நோயாளிகள் தாராளமாய் உடலுறவில் ஈடுபடலாம் என்று சமீப கால ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலுறவினால் ஆஸ்துமா, இரத்த அழுத்தம், இதயக் கோளாறுகள், மன நோய் உள்ளவர்கள் பயனடைவார்கள். உடலுறவில் ஈடுபடுவதனால் ஏற்படும் உணர்ச்சிப் பிரவாகத்தினால் ஆஸ்துமா நோயுள்ளவர்களின் பிடிப்புகள் உடனே தடுத்து நிறுத்தப்பட்டு விடுகின்றன. அவ்வாறே உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களின் இரத்தக்குழாய் இறுக்கமும் தளர்த்தப்பட்டு விடுகிறது. நரம்பு, தசைபிடிப்பு, முதுகுப் பிடிப்பு, வலி உள்ளவர்களுக்கும் உடலுறவு நல்ல பலனைத் தருகிறது என்று மருத்துவஆராய்ச்சிகள் கூறுகின்றன. மற்றும் டென்ஷன், மன இறுக்கம், கவலை, படபடப்பு இவைகளுக்கு உடலுறவு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.

Old people love1994ல் நடைபெற்ற ஸ்வீடன் நாட்டு ஆராய்ச்சி அறிக்கை, வயதான பிறகும் உடலுறவில் ஈடுபட்டவர்கள் நீண்ட நாள்கள் உயிர் வாழ்கிறார்கள் என்று கூறுகிறது. “வயதானவர்களுக்குக் குடும்ப வாழ்க்கை இல்லாமல் இருப்பதுதான் நோய்க்குக் காரணம் என்று நிச்சயமாய்க் கூறலாம். தமது மருத்துவமனையில் இதயநோயால் பாதிக்கப்பட்ட 75 சதவிகித நோயாளிகளுக்குப் பாலியல் வாழ்க்கை உணர்ச்சி இல்லாமையே காரணம் என்று அவர்களை ஆய்ந்தறிந்து கேட்டதில் தெரிந்தது” என்று அமெரிக்கப் பிரபல மருத்துவ மேதை டாக்டர் ஜான் வார்சல் என்பவர் கூறுகிறார்.

பாலுறவு என்பது நல்ல தூக்க மருந்தாகும். நிம்மதியற்ற மனிதனுக்குத் திருப்தியையும், உடலுக்கு நல்ல ஓய்வுடன் ஆழ்ந்த தூக்கத்தையும் அளிப்பது உடலுறவு ஒன்று தான்.

ஒரு திருப்தியான புணர்ச்சிக்குப் பிறகு உடலும் மனமும் தளர்ந்து ஓய்ந்து தானாகவே தூக்க நிலைக்குப் போய்விடுவதாக பிரிட்டனிலுள்ள இராயல் சொசைட்டி மருத்துவக் கழகம் 1993 இல் கண்டறிந்துள்ளது. இந்தக் தூக்கம் வரக் காரணம் என்ன? உடல் உறவின் உச்சக்கட்டத்தின் போது எண்டோர்பின்கள் மூளைக்குச் செல்வதால் இவை சிறந்த வலி நிவாரணியாகவும், தூக்க ஊக்கியாகவும் செயல்படுகின்றன. மேலும், அந்தச் சமயத்தில் வெளிப்படும் ஒப்பியட்டுகள் என அழைக்கப்படும் தூக்கக் கலக்கம் கலந்த நிலையையும், உடலில் களைப்பையும் அதே சமயம் முழு மனநிறைவான உணர்வையும் தருகின்றன. உடலுறவின் உச்சக்கட்டம் என்னும் ஆர்கசத்தின்போது போதை போன்ற ஒருவித மறதித் தன்மையும் ஏற்படுவதால், அந்த நேரத்தில் அனைத்துத் தொல்லைகளையும், கவலைகளையும் மறந்து விடுகின்றோம்.

சரியான முறையில் அன்போடும், ஆதரவோடும் கட்டி அணைத்து, முத்தமிட்டு, வருடி, தட்டி, பிடித்துவிட்டும் மசாஜ் செய்தும் கிளர்ச்சி ஏற்படுத்தின பின் உடலுறவுக்குச் செல்லலாம். உடற்பயிற்சி செய்யும்போது உள்ள சக்திக்குறைவு உடலுறவில் இருக்காது. நல்ல உடற்பயிற்சி செய்தபின் ஏற்படும் தூக்கத்தைவிட நல்ல புணர்ச்சியில் ஈடுபட்டபின் ஏற்படும் தூக்கம் ஆழ்ந்ததாய் இருக்கும் என மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். நல்ல உடலுறவுக்குத் தகுதியாகும் போது மார்பகம் உப்பும்; யோனி விரிந்து பசை ஊறும்; உடலில் அசுரபலம் தோன்றும். அப்படியின்றி, இயந்திரம் போல உடலுறவில் ஈடுபட்டால் திருப்தியற்ற நிலை தோன்றித் தூக்கமின்மை உண்டாகும்; மனத்தில் பழைய கவலைகள் தோன்றும்.

மாதவிடாய் நின்றாலும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரக்கும்வரை 50, 60 வயது வரையிலுங் கூடப் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இருக்கும். அதனைப் போல, செக்ஸ் ஹார்மோன் டோஸ்டேரோன் சுரக்கும் 70, 80 வயதுவரை ஆண்களுக்கு உடலுறவில் இச்சையும், ஈடுபாடும் இருக்கும். இளவயதில் செக்ஸ் ஹார்மோன் சுரப்பது நின்றுபோனவர்கள் ஹார்மோன் சிகிச்சை செய்து கொள்வது உண்டு. ஆனால் மிகுந்த செலவாகும் ஹார்மோன் சிகிச்சையால் பக்கவிளைவாக நீரிழிவு, புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், யோகாசனம் ஆகியவற்றைப் பின்பற்றி ஹார்மோனைச் சுரக்க முயற்சி செய்வது நல்லது. ஹார்மோன் சுரப்பது சிலருக்கு 50 வயதில்கூட நின்று, விந்து வெளிவராது உறுப்பு எழும்பாது. ஆனால், சிலருக்கு 70, 80 வயது வரை ஹார்மோன் சுரப்பதால் அதுவரை உடலுறவில் ஈடுபட்டு விந்து வெளியிடத் தகுதியுள்ளவர்களாயிருப்பார்கள்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுணர்வு, வயது உணர்ச்சியில் வேறுபாடு இல்லை. விந்து விரைந்து வெளிவருவதற்கும், உடலுறவில் இச்சை இல்லாததற்கும் ஆரோக்கியக் குறைவு, நோய், மருந்து மாத்திரைகள், மது, புகையிலை, போதை, சிகரெட், எண்ணெய், கொழுப்பு, அதிக எடை ஆகியவை காரணமாகும்.

இதய நோய், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய், பாரிசவாயு என்னும் இருகால் வாதம், நீரிழிவு முதலியவற்றிற்கு அலோபதி மருந்தைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கும் உடலுறவில் இச்சை இருக்காது. விந்து விரைவில் வெளிவரும். தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் குடிப்பவருக்கு ஐந்தாண்டுகளில் காம இச்சை குறையும் என்று அமெரிக்காவிலுள்ள பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் நடந்த மருத்துவ ஆய்வு கூறுகிறது. சிகரெட்டு குடிப்பவர்களுக்கு, முகத்தில் சுருக்கம் ஏற்படும். அவ்வாறே தொடர்ந்து மது, போதைப் பொருள் ஆகிறவற்றிற்கு அடிமையானவர்களுக்கும் உணவில் நாட்டமிருக்காது காம இச்சையும் ஆண்மையும் பாலுறவும் குறைந்து விடும். எனவே, மருத்துவ ஆய்வின்படி நோய், மருந்து, மாத்திரை, புகை, புகையிலை, போதைப் பழக்கம் ஆகியவற்றைக் கொண்டவர்களுக்குப் பாலுறவில் உணர்ச்சியின்மை, ஆண்மையின்னை ஏற்படும்.

மூளை, மனநோய் மருத்துவத்திற்குத் தரும் மருத்தான டிரை சைக்கிளின் மருந்துகள், இரத்தக் கொதிப்பிற்கான ரிசர்ப்பின் மாத்திரைகள், அமீபா, சீதபேதிக்கு உரிய மெட்ரோநைட்சால், குடற்புண்ணிற்கான சிமிட்டின் ஆகிய மருந்துகள் சில சமயங்களில் ஆண்மையின்மையை ஏற்படுத்துகின்றன.

(நன்றி : மாற்று மருத்துவம் அக்டோபர் 2008)

Pin It