இந்தியப் பொதுவுடைமை இயக்கம் பிளவுபடுதல்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தபோதிலும், பல தரப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்காகப் பல போராட் டங்கள் நடந்து கொண்டுதான் இருந்தன.

கேரளத்தில் இடுக்கி அணைக்கட்டுப் பகுதியில் வாழ்ந்து வந்த சுமார் 2000 விவசாயக் குடும்பங் களை மாற்று ஏற்பாடு ஏதுமில்லா நிலையில் வெளி யேற்றிய பி.எஸ்.பி. - காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து ஏ.கே. கோபாலன் மேற்கொண்ட உண்ணாநோன்பு குறிப்பிடத்தக்கதாகும். முடிவில் மாநில அரசு அவர்களது கோரிக்கையை ஏற்றது. போராட்டம் வெற்றி பெற்றது.

இக்காலத்தில் கோவா விடுதலைப் போராட்டமும் தீவிரம் அடைந்தது. காங்கிரசு அரசு 1961 திசம்பர் 19 அன்று இந்திய இராணுவத்தைக் கோவாவிற்குள் அனுப்பி, கோவாவை மீட்டது.

இந்நிலையில் 1962இல் நடைபெற்ற பொதுத் தேர் தலிலும் நாட்டின் பிரதான எதிர்க்கட்சி, காங்கிரசுக்கு அடுத்த கட்சி என்ற தனது நிலையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தக்க வைத்துக் கொண்டது.

இதற்கிடையில் இந்திய-சீன எல்லைப் பிரச்சனை கடுமையாகிக் கொண்டிருந்தது. 1962 செப்டம்பரில் கிழக்கே மக்மோகன் எல்லையிலும், மேற்கே காஷ் மீரின் லடாக் பிரதேசத்திலும் இரு நாடுகளின் இராணு வங்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அக்டோபர் 20இல் அது பெரும் மோதலாக உருவானது. சீனப் படை மக்மோகன் எல்லையைத் தாண்டி உள்ளே வந்தது. இது இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி யது. பிற்போக்குச் சக்திகளும், போர் வெறியர்களும் இந்தச் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டனர்.

எல்லை மோதலைப் பயன்படுத்தி ஆளும் காங்கிர சின் பின்னால் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கொண்டு போய் நிறுத்த எண்ணிய கட்சித் தலைமையின் போக் கை ஒரு சாரார் உறுதியுடன் எதிர்த்தனர். தேசப் பாது காப்பிற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டு, பேச்சுவார்த்தை மூலம்தான் பிரச்சனைக்கு இறுதித் தீர்வு காணமுடியும் என இந்தியாவும் சீனாவும் உணர வேண்டும் என்பதை உலக மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் கூற வேண்டிய கடமை இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு உள்ளது என்று அச்சாரார் கூறினர்.

அன்று காங்கிரசு ஆட்சியாளர்களும், பிற்போக்கா ளர்களும் இப்பிரிவினரை “சீன ஏஜெண்டுகள்” எனப் பழித்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றையத் தலை மைகூட, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை ஏற்காமல் -பாட்டாளி வர்க்கச் சிந்தனை என்பதே இல்லாமல், காங்கிரசு அரசின் நிலையுடன் தன்னை இணைத்துக் கொண்டது. கட்சியின் தேசியக் குழுவில் கடுமையான விவாதம் நடந்தும், ஒருமனதாகத் தீர்மானம் நிறை வேற்ற முடியவில்லை.

பெரும்பான்மையோர் ஆதரித்த டாங்கே தலைமை தயாரித்த தீர்மானம் ஒன்று வெளியிடப்பட்டது. கட்சித் தலைமையின் நகலுக்கு மாற்றாக முன்மொழியப்பட்ட நகல்கள் மீது முறை யான விவாதம் நடத்தப்படவில்லை. ஆயினும் டாங்கே சமர்பித்த நகலையே ஏற்க வேண்டும் என்றும், ‘தேசபக்திக்கும்’ சீன ஆதரவு துரோகத்துக்கும் இடையே நடக்கும் யுத்தம் என்றும் வாதிட்டு, அந்த நகலுக்குப் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றனர். இவ்விவரங்கள் 1963 பிப்பிரவரியில் இ.எம்.எஸ். முன்வைத்த “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் திருத்தல் வாதமும், வறட்டுத் தத்துவ வாதமும்” எனும் ஆவணத்தில் உள்ளன. 

இந்தத் தேசியக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு, காங்கிரசு அரசு, கம்யூனிஸ்ட் கட்சியில் தனக்கு எதிரான பகுதியினரை மட்டும் தனிமைப்படுத்திக் குறிவைத்து வேட்டையாடியது. கைது செய்து சிறையில் அடைத்தது. காங்கிரசு அரசு அக்டோபர் இறுதியில் அவசர நிலை ஆட்சியைப் பிரகடனப்படுத்தியிருந்தது. நூற்றுக்கணக் கான கட்சி உறுப்பினர்களும் தேசியக் குழு உறுப்பி னர்கள் 50 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களை விடுவிக்கக் கோரி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தங்களது திருத்தல்வாதக் கொள்கையை எதிர்க் கும் இப்பிரிவினர் சிறையில் இருக்கும்போது, கட்சி அமைப்பு முழுவதையும் தாம் கைப்பற்றிக் கொள்வது என்பது கட்சித் தலைமையின் எண்ணமாக இருந்தி ருக்கலாம்.

சீனத் துருப்புகள் தாமாகவே முன்வந்து சண்டை நிறுத்தம் அறிவித்து, பின் வாங்கிச் சென்றதை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது. மேலும் அணிசேரா நட்பு நாடுகள், இந்திய சீனப் பிரதிநிதிகளிடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறிய ஆலோசனையையும் இந்தியா ஒப்புக்கொண்டது. 1962லேயே இந்திய சீன மோதல் முடிந்துவிட்டது. ஆனால் கம்யூனிஸ்டுகளில் ஒரு பிரிவினர் 1964இல் கூட சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை. 

உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குள் நிலவிய கருத்து வேறுபாடுகள் மேலும் தீவிரமடையத் தொடங்கின. வெளி உலகிற்கும் இது அப்பட்ட மாகத் தெரியவந்தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வாதப் பிரதிவாதங்களும், பகிரங்கக் கடிதப் போக்கு வரத்தும் நடந்தன. ஓர் உலகளாவிய மாபெரும் விவாதம், உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் அன்று பகிரங்கமாக நடைபெற்றது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி யும் எல்லா விஷயங்களிலும் முரண்பட்டு நின்றன.

உலகில் நிலவிய முரண்பாடுகளை மதிப்பீடு செய்வது - கையாளுவது, யுத்தம் மற்றும் சமாதானம் பற்றிய பிரச்சனை, சமாதான சகவாழ்வு எனும் கோட்பாடு, சோசலிச மாறுதலுக்கான பாதை போன்ற அடிப்படையான கோட்பாடுகளில் இவ்விரு நாடுகளின் கட்சிகளுக்கிடையே முரண்பாடு முற்றியது.
1956-63 காலகட்டத்தில், சோவியத் கட்சியின் திருத்தல்வாதப் போக்கினை எதிர்த்து ஒரு துணிச்சலான போராட்டத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது என்பது ஒரு மாபெரும் வரலாற்று உண்மையாகும்.

1962 ஆரம்பத்தில் கட்சியின் பொதுச் செய லாளர் அஜய்கோஷ் திடீரென மரணமடைந்தார். செயலாளரைத் தேர்ந்தெடுப்பதில் பிரச்சனை எழுந்தபோது, அதுவரை இல்லாதிருந்த தலை வர் என்கிற பதவி உருவாக்கப்பட்டு, அதில் டாங்கே அமர்த்தப்பட்டு, பொதுச் செயலாளராக இ.எம்.எஸ். நம்பூதிரிபாத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

டாங்கேயின் பொம்மைப் பொதுச் செயலாளராகச் செயல்பட விரும்பாமல் இ.எம்.எஸ். தனது பதவியை இராஜினாமா செய்தார். இராஜிநாமாக் கடிதத்துடன் “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் திரிபுப் போக்கும், வறட்டுத் தத்துவ வாதமும்” என்னும் ஒரு ஆவணத் தையும் முன்வைத்தார். அந்த ஆவணம் கட்சிக்குள் நிலவிய திருத்தல்வாதம், வறட்டுத் தத்துவ வாதம் என்னும் இரு தவறுகளையும் வரலாற்று ரீதியாக ஆய்வு செய்து, ஒரு சரியான, இந்திய நிலைக்கு ஏற்ற மார்க்சிய -லெனினிய அணுகுமுறையை அது வற்புறுத்தியது. அத்துடன் கட்சித் தலைமையின் அமைப்பு முறையிலான தவறுகளையும் அது சுட்டிக் காட்டியது. இ.எம்.எஸ்.-இன் இராஜினாமாவுக்குப் பிறகு, டாங்கேயே தலைவர், பொதுச் செயலாளர் ஆகிய பொறுப்புகளையும் வகிக்க முடிவு செய்யப்பட் டது. பல மாநிலங்களில் ‘ஒழுங்கு நடவடிக்கை’ என்ற பெயரால் டாங்கே தலைமை கட்சிக்குள் எதிராளிகளை வீழ்த்த முயற்சித்தது.

இந்தக் கட்டத்தில் 1924 கான்பூர் சதி வழக்கில் சிறையில் இருந்த போது, கம்யூனிஸ்ட் இயக்கத்திற் குள் இருந்து கொண்டே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு ஊழியம் செய்வதாக டாங்கே எழுதிக் கொடுத்ததாகக் கூறப்படும் கடிதங்கள் வெளிவந்தன. இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் 1964 ஏப்பிரல் 9இல் மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில், “டாங்கே கடிதங் கள் பிரச்சனையை முதலில் எடுத்துக் கொள்ள வேண் டும் என்றும், அப்போது டாங்கே கூட்டத்தின் தலைவ ராக இருக்கக்கூடாது என்றும் 12 உறுப்பினர்கள் கூறினர்.”

ஆனால் டாங்கே குழுவினர், ‘சீர்குலைவு நடவடிக் கைகள்’ என்று ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இடதுசாரி களை வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்ததால், அந்த 12 பேரும் மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தி லிருந்து வெளிநடப்புச் செய்தனர். அவர்கள் வெளிநடப் புச் செய்தபின், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி எம். பசவபுன்னையா, பி. சுந்தரய்யா உள்ளிட்ட ஏழு மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் களைக் கட்சியிலிருந்து வெளியேற்றும் தீர்மானத்தை நிறைவேற்றி, அதைத் தேசியக் குழுவின் முன் வைப்பது என மத்திய நிர்வாகக் குழு முடிவு செய்து, பத்திரிகைகளிலும் வெளியிட்டது.

இத்தகைய சூழ்நிலையில், புதுதில்லியில், கட்சி யின் தேசியக் குழுக் கூட்டம் 1964 ஏப்பிரல் 10 முதல் 15 வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டாங்கே கடிதங்களை விவாதிக்க வேண்டும்; டாங்கே இக்கூட்டத்துக்குத் தலைமை வகிக்கக்கூடாது; குற்றஞ்சாட்டுக்குட்பட்டவரே நீதிபதி யாக இருக்கக்கூடாது என்று இடதுசாரிகள் கூறினர். டாங்கேயும் அவரைப் பின்பற்றுவோரும் இதை ஏற்க மறுத்தனர். இந்த நிலையில் 1964 ஏப்பிரல் 11 அன்று தேசியக் குழுக் கூட்டத்திலிருந்து 32 பேர் வெளிநடப் புச் செய்தனர்.

அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “நாங்கள் ஒருமித்து நிற்பது அவர்கள் (டாங்கே தலைமை) கையாளும் கோஷ்டி முறைகளுக்கு எதிராக மட்டுமல்ல; மாறாகக் காங்கிரசுக் கட்சியோடு பொதுவான அய்க்கிய முன்னணி வகுப்பதன் மூலமாக முதலாளி வர்க்கத் துக்கு வால் பிடிக்கும் அவர்களுடைய அரசியல் கொள் கைக்கு எதிராகவும் நாங்கள் ஒன்றுபட்டிருக்கிறோம் என்பதை இந்தக் கருத்துப் பரிமாற்றம் தெளிவாக்கி யது” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரத்தில் சித்தாந்தப் பிரச்சனைகளில் தங்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பதையும் அவர்கள் மறைக்கவில்லை. கட்சி ஒற்று மை குறித்து டாங்கே தலைமைக்கும், ‘இடதுசாரி களுக்கும்’ இடையே கடிதப் போக்குவரத்துகள், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் பயன் எதுவும் ஏற்படவில்லை. பிளவு என்பது தவிர்க்க முடியாததாக ஆனது.

32 தேசியக்குழு உறுப்பினர்கள் எடுத்த முடிவிற் கிணங்க பல ஆவணங்கள் கட்சி அணிகளுக்கிடையே சுற்றுக்கு விடப்பட்டன. அதன்பிறகு ஏற்கனவே குறிப் பிட்ட எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

ஆந்திரத்தில் தெனாலியில் ஒரு சிறப்பு மாநாடு 1964 சூலை 7 முதல் 11 வரை நடத்தப்பட்டது. நாடு முழுவதிலுமிருந்து 146 பேர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். அவர்கள் ஒரு இலட்சம் கட்சி உறுப்பி னர்களின் பிரதிநிதிகளாவர். கட்சியின் ஏழாவது அகில இந்திய மாநாட்டினைக் கூட்டுவது என்று தெனாலி சிறப்பு மாநாடு முடிவு செய்தது. அதற்கிணங்க, கட்சி யின் ஏழாவது அகில இந்திய மாநாடு கல்கத்தாவில் 1964 அக்டோபர்-நவம்பரில் நடைபெற்றது.

இவ்வாறாக அரசியல் ரீதியிலும், திட்ட ரீதியிலும், ஸ்தாபன ரீதியிலும், ஒன்றுபட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானது.

- தொடரும்

Pin It