கை அடையாளப்படுத்தியது.

இடையில் உ.பி.யின் முன்னாள் முதல்வராக இருந்த கல்யாண் சிங்குடன் முலாயம் சிங் உறவை வைத்ததையடுத்து முஸ்லிம் சமுதாயத்திடமிருந்து அவர் விலகிச் சென்றார். பாஜக வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என சமாஜ்வாதி கொள்கை முழக்கம் செய்திருந்தாலும், (பாஜகவிலிருந்து கல்யாண் சிங் நீக்கப்பட்ட பின்பும்) கல்யாண் சிங் பாபரி மஸ்ஜிதை இடித்தவர் என்ற முஸ்லிம்களின் உணர்வுகளைப் புறந்தள்ளி விட்டு அவரோடு 2009ம் ஆண்டு நட்பு கொண்டதை உ.பி. முஸ்லிம்கள் மறக்கத் தயாரில்லை. அதனால் அவரை விலக்கியே வைத்திருந்தனர் முஸ்லிம்கள்.

இதனால் 2009ல் நடந்த உத்தி ரப் பிரதேச மக்களவைத் தேர்த லின்போது முஸ்லிம்களின் வாக் குகளை முலாயம் சிங் இழந்தார். இதே காலகட்டத்தில், சமாஜ் வாதி கட்சியின் சீனியர் தலைவ ரும், சமாஜ்வாதி கட்சியில் முஸ் லிம்களின் முகம் என்று அழைக் கப்படுபவருமான ஆஸம்கான் முலாயம் சிங்கோடு கருத்து வேறுபாடு கொண்டு கட்சியை விட்டு வெளியேறினார்.

முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் உ.பி.யில் அரசியல் நடத்த முடியாது என்று உணர் ந்த முலாயம் சிங், கல்யாண் சிங்கோடு தான் கூட்டு சேர்ந்தது தவறு என்று விளங்கி பகிரங்க மாக முஸ்லிம்களிடத்தில் மன் னிப்பு கேட்டார்.

கட்சியை விட்டு வெளியேறிய ஆஸம் கானையும் மீண்டும் கட் சிக்குள் இழுக்க முலாயம் மேற் கொண்ட முயற்சி பலனளித்தது.

“உங்களைப் போன்ற கட்சி யின் ஆரம்ப கட்ட தலைவர்கள் தான் கட்சியை பலப்படுத்த வேண்டும்...''என்று செண்ட்டி மென்ட்டாக ஆஸம்கானுக்கு முலாயம் எழுதிய மடல் வேலை செய்தது.

மீண்டும் கட்சிக்குள் வந்த ஆஸம்கான், “கல்யாண் சிங்கு டனோ, பாஜகவுடனோ இனி ஒருபோதும் சமாஜ்வாதி கட்சி கூட்டு வைக்காது என உறுதிய ளிக்கிறேன். நான் இந்த கட்சி யில் இருக்கும் வரை அதற்கு இடம் கிடையாது...'' என முலா யம் சிங்கை அருகில் வைத்துக் கொண்டு சொன்னது முஸ்லிம்க ளிடத்தில் மீண்டும் அக்கட்சி மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது என்று மேற்கோள் காட்டி எழு துகின்றன உ.பி. பத்திரிகைகள்.

ஆஸம்கான் முயற்சியில் டெல்லி இமாம் அப்துல்லாஹ் புகாரி பகிரங்கமாக சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் மேடைகளில் தோன்றியதும் முஸ்லிம்களின் வாக்கு வங்கி முலாயம் சிங் பக் கம் திரும்புவதற்கு காரணமாகி விட்டது.

முலாயம் சிங்கின் முஸ்லிம் அக்கறை அவரது தேர்தல் பிரச் சாரங்களின்போது வெகுவா கவே வெளிப்பட்டது. காங்கிர ஸின் சல்மான் குர்ஷித் 9 சதவி கித இட ஒதுக்கீடு அளிப்போம் என்று உ.பி. முஸ்லிம்களுக்கு கொடுத்த வாக்குறுதியை ஏற் காத அம்மக்கள், “நாங்கள் ஆட் சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு மாநில அளவில் 18 சதவீத இட ஒதுக்கீடு தருவோம்...'' என்று முலாயம் அளித்த வாக்குறுதியை ஏற்றுக் கொண்டனர்.

இதன் விளைவுதான் முஸ்லிம் கள் 25 சதவீதத்திற்கு மேல் இருக் கும் தொகுதிகளில் 72 தொகுதிகளை சமாஜ்வாதி கட்சி கைபற்றியிருப்பது.

முலாயம் சிங் யாதவ் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டும் என அவருக்கு கடிதம் எழுதியுள்ள தாருல் உலூம் தேவ் பந்த்தின் பேச்சாள ரான அஷ்ரஃப் உஸ்மானி, “முஸ் லிம்களுக்கான இட ஒதுக்கீட் டிற்காக மத்திய அரசில் சட்டத் திருத்தம் கொண்டு வர அழுத்தம் கொடுப்பேன்... என முலாயம் சிங் வாக்களித்திருக்கிறார். அவரது அரசு உடனே முஸ்லிம்களுக் கான இட ஒதுக்கீட்டை அமுல் படுத்த வேண்டும். முஸ்லிம்கள் முலாயம் சிங் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால்தான் முஸ்லிம்கள் அவர் பின்னால் நிற் கின்றனர்...'' என தெரிவித்துள் ளார்.

கட்சியின் சீனியரான ஆஸம் கானோ, “முஸ்லிம்களின் பெருவா ரியான வாக்குகள் எங்களுக்கு விழுந்திருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. எங் களின் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றுவோம்...'' என முஸ்லிம்களை உற்சாகப்படுத்தியிருக் கிறார்.

எங்கள் வாக்கு வங்கியான தலித் மற்றும் கீழ் சாதி மக்க ளின் வாக்குகள் எங்களுக்கே விழுந்தி ருக்கின்றன எனக் கூறும் மாயா வதி, “முஸ்லிம்களின் வாக்குகள் சமாஜ்வாதி கட்சிக்கு போனதற்கு முக்கிய காரணம், உயர் சாதியி னர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களின் (ஓ.பி.சி.) வாக்குக ளைக் குறி வைத்து அவர்களைக் கவரும் வகையில் பாஜக செயல் பட்டதுதான். இதனால் பாஜக ஆட்சிக்கு வந்து விடுமோ என்ற அச்சவுணர்வு முஸ்லிம்கள் மத்தி யில் இருந்தது.

காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருந்ததால், உயர் சாதி மற்றும் ஓ.பி.சி. வாக்குகள் பாஜகவுக்கு விழும். அதே சமயம் உயர் சாதி யினரும், ஓ.பி.சி.யினரும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். இது பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்ற அச் சவுணர்வில் முஸ்லிம்கள் சமாஜ் வாதி கட்சிக்கு வாக்களித்து விட் டனர்...'' எனத் தெரிவித்துள் ளார்.

முஸ்லிம்கள்தான் உ.பி. தேர் தல் வெற்றியைத் தீர்மானிப்பார் கள் என்பது நிரூபிக்கப்பட்டுள் ளது.

உ.பி. தேர்தலில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட முடியாத சக்திகள் என்பதை மாயாவதி ஒப் புக் கொண்டிருப்பதால், தங்கள் கட்சியின் கூட்டத்தைக் கூட்டி தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்யவிருப்பதாகவும் கட்சியில் முஸ்லிம்கள் பங்கு கொள்ளும் வகையில் கட்சியின் செட்டப்பை மாற்ற இருப்பதாகவும் செய்தி யாளர்களிடம் அவர் பகிரங்கமா கவே தெரிவித்திருக்கிறார்.

இந்த தடவை உ.பி. முஸ்லிம்க ளின் வாக்குகள் பிரியாமல் ஒட்டு மொத்தமாக சமாஜ்வாதி கட் சிக்கு கிடைத்ததற்கு உ.பி.யின் தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த அரசியல் நகர்வுகளே காரணம்.

5 ஆண்டுகள் வரை அமைதி யாக இருந்துவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் உ.பி. முஸ் லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தனது அரசு தயாராக இருக்கிறது என்றும், மத்திய அரசு அதற்கான சட்டத் திருத் தத்தை கொண்டு வர வேண்டும் என்றும் மாயாவதி அதிரடியாக அறிவித்தார்.

அதனையடுத்து உ.பி. அரசிய லில் தனது இருப்பை உறுதி செய்ய இதர பிற்படுத்தப்பட் டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து 4.5 சதவீ தத்தை முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு வழங்கி மாயாவதியை விட முஸ்லிம்கள் மீது அக்கறை கொண்டவர்கள் நாங்கள்தான் என காங்கிரஸ் பில்ட்அப் கொடுக்க...

உடனடியாக எதிர்வினையை காட்டிய பாஜக, இட ஒதுக் கீட்டை எதிர்த்தது. இந்த அரசி யல் நகர்வுகளை கவனித்த உ.பி. முஸ்லிம்கள், இட ஒதுக்கீடு எதிர்ப்பின் மூலம் உயர்சாதி மற் றும் இதர பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளை பாஜக தனக்கு ஆதரவாக திருப்பிக் கொள்ளும் பட்சத்தில் அதன் வெற்றியை அது இலகுவாக உறுதிப்படுத்திக் கொள்ளும். இது முஸ்லிம்களுக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்ப டுத்தி விடும் என்று கணக்குப் போட்டு - முஸ்லிம்களின் வாக்குகள் பிரிந்து விடாமல் ஒரு முகப்படுத்தி சமாஜ்வாதி கட் சிக்கு விழுந்திருக்கிறது என்றே சமாஜ்வாதி கட்சியின் வெற்றி குறித்து உ.பி. அரசியல் கட்சிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

எப்படியிருந்தாலும், கணக்கு போட்டே காங்கிரஸ் கட்சியை உ.பி. முஸ்லிம்கள் வீழ்த்தியிருக்கி றார்கள் என்பது மட்டும் புரிகி றது. உ.பி. முஸ்லிம்களின் மன நிலைதான் ஏனைய மாநில முஸ்லிம்களிடத்திலும் பிரதிப லிக்கிறது என்பதை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது.

அதே நேரத்தில்... முஸ்லிம்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை முலாயம் சிங் தகர்த்து விடக் கூடாது. வெற்றியைத் தேடித் தந்த முஸ்லிம்களுக்கு அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டும். மௌலானா என்று உ.பி. முஸ்லிம்களால் செல் லமாக அழைக்கப்படுவதை முலா யம் விரும்பினால் முஸ்லிம்களின் நம்பிக்கையை அவர் காப்பாற்ற வேண்டும்.

சரிந்துபோன பாஜகவின் செல்வாக்கு!

உத்திரப் பிரதேச தேர்தலில் பாஜக வைவிட காங்கிரஸ் குறைந்த இடங்களைப் பெற்றிருப்பதால் பாஜகவுக்கு உத்திரப்பிரதேசத்தில் செல் வாக்கு கூடியிருப்பதாக பிரச்சாரம் செய்யப் படுகிறது. ஆனால் உண்மையில் பாஜகவுக்கு சரிவுதான் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக கைப்பற்றியிருந்த இடங்களில் நான்கை அது இந்தத் தேர்தலில் இழந்திருக்கி றது. 2007ல் அக்கட்சி 51 இடங்களைக் கைப்பற்றி யிருந்தது. நடந்து முடிந்த 2012 பொதுத் தேர்த லில் 47 இடங்களில்தான் அது வெற்றி பெற்றிருக் கிறது. அதே சமயம், காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் 22 இடங்களைக் கைப்பற்றி இருந்தது. இந்தத் தேர்தலில் அது 6 இடங்கள் கூடுதலாகப் பெற்றுள்ளது. பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் கோவா வைத் தவிர உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களிலும் இதே நிலைதான். அயோத்தி தொகுதியிலேயே பாஜக தோல்வியடைந்திருப் பது ராமர் கோவில் விவகாரத்தை இந்துக்கள் ஏற் றுக் கொள்ளவில்லை என்பதற்கான வெளிப்பாடு தான்.

பஞ்சாப் மாநிலத்தில் பாஜகவுக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த இடங்கள் 19. அதில் 7 இடங்களை 2012 தேர்தலில் இழந்திருக் கிறது. அதேபோல், உத்திரகாண்ட் மாநிலத்தில் கடந்தமுறை 35 இடங்களை வென்ற பாஜக இப் போது 31 இடங்களில்தான் ஜெயிக்க முடிந்திருக் கிறது.

மணிப்பூரைப் பொறுத்தவரை 2007 மற்றும் 2012 தேர்தல்களில் பாஜகவுக்கு முட்டைதான் கிடைத்தது. அதிலும் 2012 தேர்தலில் 60 தொகுதி களைக் கொண்ட மணிப்பூரில் 12 மணியளவில் பாஜக வேட்பாளர்கள் இருவர் வாக்கு எண்ணிக் கையில் முன்னிலையில் இருப்பதாகத் தொலைக் காட்சி செய்திகளில் தகவல் வெளியான நிலை யில் மணிப்பூரில் காலூன்றும் வாய்ப்பு கிடைத்து விட்டதாக பாஜக குதூகலித்திருந்தது. ஆனால் அவர்களது சந்தோஷம் அடுத்தடுத்த செய்திக ளின் மூலம் தவிடு பொடியானது. அந்த இருவ ரும் காங்கிரஸ் வேட்பாளர்களிடத்தில் தோல்வி யடைந்தனர்.

உத்திரப் பிரதேசத்தில் எப்படியாவது ஆட்சி யைக் கைப்பற்றி விட்டால் அடுத்து 2014ம் வருடம் மக்களவைத் தேர்தலில் நாடாளுமன்றத் தொகுதி களைக் கைப்பற்றி விடலாம் என்று பாஜக போட்ட கணக்கு புஸ்வானம் ஆகி விட்டது.

இந்தியாவிலேயே 403 சட்டமன்றத் தொகுதிக ளையும் 81 பாராளுமன்றத் தொகுதிகளையும் கொண்ட பெரிய மாநிலமாக உத்திரப் பிரதேசம் இருப்பதால் தேசியக் கட்சிகள் தங்கள் பார் வையை இங்கே அழுத்தமாக பதிய வைக்கின்றன.

காங்கிரசும், பாஜகவும் உத்திரப் பிரதேசத்தில் தோற்றதற்கும் - சமாஜ்வாதி கட்சி ஜெயித்ததற் குமான காரணத்தை இந்தியா டுடே இதழின் துணை ஆசிரியரான தீரஜ் நய்யார் கூறும்போது, “காங்கிரசும், பாஜகவும் கடந்த காலத்திய சாத னைகளைச் சொல்லி வாக்குகளைக் கேட்டன. ஆனால் சமாஜ்வாதி கட்சியோ எதிர்காலத் திட் டங்களை முன் வைத்து வாக்குகளைச் சேகரித் தது. இதுதான் வெற்றி தோல்விக்கு காரணம்...'' என்கிறார்.

அதோடு, இந்துத்துவா அரசியலின் மதிப்பி ழந்த வரும் அழிவுச் சின்னமாக இருப்பவருமான உமா பாரதியை மத்தியப் பிரதேசத்திலிருந்து அழைத்து வந்து உ.பி. தேர்தலில் களமிறக்கிய தும் பாஜகவுக்கு பலவீனத்தை ஏற்படுத்தியது என்றும் சொல்கிறார் நய்யார்.

மணிப்பூர் மக்கள் பாஜகவுக்கு தோல்வியையே பரிசாகக் கொடுத்து பழக்கப்பட்டு விட்டனர். உ.பி. மக்களோ பாஜகவின் செல்வாக்கை குறைக்க பழகி வருகிறார்கள். இது தேசிய ஒற்று மைக்கு நல்லதுதான்!

- ஃபைஸ்

Pin It