நண்பர்களே!

       உணவு தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விண்ணை முட்டும் விலைவாசி; உயர்மட்டத்திலுள்ள ஆளும் வட்டாரங்கள் சொல்வதற்கும் அவர்களின் வாக்குறுதிகளும் மாறாக கிராமப்புறங்கலும் நகர்புறங்களிலும்  தொடர்ச்சியாகப்  பெருகிவரும்  வேலையின்மை; அதிகாரவர்க்கம் , நிர்வாகதுறை,  நீதித்துறை  என  அனைத்துத்  துறைகளின்  அனைத்து மட்டங்களிலும் முழுவீச்சில் ஊடுருவிப் பரவி யிருக்கும் ஊழல்; சாதரண மக்களால் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்திற்கு அதிகச்செலவு மிக்கதாய் முழுக்க முழுக்க வியாபாரமாகிப் போன கல்வியும், மருத்துவமும்; சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் செல்லரித்துப்போன கலச்சாரக்கட்டமைப்பும் சீரழிந்து ஒழுக்கமும் நேரமையற்ற போக்குகளும் இவையே இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சமூகத்தின் அவலமான சித்திரம். இவற்றையெல்லாம் சரிசெய்து ஒழுங்குபடுத்தும் அதிகார அமைப்பாகச்செயல்பட வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்களால் வழங்கப்பட்ட அதிகாரத்துடன் உருவாக்கப்பட்ட நாடளுமன்றம் உட்பட பல்வேறு மட்டங்களில் செயல்படும் மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகளோ அப்பங்கினை ஆற்றத் தவறி நீண்ட காலமாகி விட்டது. அவை அனைத்தும் தங்களின் சுயலாபத்திற்காகவும் ஆடம்பரமான வாழ்க்கைக்காகவும் பொதுபணத்தைச் சூறையாடும் கொள்ளைக்காரர்களின் அமைப்புகளாக மாறிவிட்டன.

 இக்கோளாறுகள் எல்லாம் சிலர் நினைப்பது போலவே சொல்வது போலவே ஆங்காங்கே ஒருசிலர் தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டதனால் அல்லது செய்யக்கூடாததைச் செய்ததனால் ஏற்பட்டவை அல்ல.அவர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்திருந்தால் இந்நிலைமை ஏற்பட்டுருக்காது என்பதல்ல. நமது சமுதாயத்தில் நிலவும் முதலாளித்துவ அமைப்புமுறை இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடியின் தவிர்க்க முடியாத விளைவுகளே இவை. நமது நாட்டின் முதலாளித்தும் , ஏகாதிபத்தியக் கட்டத்தை ஏற்கனவே அடைந்து, இன்று இறக்கும் தருவாய்க்கு வந்துவிட்டது. எனவே மக்களுக்கு உண்மையில் நல்லது எதனையும்-முற்போக்கானது எதனையும் வழங்க முடியாததாக அது ஆகிவிட்டது.

உலகளவில் முதலாளித்துவம் இன்று மிக தீவிரமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. முதலாளித்துவச் சந்தையின் உற்பத்தித் தேக்க நேருக்கடி, அதன் முன்றாவது பெரும் நெருக்கடிக் காலகட்டத்தில் உள்ளது. இந்த உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கம், இன்றைய உலகமயமாக்கல் சூழலில் நமது நாட்டு மக்களின் வாழ்க்கை நிலைமைகளை இன்னும் மிகமோசமானதாக ஆக்கும்; இதிலிருந்து நாடு தப்பவே முடியாது.

அழுத்தம் கூடிக்கொண்டே செல்லும் இக்கோளாறுகளுக்கான தீர்வு, அங்கொன்றும் , இங்கொன்றுமாக செய்யப்படும் பழுது பார்க்கும் வேலைகளின் மூலமோ அல்லது எவ்வளவு தான் கவர்சிகரமாகத் தோற்றமளிப்பதாக இருந்தாலும் பொருளாதார தூண்டுதளுக்காக வழங்கப்படும் நிவாரண உதவிகள் மூலமோ ஏற்பட்டுவிடப் போவதில்லை. இந்த முதலாளித்துவ அமைப்பை ஒரு புரட்சியின் மூலம் அதிகாரத்தில் இருந்து தூக்கிஎறிந்து விட்டு, வர்க்கமற்ற சுமுதாயமெனும் இலக்கை நோக்கிய முன்னேற்றப் பாதையில் சோஷலிச சுமுதாய அமைப்பை நிறுவ முடியும் அவ்வர்க்கம் மட்டுமே இதனை செய்து முடிக்கும்.

கடந்த நுற்றாண்டின் இறுதியில், சோவியத் யூனியன்  மற்றும் பிற சோஷலிச அரசுகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து , உலகளவில் கம்யுனிச இயக்கம் மாபெரும் தோல்வியைச் சந்தித்தது. அதன் மோசமான பின்விளைவு, நம் நாட்டில் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று அழைத்து கொண்ட அனைத்துக் கட்சிகளும் வர்க்கப் போராட்டப் பாதையை கைவிட்டு விட்டு அப்பட்டமாமாக நவீன திருத்தல்வாதப் பாதையாகிய வர்க்க சமரசப் பாதையினைப் பின்பற்றத் தொடக்கி விட்டன.எனவே நேர்மையாகச் சிந்திக்கும் அனைவரும் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியைப் புதிதாகக் கட்டி எளுப்பும் கடமையில் தம்மை தாமே அர்பணித்துக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும்.

அந்த இலக்கை நோக்கிய உறுதியான முதல் அடியே, மதுரையில் 2010 நவம்பர் 19 முதல் 21 வரை மூன்று நாட்கள் நடைபெறவிருக்கும் கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (CWP ) - யின் கன்வென்சன் ஆகும்.

இதனை வெற்றிகரமானதாக ஆக்கத் தங்களின் ஆதரவையும் உதவியையும் தயாரிப்புக் கமிட்டி அன்புடன் வேண்டுகிறது.

- சங்கர் சிங்

சேர்மன், தயாரிப்பு கமிட்டி

                         

                         பொதுக்கூட்டம்

 21 நவம்பர் 2010  மாலை 4 மணி மதுரை

       கண்ணையா முத்தம்மாள் திருமண அரங்கம்,

               1 -எ ,60 அடி ரோடு , செல்லூர், மதுரை.