ஐந்தறிவு படைத்த விலங்கினங்கள் தங்களது வசிப்பிடங்களைத் தெரிந்தோ தெரியாமலோ சுத்தமாக வைத்துக் கொள்கின்றன. பல்வேறு உயிரினங்கள் வாழும் காடுகள் சுத்தமான பிராணவாயு நிரம்பிய இடங்களாக இருக்கின்றன. ஆனால் மனிதன் கால் வைக்கும் இடங்கள் மட்டும் குப்பைகளின் கூடாரமாகி விட்டன.

எவரெஸ்ட் சிகரத்திற்குச் செல்லும் மலையேறிகள், அங்கிருந்து திரும்பி வரும் போது ஒவ்வொருவரும் 8 கிலோ குப்பைகளை அள்ளி வரவேண்டும் என்று அறிவித்து அதைச் செயல்படுத்தியும் வருகிறது நேபாள அரசு. மலைகளிலும் குப்பை சேருகிறதா என்று நினைத் தால், மாடுகளின் வயிற்றிலும் குப்பை இருப்பது தெரிய வருகிறது. குப்பைகளில் இரை தேடும் மாடுகள் பிளா°டிக் பைகளைத் தின்று விட்டு மூச்சு முட்டி இறந்து போகின்றன. மனிதர்களால் கொட்டப்படும் குப்பைகளைக் குவித்தால், உலகின் பெரிய மலைச்சிகரங்களையும் விஞ்சிவிடும்.

இன்றளவில் உலகிலேயே அமெரிக்கா தான் மிகப்பெரிய குப்பை நகரமாக இருக்கிறது. இங்கு சேரும் குப்பைகள், அந்த நகருக்கு அருகில் உள்ள மலைப் பள்ளத்தாக்குகளில் கொட்டப்படுகின்றன. இதனால் அதிக அளவு நச்சு வாயு உண்டாகி, பல்வேறு பிரச்சினை களுக்கு வழிவகுக்கும் என்று எட்வர்டு ஹமன்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் எச்சரித்து வருகிறார்.

பூமியில் மட்டும் தான் குப்பைக் குவியல் உள்ளது என்று நினைக்கக் கூடாது. விண்வெளியிலும் குப்பைகள் நிரம்பத் தொடங்கிவிட்டன. மனிதனால் விண் வெளிக்கு அனுப்பப்பட்டு, அங்குச் செயலிழந்த செயற் கைக் கோள்கள் அனைத்தும் குப்பைகளாக உள்ளன. ராக்கெட்டை செலுத்தும் எரிபொருள் கலன்கள், செயற்கைக் கோள்களில் இருந்து வெடித்துச் சிதறிய துகள்கள், உதிரிபாகங்கள், பட்டைகள், திருகாணிகள், நட்டு கள், போல்ட்டுகள் எனப் பலவகைப் பொருள்கள் விண் வெளியில் குப்பைகளாகப் பயணம் செய்து கொண்டி ருக்கின்றன.

விண்வெளியில் மட்டும் சுமார் 17 ஆயிரம் கழிவுப் பொருள்கள் இருப்பதாக ஹுஸ்டன் விண்வெளிமைய விஞ்ஞானி நிக்கோலஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா 45 பங்கு குப்பையையும், ரஷ்யா 48 பங்கு குப்பையையும் விண்வெளியில் விட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கண்ணுக்குத் தெரியாத விண்வெளிக் குப்பைகளைப் பற்றி எந்தத் தக வலும் இல்லை. ஆக, பிரபஞ்சம் குப்பைகளின் சங்கம மாகி வருகிறது.

மனிதன் பயன்படுத்திக் கழிவாகும் பல்வேறு பொருள்களைப் புத்திசாலித்தனமாக மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முடியும், உதாரணமாகக் காய்கறி, பழக்கழிவுகளை மக்க வைத்து அதில் இருந்து கிடைக்கும் கார்பன்-டை-ஆக்சைடு மூலம் மீத்தேன் தயாரித்து, ஜெனரேட்டரை இயக்கலாம். மேலும் காய்கறிக் கழிவுகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரிக்கலாம். மற்றவகை கழிவுப் பொருள்களின் குப்பைகளைக் கொண்டு பிளாஸ்டிக் சாலை அமைக்கும் திட்டமும் உருவாக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் உருவாகும் குப்பைகளை அழிக்க இப்படிப் புதிய யோசனைகள் உருவாகிக் கொண்டு தான் இருக்கின்றன. அதற்குள் உலகம் குப்பைகளால் நிரம்பி வழியத் தொடங்கிவிடும் என்பது தான் பெரிய பிரச்சினை. இதற்கான ஆய்வுகளை விஞ்ஞானிகள் நடத்தி வருகின்றனர்.

- (“தினத்தந்தி”, 21-3-2014)

Pin It