"மக்கள் எளிதில் நம்பக்கூடிய மிகப்பெரிய பொய்யை உருவாக்கி, அதை மக்களிடம் சொல்ல வேண்டும். அந்தப் பொய்யைத் தொடர்ந்து சொல்லச் சொல்ல மக்கள் அதை உண்மை என்று நம்பிவிடுவார்கள்" என்று சொல்கிறார் ஜோசப் கோயபல்ஸ் . ஜெர்மனியின் சர்வாதிகாரி, நாஜி கட்சியின் தலைவர் அடால்ப்ட் இட்லரின் நண்பர் இவர்.
1) சென்னையில் சிங்கப் பெண்ணே தொடக்க நிகழ்ச்சியில் இந்தியாவிலேயே, ட்ரோன் மூலம் கண்காணிப்பு என்பது இதுதான் முதல்தடவை என்று கூறினார் ஜேசப் விஜய் 09-06-2026 அன்று. இது அப்பட்டமான கோயபல்ஸ் பொய்.
சென்னைப் பெருநகர காவல்துறை 3.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதே ட்ரோன் கண்காணிப்பை அன்றைய டி.ஜி.பி. சைலேந்திரபாபு அடையாரில் தொடங்கி வைத்துள்ளார். அப்போது அவர் இந்தியாவில் இதுதான் முதல்முயற்சி என்றார். அந்தத் தேதி 29-06-2023, அது திமுக ஆட்சி, முதல்வர் மு.க.ஸ்டாலின். இதுதான் உண்மை, வரலாறு!
2) சில வாரங்களுக்கு முன் தென்கொரியாவுக்குப் போயிருந்த தவெக அமைச்சர் கீர்த்தனா, அங்கே ஹுண்டாய் நிறுவனத்தில் எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டு, தவெக ஆட்சிக்காகத் தானே தூத்துக்குடியில் கப்பல் கட்டும் துறைமுகம் அமைக்க ஒப்பந்தம் செய்ததாத ஒரு தம்பட்டம் அடித்தார். இதுவும் அப்பட்டமான கோயபல்ஸ் பொய்.
டிசம்பர் 2025இல் மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டு மாநாடு (Tamil Nadu Investment Conclave) அன்று, தென்கொரிய முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான ஹுண்டாய் நிறுவனம், தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் துறைமுகத்தளம் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின்-தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியது. இதுதான் உண்மை, வரலாறு!
3) தமிழ்நாட்டில் மின்வெட்டு தலைவிரித்து ஆடுகிறது. முதலில் கடந்த திமுக ஆட்சிதான் காரணம் என்று சொல்லிப் பார்த்தார்கள், எடுபடவில்லை. இப்போது சம்பந்தப்பட்டத் துறை அமைச்சர் நிர்மல்குமார் சொல்கிறார் யாரோ சிலர் 'பீஸ் கட்டைகளை'த் பிடிங்கிக் கொண்டு ஓடிவி டுகிறார்களாம். ஒரு வீடியோவும் 'எடுத்து' வெளியிட்டு விட்டார்கள், சபாஷ்!
இவை நமது கேள்விகள்: 1) தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு நடந்த மாவட்டங்களின் இடங்களில் எல்லாம் பீஸ் காரியர்களைப் பிடுங்கி விட்டார்களா, அவர்கள்? 2) மின் அழுத்தம் மிகுந்த இடத்தில், மின்சாரத்தை நிறுத்தாமல் பீஸ் கேரியரை எப்படி அசால்டாக சில வினாடிகளில் இவர்கள் பிடுங்குகிறார்கள்? 3) எல்லாம் இருக்கட்டும்; வீடியோவுக்குப் போஸ் கொடுத்துக் கொண்டா இவர்கள் பீஸ் பிடுங்குகிறார்கள், அதுவும் ஆவடியில், பட்டப்பகலில்? அடடா! இந்தப் பொய்யைக் கேட்டால் கோயபல்ஸ் செத்தே போவான். நல்ல வேளை அவன் ஏற்கனவே செத்துப் போனான்!
இப்படிப் பொய் சொல்லி முக்காடிட்ட அரசியல் செய்வதை விட்டு, தினமும் நிலவுகின்ற கொலை, கூட்டுக்கொலை, பாலியல் வன்முறை, கூட்டுப் பாலியல் வன்முறை, இருண்டு வரும் தமிழ்நாடு குறித்தவைகளில் கவனம் செலுத்தி, நாட்டுநலனில் அக்கறை காட்ட யாராவது முதல்வர் விஜய்க்கு வழிகாட்டுவார்களா?
- கருஞ்சட்டைத் தமிழர்