அண்மைக்காலங்களில் செய்தித் தொலைக்காட்சிகள் பல்வேறு நடப்புச் செய்திகள் குறித்த விவாத நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. அந்தந்தத் துறை சார்ந்த வல்லுநர்களை விவாதிக்கச் செய்து, மக்களிடையே ஒரு செய்தி குறித்த பலரின் பார்வையைக் கொண்டு செல்கின்றன.

பெரும்பாலும் ஒரு மணி நேரம் நடக்கும் இவ்வகையான விவாதங்களில் 4 முதல் 5 பேர் வரை கலந்து கொள்வதால், ஒவ்வொருவரும் அவருக்குரிய நேரத்தில் சுருக்கமாகக் கருத்துகளை முன்வைக்க வேண்டியிருக்கிறது.

எல்லோரும் எப்போதும் ஒரே கருத்துடையவர்களாக இருப்பதில்லை. இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. எனவே மாற்றுக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய தளமாக இத்தகைய விவாதங்கள் நடைபெற வேண்டும்.

ஆனால், மாற்றுக்கருத்துகளை முன்வக்கும்போது அதை கேட்பதற்குக் கூடச் சகிப்புத்தன்மை அற்று கூச்சலிட்டுக் குழப்பம் விளைவித்து விவாதப் போக்கினைத் திசை திருப்புவது சிலரின் தொடர் நடவடிக்கையாக இருந்து வருகின்றது. குறிப்பாக, ‘வலதுசாரிச் சிந்தனையுடையவர்கள்’ இவ்விதமாகத் தொடர்ந்து நடந்து கொள்வது கண்கூடு.

அதுமட்டுமின்றி, முற்றிலும் உண்மைக்கு மாறான சான்றில்லாத கருத்துகளைக் கொஞ்சமும் கூச்சமின்றிப் பொதுவெளியில் முன்வைக்கின்றனர் சிலர்.

இதன் உச்சகட்டமாக, சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு விவாதத்தில், தன்னுடன் விவாதம் செய்த திமுக ஆதரவாளர் பாலாவைத்  தாக்குவது போல அச்சுறுத்தியிருக்கிறார் கராத்தே தியாகராஜன்.

குறைவான நேரத்தில், செறிவான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவே விவாத நிகழ்ச்சிகள். லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் விவாத நிகழ்ச்சிகளில், ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றமே மக்களிடம் நமது கருத்துகளைக் கொண்டு போய்ச் சேர்க்கும். வெற்றுக் கூச்சல்களும், பொய்யான தகவல்களும் மக்களிடையே உங்களது போலியான முகத்தைத் தோலுரித்துக் காட்டிவிடும்.

Pin It