ஆசிரியர்: கவிதாசரண்

சந்தா விவரம்

10 இதழ்கள்: ரூ.200
25 இதழ்கள்: ரூ.500
50 இதழ்கள்: ரூ.1000
வெளிநாடு தனி இதழ்: $2

தொடர்பு முகவரி:

கவிதாசரண்
31, டி.கே.எஸ். நகர்,
சென்னை - 600 019
தொலைபேசி: 044-2574 0199
கைபேசி: 98849 50541

கடைசியில்
கருணாநிதியும் ஜெயலலிதாவும்
கைகுலுக்கிக்கொண்டனர்
ராஜபக்சேவின்
மரியாதைக்குரிய விருந்தினர்களாய்.
கர்னல் கருணா
விமானத்தளத்துக்கே வந்து
தமிழ்வணக்கம் கூறி
அவர்களை வரவேற்றார்:
"உலகத் தமிழர்களின்
தமிழீனத்தலைமைகளே
நீவிர் நீடூழி வாழ்க!”
என்று முகமன்கூறி.

இந்த உலகம்
இத்தனை மரமா
இந்தியா- சீனா- பாகிஸ்தானின்
முந்நூறுகோடி ஆள்மையை
தன்னந்தனி நின்று
தகர்த்துக் களமாடும்
ஈழச் சீற்றத்தைப்
பார்த்து ரசிக்க
ஒரு வீரன்கூடவா இல்லை?
அவமானமாயிருக்கிறது
மனிதனாய்ப் பிறந்ததற்கு.
வெள்ளைத்தோல் அன்னையின்
கள்ள வன்மத்தின் கீழ்
அருவருப்பாய் இருக்கிறது
இந்தியனாய் இருப்பதற்கு.
Pin It