தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மழை யின்மையால் வறட்சி அதிகமாக உள்ளது. அதிலும் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி யில் கடந்த 18 மாதங்களாகப் பாதிப்பில் உள்ளது. மிக, மிக சொற்ப மாக பகுதி மக்களுக்கு நிவாரணம் கொடுத்துள்ளனர். இப்பகுதி மக்களை எந்தவொரு ஊடகமும் கண்டுகொள்ள வில்லை.

தமிழக அரசு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் ரூ.1.05 இலட்சம் கொடுக்கின்றது. இந்திய பிரதமர் ஒரு நாளைக்கு மாற்றுடைகளுக்கு மட்டும் பெருந்தொகை செலவாகின்றது. சின்னத்திரையில் எங்களை நடிகர் கமல ஹாசன் இழிவுபடுத்திவிட்டார் என்பது போன்ற திசைதிருப்பும் செய்திகளையே ஊடகங்கள் நேர்மையை இழந்து தினமும் கூலிக்கு மாரப் படிது போல் செயல்படுகின்றன.

விவசாயத்திற்கு நீர் ஆதாரம் தேவை. கல்விக் கொள்கையைக் கைப்பற்றி மத்திய அரசு, மாநில அரசுகளை அதுவும் 1.5 இலட்சம் மாணவர்களின் மேல்படிப்பை தமிழக மாணவர்களுக்குக் கொடுக்க மறுப்பது, தமிழகத்தில் பா.ச.க. எங்கேயும், எப்போதும் தனித்து நின்று வெற்றி பெறமுடியாது என்பதால் பழிவாங்குகின்றனர்.

கல்வியைக் கையில் எடுத்த மத்திய அரசு நீராண்மையைக் கையில் எடுத்தால் வறட்சிக்கு உடனடி தீர்வு காணலாம். ஒரு வார்த்தையில் “ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது” என்று கூறிய அரசு நதிநீர் சிக்கலைக் கையில் எடுத்து பகிர்ந்து கொடுக்கலாம்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உயர்த்திய ஊதியத் தையும், தொகுதி மேம்பாட்டு தொகையையும் சேர்த்து பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ.25,000 கொடுக்க முன்வர வேண்டும்.

குடிநீருக்கு மனிதர்களும் விலங்குகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பசுவதை என்று கூறி இந்திய மக்களைப் பிரிக்க நினைக்கும் தீவிரவாத கும்பல் திருவண்ணாமலை யில் இறக்கும் பசுக்களையும் விலங்குகளையும் தண்ணீர் கேட்டு போராடி வாங்கித் தருவார்களா?

மதத்தைத் தீவிரவாதம் காப்பாற்றுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற முடியாத மக்கள் விரோதிகளே தொடர்ந்து ஆட்சி செய்கின்றனர். எந்த ஒரு கட்சியும் தன் கட்சியின் வளர்ச்சியை தவிர, கட்சியின் கொள்கையைக் கூட கண்டுகொள்வதில்லை. சுயநலக் கட்சிகளே நம்மை ஆளு கின்றன; இந்நிலையை மாற்ற மக்கள் முன்வரவேண்டும்.

Pin It