நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ளது. இதை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக அணி, இடது சாரிகள் உள்ளிட்ட மூன்றாவது மற்றும் நான்காவது அணியினர் பெருத்த தோல்வியைச் சந்தித்துள்ளனர். தமிழகத்தில் அதிகமான இடங் களைக் கைப்பற்றும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, நம்பப்பட்ட அதிமுக அணி 12 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்ததுடன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இ.க.க.தலைவர் தா. பாண்டியன் உள்ளிட்ட சில முக்கிய தலைவர்கள் தோல்வியடையச் செய்யப்பட்டுள்ளனர். பாமக போட்டி யிட்ட ஏழு தொகுதிகளிலுமே தோற்கடிக் கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இக் கட்சிகளின் தேர்தல் காலச் செயல்பாடுகள் குறித்தும் இதன் முடிவுகள் குறித்தும் நாம் - அகில இந்திய அளவில் இல்லாவிட்டாலும், தமிழக அளவில் மட்டுமாவது ஆய் வுக்குட்படுத்துவது நமது அடுத்தடுத்த செயல்பாடுகளுக்கு பயனுள்ளதாய் இருக்கும் என்கிற நோக்கில், இதை நிதானமாகப் பரிசீலிக்க வேண்டுவது அவசியமாகப் படுகிறது. தேர்தலுக்கு ஒரு 15, 20 நாள்களுக்கு முன்பான பல்வேறு ஊடகங்களின் கருத்துக் கணிப்பின்படி, அதிமுக கூட் டணிக்கு 28 ,30 இடங்களும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 10 முதல் 12 இடங்கள் வரையும்தான் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்க கிட்டத் தட்ட அதற்கு நேர் எதிர்மாறாக வந்திருக் கின்றன தேர்தல் முடிவுகள். எனவே, இப்படிப்பட்ட மாற்றத் திற்கான காரணங்கள் என்ன என்பதிலிருந்து நம் ஆய்வைத் தொடங்குவது பொருத்தமாக இருக்கும். அந்த வகை யில் இதற்கான காரணங்களாக நமக்குத் தோன்றுவது :
1. ஊடகங்கள் தெரிவித்த கருத்துக் கணிப்பில் மயங்கி பெருமிதமடைந்து மக்கள்தான் நம் பக்கம் இருக்கிறார் களே, நாம்தான் வெற்றியடையப் போகிறோமே என்கிற தெம்பில், மிதப்பில், அதிமுக அணியினர் மெத்த னத்தில் இருந்துவிட்டது போல் படு கிறது. ஆனால், 10, 12 இடங்கள்தான் கிடைக்குமா, படுதோல்வி அடைய வேண்டுமா என்கிற அச்சத்தில், பதட் டத்தில் கூடுதல் முனைப்போடும், தீவிரத்தோடும் பல்வேறு வகையிலும் களமிறங்கி பணியாற்றத் தொடங்கினர் திமுக அணியினர். இதனால் அதிமுக அணிக்கு பல பின்னடைவுகள் ஏற் பட்டன.
2. மக்களின் உணர்வு நிலைதான் வேட்பாளர்களின் வெற்றி தோல்வி களைத் தீர்மானிக்கிறது என்ற போதிலும், மக்களின் உணர்வு நிலை என்பது ஒன்று, அது வாக்காக மாறி வேட்பாளர்களுக்கு பயன் தருவது என்பது மற்றொன்று. இதில் மக்களி டையே நிலவும் உணர்வு நிலை மட்டும் வேட்பாளருக்கு வெற்றியைத் தேடித் தந்து விடாது. மாறாக அது வாக்காக மாறும் போது மட்டுமே வேட்பாள ருக்கு வெற்றியைத் தேடித் தரும். இந்த வகையில் மக்களின் உணர்வு நிலையை, நாடித் துடிப்பைத் தொடர்ந்து கண்காணித்து, கடைசி வரை அதைப் பின்தொடர்ந்து பாது காத்துஅவ்வுணர்வை வாக்காக மாற்று வதில் உரிய கவனம் செலுத்தத் தவறி விட்டனர் அதிமுக அணியினர். ஆனால் திமுக அணியினர் கடைசி வரை கவன மாக இருந்து அதை வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்துள்ளனர்
3. வாக்காளர்களில் இரு பிரிவினர் உண்டு. ஒன்று, கட்சி சார்ந்தோ அல்லது அரசியல் ரீதியில் தெளிந்தோ, இந்தக் கட்சிக்கு இன்னாருக்குத்தான் வாக் களிப்பது என்று திட்டவட்டமாக முடிவு செய்து அந்த முடிவின்படி வாக்களிப் பவர்கள், இந்த வாக்குகளை யாரும் என்ன செய்தும் மாற்ற முடியாது. இதை விலை கொடுத்தும் வாங்க முடியாது. மற்றொன்று இப்படி கட்சி சார்போ, அரசியல் தெளிவோ அல்லாது அந்தந்த நேரத்துக்கு - ஒருவரைத் தேர்வு செய்து அதாவது காசு கொடுப்பவர்கள், வேண்டப் பட்டவர்கள், அல்லது பகுதியில் செல்வாக்கு மிக்கவர்கள் பரிந்துரைப் பவர்கள், எனப் பார்த்து - முடிவு செய்து அதனடிப்படையில் வாக்களிப் பவர்கள். இதில் இரண்டாம் தரப்பு வாக்குகளைப் பெறு வதில் அதிமுக அணியினர் தீவிர முயற்சிகள் மேற்கொள் ளவில்லை என்பதோடு, முதல் தரப்பு அணியினரையும் வாக்கு களாக மாற்றுவதில் உரிய கவனம் செலுத்தவில்லை.
4. அடுத்து என்னதான் மக்களது உணர்வுகள் கான்கிரஸ்- திமுக அணிக்கு எதி ராக இருந்தாலும் அது வாக்காக மாறாத வரை அது வெற்றியைத் தேடித் தராது. எனவே அது வாக்காக மாற்றம் பெறச் செய் வதில் உள்ள உழைப்பு மிகவும் முக்கியமானது. இந்த உழைப்பு என்னதான் கொள்கை வழிப் பட்டதா னாலும் நடைமுறைச் செலவுகளைக் சரிக் கட்டாமல் இதை ஈடேற்ற முடி யாது. அதாவது வாக்காளர்களுக்கு காசு கொடுப்பது, வாக்குகளை விலைக்கு வாங்குவது என்பது ஒரு புறமிருக்க, கை வசம் உள்ள ஆதரவு வாக்காளர்களையே வாக்குகளாக மாற்றுவதற்கும் நடைமுறைச் செலவுகளுக்கு பணம் தேவைப் படுகிறது. இந்த இரண்டு வகை செலவினங்களிலுமே அதிமுக அணியினர் போது மான கவனம் செலுத்தாமல் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டு உள்ள ஆதரவையும் கோட்டை விட்டதாகத் தெரிகிறது.
5. எங்கே தோற்றுவிடுவோமோ என்கிற அச்சத்தில் வாக்காளர்களுக்கு 100, 500 என்று திமுக அணியினர் வாரியிறைக்க, நாம்தான் ஜெயிக்கப் போகிறோமே, மக்கள் எல்லாம் நம் பக்கம்தானே இருக்கிறார்கள் என்கிற மிதப்பில் அதிமுக அணியினர் போதுமான அளவு தாராளமாய் செலவு செய்யாமல் பணத்தை இறுக்கிப் பிடித்திருக்கின்றனர். பல இடங்களில் மேலேயிருந்துவந்த பெட்டியைக் கூட கீழே இறக்கவில்லை. இடையிலேயே அமுக்கி விட்டனர் என்கிற பேச்சும் அடிபட்டது. தவிர சாதாரண மக்களும் திமுக அணி ஓட்டுக்கு ரூ. 100,-200 தருகிறது. நீங்கள் 50 ஆவது குடுங்களேன். உங்களுக்கு போடுகிறோம் என்று வெளிப்படையாகவே கேட்டும், யாரும் அவர்களது வேண்டுகோளுக்கு செவி சாய்த்ததாகத் தெரியவில்லை. இப் படிப்பட்ட நிலையில் அந்த வாக்குகள் இயல்பாக இந்த அணிக்கு வராது போயிருக்கும் அல்லது எதிர் அணிக்குப் போகும் வாய்ப்பே கூடுதலாக இருந் திருக்கும்.
6. தேர்தலில் வெற்றி பெற வாக்கு களை காசு கொடுத்து விலைக்கு வாங்கு வது என்பது ஒரு உத்தி என்றால் எதிர்த் தரப்பு வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது, செயலிழக்கச் செய்வது என்பதும் ஒரு உத்தி. இந்த உத்தி, வன்முறை, அச்சுறுத்தல் மூலமும் நிகழலாம். அல்லாது சத்தமில்லாமல் காசு பணத்தை வைத்து அழுத்தியும் நிகழ்த்தலாம். இந்த வகையிலும் பல இடங்களில் திமுக அணியினர் அதிமுக அணியினரை வீழ்த்தியதாகத் தகவல். அதாவது, மாற்று அணியின் அடி மட்டப் பொறுப்பாளர்களை, சிற்றுhர்ப் புற முன்னணி ஊழியர்களை அணுகி அவர்கள் எதிர்பாராத ஒரு தொகையை வெகுமதியாகத் தந்து தேர்தல் அன்று ஒருநாள் அவர்களை செயல்பட விடா மல் முடக்கிப் போடுவது அல்லது ஏதாவது சாக்குபோக்கின்வழி வெளியூர் அனுப்பி விடுவது என்கிற உத்தியையும் பல இடங்களில் காண்டிருக்கின்றனர். தேர்தலுக்கு முன் என்னதான் மாங்கு மாங்கு என்று வேலை செய்தாலும், தேர்தல் அன்று ஒரு நாள் செய்யும் வேலைதான் முதன்மையானது, அது வாக்காளர்களை வாக்காக மாற்றி வெற்றியை ஈட்டித் தருவது என்பதால் அந்த ஒரு நாள் வேலைக்கு கூடுதல் முக்கியத்துவம் தேவைப்படுகிறது.
ஆனால் அந்த ஒருநாள் வேலை அதிமுக அணியின் பல இடங்களில் சுறுசுறுப்பாக நடந்த மாதிரி தெரியவில்லை. அன்று ‘பூத் செலவு’ என அழைக்கப்படும் வாக்குச் சாவடி செலவு - அதாவது வாக்குப்பதிவு நாள் அன்று ஓடியாடி உழைப்பவர்களுக்கு வாக்காளர் வரிசை எண் சீட்டு வழங்கி அவர்களை வாக்குச் சாவடி கொண்டு வந்து சேர்ப்பவர்களுக்கு என்று அவர்கள் உற்சாகப்படும் அளவுக்கு அவர் களுக்கு பணம் போய்ச் சேரவில்லை. எதிர் அணியினர் பணத்தைத் தண்ணீராய்ச் செலவழிக்க இவர்கள் அந்த அளவுக்கு வாய்க்காமல் சோர்வாகவும், சுணக்கமாகவுமே வெறிக்க வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்றும் ஒரு தகவல்.
7. இப்படிப்பட்ட பணிப் பின்னடைவுகள் ஒரு புறம் இருக்க, நிறைய வாக்காளர்களது பெயர்கள் விடுபட்டுப் போனதாகவும் புகார் எழுந்துள்ளது. அதாவது கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த வர்களிலேயே ஒவ்வொரு தொகுதியிலும் சில ஆயிரம் வாக்காளர் களது பெயர்கள் விடுபட்டுப் போயுள் ளன. பொதுவில் இதில் எல்லா கட்சி களைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்ற போதிலும் கணிசமான அளவில் அதிமுக ஆதரவாளர்கள் பெயர்கள் விடு பட்டுப் போயுள்ளதாகவும் குறிப்பிட்ட பகுதி அதிமுகவின் கோட்டை என்றால் அப்பகுதியில் கணிசமான வாக்காளர் பெயர்கள் விடுபட்டுப் போயுள்ளன என்றும் பல குற்றச் சாட்டுகள் ஒரு புறம் நிலவுகின்றன.
8. அடுத்து மிக முக்கியமானது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம். இந்த இயந்திரத்தில் சில பகுதிகளில் கோளாறு நிலவியதாகவும், இரட்டை இலையில் அழுத்தினால் சூரியனில் விளக்கு எரிவதாகவும் புகார்கள் எழுந் துள்ளன. இதை எந்த அளவுக்கு எடுத்துக் கொள்வது என்பது கேள்வி யானாலும், வாக்குச் சீட்டில் முத்திரை யிடும் வாக்குப் பதிவின் நம்பகத் தன்மை அளவுக்கு இந்த மின்னணு வாக்குப் பதிவை எடுத்துக் கொள்ள முடியுமா என்பது கேள்வியாகவே இருக்கிறது.
வாக்குச் சீட்டு முத்திரையிடும் முறையிலும் தில்லு முல்லுகள் நடைபெற வாய்ப்புண்டு, நடைபெற் றுள்ளன என்றாலும், அது நேரடியான நடவடிக்கைகளால் மட்டுமே சாத்தியம். ஆனால் மின்னணு வாக்குப் பதிவு அப்படியல்ல. இன்றுள்ள நவீன தொழில் நுட்பத்தில் நினைத்தால் வாக்கு யந்திரத்தை நெருங்காமல், அதன் மீது கை வைக்காமல், தொலை வியக்கிக் கருவி மூலமே அதில் விரும்பி யவாறு மாற்றங்கள் செய்ய வாய்ப் புண்டு. தேர்ச்சி பெற்ற தொழில் நுட்ப வல்லுநர்களை வைத்து இதில் ஏதும் செய்ய முடியாதா என்றால் முடியும். அதற்கு இந்த மின்னணு வாக்குப் பதி வில் சாத்தியமுண்டு. அது இந்தத் தேர்த லில் நடந்ததா என்பதற்கு நேரடி சான்று கள் இல்லையாயினும், பா.ம.க. தான் போட்டியிட்ட ஏழு இடங்களிலும் அதைத் தோற்கடித்தது, வை.கோ, தா.பா, வெற்றி பெற இயலாமல் போனது, ஆகியவை இதுபோன்ற சந் தேகங்களை எழுப்புகின்றன. எனவே வரும் தேர்தலில் இந்த மின்னணு வாக்குப் பதிவு முறையை மாற்றி பழைய வாக்குச் சீட்டு முத்திரையிடும் முறையையே கோரலாம்.
9. இத்துடன் தேர்தல் ஆணையம் பற்றியும், அது சார்ந்த சட்ட விதிமுறை கள் பற்றியும் சிலது சொல்ல வேண்டி யிருக்கிறது. தேர்தல் ஆணையம் சுயேச்சை யான அதிகாரம் பெற்ற ஆணையம். தேர்தல் நடத்தி முடிக்கும் வரை அதற் குத்தான் முழு அதிகாரமும் என்றெல் லாம் பெருமை பேசப்பட்டாலும், தேர்தல் காலங்களில் சில ஆணைகள் பிறப்பிக்க சட்ட ரீதியாகஅதற்கு அதி காரம் இருந்தாலும், நடைமுறையில் அதன் செயல்பாடு என்பது நடுநிலை யோடு இயங்குவதாக இருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே இருக் கிறது. ஒன்று தேர்தல் ஆணையம் என்ன தான் நேர்மையாக நடந்து கொள்வ தாகச் சொன்னாலும், உண்மை யாகவே அப்படி நடந்து கொள்ள முயன்றாலும், அது ஓரளவுக்குத்தான் இயலும், இயல் கிறதே தவிர, பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டு சமூகத்தில் செல்வாக்கு மிக்க வர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் ஆதிக்கமே மிகுந்திருக்கிறது. அப்பகுதி களில் அதிகார முறைகேடு கேட் பாரற்று நடந்தேறுகிறது.
என்னதான் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சுயேச்சையான அதிகாரம் படைத்த நடுநிலையான செயல்பாட்டா ளர்கள் என்று பீற்றிக் கொள்வதானாலும் தேர்தல் நடைமுறையை செயலாக்கும் அதிகாரிகள் மாவட்ட, வட்ட ஆட்சி யர்கள்,பிற அரசு ஊழியர்கள் ஆசிரியர் களே. தேர்தல் முடியும் வரை இவர் களுக்கு தேர்தல் அதிகாரிகள் என்று பெயர்தானே தவிர, மற்றபடி இவர்கள் வருவாய் அதிகாரிகள் மற்றும் பிற துறை ஊழியர்களே. சாதாரண காலங்களில் இயல்பாக இவர்கள் ஆட்சியாளர் களுக்கு, ஆதிக்க சக்திகளுக்கு கட்டுப் பட்டு நடப்பது போலவே தேர்தல் காலத்திலும் நடந்து கொள்கிறார்கள். இதனால் தேர்தல் ஆணையத்தின் சுயேச்சைத் தன்மை என்பதெல்லாம் ஒரு வரம்புக்குட் பட்டதுதானே தவிர மற்ற படி அது விரும்பினாலும் முழுமை யாய்ச் செயல்பட முடியாத நிலையே நீடிக்கிறது.
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தொடர்ந்து பின்தங்கி வருவதாக தேர்தல் அதிகாரியால் அறி விக்கப்படுகிறார். பிறகு நடுவில் வாக்கு எண்ணிக்கை பற்றிய நிலவரம் எதையும் அறிவிக்காமல் மௌனம் சாதிக்கிறார். அதன்பின் திடீரென்று ப.சிதம்பரம் முன்னணி வகிப்பதாக அறிவித்து தொடர்ந்து சொற்ப 3,354 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கிறார். இவை எல்லாம் பல ராலும் சந்தேகத்திற்குரியதாகவே நோக்கப் படுகின்றன. மேலிடத்தி லிருந்து ஏதோ கட்டளை வந்தே இந்த மாற்றம் என்றும் பேசப்படுகின்றன. எண்ணிக்கையின்போது இந்த மாதிரித் தில்லு முல்லுகளை வாக்குச் சீட்டு முத்திரை முறையில் செய்ய முடி யாது. அது காலா காலத்துக்கும் நிரந்தர ஆவணமாகத் தங்கி விடும் தவறு நடந் திருந்தாலும் பின்னாளில் அதை மெய்ப் பிக்கவும் முடியும்.எனவே இந்த நோக் கிலும் வாக்குச் சீட்டு முறையைக் கோருவதே பொருத்தமாக இருக்கும்.
இறுதியில் மிக முக்கியமானது, தேர்தல் விதிமுறைகள் சார்ந்து நம் நாட்டில் நிலவும் சட்டங்கள். தேர்தல் ஆணைத்துக்கு தனித்துவமான அதி காரம் வழங்குகிறேன். தேர்தல் நடை முறைகளில் நிர்வாகத் துறை, நீதித் துறை குறுக்கீடு இல்லாமல் அதைச் செயல்பட விடுகிறேன் என்கிற பெய ரில், பாதிக்கப்பட்டவர்களின் நியாய மான கோரிக்கைகளில் கூட சட்டம் செவி சாய்க்க மறுப்பது, அதன் மூலம் அநியாயத்துக்கு, ஆதிக்கத்துக்கு துணை போவது போன்ற கேடுகள் தற் போதைய கட்டமைப்பில் நிலவு கின்றன.
விருதுநகரில் வை.கோ. தோல்வி, சிவகங்கையில் ப.சிதம்பரம் வெற்றி என்கிற அறிவிப்புகளிலெல்லாம் எவ்வளவோ சந்தேகங்கள் எழுகின்றன. இந்த சந்தேகங்களின் பேரில் எல்லாம் நேரடியாக உடனடியாக நீதிமன்றம் போய் தடையாணை வாங்கிவிட முடியாது. தேர்தல் ஆணையம் அறி வித்தால் அறிவித்ததுதான். அதுதான் நடப்பில் இருக்கும். வேண்டுமானால் பாதிக்கப்பட்டவர் பின்னால் வழக்கு தொடுத்து, முறைகேடுகளை நீதி மன்றத்தில் மெய்ப்பித்து,தன் தரப்பு நியாயத்தை நிறுவி எதிர்த் தரப்பை பதவியிழக்கச் செய்யலாம். ஆனால் தேர்தல் முடிந்து இதன்பேரில் அவர் வழக்கு போட்டு அந்த வழக்கு முடிவதற்குள் அடுத்த தேர்தல் வந்துவிடும்.
அதாவது முறைகேடுகள் பல செய்து, தேர்தலில் வெற்றி பெற்ற ஒருவர் ஐந்து ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்து அதன்மூலம் கிடைக்கும் பலன்களை அனைத்தையும் பெற்று விடுவார். இறுதியில் அவரது தேர்தல் செல்லாது என நீதிமன்றம் அறிவிக்கும். அதுவரை நியாயமாய் பொறுப்பேற் றிருக்க வேண்டியவர் நடுத் தெருவில் நிற்க வேண்டியதுதான். அப்புறமாவது அவருக்கு வாய்ப்புண்டா என்றால் அதுவும் கிடையாது. அதற்குப்பின் மறு தேர்தல் அல்லது இடைத் தேர்தல் வரும். இல்லா விட்டால் அடுத்த பொதுத் தேர்தலே வந்துவிடும். மீண்டும் அவர் பழைய படியே போட்டியிட வேண்டியதுதான். அதன் பிறகாவது அவருக்கு நியாயம் கிடைக்குமா என்றால் அதற்கும் உத்திரவாதம் இல்லை. இதுதான் நாட்டில் நடப்பில் உள்ள சட்டம்.
சட்ட வல்லுனர்களைக் கேட்டால் சனநாயக அரிதாரத்தோடு இதற்கு சில நியாயங்கள் கற்பிக்கிறார் கள். அதாவது சனநாயக நாட்டில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் ஒரு இடம் காலியாக இருக்கக் கூடாதாம். அதற்காக தேர்தல் ஆணையத்துக்கு, அதிகாரம் தந்து அது யாரைத் தேர்வு பெற்றார் என்று அறிவிக்கிறதோ அவரைப் பதவியில் அமர்த்திவிட்டு பிறகு வழக்கை நடத்திக் கொள்ளலாம் என்பதற்காகவே இந்த ஏற்பாடு என்கிறார்கள். அதாவது இவர்கள் வாதப்படி மக்கள் பிரதிநிதித்துவப் பொறுப்பு காலியாக இருக்கக் கூடாது என்ப தற்காக முறைகேடு செய்த வர்களை அங்கு பணியமர்த்தினாலும் அமர்த் தலாமே தவிர, நியாய வான்களுக்கு அங்கே இடம் கொடுக்க மாட்டோம் என்பதாகவே ஆகிவிடுகிறது.
இது ஏதோ நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் மட்டும் நடக்கிற அவலமல்ல. உள்ளாட்சித் தேர்தல் களில்தான் இந்தக் கொடுமை மிக அதிகம். அதாவது பண பலமும், படை பலமும் மிக்கவர்கள், வன்முறையின் மூலம் பொறுப்பைக் கைப்பற்ற, தேர்தல் அதிகாரிகளும் அவரே வெற்றி பெற்றதாக சான்றளிக்க, நியாயமாய் மக்களாதரவோடு போட்டியிட்டு வென்றவர் பாடோ, வெல்ல முயன்றவர் பாடோ அம்போதான். உள்ளாட்சி அமைப்புகளில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல்களில் இப்படி எத்தனைப் பேர், எத்தனை வழக்குகள். அநியாயம் செய்தவர்கள், முறைகேடு புரிந்தவர்கள் அதிகாரத்தில் பவனி வர அதன் சுகங்களை அனுபவிக்க, நியாய வான்கள் வெக்கிச் சுணங்க, வழக்குக் காக நடந்து நடந்து அடுத்த தேர்தல் வந்ததுதான் மிச்சம்.
ஆகவே, சனநாயகத்தின் பேரால் நடக்கும் இந்த கொடுமை குறித்தும், இதற்கு ஒரு மாற்று வழிகாண்பது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். சரி, இவை யெல்லாம் நடை முறை ரீதியான செய்திகள். இனி அரசியல் ரீதியான காரணங்களுக்குள் புகுவோம். இந்திய நாடாளுமன்றத் தேர்தல் என்பது, என்னதான் சனநாயகம், மக்கள் பங்கேற்பு, அனைவருக்கும் வாக் குரிமை என பீற்றிக் கொண்டாலும், சாரத்தில் அது இந்திய ஆளும் வர்க் கங்களின் - அதாவது பெரு முதலாளிய, பார்ப்பனிய, இந்தி ஆதிக்க வர்க்கத்தின் - பிரதிநிதிகளை அதற்கு சேவை செய்பவர்களை, தேர்ந் தெடுக்கிற தேர்தல்என்பது மிக முக்கியம். - அப் படியே இதனோடு முரண்பட்டவர்கள், இதற்கு எதிரானவர்கள் தேர்தலில் போட்டி யிடுவதாகவோ, வென்று விடு வதாகவோ கொண்டாலும் அவர்களை ஆளும் வர்க்கக் கட்டமைப்புக்குள் வளைத்துப் போடுகிற அதற்குப் பணிய வைக்கிற தேர்தல் இது. எனவே அரசி யல் ரீதியாக இந்தப் பின்னணியிலேயே நாம் இந்த நாடாளுமன்றத் தேர்தலைப் பார்க்க வேண்டும்.
இந்திய ஆளும் வர்க்க பிரதிநிதிகளாக அகில இந்திய அளவில் இயங்கும் முக்கிய இரு கட்சிகள் காங்கிரசும், பாஜகவும். பிரச்சினைகள் சார்ந்த அணுகு முறைகளில், அதன் செயலாக்கங்களில் இரண்டிற்கும் வேறு பாடுகள் இருக்கலாம். ஆனால் சாரத்தில், கொள்கை கோட்பாடுகளில் இரண்டிற்குமான அடிப்படை ஒன்றே. இதில் கான்கிரஸ்சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிற கட்சி. இடை யிடையே சில மாற்றங்கள் நேர்ந்தாலும் தொடர்ந்து அதிகாரத்தில இருந்து மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று நிலைத்து நீடித்து வருகிற கட்சி-- ஆனால் நேரடியாக இந்துத்துவ அமைப்புகளால் தோற்று விக்கப்பட்டு இந்துத்துவ செயல் திட்டத்தை முன் வைத்து இடையில் சொற்ப காலமே ஆண்ட கட்சி பாஜக. இவ்விரு கட்சிகளுக்கு அப்பால் மாநில அளவில் உள்ள கட்சிகள், இடது சாரிக் கட்சி கள்,இவை கூட்டு சேர்ந்து உருவாக்கிய மூன்றாவது அணி, மற்றும் நான்காவது அணி ஆகியவையே களத்தில் நின்றன.
உலக அளவில் சரிவுக்குள்ளான பங்குச் சந்தை வணிகம், அதன் விளைவாக இந்திய பங்குச் சந்தைகளில் ஏற் பட்ட சரிவு, அமெரிக்காவுடனான இந்திய அணு ஆற்றல் ஒப்பந்தம், அண் டையில் பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து வரும் சீனம், பாகிஸ்°தான், அவற்றை எதிர்கொள்வதற்கான நட வடிக்கைகள், தெற்காசியப் பகுதியில் தன்னை ஒரு பலம்மிக்க வல்லரசாக நிறுவிக் கொள்ள இந்தியா மேற் கொண்டு வரும் முயற்சிகள், உள்நாட் டில் குறிப்பாக வடகிழக்குப் பகுதி மாநிலங்களில் நடைபெற்று வரும் தேசிய இன உரிமைகளுக்கான போராட்டங்கள், காஷ்மீர் சிக்கல், அண்டையில் உள்ள இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கை, ஈழச் சிக்கல், நாட்டில் அவ்வப்போது நடைபெற்று வரும் குண்டு வெடிப்புச் சம்பவங்கள், பயங்கரவாத நடவடிக்கைகள், பல் வேறு மாநிலங்களில் நக்சல்பாரி நட வடிக்கைகள், இவற்றுடன் மாநிலத் துக்கு மாநிலம் நிலவும் தனித்துவமான பிரச்சனைகள் ஆகிய இப்படிப்பட்ட பல்வேறு சிக்கல்களின் பின்னணி யிலேயே இத்தேர்தல் நடைபெற்றது.
இதில் இச்சிக்கல்களை எதிர் கொள்கிற, சமாளிக்கிற நிலையான பாதுகாப்பான ஆட்சி தருகிற கட்சி காங்கிரஸ் கட்சியே என்கிற கருத்து கட்டமைக்கப்பட்டது. இதன்வழி காங்கிரசை வெற்றிபெறச் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அது அறுதிப் பெரும்பான்மை பெற இயலா விட்டாலும், தனிப் பெரும்பான்மை பெற்று கூட்டணிக் கட்சிகளின் செல்வாக்கோடு வலுவான நிலையில் இருக்கிறது. இப்படிச் சொல்வதால் ஏதோ ஆளும் வர்க்கங்கள் ஒன்று சேர்ந்து காங்கிர°ஸ் கட்சியை வெற்றி பெறச் செய்து விட்டதாக யந்திர மயமாகப் புரிந்து கொள்ளக்கூடாது. ஆளும் வர்க்கக் செயல்பாடு என்பது, ஆட்சி யாளர்கள் வழி வெளிப்படுவது. ஆட்சி யில் இருந்தது காங்கிரஸ் கட்சி. மேற் குறித்த சிக்கல்களில் தன் நிலைபாடு களை நியாயப் படுத்துவது, அது சரிதான் என மக்களை நம்ப வைப்பது, அதற்கு ஆதரவு திரட்டுவது என்பதான பணி களை ஆட்சியில் உள்ளவர்கள் எளிதாகச் செய்ய முடியும். அரசு ஊடகங்கள், ஆளும் வர்க்க நலன் காக்கும் ஊட கங்கள் ஆகியன இவற்றைச் செவ்வனே நிறைவேற்றும். இந்தப் பின்னணியில் உருவாக்கப்படும் கருத்துக் கட்ட மைப்பு மக்களின் மன நிலையைத் தீர்மானிக்கிறது. இது ஒரு முக்கிய காரணம்.
இதிலும், இப்படிச் சொல்வதால் மக்களெல்லாம் மேற்குறிப்பிட்டவற்றை அரசியல் ரீதியாக உணர்ந்து தெளிந்து காங்கிரசை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்கிற முடிவோடு தான் வாக்களித்தார்கள் என்றும் எடுத்துக் கொள்ள முடியாது. எடுத்துக் கொள்ளவும் கூடாது. இது காங்கிரசுக்கு ஆதரவான ஒரு கருத்தியல் கட்ட மைப்பு. இந்தக் கருத்தியலை வெற்றி பெறச் செய்வதற்கு அந்தந்த மாநிலங் களில் நிலவும் தனித் தன்மைகள், கட்சிகள், அது சார்ந்த அணி சேர்க்கை கள், கூட்டணி பலம் அல்லது பலவீனம், வேட்பாளர் பற்றிய கருத்தாக் கங்கள், தனிப்பட்ட முறையில் அவரது ஆற்றல் கள் அல்லது ஆற்றலின்மைகள், அவர் சார்ந்த சாதியக் கட்டமைப்பின் பலம் பலவீனம், போட்டி இரு முனையா, மும்முனையா என்கிற அதன் தன்மை, இவை அனைத்தினதும் உடனான பணபலம், படை பலம், அதிகார பலம், இதர செல்வாக்குகள் இவையும் இன்னும் பலவும் சேர்ந்த ஒரு சிக்கலான செயல்பாட்டின் விளைவுகளே வேட் பாளர்களின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றன.
இந்த அடிப்படையில் அகில இந்திய அளவிலும் மாநிலத் திற்கு மாநிலம் நிலவும் தனித்தன்மை களோடும் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றியின் பின்னணியை விவரிக்க கட்டுரை மிகவும் நீளும். எனவே அவற்றை ஒதுக்கி, நம் தமிழ் நாட்டுச் சூழலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி பெற்ற வெற்றிக்கும், அதிமுக அணியின் பின்னடைவுக்குமான அரசியல் மற்றும் கருத்தியல் காரணங்களை மட்டும் ஆராய்வோம்.
தமிழகத்தில் ஈழச்சிக்கல் முதன் மையானச் சிக்கலாக முன் வந்தது. வேறு எந்தப் பிரச்சினைகளை விடவும் ஈழம் பரந்துபட்ட மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த பின்னணியில் தேர் தலுக்கு ஒரு 20 நாள்கள் முந்தைய கருத்துக் கணிப்பில், ஈழ ஆதரவுக் கூட்டணி சுமார் 30 இடங்களையும், திமுக - காங்கிரஸ் கூட்டணி 10 இடங் களையுமே கைப்பற்றும் என்பதாகவே முடிவுகள் வந்தன. இது ஆளும் வர்க்கங்களை ஆதிக்கச் சக்திகளை விழிப்படைய வைத்து, இந்த ஈழ ஆதரவு சக்திகளை தேர்தலில் தோல்வியடையச் செய்ய திட்டம் வகுக்கப்பட்டது. ஈழச் சிக்கலைத் தேர்தலின் முதன்மையான பிரச்சி னையாக பிரச்சாரம் செய்த மாண வர்கள், இளைஞர்களை எந்தக் காரண மும் இன்றி கைது செய்து சிறையி லடைத்தது. ஈழ ஆதரவுக் குறுந்தகடு களை காட்சிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யக் கூடாது எனத் தடை விதித்தது. குறுந்தகடு தயாரித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தது. பொதுவாக ஈழ ஆதரவு நட வடிக்கைகளே தேச விரோத சட்ட விரோத நடவடிக்கை என்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கியது.
ஈழ ஆதரவுப் போராட்டங்க ளுக்கு அனுமதி மறுப்பு, பேச்சுக ளுக்குத் தடை, பொய் வழக்கு எனப் பல்வேறு வழிகளிலும் முயன்று ஈழ ஆதரவுக் கருத்தியல் பரவுவதைத் தடை செய்தது. இதில் இந்திய உளவுப் பிரிவான ராவின் ஆலோசனைகளும், செயல் திட்டங்களும் கூட மிகப்பெரும் பங் கேற்றுள்ளதாக நோக்கர்களால் கருதப் படுகிறது. வடக்கே இட ஒதுக்கீடு, சமூக நீதி ஆதரவுக் கட்சிகள் முறியடிக்கப் பட்டதையும், தமிழகத்தில் ஈழ ஆதரவுச் சக்திகள் முறியடிக்கப் பட்டதையும் வைத்து, இதன் பின்னால் ஆதிக்க சக்திகளின் அதிகார வர்க்கத்தின் அனைத்துப் பொறியமைவுகளும் செயல் பட்டுள்ளதாக அவர்கள் மதிப் பிடுகின்றனர்.
ஆனால் ஆதிக்க சக்திகளின் இப்படிப்பட்ட திட்டமிட்ட சதி வேலைகளை முறியடிக்குமளவுக்கு ஈழ ஆதரவுக் கூட்டணியின் செயல் பாடுகள் முனைப்போடு இல்லை. புறவயமான காரணங்கள், அகவயமான செயல் பாடுகள் இரண்டிலுமே இவை பின் தங்கியிருந்தன. முதலில் புறநிலைக் காரணங்கள் :
1. ஜெ. தேர்தல் நெருக்கத்தில் தான் தனி ஈழ ஆதரவு நிலை எடுத்தார். இதற்குமுன் அவர் பெரும்பாலும் ஈழ எதிர்ப்பு, புலிகள் எதிர்ப்பு நிலையில் தான் இருந்தார் என்பதால், அவரது நிலைப்பாட்டை உறுதியானதாக மக்கள் ஏற்பதில் தயக்கம் இருந்தது.
2. மதிமுக கடைசி நேரத்தில் அமைப்பு ரீதியில் சில பேரை இழந்து பலவீனப்பட்டது. அது உண்மையி லேயே பலவீனமா அல்லவா என்பது அவர்கள் கட்சி சார்ந்து முடிவு செய்யக் கூடியது என்றாலும் புறத்தோற்றத்தில் அது பலவீனமான நோக்குக்கு ஆளாகியது.
3. பா.ம.க. கடைசி வரை காங்கிரஸ் கட்சியை ஆதரித்து தில்லி அமைச்சர் பதவியில் நீடித்துக் கொண்டு தானே இருந்தது. இப்போது திடீரென்று மாறினால் எப்படி என்பதும், முன் கூட்டியே உறுதியான ஒரு நிலைப் பாட்டை எடுக்காமல், எந்தப் பக்கம் போகும் என்பது தெரியாமல், இரண்டு அணிக்கும் மத்தியில் ஊசலாடியதும், மக்கள் மத்தியில் கட்சியின் நம்பகத் தன்மையைக் கேள்விக் குள்ளாக்கியது. இதில் கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தும் அளவுக்கு வலுவான பிரச்சாரங்கள் இல்லை.
4. ஈழ ஆதரவு அணியில் இருந்த வி.சி.க., கொலைகார காங்கிரஸ் அணியில் கூட்டு சேர்ந்து ஒவ்வொரு தொகுதியிலும் ஈழ ஆதரவு அணி யினருக்கு கிடைக்க இருக்கும் வாக்கு களை கிடைக்காமல் ஆக்கிய தோடு, அந்த வாக்குகளை எதிர் அணியான கான்கிரஸ்- திமுக கூட்டணிக்கு ஆதர வாக கிடைக்கச் செய்தது, தே.மு.தி.க தனித்து நின்று காங் திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்துப்போட்டு பல வீனப்படுத்தியது.இத்துடன் இதுகாலம் அதிமுக அணியை ஆதரித்து வந்த மூவேந்தர் முன்னேற்றக் கழகம் அக் கட்சி மீது கசப்புற்று திமுகவுக்கு ஆதரவு தந்தது, மற்றும் மேற்கு மாவட்டங்களில் கொங்கு முன்னேற்றப் பேரவை தனித்துப் போட்டியிட்டு கணிசமான அளவு வாக்குகளைப் பிரித்தது.
5. இடதுசாரிக் கட்சிகளில் இ.க.க கடந்த ஆண்டு அக். 2 முதல் ஈழ ஆதரவு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி யதுடன், கூட்டு நடவடிக்கைகளிலும் பங்கு கொள்ள இ.க.க.மா. மட்டும் ஈழச் சிக்கலில் எதிலும் பட்டுக் கொள் ளாமல் ஒதுங்கி நின்றும், எதிர் நிலை எடுத்தும், ஈழ ஆதரவுத் தமிழ் மக்களது வெறுப்பை சம்பாதித்துக் கொள்ள உணர்வாளர்கள் பலரும் இக்கட்சியின் பால் ஆர்வம் காட்டமுன் வராதது என இப்படிப்பட்ட பல்வேறு புறக் கார ணங்கள் ஒவ்வொரு தொகுதியிலும் வெவ் வேறு அளவில் செயல்பட்டிருக் கின்றன.
அகநிலைக் காரணங்கள் :
மேலே சொல்லப்பட்ட புற நிலைக் காரணங்களை எதிர் கொண்டு அதை முறியடிக்கும் அளவுக்கு அதிமுக அணி யில் செயல்பாடுகள் போதுமான முனைப்போடு இல்லை. இதையே அக நிலைக் காரணங்கள் என்று வகைப் படுத்துகிறோம்.
1. ஈழ ஆதரவு நிலை என்பது அன்றாடம் செய்தித்தாள் வாசிக்கிற, ஊடகங்களோடு ஊடாடுகிற குறிப்பிட்ட விழுக்காட்டு மக்களின் விழிப் புணர்வு சார்ந்த பிரச்சினை. இவர் களைக் கடந்து இப்பிரச்சனை சிற்றூர்ப் புறங்களில் உள்ள லட்சோப லட்சம் மக்களைச் சென்றடையக் கூடிய வகை யில் அதிமுக அணியின் பிரச்சாரம் அமையவில்லை. பொதுவாகவே சட்டமன்றத் தேர்தல் களின் போது 6 தொகுதிகளிலும் நடைபெறுகிற அள வுக்கு விரிவான பிரச்சாரம் நாடாளு மன்றத் தேர்தல்களின் போது நிகழாது என்பது பொதுப் போக்காக இருந்த போதிலும், நடப்புத் தேர்தலின் முக் கியத்துவத்தை உணர்ந்து விரிவான அள விலான பிரச்சாரத்தை இந்த அணியினர் மேற்கொள்ளவில்லை.
2. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்கள் தொலைக்காட்சி, தமிழோசை நாளேடு ஆகிய ஊடகங்கள் ஈழத்தில் நடைபெறும் அவலங்களை வெளியிட்டாலும் கூட, இந்த அவலங் களுக்கு முக்கிய காரணம் உடந்தை காங்கிரசும், திமுகவும்தான் என்பது வலுவான பிரச்சாரமாக செய்யப்பட வில்லை. இவ்வூடகங்கள் திமுகவைத் தாக்கிய அளவுக்கு காங்கிரசைத் தாக்க வில்லை. காங்கிரஸ்° தரப்பு நோக்கி ஒரு மென்முகமே இருந்ததாக உணர் வாளர்கள் மத்தியில் கருத்து நிலவியது. இதனால் இது பரந்துபட்ட நம்பிக் கையை ஏற்படுத்துவதில் பலவீனம் நிலவியது.
3. அதிமுக அணியினர் ஈழ ஆதரவு நோக்கில் மக்களுக்கு நம்பிக்கையூட் டும் வகையில் வலுமிக்க போராட் டங்கள் எதையும் நடத்தவில்லை. எல்லாம் சம்பிரதாயமான போராட்டங் களாகவே நடத்தியதில் இது மக்களை ஈர்க்கவில்லை. அவர்களை எழுச்சி கொள்ள வைக்கவில்லை. இதனால் எல்லாக் கட்சியும் இப்படித் தான் போல என்பது போன்ற ஓர் எண்ணம் உணர்வாளர்கள் மத்தியில் ஒரு சோர்வை ஏற்படுத்த அவர்களில் ஒரு பகுதியினர் உற்சாகமாக தேர்தலில் பணிகளில் பங்கு கொள்ளவில்லை.
4. அதிமுக அணியினர் தமிழகம் முழுவதுமுள்ள ஈழ ஆதரவு சக்திகளைத் திரட்டி அவர்களைக் களமிறக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. பல இடங்களில் உணர்வாளர்கள் பலர் இந்தத் தேர்தலில் தாம் என்ன வகை யான பணியாற்றுவது என்பதுபக் 13 புரியாமல் குழம்பியே நின்றனர். அவர் களுக்கு வழிகாட்ட, அழைத்து அவர் களுக்கு உரிய பணிகளைக் கொடுக்க யாரும் முயலவில்லை. திரைப்பட நடிகர்கள், மாணவர்கள், உணர்வாளர் கள் பலர் தனிதனியாகச் செயல்பட்ட தும் அவர்களது சொந்த முயற்சிதானே தவிர கூட்டணி முயற்சி, கட்சி முயற்சி ஏதும் இல்லை.
5. மக்களுடைய உணர்வு நிலை என்பது ஒன்று. அது கடைசி வரை அப்படியே நீடித்து வாக்காக மாறுவது என்பது மற்றொன்று. இதில் திமுக - காங்கிரஸ் கூட்டணியினர் தங்கள் ஆதரவுச் சக்திகளை எந்தெந்த வழிகளி லெல்லாமோ மெனக்கெட்டு கொண்டு வந்து வாக்காக மாற்றியது போன்ற முயற்சியில் அதிமுக அணி யினர் இறங்க வில்லை. ஆதரவு சக்தி யெல்லாம் தானாக வாக்காக மாறி விடும் என்கிற அசமந்தத்தில் இருந்து விட்டனர். திமுக தனது கட்சி அமைப்பை கட்டுக் கோப்பாக வைத்து தேர்தல் பணிகளில் கில்லாடித் தனமாகக் களமிறக்குவது போன்று அதிமுக அணி, அமைப்பும் கட்டுக் கோப்பாக இல்லை. களப்பணியும் முனைப்பாக இல்லை. இதில் இடது சாரி அமைப்புகள் வேண்டுமானால் விதி விலக்காக இருக்கலாமே தவிர, மற்றபடி அமைப்புகள் பலவும் அமைப்பு வழிப்பட்ட செயல்பாடாக இல்லாமல் உதிரிச் செயல்பாடு களாகவே அமைந்தன.
இப்படிப்பட்ட பல்வேறு உள் காரணங்களாலும் அதிமுக அணி வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. சரி, தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஓரளவு பொதுவில் நாம் ஆராய்ந்தாகிவிட்டது. இதேபோல ஒவ்வொரு கட்சியும் தன் அமைப்புக் குள் தனித்து பல ஆய்வுகள் நடத்தி யிருக்கும். இதில் நாம் கூறிக் கொள்ள விரும்புவது, அதிமுக அணியின் தோல் விக்கான காரணங்களாக திமுக – காங்கிரஸ் கூட்டணியின் பண பலம், படை பலம், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தல், வாக்குப்பதிவில் தில்லுமுல்லுகள் போன்ற பல கார ணங்களைக் குறிப்பிடும் அதே வேளை அத்துடன் ஒவ்வொரு அமைப்பும் தன் சொந்த பலவீனத்தை யும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். உட்படுத்தி அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்குள் தங்களது அமைப்புகளின் பலவீனங்களைக் களைந்து தங்களைத் தயார்ப்படுத்தி ஒழுங்கமைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நம்மைப் பொறுத்த வரைக்கும் தேர்தல் அரசியல் நோக்கிலேயே தற்போது அமைந்துள்ள கூட்டணி என்பது அதாவது அதிமுக, மதிமுக, பாமக, இகக, இகக(மா) என்பது எண்ணிக்கை கணக்கிட்டு வகையில் பலம் வாய்ந்த வலுவான கூட்டணி தான். இது தன் பலத்தை உணர்ந்து தன் அமைப்புகளை சீரிய முறையில் கட்டமைத்துக் கொண்டு அடுத்து வர விருக்கும் சட்டமன்றத் தேர்தலில் களம் கண்டால் நிச்சயம்வெற்றியைக் காண முடியும். எப்போதுமே தமிழக மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு வித மாகவும், சட்டமன்றத் தேர்தலின் போது வேறொரு விதமாகவும் வாக்களிக்கக் கூடியவர்கள். ஆகவே இந்த நாடாளு மன்றத் தேர்தல் வாக்களிப்பு வெளிப் பாடு என்பது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் மாறும்.
எனவே அந்த நம்பிக்கையோடு இந்த அதிமுக கூட்டணிக் கட்சிகள் செய்ய வேண்டுவ தெல்லாம் தற்போது நிலவுகிற கூட்டணி சிதையாமல் இதன் ஒற்றுமையைப் பாதுகாத்து வலுப் படுத்த வேண்டும். இந்த அணியில் இன்னும் கூடுதலாக கட்சிகளை ஈர்க்க முயல வேண்டும். குறிப்பாக, வி.சி.க. வை இந்த அணிக்கு கொண்டு வர முயல வேண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆதரவோடு இரண்டு இடங் களை வென்று திமுக அணிக்கு போன விசிக, திமுக ஆதரவோடு ஒரு நாடாளு மன்ற உறுப்பினர் இடத்தை வென்று அதிமுக அணிக்கு வர ஒன்றும் தடை யில்லை. அதில் தவறும் ஏதும் இல்லை என்கிற நோக்கில் வி.சி.க. இந்த அணிக்குத் திரும்ப வேண்டும். அதிமுக அணியில் இருக்கிற தலைவர்கள் திருப்ப வேண்டும்.திருப்பி தமிழின உணர்வு சக்திகளையும் தமிழீழ ஆதரவு சக்தி களையும் ஒருங்கிணைத்து தமிழக உரிமைகளுக்ககாகவும் தமிழீழ த்துக்கு ஆதரவாகவும் தமிழகத்தில் எழுச்சிமிகு போராட்டங்கள் நடத்த வேண்டும். தமிழக வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்த வேண்டும்.
உணர்வாளர்களின் வாக்குகள்
உணர்வாளர்கள் எனப்படுபவர்கள் கட்சிகள் சார்ந்தும், கட்சிகள் சாராமலும், இரு வகைப்படுவர். இதில் கட்சி சாரா உணர் வாளார்களை விடுத்து கட்சி சார்ந்த உணர்வாளர்கள் என்று பார்த்தால் அவர்கள் பெருமளவும் தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., வி.சி.க., ஆகிய கட்சிகளிலேயே இருப்பர். அ.தி.மு.க. வில் உணர்வாளர்களை அதிகம் காணமுடியாது. இந்நிலையில் ம.தி.மு.க., பா.ம.க., ஈழ ஆதரவு அணியில் இருந்ததால் அந்த வாக்கு அப்படியே அந்த அணிக்கு இயல்பாகச் சென்று வருகிறது.
ஆனால் தி.மு.க. வி.சி.க. வில் உள்ள உணர்வாளர்களின் பாடுதான் சிக்கல். இதில் கருணாநிதியின் நிலைப்பாடு தி.மு.க. வினர் பலருக்கு பிடிக்காவிட்டாலும் கூட இதற்காக அவர்கள் தி.மு.வைத் தாண்டி வேறு எவருக்கும் வாக்களித்து விடுவர் என்று எதிர்பார்க்க முடியாது. அப்படியே யாராவது எதிர் அணிக்கு வாக்களிப்பதாகக் கொண்டாலும், காட்டாக காங்கிரசும் - வேறு கட்சியும் மோதும் இடத்தில் காங்கிரசு எதிர்ப்பில் அந்த வேறு கட்சிக்கு வாக்களித்தாலும் அளிப்பார்களே தவிர, தி.மு.க. - அ.தி.மு.க. மோதும் இடத்தில் நிச்சயமாக அவர்கள் தி.மு.க.வுக்கு எதிராக அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
அதேபோல வி.சி.க. வில் உள்ள உணர்வாளர்களும் தாங்கள் நின்ற இரு தொகுதிகள் தாண்டி, தங்கள் கூட்டணியில் இல்லாத வேறு சில வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கக் கூடும் என்றாலும் நிச்சயம் அ.தி.மு.க.விற்கு வாக்களித்திருக்க மாட்டார்கள். ஆக, இந்நிலையில் ம.தி.மு.க., பா.ம.க., கட்சி சார்ந்த வாக்குகளும், கட்சி சாரா உணர்வாளர்களது வாக்குகளும் மட்டுமே அ.தி.மு.க. அணிக்குக் கிடைத்திருக்கும். அ.தி.மு.க. அணி ஈழ மக்களுக்க ஆதரவாக வலுவான எழுச்சி மிக்கப் போராட்டாங்கள் எதையும் நடத்தியிருந்தால் இதில் ஏதும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அப்படி எதையும் அ.தி.மு.க. நடத்த வில்லை. அந்தவகையில் இதுவும் அந்த அணியின் பின்னடைவுக்கு ஒரு காரணமாகியது.
தடைசெய்யப்பட்ட குறுந்தகடுகள்
ஈழச் சிக்கல் பற்றிய செய்திகளையும் ஈழ மக்கள் படும் அவலங்களையும் சிற்றுhர்ப்புற மக்களிடம் கொண்டு செல்ல குறுந்தகடுகள் ஒரு நல்ல வலுமிக்க சாதனமாக அமைந்தன. ஆனால் திமுக அரசு காவல்துறை நடவடிக்கைகள் மூலம் இக்குறுந்தகடுகளைத் தடை செய்ய இது சார்ந்த பிரச்சாரம் முடக்கப்பட்டது . இந்தத் தடையை எதிர்த்து உணர்வாளர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இதன் மீதான தீர்ப்பு தேர்தல் பிரச்சாரம் முடியும் நாளன்றுதான் வந்தது. எஞ்சிய காலத்தையாவது பயன்படுத்தி இப்பிரச்சாரத்தைக் கொண்டு செல்லலாம் என மக்கள் தொலைக் காட்சி இக்குறுந்தகடுகளை ஒளிபரப்ப அந்த ஒளிபரப்பும் பெரும்பாலான இடங்களில் பார்க்கக் கிடைக்காமல் முடக்கப்பட்டது. இதுவும் தேர்தல் பின்னடைவுக்கு ஒரு காரணமாக அமைந்தது.
வாக்களிப்பு யந்திரங்கள்
சாதாரண வாக்குச்சீட்டு முறைபோல் யந்திர முறை வாக்குப்பதிவை கண்காணிக்கவோ தவறுகளை கண்டறியவோ, அதைத் தட்டிக் கேட்கவோ வாக்குச் சாவடி முகவர்களுக்கோ, வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கோ சாத்தியபடாது. முதலாவதாக பலருக்கு அந்த யந்திரத்தின் செயல்பாடு பற்றி முழுமையாகத் தெரியாது. அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு தலையாட்டி விட்டு காட்டுகிற இடத்தில் கையொப்பம் போட வேண்டியது தான். யாராவது விபரம் தெரிந்தவர்கள் கேள்வி எழுப்பினால்தான் உண்டு. ஆனால் வாக்குச்சீட்டு முத்iரையிடும் முறையில் அப்படியில்லை. இதில் ஒவ்வொன்றையும் கண்காணிக்க முடியும், கேள்வி கேட்க முடியும். தவறு நேர்ந்தால் உடனடியாக அல்லாவிட்டாலும் நிறுத்தி வைத்து பிறகு அதை மெய்ப்பிக்க முடியும். ஆனால் மின்னணு வாக்குப்பதிவில் அதன் தொழில் நுட்பம் தெரியாமல் அதை ஒன்றும் செய்ய முடியாது.
இப்படிப்பட்ட சிக்கல்கள் எல்லாம் இருக்க அரசும் தேர்தல் ஆணையமும் ஏன் இந்த மின்னணு வாக்குப் பதிவை வைத்துக் கொண்டிருக்கின்றன என்பது கேள்வியாகிறது. பொதுவாக மேலைநாடுகள், வளர்ச்சி யடைந்த நாடுகள், அபாயகராமனது, நட்டம் விளைவிக்க கூடியது. அல்லது நம்பகத் தன்மையற்றது என்பன போன்ற பல வேறு காரணங்களால் காலாவதியாகிப் போன தங்கள் தொழில்நுட்பங்களை வளர்ச்சி குன்றிய நாடுகளின் தலையில் கட்டி - அது ஏதோ புதிய தொழில் நுட்பம் போல் காட்டி, அது பயன்பாட்டுக்கு எளியதுபோல் நம்பவைத்தோ வசீகரம் செய்தோ கொள்ளையடிப்பது என்பது ஒரு பொதுப் போக்காக நிகழ்ந்து வருகிறது.
மேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இங்கு தாராளமாக விற்கப்படுவது, அங்கு மிகக் குறைவாக நுகரப்படும் நச்சு கலந்த குளிர்பானங்கள் இங்கு மிகை அளவில் நுகரப்படுவது போன்ற பல உதிரிச் செய்திகள் ஒருபுறமிருக்க, மேலைநாடுகளில் அபாயகர மானது எனக் கைவிடப்பட்ட அணுத் தொழில் நுட்பம், இங்கு கவர்ச்சிகரமான, எளிய திட்டம் போல் பிரச்சாரம் செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்ற ஒரு தொழில்நுட்பத் திட்டம்தான் இந்த மின்னணு வாக்குப்பதிவுத் திட்டம்.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலெல்லாம் இந்த மின்னணு வாக்குப்பதிவு முறை கடைப்பிடிக்கப் படுவதில்லை என்கிறார்கள். அங்கு இது அறிமுகப்படுத்தப்பட்டு இதன் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகப்பட்டதில் இது கைவிடப் பட்டிருக்கிறது. ஆகவே இதைக் கண்டுபிடித்த உற்பத்தி செய்கிற நிறுவனம் தன்னுடைய உற்பத்திப் பொருளுக்கு சந்தை தேடி இந்தியா போன்ற நாடுகளின் தலையில் இதைத் கட்டலாம். கொஞ்சம் இப்படி யோசித்துப் பாருங்கள். அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருளா அது. எப்போதோ ஒருமுறை தேர்தல் வரும்போது பயன்படுத்தப்படுவது அது. அதற்குப்போய் இப்படிப் பல கோடிகள் செலவு செய்து இந்த மின்னனுக் கருவிகளை வாங்க வேண்டும? வாக்குப்பெட்டியைப் பழைய இரும்புக்காவது போடலாம். இந்த மின்னணு வாக்குக் கருவியை என்ன செய்வது? அதைக் கழிவாய்ச் சுமந்து அதிலிருந்து வரும் கதிர்வீச்சைப் பெற்று நோய்வாய்ப்பட்டு இறப்பதைத் தவிர அதனால் வேறு எந்தப் பலனும் இல்லை. ஆகவே இப்படிப்பட்ட அபாயங்களைக் கருத்தில் கொண்டேனும் அரசு இந்த மின்னணு வாக்குப்பதிவு முறையைக் கைவிட வேண்டும்.
மி.வா.ய.-வுக்கு மேலைநாடுகளில் தடை
மின்னணு வாக்குப் பதிவு யந்திரத்தின் நம்பகத் தன்மையை கேள்விக்குள்ளாக்கி, 17-06-09 இந்து நாளேட்டின் 9ஆம் பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி ஒரு கட்டுரை எழுதி யிருக்கிறார். எழுதியது சுப்பிரமணியன் சுவாமிதானே என்று உணர்வாளர்கள் அலட்சியப் படுத்தாமல் அக்கட்டுரை வெளிப்படுத்தும் கருத்துகளில் கவனம் செலுத்திப் பார்ப்பது நல்லது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘மின் மற்றும் மின்னணு பொறியியல் இதழ்’ என்னும் மே 2009 ஏட்டின் பக். 23இல் வெளிவந்த ஒரு கட்டுரை, மற்றும் நியூஸ் வீக் , ஜூன் 1 , 2009 இதழ் ஆகியவற்றை மேற்கோள் காட்டி அவர் பல செய்திகளைக் குறிப்பிடுகிறார்.
அதில் மி.வா.எந்திரத்தின் பாதுகாப்பற்ற, நம்பகத்தன்மையற்ற தன்மைகள் பலவற்றை மேற்கோள்களுடன் நிறுவும் அவர், ஜெர்மனி உச்ச நீதிமன்றம் மி.வா.எந்திரத்தை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றதை, நெதர்லாந்து மி.வா. எந்திரத்தை தடை செய்துள்ளதை, மி.வா. எந்திரத்தால் தாங்கள் அளிக்கும் வாக்கு என்னவாகிறது என்றே தெரியாமல் போவதாய் ஐரோப்பிய மக்கள் இந்த எந்திரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததை உள்ளிட்டு பல உண்மைகளை வெளிப்படுத்துகிறார்.
மி.வா.எந்திரத்தின் பாதுகாப்பற்ற, நம்பகத் தன்மையற்ற இச் செய்திகளை வெளிப்படுத்தும் இக்கட்டுரையை இடம் இருந்தால் முழுதாகவே மொழி பெயர்த்து போட நினைத்தது, இடப் பற்றாக்குறை காரணமாக முடியாமல் போயிற்று. வாய்ப்புள்ளவர்கள் முழுக் கட்டுரையையும் படித்துப் பாருங்கள். பல செய்திகள் புரியும். மொத்தத்தில் பாதுகாப்பற்ற, மக்களுக்கு நம்பிக்கையூட்ட இயலாத, பல வகையிலும் ஊழலுக்கும் முறைகேட்டிற்கும் வாய்ப்பளிக்கும் ஒரு இயந்திரம் இந்த மி.வா.இயந்திரம். எனவே, இந்தியாவிலும் இதைத் தடை செய்ய வேண்டும்.
மி.வா.ய.-வின் நம்பகமற்றத் தன்மை
மின்னணு யந்திர வாக்குப்பதிவு முறையை குறைகூறி அதுபற்றி குற்றம் சாட்டினால், ஜெயித்தால் நல்ல யந்திரம், தோற்றால் கோளாறான யந்திரமா, மின்னணு வாக்குப்பதிவு மோசடி என்றால் 12 இடங்களில் ஜெயித்தது எப்படி என்று கிண்டலடிக்கிறார்கள். மின்னணு யந்திர வாக்குப்பதிவு முறையில் மோசடி செய்பவர்கள் ஜெயித்தால் எல்லா இடங்களிலும் ஜெயிக்க வேண்டும் என்றெல்லாம் முட்டாள்தனமாக முடிவு செய்து செயல்படுத்த மாட்டார்கள். எந்தெந்த தொகுதியில் யார்யார் தோற்க வேண்டும் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் தோற்க வேண்டும் என்றெல்லாம் கணக்கிட்டு திட்டமிட்டுதான் செயல்படுத்துவார்கள்.
ஆகவே, சில இடங்களில் அ.தி.மு.க. அணியினர் வெற்றிபெற்றனர் என்பதால் மின்னணு யந்திர வாக்குப்பதிவு முறை சரியானது என்று ஏற்றுக்கொள்ள முடியாது. பல இடங்களில் தோற்றார்கள் என்பதால் அனைத்தும் முற்றான மோசடி என்றும் முடிவு கட்டிவிட முடியாது. ஆனால், மின்னணு யந்திர வாக்குப்பதிவு நம்பகத்தன்மையற்றது. மோசடி செய்வதற்கு அல்லது மற்றவர்கள் கண்ணைக்கட்டி விரும்பியதைச் சாதிக்க வாய்ப்புள்ளது என்பதை மட்டும் புரிந்து, அடுத்து வருகிற தேர்தலில் இந்த மின்னணு வாக்குப்பதிவு முறையைக் கைவிட்டு நேரடி வாக்குச்சீட்டு முத்திரையிடும் முறையையே கோர வேண்டும்.
வி.சி.க.வின் நிலைமாற்றம்
வலுவான தமிழீழ ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து அதற்காகப் பல போராட்டங்களையும் நடத்திய வி.சி.க. கடைசியில் தமிழீழத் துரோக காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் நின்றது தமிழகத்தின் தமிழீழ ஆதரவு சக்திகளுக்கு மிகப்பெரும் இழப்பாகியது. வி.சி.க. மட்டும் இந்த அணியில் இணைந்திருந்தால் தமிழகத்தின் தேர்தல் முடிவுகளே பெருமளவு மாறியிருக்கும். ஒவ்வொரு தொகுதியிலும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்த வி.சி.க. வாக்குகள் அங்கு குறைந்திக்கும் என்பதுடன், அது அ.தி.மு.க.,அணிக்கு கிட்ட அ.தி.மு.க. அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்திருக்கும். ஆனால் அப்படியல்லாமல், இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி தனக்கு தரும் ஆதரவுக்காக இதர 38 தொகுதிகளிலும் காங்கிரஸ் - தி.மு.க. துரோகக் கூட்டணிக்கு வி.சி.க. தோழர்கள் உழைக்க வேண்டிய நிலைக்குத் தங்களை ஆளாக்கிக் கொண்டார்கள்.
சாதாரண காலமாயிருந்தால் இந்த கூட்டணிகள் பற்றி நாம் கவலைப்பட்டுக் கொள்ளப் போவதில்லை. ஆனால் வாழ்வா சாவா என்று தமிழீழ மக்கள் போராடிக் கொண்டிருக்கிற தருணத்தில், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை நம்பிக்கையோடு அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற தருணத்தில், அகில இந்திய முடிவுகள் எப்படியோ போகட்டும், தமிழகத்திலுமா இப்படி என்கிற அதிர்ச்சியை, அவநம்பிக்கையை, சோர்வை, சோக முடிவை ஏற்படுத்த வி.சி.க. காரணமாயிருந்ததே என்பது தான் நினைக்க நினைக்க ஆறாத வரலாற்றில் எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்க முடியாத கொடுமையாக உறுத்திவருகிறது இது. நாமெல்லாம் சேர்ந்து ஊட்டி வளர்த்த குழந்தையை நாமே படுகொலை செய்தது போல் ஆயிற்று. வி.சி.க. இதைவுணர்ந்து இனியாவது நிலை மாற வேண்டும்.
இடதுசாரிகளின் வீழ்ச்சி
கம்யூனிஸ்டுள், இடதுசாரிகள் என்றால் ஒரு காலத்தில் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு, மரியாதை இருந்தது. கம்யூனிஸ்ட் என்றால் நியாயத்தைக் கேட்பார்கள். அதற்காகப் போராடுவார்கள், எதற்கும் அஞ்சாமல் துணிவோடு நிற்பார்கள் என்கிற நம்பிக்கை இருந்தது. ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது. இதற்கு உலக அளவில் கம்யூனிச சித்தாந்தத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி ஒருபக்கம் இருந்தாலும் இங்குள்ள இடதுசாரிகள் தங்கள் போராட்டப் பாதையை விட்டு தடம்புரண்டு சந்தர்ப்பவாத தேர்தல் பாதையில் கால் பதித்ததால், இவர்களும் மற்ற கட்சியைப் போல் ஆகிவிட்டனர். இதனால் மற்ற கட்சிகளில் உள்ளது போன்ற ஊழல், உட்கட்சிப்பூசல் எல்லாம் இந்தச் கட்சிகளுக்குள்ளும் புகுந்துவிட்டது.
மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ளவர்கள் சொல்வதைப் பார்த்தால், இங்குள்ள தி.மு.க. அ.தி.மு.க. போல்தான் அங்கு இடதுசாரி கட்சிகள் இருக்கின்றன என்கிறார்கள். கிட்டத்தட்ட அதே போக்கு இங்கு தமிழகத்திலும் தலை தூக்கி வருகிறது. இப்படிப்பட்ட போக்கின் விளைவுதான் அகில இந்திய அளவில் இடதுசாரி கட்சிகளுக்கு மக்கள் நல்ல பாடம் கற்பித்திருக்கிறார்கள். இந்த பாடத்திலிருந்து இடது சாரிகள் படிப்பினை பெற வேண்டும். தங்கள் செயல் திட்டங்களை மாற்றிக் கொண்டு தேர்தல் பாதையை விட்டு புரட்சிகரப் பாதையில் கவனம் செலுத்த வேண்டும்.
பா.ம.க. தோல்வியில் ஆதிக்க சக்திகளின் பங்கு
ஏழு தொகுதிகளிலும் பா.ம.க. தோற்கடிக்கப் பட்டதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. புகையிலைக்கும், மதுவுக்கும் எதிரான அதன் பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படுவோம் என அஞ்சிய புகையிலைப் பொருள்கள் உற்பத்தியாளர்களும் மது உற்பத்தித் தொழில் முதலைகளும் பா.ம.க. வை வீழ்த்த கோடிக்கணக்கில் பணம் தந்து உதவியதாகக் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது கேள்வியானாலும், தொழில் முதலைகள் தங்கள் லாப வேட்டைக்கு எதிரான சக்திகளை எப்படிப்பட்ட உத்திகளையும் கைக் கொண்டு வீழ்த்தும் என்பதை உதாசீனம் செய்து விட முடியாது.
ஏற்கெனவே அரசியல் ரீதியில் பா.ம.க.வின் விமர்சனங்கள், தாக்குதல்களில் கடுப்பான தி.மு.க. தன் கட்சிப் பொறுப்பாளர் களை அழைத்து என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ தெரியாது பா.ம.க. போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அது தோற்க வேண்டும் எனக் கட்டளையிட்டு அனுப்பி வைக்க அது ஒரு பக்கம், மேலே குறிப்பிட்ட காரணம், நாம் பொதுவில் குறிப்பிட்ட காரணம் இப்படி எல்லாக் காரணங்களும் சேர்ந்தே பா.ம.க.வை அது போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியுறச் செய்துள்ளது.
தே.மு.தி.க. மற்றும் கொ.மு.பே.வின் செல்வாக்கு
தே.மு.தி.க.வை தன்பக்கம் இழுக்க வேண்டும், இல்லாவிட்டால் அது தனியே நிற்பதை ஊக்கப்படுத்த வேண்டும் எனபதில் குறியோடு இருந்த தி.மு.க. அதில் வெற்றியும் பெற்றது. தே.மு.தி.க. அணி தனித்து நின்றதானது காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணிக்கு எதிரான வாக்குகளை முழுமையாக அ.தி.மு.க. அணிக்கு கிட்டவிடாமல் பிரித்துப் போட்டதோடு இதேபோல அ.தி.மு.க. அணிக்கு எதிரான வாக்குகளை தி.மு.க. அணிக்கும் கிடைக்க விடாமல் செய்துள்ளது. இதனால் பெரும் இழப்பு அ.தி.மு.க. அணிக்குத்தான்.
இதேபோல கொங்கு முன்னேற்றப் பேரவையும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. கீழே தொகுதி வாரியாக வெற்றிபெற்ற மற்றும் அடுத்த நிலையில் வந்த வேட்பாளர்களுக்கு இடையேயான வாக்கு வித்தியாசத்தையும், அத்தொகுதியில் தே.மு.தி.க. மற்றும் கொ.மு.பே. பெற்ற வாக்குகளையும் நோக்க - பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது - இது புரியும். தே.மு.தி.க. இந்த தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோற்றாலும் இதன் மூலம் தனது சொந்த பலத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது வரும் சட்டமன்றத் தேர்தலில் அதன் பேரம் பேசும் சக்தியை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இதேபோல மேற்கு மாவட்டங்களில் கொங்கு முன்னேற்றப் பேரவையும் கணிசமான வாக்குகளை பெற்று தன் இருப்பை உறுதி படுத்தியுள்ளது. இந்த உண்மைகளையும் தமிழின உணர்வாளர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தொகுதி வெற்றி தோல்வி வித்தியாசம் மூன்றாவது இடம்
வட சென்னை (தி.மு.க.) 2,81,055 (சி.பி.ஐ.) 2,61,902 19,153 (தே.மு.தி.க.) 66,375
மத்திய சென்னை (தி.மு.க.) 2,85,783 (அ.தி.மு.க.) 2,52,329 33,454 (தே.மு.தி.க.) 38,952
ஸ்ரீபெரும்புதூர் (தி.மு.க.) 3,52,641 (பா.ம.க.) 3,27,605 25,036 (தே.மு.தி.க.) 86,530
காஞ்சிபுரம் (காங்கிரஸ்) 3,30,237 (அ.தி.மு.க.) 3,17,134 13,103 (தே.மு.தி.க.) 1,03,560
கிருஷ்ணகிரி (தி.மு.க.) 3,35,977 (அ.தி.மு.க.) 2,59,379 76,598 (தே.மு.தி.க.) 97,546
கள்ளக்குறிச்சி (தி.மு.க.) 3,63,601 (பா.ம.க.) 2,54,993 1,08,608 (தே.மு.தி.க.) 1,32,223
நாகப்பட்டினம் (தி.மு.க.) 3,69,915 (சி.பி.ஐ.) 3,21,953 47,962 (தே.மு.தி.க.) 51,376
சிவகங்கை (காங்கிரஸ்) 3,34,348 (அ.தி.மு.க.) 3,30,994 3,354 (தே.மு.தி.க.) 60,084
தேனி (காங்கிரஸ்) 3,40,575 (அ.தி.மு.க.) 3,34,273 6,302 (தே.மு.தி.க.) 70,908
விருதுநகர் (காங்கிரஸ்) 3,07,187 (ம.தி.மு.க.) 2,91,423 15,764 (தே.மு.தி.க.) 1,25,229
திருநெல்வேலி (காங்கிரஸ்) 2,74,932 (அ.தி.மு.க.) 2,53,629 21,303 (தே.மு.தி.க.) 94,562
கன்னியாகுமரி (தி.மு.க.) 3,20,161 (பி.ஜே.பி.) 2,54,474 65,687 (தே.மு.தி.க.) 68,472
சேலம் (அ.தி.மு.க.) 3,80,460 (காங்கிரஸ்) 3,33,969 46,491 (தே.மு.தி.க.) 1,20,325
தென்காசி (சி.பி.ஐ.) 2,81,174 (காங்கிரஸ்) 2,46,497 34,677 (தே.மு.தி.க.) 75,741
கரூர் (அ.தி.மு.க.) 3,80,461 (தி.மு.க.) 3,31,312 49,149 (தே.மு.தி.க.) 51,163
திருவள்ளூர் (அ.தி.மு.க.) 3,68,294 (தி.மு.க.) 3,36,621 31,673 (தே.மு.தி.க.) 1,10,452
தென்சென்னை (அ.தி.மு.க.) 3,08,567 (தி.மு.க.) 2,75,632 32,935 (தே.மு.தி.க.) 67,291
விழுப்புரம் (அ.தி.மு.க.) 3,06,826 (வி.சி.க.) 3,04,029 2,797 (தே.மு.தி.க.) 1,27,476
திருச்சி (அ.தி.மு.க.) 2,98,710 (காங்கிரஸ்) 2,94,375 4,335 (தே.மு.தி.க.) 60,124
மயிலாடுதுறை (அ.தி.மு.க.) 3,64,089 (காங்கிரஸ்) 3,27,235 36,854 (தே.மு.தி.க.) 44,754
ஈரோடு (ம.தி.மு.க.) 2,84,148 (காங்கிரஸ்) 2,34,812 49,336 (கொ.மு.பே.) 1,06,604
திருப்பூர் (அ.தி.மு.க.) 2,95,731 (காங்கிரஸ்) 2,10,385 85,346 (கொ.மு.பே.) 95,299
கோவை (சி.பி.எம்.) 2,93,165 (காங்கிரஸ்) 2,54,501 38,664 (கொ.மு.பே.) 1,28,070
பொள்ளாச்சி (அ.தி.மு.க.) 3,05,935 (தி.மு.க.) 2,59,910 46,025 (கொ.மு.பே.) 1,03,004