வீட்டிற்குள் நுழையும்முன்
டெலிட் செய்யப்படும்
கடைசியழைப்புகள்
எதிர்படுபவன் கண்களை
தவிர்க்க கீபேர்ட் லாக்
நாகரீகம் மறைக்க
வராத அழைப்பிற்கு ஹலோ
தவறான அழைப்பில் கிடைத்த
சரியான உறவு
சரியான உறவையும்
தடம் மாற்றும் அனாமத்து
சீதையிடம் இருந்திருந்தால்
மாயமானாவது மண்ணாவது
என்றாலும்
எண்ணைச் சொல்லச் சொல்லும்
தலைப்பு

***

அனுமாருக்கு உக்கி
பிள்ளையாருக்கு வடமாலை
சாமிக்கொரு அவசர
சல்யூட் முடித்து
ஓடி வெளியேறி
ஒரு வழியாய்
பையிக்குள் கிர்ர்ரிய
அழைப்பு யாருடையதென
பார்த்தவுடன்தான் நிம்மதி.
கடவுள்.

- நர்சிம்

Pin It