வடநாட்டுக்காரர்களுக்குத் தென்னாட்டவர்களைப் பிடிப்பதே இல்லை, குறிப்பாகத் தமிழகம்.

காரணம் இது பெரியார் மண்.

மக்கள் ஆட்சியில் மக்கள் வாடவும் கூடாது, மக்களை வாட்டவும் கூடாது.

இவை இரண்டும் மத்திய பா.ஜ.க. மோடி அரசுக்குத் தெரிவதே இல்லை. மக்களைப் பற்றிய சிந்தனையே இல்லாத ஓர் அரசியல் சுயநலம் கொண்ட ஆட்சி இது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரங்கள் கெடு கொடுத்த நீதிமன்றத்தில், கடைசி நாளில் போய் & ஐயா! ஸ்கீம் என்றால் அர்த்தம் என்ன, சொல்லு-ங்கள்! எங்களுக்குத் தெரியவில்லை, என்று நிற்கிறது மத்திய அரசு. இதன் பொருள் என்ன?

தமிழகப் பயிர்கள் கருகவும், தமிழர்களின் வயிறுகள் காயவும் மத்திய அரசு பார்த்துக் கொண்டு இருக்கிறது என்றால் இதன் பொருள் என்ன-?

இப்பொழுது மீண்டும் நீதிமன்ற வாசலில் நின்று கொண்டு கால அவகாசம் கேட்கிறது மத்திய அரசு, இதன் பொருள் என்ன?

கர்நாடக மாநிலத்தில் நடைபெற இருக்கும் தேர்தலில், எப்படியும் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்தில் கர்நாடகாவின் கண்ணில் வெண்ணையு-ம், தமிழகத்தின் கண்ணில் சுண்ணாம்பும் தடவும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது மோடி அரசு.

இந்தியாவின் 22 மாநிலங்களில் நேரடியாகவும், கூட்டணியாகவும் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வின் ஆட்சியில் எந்த மாநிலத்திலும் அமைதி தவழவில்லை. பாலியல் குற்றங்கள், கொலைகள், கொள்ளைகள்தான் பெருகி வளர்கின்றன.

தமிழகத்தைப் பொருத்த வரையில் இந்த மண் சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளை ஏற்றுக்கொள்ளாது.

மத வெறியை நுழைய விடாது.

ராமராஜ்யம் அமைய வழிவிடாது.

-  அதனால்தான் தமிழ் இனத்தையே மெல்லமெல்ல அழித்திடக் காவிரி நீரைத் தடை செய்து வருகிறது மத்திய அரசு.

இந்நீர் வேளாண்மைக்கு மட்டுமல்ல, குடிநீருக்கும் இதுதான் ஆதாரமாக அமைகிறது.

அன்று சிங்கள ஆரிய இனவெறி அரசு தமிழ் மக்கள் மீது நெருப்பை வீசி அழித்தது.

இன்று வல்லாண்மை ஆரிய இந்திய அரசு தமிழ் மக்களுக்கு நீர் கிடைக்காமல் செய்து அழித்து வருகிறது.

மீண்டும் ஓர் ஆரிய-திராவிடப் போர் தொடங்கியிருக்கிறது. சந்தித்துத்தான் ஆகவேண்டும், வலிமையாக.      

Pin It