பெரியாரின் குடியிருப்பு இடம் அதுதான்!

பெரியாருக்கு எல்லாம் செய்தோர் இவ்வூரினர்தான்!

தந்தை பெரியார் ஈரோட்டில் பிறந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அவர் 94 ஆண்டுகள் 98 நாள்கள் வாழ்ந்தார். அந்த நெடிய காலத்தில் 10.09.1950 முதல் 23 ஆண்டுகள் 3 மாதங்கள் திருச்சிராப்பள்ளியில் பெரியார் மாளிகையில் தான் குடியிருந்தார். ஓர் ஆண்டில் 365 நாள்களில், 100 நாள்களாவது திருச்சியில் தங்கியிருந்தார். அந்த 100 நாள்களிலும் 1962 முதல் 1973 நவம்பர் வரை அன்றாடம் அவரை மாலை 4 மணிக்குச் சந்தித்து இரவு 7 மணிவரை அவருடன் கலந்துரையாடியவர்கள், வே. ஆனைமுத்து, நோபிள் கோவிந்தராசலு இருவரும் ஆவர்.

தொடக்கக் காலத்தில் அவருடைய நம்பிக்கைக்கு உரியவர்களாக விளங்கிய நீதிக்கட்சிக்காரர்கள் வீட்டில், 1950க்குமுன், திருச்சியில் தங்கினார். கலியபெருமாள் நாயுடு, கி.ஆ.பெ. விசுவநாதம், தி.பொ. வேதாசலம் இவர்களின் இருப்பிடங்களிலேயே அப்படித் தங்கினார். அவர் மனம் அறிந்து இயக்கப் பணிகளைச் செய்கிறவர்களாக திருச்சி பிரான்சிஸ், கு. கோவிந்தராசலு, வானமாமலை, சாம்பசிவம், உறையூர் பெரிய சாமிப்பிள்ளை, கே.வி.எம். இலட்சுமணய்யா, ச.ம.சி. பரமசிவம், டி.வி. கைலாசம் பிள்ளை விளங்கினர்.

பிற்காலத்தில் ச. சோமு, டி.டி. வீரப்பா, வி.ஆ. பழநி, கூத்தப்பார் தோழர்கள், சோமரசம்பேட்டை தோழர்கள், திருவரங்கம் துரைசாமி முதலான தோழர்கள் தி.க.வின் முன்னோடிகளாக விளங்கினர்.

02.12.1950, 03.12.1950இல் வரலாற்றுச் சிறப்பு மிக்க வகுப்புரிமை மாநாடுகள் பெரியார் மாளிகைத் திடலில் பந்தலிட்டு இரண்டு நாள்கள் நடத்தப்பட்டன.

நீதிக்கட்சியின் பெயர் “திராவிடர் கழகம்” என மாற்றப்பட்ட 1944க்குப் பிறகு, முதல் தடவையாக, “திராவிடர் கழக மாநாடு” என்ற பெயரில் திருச்சி புத்தூர் மைதானத்தில் தான், 30,31-09.1945இல் இரு நாள்களிலும் நடைபெற்றது. நான் கண்டுகளித்த முதலாவது தி.க. மாநாடு அதுதான்.

பெரியார் 1957இல் நடத்திய அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம் பற்றி, அவர் எஸ். பிரான்சிஸ், வே.ஆனைமுத்து, ச.சோமு முதலியவர்கள் மூலம் வழக்குரைஞர் பலரையும் அழைத்துவரச் சொல்லி, அவர்களிடம் அவர் கலந்துபேசி - நல்ல முடிவெடுத்த இடம் திருச்சி பெரியார் மாளிகைதான். அது என்ன முடிவு? “அரசமைப்புச் சட்டத்தை எரித்தால், என்ன தண்டனை? என்று எந்தக் குற்றவியல் சட்டத்திலும் இல்லை” என்பதை முன்கூட்டியே சொன்னவர் பெரியார். அவர் சொன்னதுபோலவே, தஞ்சையில் அவர் 03.11.1957இல் தீர்மானம் நிறைவேற்றினார். காமராசர் அரசு அப்புறம்தான் விழித்துக்கொண்டு, 11.11.1957இல் ஒரு சட்டம் செய்தது. என்ன சட்டம்? “3 ஆண்டு சிறைத்தண்டனை - அத்துடன் 3000 ரூபா தண்டம்” என்பதே அச்சட்டம். அவ்வளவும் தெரிந்த பிறகுதான், 15 நாள் கழித்துத் தான், 26.11.1957இல் 10,000 பேர் அரசமைப்புச் சட்டத்தைத் தெருவில் எரித்தனர்; கடுந்தண்டனை ஏற்றனர். அப்படி அதிகத் தண்டனை வழங்கியவர்கள் திருச்சிராப்பள்ளி, அரியலூர் நீதிபதிகள்தான்.

“பெரியார் பார்ப்பானை வெட்டச் சொன்னார்” என்று குற்றஞ்சாட்டி, அவரைத் தண்டித்தவரும் திருச்சி ராப்பள்ளி நீதிபதிதான். அதுகேட்டு திருச்சிராப்பள்ளித் தமிழ் மக்கள் அன்று கொதித்து எழுந்தனர். என் போன்று 700 பேர் திருச்சி நடுவண் சிறையில் 01.12.1957இல் அடைக்கப்பட்டிருந்தோம்.

திருச்சி மத்தியச் சிறைவளாகத்திலேயே இராமசாமி, வெள்ளைச்சாமி என்னும் இரு மாவீரர்கள் மாண்டனர். அது ஒரு வீர வரலாறு.

அந்தப் போராட்டத்தில் தண்டனை பெற்ற 3000 பேர்களுள், இன்று 1000 பேர் நலிந்த உடலுடன் வாழ்கின்றனர். இன்றும் அவர்கள் பெரியார் பெரும் படையில் உள்ளனர்.

அந்தத் திருச்சியில்தான், தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் “சுயமரியாதைக் குடும்பங்கள் விழா” என நடத்தி, பெரியாரை அழைத்து, அவருக்கு விருந்து அளிப்பதை “நகர மக்கள் குழு” என்கிற அமைப்பின் பேரால் சே.மு.அ. பாலசுப்பிர மணியம், கு.ம. சுப்பிரமணியம், நோபிள் கு. கோவிந்த ராசலு, டி.டி. வீரப்பா, வே. ஆனைமுத்து, து.மா. பெரியசாமி, பெரியார் மாளிகை ச. சோமு, உறையூர் கோ. முத்துகிருஷ்ணன், து. தயாளசாமி, கோ. கலிய ராசலு, ந. கணபதி ஆகியவர்களைக் கொண்ட குழுவினர் 1962 முதல் திருச்சியில் தொடர்ந்து நடத்தினோம். தந்தை, தாய், குழந்தை, பெயரர் என 200 குடும்பத்தினர் கூடிக் குலவி, குய், ஆய், ஊய் எனக் கூவிக்கொண்டு, விழா எடுத்து பெரியாரோடு புலால் விருந்து - காய்கறி விருந்து உண்டு, பெரியாரின் பேருரை கேட்டு ஒருநாள் முழுதும் மகிழ்வர்.

அந்த “நகர மக்கள் குழு”வின் சார்பில்தான், திருச்சியில், மய்யப் பேருந்து நிலையம் இப்போது இருக்கிற இடத்தில், மாபெரும் பந்தலிட்டு, 1967இல் முதலமைச்சரான அறிஞர் சி.என். அண்ணாதுரை முற்பகலில் பெரியார் பிறந்தநாள் பேருரையாற்றவும்; பிற்பகலில் பெருந்தலைவர் கு. காமராசர் அப்பந் தலுக்கு வெளியே தந்தை பெரியாரின் சிலையைத் திறந்து வைக்கவும் ஆன வரலாற்றுச் சிறப்புமிக்க விழாக்கள் 17.09.1967இல் நடத்தப்பட்டன.

தமிழ்நாட்டு மக்களால், பெரியாருக்குச் சிலை வைக்கப்பட்டது, முதன்முதலாகத் திருச்சியில் தான் - அதுவும் பெரியாரின் விருப்பத்துக்கு மாறாக!

அதேபோல், இரூர் தமிழ்ப்பெருமக்கள் 1972இல் நிறுவியிருந்த “பெரியார் பிறந்த நாள் வளைவை” நேரில் கண்ட திருச்சித் தோழர்கள் உடனேயே, திருச்சி மன்னார்புரத்தில் பெரியார் தோட்டத்துக்குப் போகிற சாலையின் குறுக்கே “பெரியார் 94ஆவது பிறந்த நாள் வளைவை” நிறுவி, 17.09.1972இல் தந்தை பெரியார், அமைச்சர் அன்பில் பெ.தர்மலிங்கம், க. இராசாராம் ஆகியோரைக் கொண்டு திறந்து வைத்தோம்.

இந்த மாபெரும் சாதனைகளை விஞ்சிய செயல் ஒன்று உண்டு. அது என்ன?

பெரியாரால் 07.03.1970இல் திருச்சி தேவர்மன்றத்தில் தொடங்கி வைக்கப்பட்ட “திருச்சி சிந்தனை யாளர் கழகம்”, தந்தை பெரியாரின் முழு ஒப்புதலைப் பெற்று, அவருடைய எழுத்துகளையும் சொற்பொழிவு களையும் பெரிய அளவில் திரட்டி - 3200 டிம்மி அளவுத்தாள்களில் எடுத்தெழுதி, நூற்றுக்கணக்கான பக்கங்களில் பெரியாரின் கையொப்பம் பெற்று, 400 அச்சிட்ட - ஆக்டோவோ பக்கங்களைக் கடலூரில் அவரிடமே காட்டி அவருடைய ஏற்பைப் பெற்று, 01.07.1974இல், இற்றைக்கு 37 ஆண்டுகளுக்கு முன், 2100 பக்கங்களை மூன்று பெருந்தொகுதிகளாக, வெளியிட்டு, பெரியாரை உலக மக்கள் ப்hர்வையில் தூக்கிக்காட்டி நிலைக்க வைத்த மிகப் பெரிய பணியைச் செய்தது திருச்சி சிந்தனையாளர் கழகம்.

அதற்குக் கருவியாகப் பயன்பட்டவன் வே.ஆனைமுத்து ஆகிய நான். துணைக்கருவிகளாகப் பயன்பட்டவர்கள் ந.கணபதி, வே.காசிநாதன், கு.ம.சுப்பிரமணியன், நோபிள் கு.கோவிந்தராசலு, இரா.கலியபெருமாள், கோ.முத்துகிருஷ்ணன் ஆகியோராவர்.

தந்தை பெரியார் மறைவுக்குப்பின், இப்படிப்பட்ட நாம் எல்லோரும் திராவிடர்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டோம். நாம் நீரிலிருந்து வெளியே தூக்கியெறியப்பட்ட மீன்களும் அல்ல; நீருக்குள் தூக்கிப்போடப் பட்ட எலிகளுமல்ல. நாம் செத்தொழிந்து போகவில்லை.

நாம் எதையும் எதிர்கொள்ளும் சிங்கக்குட்டிகள். அச்சமின்றி எங்கும் செல்லும் அஞ்சாநெஞ்சினர். எப்படி?

தந்தை பெரியார் 30.12.1944இல் கான்பூரில், “அனைத்திந்திய இந்து பிற்படுத்தப்பட்டோர் லீக்” என் கிற அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று உடன் இருந்தவர்கள் சி.என். அண்ணா துரையும், மணியம்மையும் ஆவர். 1951 வரையில் பெரியாரே அதன் தலைவர். அந்த அமைப்பை 1951இல் சிதைத்தவர் பிரதமர் நேரு பார்ப்பனர்.

அந்தப் பார்ப்பன நேரு, 1961 மே மாதம் இந்திய அமைச்சரவையைக் கூட்டி, “பிற்படுத்தப்பட்டோர் (1955) சாதிப்பட்டியலை, இந்திய அரசு ஏற்காது” என்று முடிவு செய்து அறிவித்தார்.

1961 ஆகஸ்டில் அவரே, மாகாண முதல் அமைச்சர் களுக்கு, “பிற்படுத்தப்பட்டோருக்குச் சாதி அடிப்படை யில் இடஒதுக்கீடு தராதீர்கள்” என்று, கமுக்கமாக மடல்கள் எழுதினார். அவ்வளவு நல்லவர் அவர்!

இவற்றுக்கான எழுத்துச் சான்றுகள் உள்ளன.

1944 ஆம் ஆண்டைய பெரியாரைச் சரியாக அடியொற்றி, நாம்-மா.பெ.பொ.க.வினரும் அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையினரும் - பீகார் பிற்படுத்தப் பட்டோர் தலைவர் இராம் அவதேஷ்சிங் குழுவினரை இணைத்துக் கொண்டு, 08.05.1978 முதல் தில்லியில் தீவிரமாக முயன்றும், 17.09.1978 முதல் 17.10.1978 வரையில் பீகாரில் பரப்புரை செய்தும், 19.10.1978 முதல் 31.10.1978 முடிய பீகாரில் பாட்னாவில் பேராடியும், பீகார் சிறைக்கு 10,000 பேர்களை அனுப் பியும்; 15.11.1979 முதல் 01.12.1979 முடிய புதுதில்லி யில் நாடாளுமன்றத் தெருவில் மறியல் செய்து - 1750 ஆடவரையும் 50 தாய்மார்களையும் திஹார் சிறைக்கு அனுப்பியும்;

1.     10.11.1978இல் பீகார் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தோம்;

2.     01.01.1979இல் மண்டல்குழு அமைக்கப்பட வழி செய்தோம்;

3.     19.08.1979இல் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோ ருக்குத் தரப்பட்ட 31 விழுக்காடு இடஒதுக்கீட்டை 60 விழுக்காடாக உயர்த்தக் கோரிக்கைவைத்து, 01.02.1980இல் 50 விழுக்காடாக உயர்த்திப் பெற்றோம்.

4.     29.04.1981, 03.05.1982இல் புதுதில்லியில் எம்பிக்கள் கூட்டம் நடத்தியும்; 25.01.1982இலும், 04.05.1982இலும் உள்துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங்கிடம் அழுத்தம் தந்தும் - 1982 மே மாதம் மண்டல் குழு பரிந்துரையை நாடாளு மன்றத்தில் வெளியிட நாம் மட்டுமே காரணம் ஆனோம்.

ஆனாலும் என்ன?

1.     மேதை அம்பேத்கர் பட்டியல் வகுப்பினருக்கு 11.08.1943இலேயே மய்ய அரசு வேலைகளில் பெற்றுத்தந்த இடஒதுக்கீடு வந்தும், நிலை ஐ, நிலை ஐஐ பதவிகளில் இன்னும் உரிய விகிதம் தரப்பட வில்லை. நிரப்பப்பட வேண்டிய தேங்கிப்போன இடங்கள் (க்ஷயஉமடடிப) பல்லாயிரக்கணக்கில் நிரப்பப் படவில்லை. இவர்களுக்கு இது வந்துசேர நாம் எல்லோரும் போராட வேண்டும்.

2.     55 விழுக்காடு பேராக உள்ள இந்து, இஸ்லாம், கிறித்துவ, சீக்கிய, பவுத்த, சமண பிற்படுத்தப்பட் டோருக்கு 1994இல்தான் மத்திய அரசு வேலையில் மட்டும் தரப்பட்ட 27 விழுக்காடு ஒதுக்கீடு என்பது, பாதிப்பங்கு கூட இல்லை. இது 55 விழுக் காடாக ஆக்கப்பட அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். இதற்கு நாம் போராட வேண்டும்.

3.     55 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு, ஐஐகூ, ஐஐளுஉ, ஐஐஆ முதலான இந்திய உயர் கல்வியில், 2007இல் தரப்பட்டிருக்க வேண்டிய 27 விழுக்காடு கல்வி இடஒதுக்கீடு இன்றுவரை தரப்படவில்லை. இது மக்கள் நாயக உரிமைக்கு எதிரானது; 15 விழுக் காடு உள்ள மேல்சாதி மக்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டுவது; இதைத் தகர்த்தே ஆக வேண்டும்.

4.     2012-2013 முதுநிலை மருத்துவப் படிப்புக்கு, அனைத்திந்திய அளவிலான பொதுநுழைவுத் தேர்வு உண்டு என்று, மருத்துவ உயர்மட்டக் குழு இப்போது முடிவெடுத்துவிட்டது. இந்த ஆணையை எதிர்த்து நாம் போராட வேண்டும்.

இந்தியா முழுவதிலும் சுற்றிவந்து பரப்புரை செய்ய வேண்டும்; ஆங்காங்கே போராட வேண்டும்.

இதற்கு வழிகண்டிட மா.பெ.பொ.க. பொறுப்பாளர் களே! மாணவச் செயல்வீரர்களே! திருச்சி மாநாட்டுக்குத் திரண்டு வாருங்கள்.

திருச்சி மாநாடுகள் - ஏற்பாட்டாளர்களின் முனைப்பு!

இளைஞர் - மாணவர்களின் எழுச்சி!

திருச்சியில் ஒருநாள் மாநாட்டை நடத்திட 22.5.2011 அன்று, அம்பத்தூரில் முடிவெடுத்தோம்.

7.8.2011, ஞாயிறு அன்றுதான் மாநாடு என்றாலும், 30.06.2011 முதலே திருச்சி மாவட்ட மா.பெ.பொ.க. செயலாளர் இரா. கலியபெருமாள், புரட்சிக்கவிஞர் கலை இலக்கிய மன்றச் செயலாளர் ந. கருணாகரன், திருச்சி பெரியார் தொண்டர்

ச. இராதாகிருட்டிணன், மாணவர்-இளைஞர் அணியினரான துரை. சித்தார்த்தன், இரா. நாகராசன், க. சாக்ரடீஸ், க. இராவணன், மகளிர் அணியினரான தனலட்சுமி-கலியபெருமாள், ஜெயக்கொடி-கருணாகரன், மருத்துவர் அ. செம்மலர், திருச்சி சிந்தனையாளர் கழகச் செயல்வீரர்கள் அரங்க. தமிழ்மணி, மு. நரசிம்மன்,

மு. வெங்கடேசன், முத்துச்செழியன் மற்றும் பெரியார் பாசறைத் தோழமை அமைப்பினர் ஆகியோர் அடிக்கடி கூடிக் கலந்து பேசிப் பேரார்வத்துடன் செயல்படுகின்றனர்.

அவரவர் நிதி திரட்டுவதிலும் விளம்பரம் செய்வதிலும் ஆர்வமாக உள்ளனர். ஓய்வின்றிச் செயல்படுகின்றனர்.

மாநாட்டுக்கு வேண்டப்படும் விளம்பரம், உணவு வசதி, குடிநீர் வசதி இவற்றில் எந்தக் குறையும் வராமல் பார்த்துக் கொள்வதில் கவலையோடு பணியாற்றுகின்றனர்.

அருள்கூர்ந்து மற்ற மாவட்டத்தின் செயலாளர்களும் பொறுப்பாளர்களும் தங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குத் தொகையைத் திரட்டித்தந்து உதவுங்கள். அருள்கூர்ந்து ஆடவர், மகளிர், மாணவர் என மாவட்டந்தோறும் 50 பேர், 100 பேர் எனப் போட்டிப் போட்டுக் கொண்டு வாருங்கள்.

இன்றையத் தமிழக அரசின் - இந்திய அரசின் செயல்பாடுகளைப் பற்றி நம் கட்சியின் தெளிவான நிலைபாடு என்ன? கிளர்ச்சிப் பாதை என்ன? கிளர்ச்சி ஏற்பாடுகளை எப்படிச் செய்வது என்பது பற்றி நறுக்குத் தெறித்தாற்போல் ஒவ்வொரு அணிச் செயலாளரும், மா.பெ.பொ.க. மாவட்டச் செயலாளரும், மாணவர்-இளைஞர் தோழர்களும் மனந்திறந்து மாநாட்டில் பேசுங்கள். தீர்மானங்கள் வடிவில் எழுதிக் கொண்டு வாருங்கள்.

பேருந்து, சீருந்து, மகிழுந்துகள் மூலம் 7.8.2011, ஞாயிறு காலை 8 மணிக்குள் திருச்சிராப்பள்ளி காந்தி சந்தை அருகிலுள்ள மீனாட்சித் திருமண மண்டபத்துக்கு வந்து சேருங்கள் எனப் பேரன்புடனும் பெருமகிழ்வுடனும் அழைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

திருச்சிக்குத் திரண்டு வாருங்கள்!

தெளிவான போராட்டத் திட்டங்களை வகுத்திடுங்கள்!

திட்டங்களை விளக்கி செப்டம்பர்-அக்டோபரில் பரப்புரை செய்யுங்கள்! போராடு வோம் வாருங்கள்!

திருச்சி மாநாடுகள் - ஏற்பாட்டாளர்களின் முனைப்பு!

இளைஞர் - மாணவர்களின் எழுச்சி!

திருச்சியில் ஒருநாள் மாநாட்டை நடத்திட 22.5.2011 அன்று, அம்பத்தூரில் முடிவெடுத்தோம்.

7.8.2011, ஞாயிறு அன்றுதான் மாநாடு என்றாலும், 30.06.2011 முதலே திருச்சி மாவட்ட மா.பெ.பொ.க. செயலாளர் இரா. கலியபெருமாள், புரட்சிக்கவிஞர் கலை இலக்கிய மன்றச் செயலாளர் ந. கருணாகரன், திருச்சி பெரியார் தொண்டர்

ச. இராதாகிருட்டிணன், மாணவர்-இளைஞர் அணியினரான துரை. சித்தார்த்தன், இரா. நாகராசன், க. சாக்ரடீஸ், க. இராவணன், மகளிர் அணியினரான தனலட்சுமி-கலியபெருமாள், ஜெயக்கொடி-கருணாகரன், மருத்துவர் அ. செம்மலர், திருச்சி சிந்தனையாளர் கழகச் செயல்வீரர்கள் அரங்க. தமிழ்மணி, மு. நரசிம்மன்,

மு. வெங்கடேசன், முத்துச்செழியன் மற்றும் பெரியார் பாசறைத் தோழமை அமைப்பினர் ஆகியோர் அடிக்கடி கூடிக் கலந்து பேசிப் பேரார்வத்துடன் செயல்படுகின்றனர்.

அவரவர் நிதி திரட்டுவதிலும் விளம்பரம் செய்வதிலும் ஆர்வமாக உள்ளனர். ஓய்வின்றிச் செயல்படுகின்றனர்.

மாநாட்டுக்கு வேண்டப்படும் விளம்பரம், உணவு வசதி, குடிநீர் வசதி இவற்றில் எந்தக் குறையும் வராமல் பார்த்துக் கொள்வதில் கவலையோடு பணியாற்றுகின்றனர்.

அருள்கூர்ந்து மற்ற மாவட்டத்தின் செயலாளர்களும் பொறுப்பாளர்களும் தங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குத் தொகையைத் திரட்டித்தந்து உதவுங்கள். அருள்கூர்ந்து ஆடவர், மகளிர், மாணவர் என மாவட்டந்தோறும் 50 பேர், 100 பேர் எனப் போட்டிப் போட்டுக் கொண்டு வாருங்கள்.

இன்றையத் தமிழக அரசின் - இந்திய அரசின் செயல்பாடுகளைப் பற்றி நம் கட்சியின் தெளிவான நிலைபாடு என்ன? கிளர்ச்சிப் பாதை என்ன? கிளர்ச்சி ஏற்பாடுகளை எப்படிச் செய்வது என்பது பற்றி நறுக்குத் தெறித்தாற்போல் ஒவ்வொரு அணிச் செயலாளரும், மா.பெ.பொ.க. மாவட்டச் செயலாளரும், மாணவர்-இளைஞர் தோழர்களும் மனந்திறந்து மாநாட்டில் பேசுங்கள். தீர்மானங்கள் வடிவில் எழுதிக் கொண்டு வாருங்கள்.

பேருந்து, சீருந்து, மகிழுந்துகள் மூலம் 7.8.2011, ஞாயிறு காலை 8 மணிக்குள் திருச்சிராப்பள்ளி காந்தி சந்தை அருகிலுள்ள மீனாட்சித் திருமண மண்டபத்துக்கு வந்து சேருங்கள் எனப் பேரன்புடனும் பெருமகிழ்வுடனும் அழைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

திருச்சிக்குத் திரண்டு வாருங்கள்!

தெளிவான போராட்டத் திட்டங்களை வகுத்திடுங்கள்!

திட்டங்களை விளக்கி செப்டம்பர்-அக்டோபரில் பரப்புரை செய்யுங்கள்! போராடுவோம் வாருங்கள்!

Pin It