வாய்ப்புகளைப் பெற இடஒதுக்கீடு உதவியது என்பது உண்மை. ஆனால் முதலாளித்துவ முறை நிலவுகின்ற சமூக அமைப்பில் - இந்த சமூக அமைப் பை உள்வாங்கிய இடஒதுக்கீடு - எல்லாத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் - பின்தங்கிய மக்களுக்கும் கல்வி, வேலை வழங்காது என்பது வெளிப்படை. இந்தப் புரிதலுக்கு இருதரப்பு மக்களும் முதலில் முன்வரவேண்டும்.

இடஒதுக்கீடு மக்களாட்சி உறுப்புகளிலும், மைய, மாநில அரசுத் துறைகளின் வேலை வாய்ப்புகளிலும் சட்டரீதியாக அமல்படுத்தப் பட்டு மூன்று தலைமுறைகள் ஆன சூழ்நிலை யில், இன்று தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய மக்களிடையே பெரும் முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளது. (எனினும் கோவில் மடாலயங்களில் பிராமண வர்ண ஆதிக்கம் இன்றும் மேலோங்கி உள்ளதை மறுக்க இயலாது). தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களி டையே சாதி இடஒதுக்கீட்டால் பெரும் முரண்பாடு தோன்றி உள்ள இன்றைய சூழ்நிலையில், நாட்டை யும்-சமுதாயத்தையும் சீரழித்துவரும் தாராளமய மாக்கலால் - முதலாளித்துவத்துக்கு எதிராகப் போராட மக்களைப் பக்குவப்படுத்துவது சிரமமாகிவிட்டது. இட ஒதுக்கீட்டைத் தூக்கிப்பிடிக்கின்ற-ஆதரிக்கின்ற எல்லா அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும் இலஞ்ச ஊழல் அரசியல்வாதிகளாக இருப்பதும், தங்கள் வாரிசு களுக்குக் கட்சி, ஆட்சி இரண்டிலும் அதிகார மையத்தை உருவாக்குபவர்களாக இருப்பதும் அறியாத மக்கள் எல்லோரும் இந்த தலைவர்கள் மீது வைத்துள்ள பிரமையே காரணங்கள் ஆகும். மக்கள் எல்லோரை யும் கவர்ச்சியான தற்காலிக இலவசங்கள், மானியங் களுக்கு அடிமையாக்கிவிட்டனர் நம் முத லாளித்துவ அரசியல்வாதிகள்.

கீழ்க்கண்ட காரணங்கள் நம் கண்முன் தெளி வாகத் தெரிகின்றன.

முதலாளித்துவ உற்பத்தி முறையை உள்வாங்கிய இடஒதுக்கீடு எல்லாத் தாழ்த்தப்பட்டோருக்கும் - வேலை அளிக்கவில்லை. 10 விழுக்காடு தாழ்த்தப் பட்டோருக்கே வேலை வழங்கி உள்ளது. 90 விழுக் காடு தாழ்த்தப்பட்டோர் - இடஒதுக்கீட்டால் எந்தப்பல னும் இன்றி ஏழைகளாகவே உள்ளனர். இதேபோல் எல்லாப் பிற்படுத்தப்பட்டோருக்கும் வேலை அளிக்க வில்லை. 10 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டுமே வேலை வழங்கி உள்ளது. 90 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர் - இடஒதுக்கீட்டால் எந்தப் பலனும் இன்றி ஏழைகளாகவே உள்ளனர்.

90 ஆண்டுகளுக்குமுன் சமூக நீதியாக முழக்க மிட்டுக் கிளம்பிய இடஒதுக்கீடு, இன்று வலதுசாரி அரசியல் தலைவர்கள் இலஞ்ச - ஊழல் - நன்கொடை கல்வி நிறுவனங்கள் நடத்தும் பிரமுகர்களால் மட்டுமே தீவிரமாக ஆதரிக்கப்படுகிறது.

ஏழை தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய மக்களிடையே இதன் நிறை - குறை பற்றி ஒரு பக்குவமான புரிதல் இல்லை.

சாதி இட ஒதுக்கீடு இருக்கும் வரை-சாதி உணர்வு கள் இருக்கும் என்பதை வெளிப்படையாக நாம் உணர முடிகிறது.

இடஒதுக்கீட்டால் உயர்கல்வி, உயர் பதவிகளுக்கு வந்துள்ளவர்களில் பெரும்பாலோர் - சமூகப் பிரக்ஞை அற்றவர்களாக, சுயநலவாழ்வு - நுகர்வு கலாச்சாரம் சார்ந்து வாழ்வதையே பார்க்கின்றோம். தங்கள் பிள்ளைகளையும் அப்படியே வளர்க்கின்றனர். ஒரு எளிய சிக்கன வாழ்வு வாழ்ந்து-தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தைத் தூக்கிவிடுபவர்கள்-அரிதாகவே உள்ள னர். (இந்த சிறிதளவு பேர்களை ஆறுதலாக நினைத் துப் பாராட்டலாம்!).

(1) சாதி ஆதிக்கத்தை ஒழிப்பது-சாதியின் அடிப்படை யையே தகர்ப்பது-இரண்டையும்-தற்போதுள்ள சூழ் நிலையில் வேறுபடுத்திப் புரிந்து கொண்டு-சாதி ஆதிக் கத்தை எதிர்ப்பது உடனடிப் பணியாகும்.

(2) தாழ்த்தப்பட்டோர் சமுதாயத்தில் உள்ள பல் வேறு உள்பிரிவுகளில்-சாதி அடிப்படையில் இட ஒதுக் கீட்டால் பயன்பெறாத ஏதேனும் ஒரு தாழ்த்தப்பட்ட உள்பிரிவு சாதிக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் உள் ஒதுக்கீடு செய்தால்-அதை, இதர உள்பிரிவு தாழ்த்தப் பட்ட சாதிகள்-தலைவர்கள்-சுயநலத்துடன் எதிர்க்கின் றனர் (3) மிகவும் அடிநிலையில் உள்ள பல பிற்படுத் தப்பட்ட சாதிகள்-மிகவும் அடிநிலையில் உள்ள பல தாழ்த் தப்பட்ட சாதிகள்-இடஒதுக்கீட்டால் எந்தப் பலனையும் பெற முடியாமல் உள்ளதை சமீபகாலமாக சட்டரீதியான அரசு புள்ளிவிவரங்களே சொல்கின்றன.

இடஒதுக்கீட்டின் தாக்கம் எல்லாத் துறைகளையும் பாதிக்கிறது. (1) தன் சாதிக்காரன் தேர்தலில் நின்றால் - ஊழல் செய்பவனாக இருந்தாலும் வாக்குப் போட வேண்டும்-தன் சாதிக்காரன் பெரிய பதவியில் இருந் தால் ஊழல் செய்தாலும் எதிர்க்கக்கூடாது என்ற மன நிலையை இடஒதுக்கீடு தோற்றுவித்து உள்ளது. (2) அரசின் பல்வேறு துறைகள் - காவல் துறை - நீதித் துறை பணியாளர்களிடையே சாதிய உணர்வு மேலோங்கி - அதன் உணர்வு நிலைகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி அரசு இயந்திரம் - எல்லா மக்களுக்கும் பொதுவானது என்ற நிலை தகர்ந்து வருகிறது.

பல தலைமுறைகளாக மனித இனம் - சாதி சார்ந்த கொள்வினை - கொடுப்பினை - மண உறவுகளினா லேயே பெருகி வளர்ந்து வந்துள்ளது. (திருமணம் - சாவு-முதலிய தனி மனித-குடும்பப் பண்பாட்டு நிகழ்வு களில் இரத்த உறவுகள் - சாதி உறவுகள் எல்லாம் இன்று பெருமளவு ஒன்றாகவே இருப்பதால் - சாதி என்பது இந்த எல்லைக்குள்தான் இருக்கவேண்டும். அரசு - அரசியல் என்பது எல்லா மக்களுக்கும் நல்ல வேலை, தொழில், கல்வி, உள்கட்டமைப்பு வசதிகள், சமூக நலப்பணிகள் செய்து தருவது.

இன்று மக்களாட்சித் தத்துவத்தில் அரசு என்பது பல புதிய துறைகளை உள்ளடக்கிய ஒரு பிரம்மாண்ட அலகு ஆகும். இது ஒரு வளர்ச்சிப் போக்கு. இந்தப் போக்கின் பலன் தனி உடைமை பொருளா தாரத்தில் எல்லோருக்கும் பலன் தராது. சோசலிசப் பொருளாதாரத்தின் மூலமே இந்த வளர்ச்சிப் போக்கின் பலனை எல்லா மக்களும் அடைய முடியும்.

சாதி பற்றிய நடுநிலைமையான கள ஆய்வுகள் - நடுநிலையான புரிதல்கள் - கீழ்க்கண்ட தளங்களில் தேவை.

1.            உலகம் தோன்றி - உயிரினங்கள் தோன்றி - மனித நாகரிகம் தோன்றி - இனக்குழு வாழ்க்கை முறை - மன்னராட்சி முறை - மக்களாட்சி முறை - என சமூகத்தைப் புறநெறியில் ஒழுங்குபடுத்தும் அரசு இயந்திரத்தில் சாதி பற்றிய ஆய்வுகள் நிறைய செய்ய வேண்டி உள்ளது.

2.            தனி உடைமை, பரம்பரை இரத்த உறவுகள் - இது சார்ந்த பரம்பரை குலத்தொழில்கள் - கொள் வினை - கொடுப்பினைகள் (மனித உறவுகள்) இதுசார்ந்த அரசு, என நிறைய ஆய்வுகள் செய்ய வேண்டி உள்ளது.

3.            சாதியப் பண்பாடுகள் - இது சார்ந்த கோவில் திருவிழாக்கள் - பரம்பரைப் பழக்க வழக்கங்கள் - தற்போது வளர்ந்துவரும் நாட்டார் வழக்காற்றி யல் - நாட்டுப்புறவியல் பற்றியும், சாதி சார்ந்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது.

4.            19ஆம் நூற்றாண்டு வரை சமுதாயத்தை - புற நிலையில் ஒழுங்குபடுத்தி வந்த அரசு என்பதன் தலைமைப் பொறுப்பு - பரம்பரை மன்னர்கள் வசம் இருந்து, இதற்கென்று சத்திரிய வர்ணம் உருவாக்கப்பட்டு, அது பல உள்பிரிவுச் சாதிகளை உள்வாங்கி - 20ஆம் நூற்றாண்டில் மக்களாட்சித் தத்துவம் - எல்லோருக்கும் வாக்குரிமை - ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்(கள்) என்ற நிலைக்கு வந்துவிட்ட சூழ்நிலையிலும்-பக்குவத் திலும் சாதிகளைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது.

5.            இந்தியச் சூழலில் மனித சமுதாயத்தை 5 பெரும் (பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரன், பஞ்சமன்) பிரிவுகளாகப் பிரித்து - பலவிதமான தொழில் கள் பருவ காலச் சூழல் - இடச் சூழலில் உருவான சாதிகளை மேற்படி வர்ணங்களுக்குள் உட்படுத்தி பிராமண மயம் அடக்கி ஆண்டது - வசப்படுத்தி யது-நிறைய வர்ண சாதி(கள்) முறை வர்ணங் களும் - சாதிகளும் கலந்த முறை - இதன் நீட்சி யாக சாதிய அடக்குமுறைகள் - வயிற்றுப் பிழைப் புக்காக - பல்வேறு சாதிகள் - உற்பத்தி உறவில் ஒன்றாக இருக்க வேண்டியது புறநிலைக் கட்டாயம்.

6.            19ஆம் நூற்றாண்டு வரை இறுக்கமாக நிலவி வந்த சாதியப் பண்பாடு-பழக்கவழக்கங்கள் - திருவிழாக்கள் கோவில்களே-சாதிய நீதிமன்றங் களாக இருந்தது.

7.            பரம்பரை குலதெய்வ வழிபாடு. சாதி (Caste), குலம் (Tribe), சமயம் (Religion) என்பது பற்றி எல்லாம் தெளிவான ஆய்வுகள் வரையறைகள் தேவை.

8.            சாதிக்கும் தொழிலுக்கும் உள்ள உறவு - பல சாதிகளை ஒரு மொழி - மொழி சார்ந்த பண் பாட்டுத் தளத்தில் இணைத்தது.

9.            18ஆம் நூற்றாண்டு வரை - சாதிக்கட்டுப்பாடு என்பது மரபு வழி பரம்பரை குலத்தொழில் என்ற அடக்குமுறையாக இருந்தது. 19ஆம் நூற்றாண் டில் - மின்பொறி - நீராவி - இயந்திரத் தொழில் நுட்பம்-மின்சாரம் - கண்டுபிடிக்கப்பட்டு அதி நவீனத் தொழில்நுட்பம் வளர்ந்தபின் மேலை நாடுகளில் ஏற்பட்ட தொழில்புரட்சி கீழை நாடு களை வந்தடைந்தபின் - சாதி வழித் தொழில்கள் கட்டாயமற்றுப்போன சூழ்நிலை தோன்றிவிட்டது. மேலும் சாதியின் அடிப்படையை நொறுக்க - நவீன தொழில்நுட்பத்தை - சோசலிசப் பொருளாதாரத் துடன் இணைத்து திட்டமிட மக்களைப் பக்குவப் படுத்துவது, சாதி பற்றி - வர்ணம் பற்றி சித்தர்கள் -வள்ளலார்-பெரியார்-அம்பேத்கர்- ஸ்ரீநாராயண குரு - ஐயா வைகுண்டர் - மகாத்மா ஜோதிராவ் புலே-காந்தி-விவேகானந்தர்-மகான் இராமானுசர் - கேரளத்து ஐயன்காளி போன்றோர் சொன்னதன் சாராம்சத்தின் விளக்கம் வேண்டும். மற்றும் மார்க்கணயர்கன் சாதி பற்றிச் செய்த ஆய்வுகளின் சாராம்சத்தை எல்லாம் விரிவாக உள்வாங்கி ஒரு விரிவான சமதரும சாதி ஒழிப்பு ஆவணம் வெளியிடப்பட வேண்டும்.

இதுபற்றிய பன்முகக் கள ஆய்வுகள் எதிர்காலத் தில் தேவை.

இதுபற்றி எல்லாம் விரிவான கள ஆய்வு செய்து விவாதித்துத் தெளிதல் - கூட்டு விவாதம் செய்ய வேண்டி யுள்ளது. இதை யெல்லாம் சாதியின் அடிப்படைகளை ஒழித்தல், மனித சமுதாயத்தை ஒன்றுபடுத்தல் - எல்லோருக்கும் சமதருமப் பொருளாதாரம் மூலம் வேலை, கல்வி, குடியிருப்பு - சுகாதார வசதிகள் அடையப் பக்குவப்படுத்தல், பாடுபடல், இதற்கும் மேலாக ஆறு அறிவு படைத்த மனிதன் ஆன்ம அனுபவம் பெற பக்குவப்படுத்தல், இந்த நோக்கங் களுடனே செய்ய வேண்டும். இது சாத்தியப்படுமா என்றும் முடிவாகக் கூறுமிடத்து சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு பற்றி எந்த மாதிரிப் புரிதல் - பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வரவேண்டும்? என்பதும் தேவை.

நம் நோக்கம் வர்க்க பேதமற்ற சமுதாயம் - சாதிகளற்ற நல்ல சமுதாயம் - எல்லோருக்கும் அடிப் படைத் தேவைகள் - கல்வி - வேலை - தொழில் - குடி யிருப்பு - சுகாதார வசதிகள் - எல்லாவற்றிலும் அவரவர் தாய்மொழிப் பண்பாட்டுக்கே முதன்மை.

இதற்கு இடஒதுக்கீடு பற்றி எந்த மாதிரிப் புரிதல் - பின்தங்கிய - தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வரவேண்டும்-தேவை ஒரு பக்குவமான புரிதல்!

(ஜெ.பி.யின் முழக்கம், 2010 சனவரி)

குறிப்பு : பார்ப்பனர் :

1. இந்தியா - 5.5 விழுக்காடு

2. தமிழகம் - 3 விழுக்காடு

Pin It