மொழி பெயர்ப்பு என்பது அற்புதமான கலை. எந்த கலைப்படைப்பாக இருப்பினும் அதனை நமது தாய் மொழியில் படிப்பது என்பதற்கு ஈடானது ஏதுமில்லை. ஆனால் வாசகனைச் சரியாய் போய்ச் சேர சரியான சொற்கள் தேவை.

சாதாரணமாக நாம் வைத்திருக்கும் அகர முதலியில் நுணுக்கமாக சொற்களுக்கான பொருள்கள் கிடைப்பதில்லை. அதற்கெனவே தனியே இருக்கும் சொல்லடைவுகள்தான் பொருத்தமாக இருக்கும். அப்படியான சொல்லடைவுகளும் (Glossary) வேளாண்மை, நிர்வாகம், தாவரவியல் எனத் தேடித் தேடி பெருமதிப்பு கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.

இவையெல்லாம் ஒருங்கிணைந்து நம் கைக்குள் கிடைத்தால் எப்படி இருக்கும். அவ்வாறு நம் தேவையினை நிறைவு செய்யும் நோக்கத்தை எளிதாக சாதித்துக் காட்டுகிறது.

Google Play Store சென்று Tamil Technical Dictionary தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ தட்டச்சு செய்யுங்கள். மிக எளிதாக சரியான சொற்களை கண்டறிவீர்கள். இனி ஆங்கிலத்தில் உள்ள தொழில் நுட்ப சொற்களை ஆங்கிலத்திலேயே எழுதுவதை நாம் தவிர்க்கலாம்.

பாடபுத்தகத்தை தமிழில் வடிவமைப்பவருக்கு, ஆங்கிலத்தில் படிப்பவருக்குத் தொழில் நுட்பச் சொற்களுக்கு இணையான சொற்களைக் கண்டறிந்து புரிந்து கொண்டு படிப்பது. அறிவியல் பூர்வமான செய்திகளை மொழிபெயர்ப்பு செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

ஆங்கிலத்தில் நீதிமன்ற வழக்கு மொழி சற்று கடினமாக இருக்கும். இந்த செயலியின் துணைகொண்டு ஈடான தமிழ் சொற்களை நாம் கண்டறியவும் பயன்படுத்தவும் முடியும். வேளாண்மை, நிர்வாகம், வானியல், உயிரியல், தாவரவியல், சூழலியல், புவியியல் என 31 துறைகளுக்கான சொல்லடைவுகள் உள்ளன.

ஆங்கிலத்தில் சொற்களைப் பேசினால் தட்டச்சு செய்யும் வசதி, அடிக்கடி தேடப்படும் சொற்கள் என்ற வசதிகள் உள்ளன. எப்படி ஒரு தொழில் நுட்பச் சொல்லை உச்சரிக்க வேண்டும் என்பதற்கான ஒலி வடிவ அமைப்பும் நிறுவியுள்ளனர். மாணவர்கள், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர், தீவிரத்தேடல் உடையோர், வழக்குரைஞர் என சான்றோர்களை இச்செயலி வெகுவாகக் கவரும் என்பதில் ஐயமில்லை.

சொற்கள் இல்லை என்றாலும் கூட நாமே உருவாக்க முயற்சி செய்தல் நலம்தானே. இந்தச் செயலியை நிறுவக் கீழ்கண்டுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

 https://play.google.com/store/apps/details?id=nithra.technicaldictionary

Pin It