2015, திசம்பர் 1 முதல் 6 வரை கொட்டிய மழை இதுவரை நாம் எவரும் கண்டிராத பெருமழை யாகும். இந்த ஆறு நாள்களில் பெய்த மழை அளவு சுமார் 100 செ.மீ. இருக்கும். எங்குப் பார்த்தாலும் வெள்ளம்; கடலில் தெரியும் தீவுகள் போல் பல மாடி வீடுகள் மட்டும் தெரிந்தன. தெருக்களில் வெள்ளம் நிற்கவில்லை; காவிரி ஆறுபோல் பாய்ந்து ஓடியது. பாம்புகள் நீரில் அடித்து வரப்பட்டன; அவை வீடுகளில் புகுந்தன.

பழைய பெருங்களத்தூரில் அனைத்து வீடுகளிலும் கீழ்த்தளத்தில், பள்ளத்திற்கு ஏற்ப, 3 அடிமுதல் 10 அடிவரை நீர் தேங்கியது. கீழ்த்தளத்தில் இருந்த அனைத்துப் பொருட்களும் நாசமாகிவிட்டன. உணவுப் பொருட்கள், மின்மோட்டார்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள், கட்டில், மெத்தை, புத்தகங்கள் போன்ற பல பொருட்களும் முற்றிலும் சேதமடைந்தன. கீழ்த்தளத்தில் வெள்ளம் புகுந்ததால் பலர் வீட்டைவிட்டே சென்றுவிட்டனர். சிலர் மாடி வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் தங்கினர்.

இவ்வளவு சேதத்திற்கும் காரணம் நம்மை ஆட்சி செய்த-செய்கிற திராவிடக் கட்சிகளே காரணம். நாட் டைச் சுரண்ட அய்யா விதைபோட்டார். அம்மா அறு வடை செய்தார் என்ற கூத்துப்போல் மக்கள் ஏமாந்த னர். வெள்ளப் பகுதியில் உதவிகள் செய்தவை தொண்டு நிறுவனங்களும் இசுலாமிய இளைஞர் அமைப்பினரும் பொது மக்களும் சில கல்லூரி மாணவ-மாணவிகளும் நன்றியுடன் பாராட்டப்பட வேண்டியவர்கள்,

உணவு, பால், தண்ணீர், போர்வை, ரொட்டித் துண்டுகள், மருத்துவச் சேவைகள், மீட்புப் பணிகள் போன்றவற்றைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கும் தொண்டை இவர்கள் செய்தனர். இந்த நிலையை பெரும்பாலான அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் கள ஆய்வு செய்யவில்லை. காலம் கடந்து வந்த கட்சிக்காரர்களையும் அரசு அதிகாரிகளையும் பொதுமக்களே பலர் திருப்பி அனுப்பிவிட்டனர். இதைச் செய்தேன், அதைச் செய்தேன் என்று வாய்கூசாமல் அவர்கள் பொய் சொல்லி நாடகமாடுகின்றனர்.

இதுபோன்ற பேரிடர்கள் நேராமல் இருக்க, குறைந் தது வரும் 100 ஆண்டுகளுக்கு முன்கூட்டித் திட்டங்கள் தீட்டி, திருடாமல் அரசு செயல்பட்டால் இனிவரும் காலங்கள் நல்லபடியாக இருக்கும். இதுபோன்ற இப் போதைய வெள்ளப்பெருக்கிற்குக் காரணம் அனைத்து ஏரிகள், நீர்நிலைகள், நீர்வழி வாய்க்கால்கள், குறிப்பாக நம்மை ஆண்ட கட்சிக்காரர்கள் ஆக்கிரமித்து, அவர வர்கள் ஆட்சிக் காலத்தில் மனை போட்டு விற்றனர்.

தடுக்க வந்த பொதுமக்களை இன்றுவரை காவல்துறை யினரும் அரசு அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் மக்களின் பக்கமில்லை. ஆளும் கட்சிக்குக் கூட்டுக்கொள்ளையடித்துக் கெடுத்துவிட்டனர். உலங்கு வானூர்தியில் நானும் பார்த்தேன் என்பதும், கட்சித் தொண்டர்கள் அவரவர் கட்சிக்காரர்களை வைத்து உதவி செய்வது போல் படமெடுத்துக் கொண்டதும் நாங்கள் முன் எச்சரிக்கையாகக் காவல்துறையினர் மூலம் எச்சரித்தும் போகாமல் இருந்ததால்தான் இவ்வளவு உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்பட்டது என்பதும், இவ்வளவு பாதிப்பை மழையால் ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை என்பதும் நாடகமேயாகும்.

வெளிநாட்டில் வாழும் தமிழ் நெஞ்சங்கள் ரூ.4000 கோடிக்குமேல் உதவித்தொகை அனுப்பி உள்ளதாக வும், பாதிப்பு இல்லாத பகுதியிலிருந்து மனம்நிறைந்த உதவிகளைச் செய்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

மத்திய அரசும் உதவிகள் செய்வதாக உறுதி கூறு கின்றது. ஓட்டுக்காக அனைத்து உதவிகளும் நான் மட்டுமே செய்தேன் என்று விளம்பரம் செய்து கொள் ளும் கூத்தாடிகளும் உள்ளனர். தமிழ்நாடு முழுக்கப் பழையபடி அனைத்து நீர்நிலைகள் வரத்து வழி வாய்க்கால்கள், ஏரிகள், குட்டைகள் அனைத்தும் 1960 இல் இருந்தபடி ஆக்கிரமிப்பை அகற்றிச் சரிசெய்தால் தமிழ்நாடு வளம்பெற வாய்ப்பு உள்ளது. இனியும் இதைச் செய்யாத அரசுகள் அனைத்தும் மக்கள் விரோத அரசுகளே ஆகும்.

தாம்பரத்தில் பழைய பெருங்களத்தூரில் முழுக்க நான்கு அடிக்கு குறைவில்லாமல் அதிக அளவு 10 அடி வரை நீர் தேங்கியது. இந்த நீர்த்தேக்கத்தால் அனைத்து எலிகளும், நாய்களும், நீரில் சிக்கிய ஆடு, மாடுகளும் அடித்துச் செல்லப்பட்டன.

கழிவுநீர் வாய்க்கால்கள் மேல் உள்ள சிமெண்ட் பலகைகளை அகற்றிவிட்டு அகலப்படுத்தாமல் செலவு காட்டும் வகையில் தரமற்ற கால்வாய்களை மழைக் குப் பிறகு வெட்டுகின்றனர், மழைக்குப் பிறகு வெட்டின கால்வாய்கள் அனைத்தும் சோதனை செய்தால் ஒப்பந்தம் செய்து வேலை செய்தவர்களைப் பல நாள் கைதியாகச் சிறையில் அடைக்கலாம். மனசாட்சியே இல்லாமல், மக்கள் வரிப்பணத்தைச் செலவு செய் கின்றனர். பாதாள சாக்கடை கட்ட ஒவ்வொரு வீட்டுக் காரரிடமும் ரூ.16000 முதல் 20000 வரை பணம் நகராட்சியில் மன்ற உறுப்பினர்கள் வசூலித்ததாகப் பகுதிவாழ் மக்கள் கூறுகின்றனர். இன்னமும் பாதாள சாக்கடை திறக்கப்படவில்லை.

சில மாடி வீட்டுக்காரர்கள் இப்பொழுதும் பொறுப் பில்லாமல் நடந்துகொள்கின்றனர். அனைத்துக் குப்பை மற்றும் கழிவுகளைக் கழிவுநீர் கால்வாயில் போடுகின்றனர். மீதமான உணவுகளையும், வேண்டாத பொருட்களையும் கால்வாயில் போடுவதால், அடைப்பு ஏற்பட்டு நீர் தேங்குகின்றது. குப்பை மற்றும் கழிவுகளைச் சேர்த்துக் குப்பைத் தொட்டியில் போட்டால், அனைவரும் நலம் பெறலாம்.

 

Pin It