ஒரு வெள்ளை தாளை
வீணடிப்பதை விட
இந்த கவிதை
வேறு என்ன உணர்த்துகிறது
என்ற விமர்சனம்
எனக்கு பிடித்திருக்கிறது
எதை பற்றியும்
எழுதியாகிவிட்டது
மாறுபட்ட தளங்கள்
மனித உணர்வின்
அடர்த்தியான வடிவங்கள்
அத்தனையும்
பதிவு செய்யபட்டு விட்டன
நுட்பங்கள்..நுணுக்கங்கள்
துல்லியமாக சொல்லபட்டு
விட்டது..
ஆனால் ஒன்று
சிறந்தவை என்று
ஆயிரம் சொல்லலாம்
இதுதான் மிக சிறந்தது
என்று எதை
அடையாளம் காட்ட முடிகிறது?
அதற்கான ஒரு முயற்சியாய்
ஒரு வேளை
இது இருக்கலாமோ?
ஒரு ஆறுதல்
பின் பக்கம்
வெறுமையாய் இருப்பதுதான்.
- மணி.ஜி