தி.மு.கழக ஆட்சியில்,  தலைவர் கலைஞர் முதல்வராகவும், தளபதி துணை முதல்வராகவும் இருந்தபோது, இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி அம்மையார் பிறந்த புதுக்கோட்டையில், அரசு மருத்துவ மனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 2011இல் அதிமுக ஆட்சி வந்தவுடன் அந்தத் திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. பிறகு 2015ஆம் ஆண்டு, வழக்கம்போல், 110 விதியின் கீழ் புதிய திட்டம் போல அது  மீண்டும் அறிவிக்கப்பட்டது. அந்த அரசு மருத்துவமனைதான்,  09.06.2017 அன்று புதுக்கோட்டையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. 

அவ்விழா அழைப்பிதழில், அப்பகுதியைச் சேர்ந்த  திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. ஆனால் விழாவில் கலந்துகொள்ளச் சென்றபோது, சட்டமன்ற உறுப்பினர்கள் ரகுபதி, பெரியண்ணன் அரசு, மெய்யநாதன் ஆகிய மூவரும் தடுத்து நிறுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக வைக் கண்டு தமிழக அரசு ஏன் இவ்வளவு அச்சம் கொள்கிறது? ஏன் இந்த ஜனநாயகப் படுகொலையைச் செய்கிறது?

வெட்கம், வேதனை, அவமானம்!            

Pin It