பைட்டோலக்கா டிகேன்ட்ரா இது தாவர வகையைச் சேர்ந்தது. இது ஒரு மூலிகைச் செடியாகும். பல கிளைகள் கொண்ட இத் தாவரத்தின் வேர்கள் மனிதனின் கால்களின் கனத்திற்கு இருக்கும்.இச் செடி அமெரிக்கா, ஆப்பிரிக்கா, சைனா போன்ற நாடுகளில் பரவலாகக் காணப்படுகிறது. அமெரிக்காவில் இத்தாவரத்தின் தண்டிலிருந்து எடுத்த சாறினை கொதிக்கும் நீரில் ஊற்றி டீ போல் அருந்துகிறார்கள்.

வாத நோய், கான்சர் போன்ற வற்றிற்கு நாட்டு மருந்தாக இதன் பழங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகளை அரைத்து பச்சிலை வைத்தியத்தில் நாய்களுக்கு வரும் கான்சர் கட்டிகளுக்கு மேற்பூச்சு மருந்தாக பயன்படுத்துகிறார்கள். இதன் பழங்களை உண்ணும் புறாக்கள் சிவந்த நிறத்தைப் பெறுகின்றன. அதே சமயம் உடல் பருமன் குறைகிறது. பசுவின் பாலில் ஏற்படும் குறைபாடுகளை நீக்குகிறது. சீழுடன் இரத்தம் கலந்து வருதல், நீர்த்த அல்லது கெட்டியான என்று மாறுபட்ட தன்மைகளை போக்குகிறது என்று பைட்டோலக்காவின் பழங்கள் நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

பனிக்காலத்தில் இச்செடியின் வேரிலிருந்து அல்லது பழுத்த பழத்திலிருந்து, அல்லது புதிதான பசுமையான இலைகளில் இருந்து சாறு எடுக்கப்படுகிறது. இந்தச் சாறு கொண்டு ஹோமியோபதி மருந்து தயாரிக் கப் படுகிறது.ஹோமியோபதியில் இம்மருந்து பல தரப்பட்ட வியாதிகளை பரிபூரணமாகக் குணப்படுத்துகிறது.

பைட்டோலக்காவினை சுரப்பிகளின் மருந்து என்று சொல்லலாம். காது மடலின் கீழ் உள்ள சுரப்பி, தாடையின் கீழுள்ள சுரப்பி, டான்சில் சுரப்பி போன்ற தொண்டை சுரப்பிகளிலும் மற்றும் பெண்களின் மார்பகங்களிலும் பெரிதும் பயன்படுகிறது.

தொண்டை வீங்கியும், நாக்கு தடித்தும் போகும். வாய் துர் நாற்றம் வீசும். கழுத்து விரைத்துக் கொள்ளும். எலும்புகளில் வலியும் வேதனையும் ஏற்படும். இத்தகைய தொண்டையடைப்பான் எனும் டிப்தீரியா நோய்க்கு மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மேலும் டான்சில் பிரச்சினைகளிலும் சிறப்பாக வேலை செய்கிறது. தொண்டையின் உட்புறம் மற்றும் உள் நாக்கு இவற்றில் சாம்பல் நிறத்தில் பூத்துப் போய் வலியும், வீக்கமும் உண்டாகும்.

பெரும்பாலும் இடது புற டான்சில் பாதிக்கப்படும். தொண்டை தொந்தரவுகளில் வெந்நீரால் வலி அதிகரிக்கும். குளிர்ந்த நீரையே குடிக்க விரும்புவர். சளி இருமலுடன் கண்கள் சிவந்து மணல் கொட்டியது போல் எரிச்சலும், கண்களில் இருந்து நீர் வடிதலும் இருக்கும். இந்த வேதனையைத் தொடர்ந்து கடுமையான சளி சேர்ந்து மூக்கு எலும்பு அரிக்கப்பட்டு அழிவு ஏற்படும் பொழுது துணை நிற்கும் பைட்டோலக்கா. வண்டியில் செல்லும் போது மூக்கு முற்றிலும் அடைத்துக் கொள்ளும். இதனால் வாயில்தான் சுவாசிக்க இயலும். சைனஸ் பகுதிகளிலும், மூக்கு துவாரங்களிலும் வலியும் வேதனையும் இருக்கும்.

தொண்டையில் சொரசொரப்பான உணர்வு இருக்கும், இத்துடன் மிகவும் குறுகிப் போனது போலவும், சூடான உணர்வும் தோன்றும். சூடாக எதையும் விழுங்க முடியாது. உணவை விழுங்கும் போது தொண்டையிலிருந்து காதுக்கு வலி பாயும். நாக்கு நுனி குங்குமமாக சிவந்து விடும். நிறைய உமிழ்நீர் சுரந்து கொண்டே இருக்கும். கன்னங்களின் உட்புறம் புண்கள் ஏற்படும் இது போன்ற நிலைகளில் அதி அற்புதமாக நலமளிககக் கூடியது பைட்டோலக்கா ஆகும்.

பெண்களுக்கும், பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் சிறந்த மருந்து. ஏனெனில் பால் சுரப்பிகளில் இதன் பணி மகத்தானது. மார்பகங்களில் வரும் கடினமான கட்டிகளையும், வீக்கங்களையும் குணப்படுத்த வல்லது இது. புண் போன்ற வலியுடன் வரும் வீக்கத்தை சரி செய்கிறது. பிரசவத்திற்குப் பின்பு பால் குறைவாக சுரப்பது, அல்லது வற்றிப் போய் விடுவது, மிகவும் கெட்டியான பால் சுரப்பு போன்ற பிரச்சனைகளில் தாய்க்கு ஒரு வரப் பிரசாதமாக நன்மையைச் செய்கிறது பைட்டோலக்கா எனும் இத்தாவர மருந்து.

மேலும் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது, மார்பில்இருந்து வலி எழும்பி முதுகு பின்பு கால்களுக்கு பின்பு உடல் முழுவதும் என்று வலி பரவும். பால் கொடுப்பதை நிறுத்திய பின்பும் நீர்த்த இரத்தத்துடன் பால் வெளியாகும் இத்தகைய வேதனைகளை விரைவில் போக்கி நலம் தரக் கூடிய சிறந்த மருந்து இது.

இது தவிர ஏற்கெனவே குழந்தை பேற்றின் போது ஏற்பட்ட மார்பக கட்டிகளுக்கு மேற்பூச்சு (ஆயின்ட் மென்ட்) களிம்புகளால் தற்காலிகமாக சரி செய்து இருப்பார்கள். ஆனால் உள்ளே புரையோடி இருக்கும் கட்டிகள் இப்போதைய பிரசவத்திற்கு பின்பு மீண்டும் தோன்றி புண்களை ஏற்படுத்தி தாங்கொணா வலியைத் தரும், சில சமயம் இரத்தமும் பாலுடன் கலந்து வரும். இது போன்ற துயரங்களை அறவே குணப்படுத்தும் பேராற்றல் மிக்கது இம்மருந்து.

மேலும் குழந்தைகள், பல் முளைக்கும் காலத்திலும், பால் பற்கள் தோன்றும் பொழுதும், அடிக்கடி பற்களை இறுக்கிக் கடித்துக் கொண்டிருப்பார்கள். வாதம், கீல் வாதம் போன்ற நோய்களில் இரவில் வலி கடுமையாக இருக்கும். படுக்கை சூட்டினால் அதிகரிக்கும். எலும்புகளில் வலி ஏற்படும். இடுப்பில் வலி உண்டாகி கால்களிலும் வலி பரவி கால்கள் தரையை தொட இயலாமல் மேல் நோக்கி இழுக்கும்.

குதி கால்களில் வலி மின்சாரம் பாய்வது போல் ஓடும். சிறுநீரகங்களில் வலி இருக்கும்.ஆசன வாயில் இருந்து வலி புட்டப் பகுதிகளின் நடுவே உள்ள இடை வெளியில் பாயும். ஆண்களுக்கு பிறப்புறுப்பின் நடுப் பகுதிக்கும் வலி ஓடும்.

குறிப்பிட்ட வியாதிகளுக்கு மட்டுமே பிற மருத்துவ முறைகளில் இது மருந்தாக பயன்படுகிறது, ஹோமியோ பதியில் மருந்தாக்கப் படும்போது பல கோணங் களில் பலவிதமான வியாதிகளை ஒரு சேர குணப்படுத்த முடியும் என்பதுதான் ஹோமியோபதியின் தனிச் சிறந்த தன்மையாகும். அதுவும் நோய்களை முற்றிலும் குணமாக்குவது என்பது தான் ஹோமியோபதியின் சிறப்பம்சம்.

Pin It