சாணம் மெழுகிய சமதளத்தில்

சின்னதாய் நான்கு மண்சுவர்கள

நின்றாலும் இடிக்கும் காலை

நீட்டினாலும் இடிக்கும்

பனைஓலைப் பந்தலென

குடிசை!

எங்கள் அடுப்பருகில்

உறங்கும் பூனை

அவ்வப்போது

அதற்குள்ளேயும் உறங்கும்!

ஆழாக்கு நொய்யிருந்தால்

அரைவயிற்றுக் கஞ்சியாகும்

குப்பைக் கீரைகள்

குழம்புக்குத் துணையாகும்

வேகவைத்த பருப்புக்குழம்பு

வெகுநாளுக்கொருமுறைதான்

எவர் வீட்டிலாவது

எஞ்சிய குழம்பு கிடைக்கையில்

வீணாக்க விரும்பாமல்

கெட்டிக்கூழுக்குத் தொட்டுக்கொள்ளுவோம்

காய்கறிகள் நறுக்குவதற்காக

வாங்கிவந்த

எரவானத்தில் சொருகிவைத்த கத்திக்கு

வேலையே இல்லை

எங்கள் குடிசைக்குள்!

Pin It