இடைக்கட்டம், முதன்மை முரண்பாடு, குறிப்பான திட்டம் இவைகளுக்கிடையில் நெருங்கிய இயங்கியல் உறவுகள் உண்டு. இவற்றை நடைமுறை செயலாக்கம் பெற வைப்பதுதான் செயலுத்தி ஆகும். செயலுத்தி என்பது குறிப்பானத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அமைப்பு வடிவங்களையும் போராட்ட வடிவங்களையும் தீர்மானிக்கிறது.

அமைப்பு வடிவங்கள்

அமைப்பு வடிவங்களாக ம.தி. அமைப்புகள், கூட்டமைப்புகள், முன்னணிகள், அய்க்கிய முன்னணி இருக்கும். இவை இயக்கத்தின் வளர்ச்சிக்கேற்ப மற்றும் பலத்திற்கேற்ப தீர்மானிக்கப்படும்.

போராட்ட வடிவங்கள்

போராட்ட வடிவங்களாக பரப்புரை, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகள் இருக்கும். இயக்கத்தின் வளர்ச்சியை ஒட்டியே போராட்ட வடிவங்கள் வகுக்கப்படும்.

அய்க்கிய முன்னணி

ஒரு புரட்சியின் கட்டத்தினூடே இடைக்கட்டங்கள் உருவாவதைப் போல் மூலவுத்தியிலும் மாற்றங்கள் உண்டு. மூலவுத்தியிலும் வர்க்க அணிச்சேர்க்கையில் மாற்றம் உண்டு. இதன் பொருள் மூலவுத்தி முழுமையாக மாறாது, ஆனால் மூலவுத்தியில் பகுதியளவு மாற்றம் இருக்கும்.

நமது தற்போதைய துணைக்கட்டத்தை பொருத்தவரை நவீன பார்ப்பனீய - இந்துத்துவா பாசிச முன்னணி கட்டப்பட வேண்டும். இதில் நவீன பார்ப்பனீய - இந்துத்துவா பாசிச கும்பலே முதன்மை கூறாக உள்ளதால் அதிகார வர்க்க முதலாளித்துவத்தின் இதர சக்திகள் இவர்களை ஆதரிக்கும் ஆளும் வர்க்கங்கள் இயல்பாகவே அய்க்கிய முன்னணிக்கு உள்ளாவார்கள்.

நமது சக்தியின் பலவீனம் காரணமாக நாம் இவற்றை பயன்படுத்த முடியாமல் போகும். இவர்களுக்கு இணையாக நாம் செயல்பட முடியாது. அதே சமயத்தில் இவர்களின் நவீன பார்ப்பனீய - இந்துத்துவா எதிர்ப்பை ஆதரிப்பதும் கீழ்மட்டத்தில் இவர்களின் அணிகளோடு பலமான செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும். இதுவே நமது அய்க்கிய முன்னணியின் செயல்உத்தியாக இருக்கும்.

அதே சமயத்தில் நவீன பார்ப்பனீய - இந்துத்துவா பாசிச எதிர்ப்பு அய்க்கிய முன்னணியின் அடிப்படை இயக்கு சக்திகளான தொழிலாளர் தலைமையில் விவசாயிகளை அடிப்படை கூட்டாகக் கொண்டு குட்டி முதலாளிகள், தேசிய முதலாளிகள், சிறப்பு பிரிவினரான பெண்கள், தலித்துகள், மதச்சிறுபான்மையினர், பழங்குடிகள், மீனவர்கள் ஆகியோரை அடிப்படையாகக் கொண்டே இருக்கும்.

இந்த அய்க்கிய முன்னணி குறிப்பானத் திட்டத்தை நிறைவேற்றும்.

- துரை.சிங்கவேல்

Pin It