முதல் பொதுத் தேர்தலும் கருத்து வேறுபாடுகளின் வளர்ச்சியும்

1950இல் நடப்புக்கு வந்த அரசமைப்புச் சட்டத்தின்படி, 1951 திசம்பர், 1952 சனவரியில் சுதந்தர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடக்க விருந்தது. 1951 ஏப்பிரலில் மத்தியக் குழுக் கூட்டத் தில், இப்பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. தேர்தல் பணிகளுக்காக மற்ற இடதுசாரிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக எஸ்.ஏ. டாங்கே, ஏ.கே. கோபாலன், பங்கிம் முகர்ஜி, ஜோவர் ஆகியோ ரைக் கொண்ட ஒரு குழுவை மத்தியக் குழு அமைத் தது. தேர்தல் அறிக்கையை ஆகஸ்ட் மாதத்தில் வெளி யிட்டது.

1952-இல் நடந்த தேர்தலில் பல்வேறு மாகாணங்களில் பல கட்சிகளுடன் உறவு வைத்துக் கொண்டது. நாடாளுமன்ற மக்களவையில் 16 இடங்களைப் பெற்று முக்கிய எதிர்க்கட்சியாக வந்தது. பிரதமர் நேருவை விட அதிக வாக்குகளைப் பெற்ற பெருமை கம்யூனிஸ்ட் வேட்பாளர் ரவி நாராயண ரெட்டிக்குக் கிடைத்தது.

சென்னையிலும், கொச்சி திருவாங்கூரிலும் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கட்சிக்கு இருந்தது. ஆனால் இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரசு நேர்மைக்கு மாறாகச் சந்தர்ப்பவாதக் கட்சிகள் சிலவற்றைச் சேர்த்துக் கொண்டு ஆட்சி அமைத்தது.

கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அன்று நிலவிய பலவீனம் குறித்து, தலைமை ஆராய்ந்தது. ஸ்தாபனப் பிரச்சி னையுடன், சித்தாந்தத் துறைப் பலவீனம் குறித்தும் மிகுந்த கவலையை வெளியிட்டது. அந்த அறிக்கை யில், “நமது வெளியீடுகள் எல்லாம் கிளர்ச்சிப் பிரச் சாரத்துக்காகத் தயார் செய்யப்பட்டவைகளே தவிர, மார்க்சியக் கண்ணோட்டத்தில் இந்தியப் பிரச்சனை களை ஆராயும் படைப்புகளாக இல்லை. தொழிற் சங்க, விவசாய சங்க இயக்க வரலாறுகளைக்கூட, எழுதவில்லை. அவற்றிலிருந்து உரிய படிப்பினை களைப் பெற்று நமது அணிகளுக்குப் போதிக்க வில்லை. இப்போராட்டங்களின் உண்மையான படிப் பினைகளை மூடிமறைக்க முயலும் முதலாளிகளைச் சித்தாந்த ரீதியாக நாம் எதிர்கொள்ளவில்லை. இதனால் கட்சி உறுப்பினர்களில் பெரும் பகுதியினரிடம் மார்க்சிய-லெனினிய சித்தாந்த உணர்வு வளரவில்லை. இதனால் பொருளாதார அரங்கிலும் அரசியல் அரங்கிலும் நமது பணி பாதிக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கட்சியின் மூன்றாவது அகில இந்திய மாநாட்டில் விவாதம் செய்வதற்கான அடிப்படையாகவும், உடனடிப் பணிகளுக்கு வழிகாட்டுவதற்காகவும், அரசியல் தீர்மானம் ஒன்றினை 1953 மார்ச்சு மாதத்தில் கூடிய மத்தியக் குழு நிறைவேற்றியது. இச்சமயத்தில்தான் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இராணு வக் கூட்டு ஏற்பட்டு, கெடுபிடி யுத்தத்தை இந்தியாவின் வாசலுக்கே அழைத்து வந்துவிட்டது.

இத்தகைய பின்பலத்தில்தான், தமிழகத்தில் மதுரை மாநகரில் 1952 திசம்பர் 27 முதல், 1954 சனவரி 4-ஆம் நாள் வரை கட்சியின் மூன்றாவது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. நகல் அரசியல் தீர்மானத்திற்கு 500 திருத்தங்கள் தரப்பட்டு, விரி வான விவாதத்திற்குப்பின் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டின் அரசியல் தீர்மானம் “சனநாயக அய்க்கிய அரசு” (Government of Democratic Unity) அமைக்க வேண்டும் என்னும் முழக்கத்தைக் கொடுத்தது.

மூன்றாவது மாநாட்டிற்குப் பிறகு, பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த பாண்டிச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹி ஆகிய பகுதிகளில் மக்களின் விடுதலைப் போராட்டங்களைக் கடுமையாக நசுக்கப் பார்த்தார்கள். இந்திய யூனியனுடன் இணைய வேண்டுமென்ற அம்மக்களின் போராட்டத்தைக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகளின் தகாத செயல்களை வன்மையாகக் கண்டித்தது.

மேலும் “விவசாய மக்கள் பகுதிகளில் நமது பணிகள்” பற்றிய ஒரு விரிவான தீர்மானத்தை நிறை வேற்றியது. மொழிவழி மாநிலங்களை உருவாக்க, மாநில புனரமைப்புக் கமிஷனிடம் ஒரு விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்தது.

1954 சூன் இறுதியில் மக்கள் சீனப் பிரதமர் சூ.என். லாய் தில்லி வந்து, இந்தியப் பிரதமர் நேருவைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பிலே உருவானதுதான் ‘பஞ்சசீலக் கொள்கை’.

1954 நவம்பர் 1-ஆம் நாள் பிரெஞ்சு இந்தியா விடுதலை பெற்றது. போராட்டத்தில் முன்னணியில் நின்றிருந்த புதுச்சேரி கம்யூனிஸ்ட் தலைவர் வ. சுப்பையாவுக்கு மக்கள் மகத்தான வரவேற்பு அளித்தனர்.

சென்னையில் 1954 திசம்பர், 1955 சனவரி ஆரம்பத்தில் நடந்த அகில இந்திய சமாதான மாநாடு ஒரு மகத்தான நிகழ்ச்சியாகும்.

ஆந்திர மாநிலம் அமைவதில் தாமதம் ஏற்படுவ தைக் கண்டு வெகுண்டெழுந்த பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாநோன்பு மேற்கொண்டு 1953 செப்டம்பரில் உயிர்நீத்தார். ஆந்திர மக்களின் கோபத்துக்கு அடிப ணிந்து 1953 அக்டோபர் 1-இல் ஆந்திர மாநிலம் உரு வானது. ஆந்திர அமைச்சரவை 1954இல் கவிழ்ந்தது. 1955 மார்ச்சு மாதம் நடைபெற்ற தேர்தலில் காங்கிர சுக் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு 15 இடங்கள்தான் கிடைத்தன. இத்தகைய தோல்விக்கு அங்கிருந்த பி.எஸ்.பி., ஜெ.எல்.பி. போன்ற கட்சிகளுடன் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் உடன்பாடு காணததுதான் காரணமாகும். சனநாயகக் கட்சிகளை ஒன்றிணைக்காத தவறுக்குக் கம்யூனிஸ்ட் கட்சி, அன்று ஆந்திரத்தில் மிகப்பெரிய விலை கொடுக்க நேர்ந்தது.

1955 ஏப்ரல் 6 அன்று தில்லியில் ஆசிய நாடுகள் மாநாடும், 1955 ஏப்ரல் 18-24 ஆகிய நாள்களில் இந்தோனேசியாவின் பாண்டுங் நகரில், ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளின் மாநாடும் நடைபெற்றன. இம்மாநாடுகள் முடிந்தவுடன், 1955 சூன் மாதத்தில் பிரதமர் நேரு மாஸ்கோ சென்றார். அங்கு வெளியிடப் பட்ட நேரு - புல்கானின் கூட்டறிக்கை முற்போக்குச் சக்திகளின் வாழ்த்துகளைப் பெற்றது. இக்காலத்தில், மார்க்சியம் - லெனினியத்தினை வலதுசாரி நோக்கில் திருத்திக் கூறும் ‘திருத்தல்வாதம்’ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வேகமாக நுழைந்தது. 1955இல் ஆவடியில் நடந்த காங்கிரசுக் கட்சியின் மாநாடு கொடுத்த “சோசலிச பாணி சமுதாயம்” என்னும் முழக்கம் கண்டு சாதாரண மக்கள் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பகுதியினரும் மயங்கினர்!

இதனால் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் மீண்டும் எழுந்தன. கம்யூனிஸ்ட் கட்சி மக்களுடன் இணைந்து செயல்படும் நடைமுறைத் திட்டங்களை உருவாக் காமல், அடிப்படைவாதங்களில் கவனம் செலுத்தி, மக்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தனிமைப் பட்டது.

இருவித நிலைப்பாடுகள் :

1951-இல் உருவான கட்சித் திட்டத்தில் சில அடிப் படையான குறைகள் இருந்தன. குறிப்பாக இந்தியா வுக்கு இன்னும் “முழுமையான உண்மையான சுதந்தரம்” கிடைக்கவில்லை என்று கூறியது. அப்போ திருந்த அரசு ஏகாதிபத்தியவாதிகளின் ஒரு பொம்மை அரசு எனும் தொனி அத்திட்டத்தில் இருந்தது. எனவே அதில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டியது அவசியமாயிருந்தது.

அதே ஆண்டு செப்டம்பரில் கூடிய மற்றொரு மத்தியக் குழுக் கூட்டம் புரட்சியின் தன்மை, கட்டம், போர்த்தந்திரம் போன்றவற்றைப் பொறுத்த வரையில் கட்சித் திட்டம் கூறுவது இன்றைக்கும் பொருந்தும் என்றே மத்தியக்குழு கருதியது. இதர வேறு சில விஷயங்களைத் திருத்துவது என வந்தபொழுது, எப்படித் திருத்துவது என்பது தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

“ஆளும் வர்க்கக் கூட்டுக்கு யார் தலைவர் என்ற விஷயம் கட்சித் திட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட வில்லை. இப்பொழுது “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் தொடர்புகள் கொண்டுள்ள பெருமுதலாளிகளால் தலைமை தாங்கப்படுகிற முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசு” என தற்போதைய அரசு குறித்து மதிப்பீடு செய்யப் பட்டிருப்பதன் மூலம் அது தெளிவுபடுத்தப்படுகிறது.”

இந்தக் கணிப்பை ஏற்காத ஒரு பிரிவினர் மத்தியக் குழுவிலும் கட்சிக்குள்ளும் இருந்தனர்.

அரசின் ஆளும் வர்க்கத் தன்மை பற்றிய கணிப்பு சரியல்ல என்றும், அரசிற்கு, “பெருமுதலாளிகளில் உள்ள முற்போக்குப் பிரிவினர் தலைமை தாங்கு கின்றனர் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும் என்றும், இல்லையெனில், வெளிநாட்டுக் கொள்கை யில் ஏற்பட்டுள்ள முற்போக்குத் தன்மைக்கும், தொழில் மயமாக்குவதற்கு அழுத்தம் கொடுக்கும் இரண்டாவது அய்ந்தாண்டுத் திட்டம் போன்ற உள்நாட்டுக் கொள்கை களுக்கும் என்ன விளக்கம் கொடுக்க முடியும்?” என்று இந்தப் பிரிவினர் அன்று வினா எழுப்பினர்.

ஒரு வர்க்கம் என்ற முறையில் முதலாளிகளின் இரட்டைத் தன்மைதான் (Dual Role) கடந்த கால நிகழ்ச்சிகளையும், அண்மைக்கால நடப்புகளையும் திட்டவட்டமான முறையில் விளக்கும் என்று மத்தியக் குழு கருதுகிறது. தேசிய இயக்கத்தின் வரலாற்றை நோக்குங்கள். தேசிய இயக்கம் முழுவதிலும், முதலாளி கள் போராட்டம், சமரசம் என மாறி மாறி நிலைப்பாடு எடுத்து வந்தனர்.

1919-22 போராட்டம், அத்தோடு சௌரி சௌராவைச் சொல்லி போராட்டம் வாபஸ். 1930 போராட்டம், அதைத் தொடர்ந்து மற்றொரு சுற்று சமரசம், 1942-இல் யுத்த காண்ட்ராக்டுகள் மூலம் எந்த டாட்டாக் களும், பிர்லாக்களும் கோடிக்கணக்கில் சம்பாதித்தார் களோ, அவர்களே மேலிருந்து வேலை நிறுத்தங்க ளை நடத்தினர். “செய் அல்லது செத்துமடி” போராட் டத்திற்கு உதவி செய்தனர். இந்தப் போராட்டங்களில் எல்லாம் காந்தியடிகள் போராட்டங்களை ஆரம்பிப்பவ ராகவும் இருந்தார்; சமரசங்களில் சிற்பியாகவும் இருந்தார். “சரியான ஆதாரங்களுடன்” சமரசங் களைச் செய்து கொள்வதற்காகப் போராட்டங்கள் நடத்தப் பட்டன. சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் எதிர்காலப் போராட்டங்களை வலுப்படுத்துவதற்காக இந்தச் சமரசங்கள் செய்யப்பட்டன. போராட்டத்துக்குத் தேசிய முதலாளிகள் தயாராக இருந்தார்கள் என்றும், ஒத்துழைக்கும் முதலாளிகள் போராட்டங்களுக்குத் துரோகம் இழைத்தார்கள் என்றும், சமரசத்தைத் திணித்தார்கள் என்றும் சொன்னால் அது கேலிக் குரியதாக இருக்கும்.

உண்மை என்னவென்றால் காந்தியடிகள் தலை மையில் முதலாளிகள் அனைவரும் வியக்கத்தக்க வகையில் ஒன்றுபட்டு இருந்தார்கள். கொள்கைகள் தொடர்பாக மோதல்கள் ஏற்பட்டது உண்மைதான். தேசிய இயக்கம் முழுவதும் பெருமுதலாளிகள்தாம் ஆதிக்கத் தலைமையில் இருந்தனர். எனவே கொள் கைத் தொடர்பான மோதல்கள், ஏகாதிபத்தியத்திற்குச் சீர்திருத்தவாத எதிர்ப்பு என்றும் முதலாளிகளின் அடிப்படைக் கட்டமைப்புக்குள் தீர்க்கப்பட்டன. இதே கொள்கைதான் 1947-க்குப் பிறகு மற்றொரு புதிய மட்டத்தால் தொடர்ந்தது. நாம் இப்பொழுது சந்தித்துக் கொண்டிருப்பது ஒரே வர்க்கத்தினுடைய ஒரே அடிப் படைக் கொள்கையின் இரண்டு அம்சங்களைத்தான். அகில இந்தியாவிலும் கட்சி அணிகளிடையே உள்கட்சி விவாதம் நடந்தது.

காங்கிரசு அரசின் உள்நாட்டுக் கொள்கைகளும் முற்போக்கானவைதான். மத்தியிலே காங்கிரசு - கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு அமைக்க வேண்டும். இதுதான் ஒரு சாராரின் கருத்து. திருத்தல் வாதத்தின் முழு உருவம் வெளிப்பட்டது.

1955-லிருந்து இருவித நிலைப்பாடுகள் கட்சிக்குள் நிலவிவந்தன. ஒன்று, காங்கிரஸ் கட்சியோடும், ஆட்சி யோடும் உறவு கொள்வது. மற்றொன்று, காங்கிரசு ஆட்சியை அகற்றிட ஒரு விரிந்த சனநாயக முன்னணி யைக் கட்டுவது; அதற்காக மக்களைத் திரட்டுவது.

இவ்வாறு உட்கட்சி விவாதம் நடந்து கொண்டிருந்த பொழுது, கோவா விடுதலை இயக்கம் எழுந்ததும், சோவியத் தலைவர்கள் இந்தியா வந்த மகத்தான நிகழ்ச்சிகளும் நடந்தன.

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மாநாடு 1952 அக்டோபரில் மாஸ்கோவில் நடைபெற்றது. 1953 மார்ச்சு 6-ஆம் நாள் சோவியத் நாட்டின் மாபெரும் தலைவர் ஸ்டாலின் மறைந்தார். ஸ்டாலின் மறை வுக்குப் பிறகு குருச்சேவ்-புல்கானின் ஆட்சி இரஷ்யா வில் ஏற்பட்டது சோவியத் கட்சியின் 20-ஆவது மாநாடு 1956 ஆரம்பத்தில் கூடியது. கட்சியின் மத்தியக் குழுவில் குருச்சேவ் அறிக்கை சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கை உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் திருத்தல்வாதம் நுழைவதற்கு வழி ஏற்படுத்தியது. ஏகாதிபத்திய வாதிகளின் வலிமையைக் குறைத்து மதிப்பிடுவது என்பதும், சோசலிச முகாம் நாடுகளின் சக்தியை மிக அதிகமாக மதிப்பிடுவது என்பதும் ஆரம்ப மானது. இதன்காரணமாக வர்க்கப் போராட்டம், ஏகாதி பத்திய சக்திகளுக்கு எதிரான எச்சரிக்கை உணர்வு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதியான ஆதரவு போன்ற வற்றின் முனை மழுங்கடிக்கப்பட்டது.

மேலும் யுத்தங்களைத் தடுக்க முடியும் என்றும், சோசலிசத்தை சமாதான முறையில் அடைய முடியும் என்றும், உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஒரு புதிய கருத்தோட்டத்தை, இந்த அறிக்கை பரிந்துரைத்தது. இந்தச் சூழலில், இனி சோசலிசத்தைச் சமாதான முறைகளிலேயே - நாடாளுமன்ற அமைப்பைப் பயன் படுத்தியே - அடைந்துவிட முடியும் என்னும் கருத்தையும் குருச்சேவ் அறிக்கை முன்வைத்தது. இந்த மாநாட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுச் செயலாளர் அஜாய் கோஷ் தலைமையில் குழு ஒன்று சென்று கலந்துகொண்டது. அக்குழுவின் சார்பில், கேரளத்தில் பாலக்காட்டில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நான்காவது மாநாட்டில், சோவியத் கட்சியின் 20-ஆவது மாநாடு பற்றி ஓர் அறிக்கை சமர்ப்பித்தார் அஜாய் கோஷ்.

- தொடரும்

Pin It